Author: கிருபாநந்தினி
•Tuesday, December 08, 2009
நான் கொஞ்சம் புஸ்தகம் படிக்கிறவள்னு அப்பப்ப எல்லாருக்கும் ஞாபகப்படுத்திக்கிறேன். லேட்டஸ்ட்டா ரெண்டு புது புஸ்தகம் வாங்கினேன். ஏன் வாங்கினேன்? புதுசா கண்ல பட்டுது; வாங்கினேன். வேற விசேஷ காரணம் ஒண்ணுமில்ல.

நான் வழக்கமா குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், அவள் விகடன், மங்கையர் மலர், துக்ளக் இந்த புஸ்தகங்கள் மட்டும்தான் படிக்கிறது. எப்பவாவது ஜூனியர் விகடன் புரட்டறதுண்டு. அதை முழுசா படிச்சா நாலு நாளு சோறு உள்ள இறங்காது. அதுக்காகவே படிக்கிறதில்லை. இவன் இத்தனை ஊழல் பண்ணி இத்தனை கோடி சேர்த்திருக்கான், இவன் இவளை வெச்சிருக்கான், அவள் அவனைப் போட்டுத் தள்ளிட்டா, இந்த ஊர்ல இத்தனைக் குழந்தைங்க செத்துதுன்னு புஸ்தகம் முழுக்க இதான் நியூஸ். காசைக் கொடுத்து தேளைக் கொட்டிக்கிற கதையா இது எனக்குத் தேவையா? வர வர டெய்லி பேப்பரைப் பார்க்கிறதுக்கே கண்ணெல்லாம் காந்துது.

சரி, அத விடுங்க! என் கண்ணுல புதுசா பட்ட புஸ்தகங்கள் என்னன்னு சொல்லலியே? ஒண்ணு, புதிய தலைமுறை; இன்னொண்ணு, சூரிய கதிர்.

முதல்ல ‘புதிய தலைமுறை’யைப் பத்திச் சொல்றேன். பேரே நல்லால்ல! அதாவது புதிய - தலைமுறை எல்லாம் ஓ.கே! வார்த்தைகள்ல தப்பு இல்ல. ஆனா, ஒரு பத்திரிகையோட பேரு சுவாரசியமா இருக்கணும். வளரும் தலைமுறை, வாழ்த்தும் வையகம், புதிய சமுதாயம், புரட்சி பாரதம், ஆர்த்தெழும் சமூகம், ஆர்ப்பரிக்கும் உலகம், தமிழ் அரசு, தமிழ் முரசு, பைந்தழிழ், பாரதப் பெண்... இப்படியெல்லாம் பேரு வெச்சா வாங்கிப் படிக்கத் தோணுமா? இந்த வார்த்தைகள் எல்லாம் மேடையில வீரமா பேசுறதுக்கு உதவும். அல்லது, ஏதாவது கட்சி ஆரம்பிச்சா வெச்சுக்கலாம். பத்திரிகைக்குச் சரிப்படாது. மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழ், தமிழ்னு முழங்குற தானைத் தலைவர், முத்தமிழ் அறிஞர் தன் பத்திரிகைக்கு எப்படி அழகா, மங்களகரமா ‘குங்குமம்’னு பேரு வெச்சிருக்காரு! அதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்க வேணாமா? இன்னும்கூட மங்களகரமா ‘சுமங்கலி’ன்னு ஒரு பத்திரிகை வந்துட்டிருந்தது. அது இப்ப வருதான்னு தெரியலை. என் கண்ணுல படலை.

சரி, ‘புதிய தலைமுறை’ பத்திரிகைக்கு வருவோம்.

கையில எடுக்கும்போதே மொழமொழன்னு யம்மா யம்மா..! எல்லாப் பக்கமும் வழவழ, பளபளன்னு ஜொலிக்குது. எப்படியும் இருபது ரூபா, இருபத்தஞ்சு ரூபாயாச்சும் இருக்கும்னு திருப்பி வைக்கப் போனேன். “அஞ்சு ரூபாதாங்க்கா! எடுத்துக்கோங்க”ன்னான் கடைப் பையன். “சின்னப் புள்ள. தெரியாம சொல்றான்”னு புக்ல விலையைப் பார்த்தேன். அட, ஆமாம்! அஞ்சே ரூபாதான். என்னால நம்பவே முடியலை. எப்படி? எப்படி அஞ்சு ரூபாய்க்கு இத்தனை உசத்தியான பேப்பர்ல, எல்லாப் பக்கமும் கலர்ல தர முடியும்?

ஆனந்தவிகடன் 15 ரூபா விலை. ஆரம்பத்துல எல்லாப் பக்கமும் வழவழப்பா, வண்ண மயமா ஜொலிக்கப் போகுதாக்கும்னு ஆசை காட்டி விலையேத்தி, அப்புறம் நைஸா மட்டமான பேப்பரை உள்ள நுழைச்சுட்டாங்க. பெரிய நிறுவனம்னு பேரு. அதுக்கே 15 ரூபாய்க்கு எல்லாப் பக்கத்தையும் வழவழப்பா கொடுத்துக் கட்டுப்படியாகலை போல! அப்படியிருக்குறப்ப, புதுசா வர்ற ஒரு பத்திரிகைக்கு மட்டும் எப்படிக் கட்டுப்படியாகும்னு புரியலை. இல்லேன்னா மார்க்கெட் புடிக்கிற வரைக்கும் இப்படிக் கொடுத்துட்டு அப்புறம் விலையை உசத்திடுவாங்களோ? அதுக்குள்ளே இதன் முதலாளி ரெண்டு மூணு பங்களாவை விக்க வேண்டி வந்துரும்னு நினைக்கிறேன். வேணாம், பாவம். நல்லாருக்கட்டும்!

சரி, இந்தப் பத்திரிகை மார்க்கெட்டைப் புடிக்குமா? மார்க்கெட்டைப் புடிக்கிறதுன்னா என்ன? குறைஞ்ச பட்சம் ரெண்டு லட்சம் காப்பிகளாச்சும் போகணுமில்லையா? போகுமா? எனக்கு டவுட்டாத்தான் இருக்கு.

இது இளைஞர்களுக்கான பத்திரிகைனு அடிச்சு சொல்லணும்னுதான் ‘புதிய தலைமுறை’ன்னு பேரு வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். கவர்ச்சி நடிகைகள் படங்கள் இல்லேங்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக கொஞ்சம்கூட மசாலா சேர்க்கலேன்னா எப்படி? ரமேஷ் பிரபா கட்டுரை, வெ.இறையன்பு கட்டுரை, சோம.வள்ளியப்பன் கட்டுரைன்னு உள்ளே விஷயங்களும் கனம் கனமாத்தான் இருக்கு. கனம்னா உங்க வீட்டு கனம், எங்க வீட்டு கனம் இல்லே; செம கனம்! படிக்கிறப்பவே கண்ணக் கட்டுது. உடம்பு வலிக்குது. ஏதோ பாட புஸ்தகத்தைப் படிக்கிறாப்ல போரடிக்குது. ‘உப்பிட்டுப் பதப்படுத்தப்பட்ட மீன்களை கி.மு.2800லேயே எகிப்தியர்கள் பீனிசிய மக்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கரீபியன் தீவுகளிலிருந்து வட அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் முக்கியப் பொருளாக உப்பு இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில்கூட...’ - சொல்லுங்க, இப்படிப் போச்சுன்னா எப்படிப் படிக்கிறது? நாலு வரி படிக்கிறதுக்குள்ள எனக்குத் தூக்கம் வந்துடுது.

இந்தப் புத்தகத்துல எனக்குப் புடிச்ச, புரிஞ்ச ஒரே மேட்டர் - ‘நாகேஷ்’ பத்தி எம்.பி.உதயசூரியன் எழுதின ஒரு பக்கக் கட்டுரை.

இன்னிய இளைஞர்களுக்கு இதையெல்லாம் படிக்குறதுக்குப் பொறுமை இல்லே. நடுத்தர வயசுக்காரங்களுக்கு இது தேவையில்லே. வயசானவங்க படிக்கவே போறதில்லே! அதையும் மிஞ்சி இந்தப் பத்திரிகை சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா, நாடு திருந்திடுச்சுன்னு அர்த்தம்.

சூரிய கதிருக்கு வருவோம். இந்தப் பேரும் ஒண்ணும் கவர்ச்சியா (கவர்ச்சின்னா நான் அந்தக் கவர்ச்சியைச் சொல்லலீங்க!) இல்லே. ஆனா, மோசம்னு சொல்ல முடியாது. பரவாயில்லை ரகம். போகப் போகப் பழகிடும்னு நினைக்கிறேன்.

ஆனந்த விகடன் கொடுத்த தைரியத்துல, எடுத்த எடுப்புலயே விலை ரூ.15-ன்னு தைரியமா களம் இறங்கியிருக்காங்க. பேப்பரும் சுமார் ரகம்தான். புதிய தலைமுறையோடு ஒப்பிடும்போது இந்தப் புஸ்தகம் கொஞ்சம் கலகலன்னு இருக்கிற மாதிரி தெரியுது. போன இதழ்ல குட்டி ரேவதி ஏதோ எழுதினதுக்கு இந்த இதழ்ல லீலா மணிமேகலை பதில் சவால் விட்டிருக்காங்க. நாட்டு நடப்புகளைச் சொல்ற மாதிரி காங்கிரஸ் பிரச்னை, இலங்கைப் பிரச்னை, நெடுமாறன் பேட்டி, வைரமுத்து பேட்டி, சல்மா பேட்டி, மதன் கட்டுரை, இலக்கியத்துக்கு சா.கந்தசாமி கட்டுரை, கலகலப்புக்கு சினிமா கட்டுரைகள், கவிதைகள், ஜோக்குகள்னு ஒரு வெகுஜனப் பத்திரிகைக்கு (எப்புடி வார்த்தையைப் புடிச்சேன் பாருங்க) தேவையான அத்தனை விஷயங்களும் கலந்துகட்டி இருக்கு.

பூரா படிக்கலை. கொஞ்சம் படிச்சேன். படிச்ச வரையில் பிடிச்சது என்னன்னா, ‘கலைஞர் மட்டும்தான் தானே கேள்வி, தானே பதில் எழுதிக்கணுமா? ராஜபக்‌ஷே எழுதினா எப்படி இருக்கும்’னு வால்பையன் எழுதின கற்பனைக் கட்டுரை. ‘இந்த இதழில் ராஜபக்‌ஷே’ன்னு போட்டதால, வாராவாரம் எழுதுவார் போலத் தெரியுது. (வால்பையன்னா வலைப்பூ எழுதுற வால்பையனுங்களா?! அட்றா சக்கை! அட்றா சக்கை!!)

‘சுள்ளுன்னு கொஞ்சம் ஜில்லுன்னு’ங்கிற கொள்கை மொழிக்கு ஏத்தாப்லதான் இருக்கு பத்திரிகை.

‘புதிய தலைமுறை’க்கு ஆசிரியரா இருக்குற மாலனும், சூரிய கதிருக்கு ஆசிரியரா இருக்குற ராவும் கொஞ்ச காலம் ‘குமுதம்’ பத்திரிகையில வேலை செஞ்சிருக்காங்க. ஆனாலும், வாசகர்களுக்கு விஷயங்களை எப்படி ஜாலியா கொடுக்குறதுங்கிறதை அவங்க ரெண்டு பேருமே அங்க ஒழுங்கா கத்துக்கலையோன்னு தோணுது!

நல்ல மாணவனா இல்லைன்னா, நல்ல ஆசிரியர்களா இருக்குறது எப்படி?

|
This entry was posted on Tuesday, December 08, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

22 comments:

On Dec 8, 2009, 10:53:00 PM , butterfly Surya said...

நந்தினி தங்கச்சி.. பொழுது போக்க ஆயிரம் பத்திரிகைகள் இருக்கு. முழுக்க முழுக்க பயனுள்ள செய்திகளை தருகிறது புதிய தலைமுறை. நம்ம சக பதிவர்கள் லக்கிலுக், அதிஷா அருமை நண்பர் உதயசூரியன் ஆகியோர் அங்கு இருக்கிறார்கள் எனப்து தெரியாதோ..??

குமுதம் தரமான பத்திரிகையா...?? நல்ல ஜோக்..

 
On Dec 9, 2009, 9:54:00 AM , Senthil Kuppusamy said...

Started reading few of your blogs and each one is having humour and interesting way of explaining things. Very nice

 
On Dec 9, 2009, 9:57:00 AM , N.SRINIVASAN said...

well.

 
On Dec 9, 2009, 10:31:00 AM , SenthilMohan K Appaji said...

//* எப்புடி வார்த்தையைப் புடிச்சேன் பாருங்க**/
எந்த வார்த்தை Sister?

 
On Dec 9, 2009, 11:00:00 AM , sathishsangkavi.blogspot.com said...

உங்க தைரியத்தை பாராட்டுகிறேன்...

இந்த தாக்கு தாக்கறீங்க............

வாரஇதழ்னா அனைத்து செய்தியையும்
சேர்த்த கலவையா இருக்குனும் அப்பதான்
அத வார வாரம் வாங்கி படிக்கமுடியும்......

நானும் புதிய தலைமுறை வாங்கி படித்தேன்
ஒவ்வொரு பக்கமும் படிக்கும்போது அடுத்து என்ன
என ஒரு எதிர்பார்போடு படித்தேன் ஆனா படித்து
முடிக்கும் போது தூங்கிவிட்டேன்......

உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன்.......

 
On Dec 9, 2009, 3:03:00 PM , வால்பையன் said...

என்னை இப்படி சக்கையாக்கிடிங்களே!

 
On Dec 9, 2009, 3:53:00 PM , பின்னோக்கி said...

குமுதம், ஆனந்த விகடனையே முழுசா படிக்க முடியலை. ரெண்டுலயும் ஒரே நியூஸ். 2 வாரத்துக்கு ஒரு தடவை அஜீத் இல்லைன்ன விஜய் அட்டை படம். ம்ம்..

 
On Dec 9, 2009, 9:07:00 PM , ஸ்ரீ.கிருஷ்ணா said...

super thala

 
On Dec 9, 2009, 9:31:00 PM , கிருபாநந்தினி said...

பட்டர்ஃப்ளை அண்ணாச்சி! புதுசு புதுசா பதிவர்கள் பேரெல்லாம் சொல்றீங்க. நான் வலைப்பூ உலகத்துக்குப் புதுசுங்ணா! ‘புதிய தலைமுறை’ சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா நாடு திருந்திடுச்சுன்னு அர்த்தம்னு அதன் வளர்ச்சி அவசியம்கிற உள் அர்த்தத்துலதானேங்ணா அந்த விமர்சனத்தை முடிச்சிருக்கேன். தவிரவும், குமுதம் நல்ல பத்திரிகைன்னு நான் எங்கே, எந்த இடத்துல சொல்லியிருக்கேன், காட்டுங்க பார்ப்போம்!

 
On Dec 9, 2009, 9:32:00 PM , கிருபாநந்தினி said...

Mr.Senthil Kuppusamy, Thanks a lot for your feedback. kindly keep in touch!

 
On Dec 9, 2009, 9:35:00 PM , கிருபாநந்தினி said...

Mr.Srinivasan, Thank you!

 
On Dec 9, 2009, 9:37:00 PM , கிருபாநந்தினி said...

SM, ’வெகுஜனப் பத்திரிகை’ங்கிற வார்த்தையைத்தான்! எனக்கெல்லாம் அந்த வார்த்தை புழக்கத்துல இல்லாத வார்த்தையாச்சே! பிளாக் படிக்க ஆரம்பிச்ச பிறகு கத்துக்கிட்டதுதான்!

 
On Dec 9, 2009, 9:38:00 PM , கிருபாநந்தினி said...

சங்கவி அக்கா... ஸாரி, ஸாரி! சங்கவி பிரதர்! நிறைய ஊக்கமும் பாராட்டும் தர்ற உங்களுக்கு தேங்க்ஸுன்னு ஒரு வார்த்தையில நன்றி சொல்லக் கூச்சமாத்தான் இருக்கு. என்ன பண்றது! தேங்க்ஸ்!

 
On Dec 9, 2009, 9:39:00 PM , கிருபாநந்தினி said...

வால்பையா! ‘அட்றா சக்கை’யைச் சொல்றீங்களாண்ணா? நெஜம்மாவே அது நீங்கதானா? அப்படிப் போடு! கலக்குங்க பிரதர்!

 
On Dec 9, 2009, 9:40:00 PM , கிருபாநந்தினி said...

பின்னோக்கி! விட்டா எல்லா பேப்பர்லேயும் ஒரே நியூஸ்னு அலுத்துக்குவீங்க போலிருக்கே! :)

 
On Dec 9, 2009, 9:44:00 PM , கிருபாநந்தினி said...

ஸ்ரீ.கிருஷ்ணா, என்னது... சூப்பர் ‘தல’யா? நான் விஜய் ரசிகைங்ணா! சரி, வந்ததுக்கு தாங்க்ஸ்; பின்னூட்டம் தந்ததுக்கு தாங்க்ஸ்!

 
On Dec 10, 2009, 12:55:00 PM , Paleo God said...

எதை தின்னால் (தின்ன வைத்தால் )பித்தம் தெளியும் என்று அலைபவர்களாகவே இப்போதைய பல பத்திரிக்கைகள் தெரிகிறது. சமூக கேடான விஷயங்கள் பலவும் பரவலாக மக்களிடையே இவர்களாலேயே பரப்பப்படுகிறது. பொறுப்புணர்வு இல்லாமல் பணம் பண்ணுவதே குறிக்கோளாக இருப்பது மிகவும் வேதனை.

 
On Dec 10, 2009, 2:16:00 PM , கிரி said...

:-)) NO comments

 
On Dec 10, 2009, 6:09:00 PM , கிருபாநந்தினி said...

பலா பட்டறை! என் பதிவைப் படிச்சு ரொம்ப நொந்துட்டிருக்கீங்க போலிருக்கு. விடுங்க. நாமெல்லாம் அன்னப் பறவை ஜாதி! நல்லது எது, கெட்டது எதுன்னு நமக்குத் தெரியாதா!

 
On Dec 10, 2009, 6:10:00 PM , கிருபாநந்தினி said...

கிரி! ‘நோ கமெண்ட்ஸ்’னு போட்டா தப்பிச்சுக்கிட்டோம்னு நினைப்பா? சிரிப்பு ஸ்மைலி போட்டதே ஒரு கமெண்ட்டுதானுங்ணா!

 
On Dec 14, 2009, 12:51:00 PM , Senthil said...

Surya Kadhir is really a worth magazine. People who feel things missing in Vikatan can end their search to this magazine

 
On Dec 15, 2009, 9:35:00 PM , கிருபாநந்தினி said...

நா ஒண்ணும் இல்லேனு சொல்லலீங்களே சுப்புண்ணா!