Author: கிருபாநந்தினி
•Thursday, April 29, 2010
ட்டம், தர்மம் இதப் பத்தியெல்லாம் அடிக்கடி இப்ப ரொம்பப் பேச்சு அடிபடுது! சட்டத்துக்கும் தர்மத்துக்கும் சம்பந்தமே இல்லாதவங்ககூட இது பத்தி நிறையப் பேசுறாங்க. அதனால, இந்த அரைவேக்காட்டுக்காரியும் சைடுல கொஞ்சம் உளறி வைப்போமேன்னுதான் இதை எழுதறேன்.

சட்ட ரீதியா தப்பு இல்லாததெல்லாம் தர்ம ரீதியாவும் தப்பு இல்லாததுன்னு சொல்லிட முடியாது. தர்ம ரீதியா சரியானது எல்லாம் சட்ட ரீதியாவும் சரியானது ஆகிடாது.

உதாரணமா, நம்ம நித்தி மேட்டரையே எடுத்துக்குவோமே! அவர் மேல இப்ப எத்தனையோ வழக்குகள். தங்கம் கடத்தினார், பண மோசடி பண்ணினார்னெல்லாம் புகார்கள் குவிஞ்சிட்டிருக்கு. இதெல்லாம் சட்ட ரீதியான தப்புகள். மாட்டினார்னா (மாட்டினாதான்!) இருக்கு ஆப்பு! ஆனா, இதெல்லாம் மக்கள்ட்ட எடுபடாது. ‘ஆமா! இப்ப எவன் ஊழல் பண்ணலை! இந்தக் கட்சித் தலைவர் குடும்பத்துக்கு இத்தனைக் கோடி ரூபாய் எப்படி வந்துச்சு? ரொம்ப யோக்கியமாதான் சம்பாரிச்சாரா? நித்தி சாமியார் ஏதோ நல்ல காரியம்(!) பண்ணி, பக்தர்கள் அன்பளிப்பா கொடுத்த பணம்தானே அது? கோடி கோடியா வந்து கொட்டுதேன்னு இவனுங்களுக்குப் பொறுக்கலே! அதனால அப்பாவி சாமிய மடக்கி உள்ள போட்டுட்டாங்க’ன்னு மன்னிச்சு விட்டுடுவாங்க. அதனாலதான், அவர் ஒரு நடிகையோடு குஷியா இருக்கும் படங்களை டி.வி-யிலும் பத்திரிகையிலும் மாத்தி மாத்திப் போட்டுட்டிருந்தாங்க.

ஒரு ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு, சம்மதப்பட்டு உறவு வெச்சுக்கிட்டா தப்பே இல்லைன்னு அடிச்சு சொல்லுது சட்டம். அப்படிப் பாத்தா நித்தி-ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகளை ஒளிஞ்சிருந்து போட்டோ எடுத்தவன்தான் சட்டப்படி குற்றவாளி. அது ஒண்ணும் சினிமா காட்சி இல்லை. அதனால, அவங்க சம்மதம் இல்லாம அதை ஒளிபரப்பின தொலைக்காட்சி மேல கேஸ் போடணும். சின்னக் குழந்தைங்க பார்க்கிற நேரத்துல ‘ஏ’ சர்ட்டிபிஃகேட்கூட போடாம ஒளிபரப்பினதுக்குச் சட்டரீதியா அவங்களைத்தான் தண்டிக்கணும்.

சரி, சட்ட ரீதியா நித்தி-ரஞ்சி செஞ்சது தப்பில்லை. ஆனா, தர்ம நியாயப்படி சரியா? இங்கேதான் சட்டம் வேற, தர்மம் வேறன்னு ஆகுது. மனோதர்மப்படி நித்தி செஞ்சது மகா துரோகம். தன்னை நம்பின பக்தர்களை ஏமாத்தியிருக்கார். ஆஷாடபூதி வேஷம் போட்டிருக்கார். அதனாலதான் மக்கள் கொதிச்செழுந்தாங்க.

இன்னொரு கேஸைப் பார்ப்போம். குஷ்பு ஆன்ட்டி சொன்னது தப்பில்லைன்னு சொல்லிடுச்சு சட்டம். ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே உறவு வெச்சுக்கலாம், அதுல ஒண்ணும் தப்பில்லை; படிச்ச இளைஞர்கள் யாரும் தங்களோட மனைவி கற்புள்ளவளா இருக்கணும்னு நினைக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்க சொன்னதுல தப்பு இல்லை, தண்டிக்க சட்டத்துல இடமில்லைன்னு சொல்லிடுச்சு நீதிமன்றம். நியாயம்தான். சட்டத்துல இடமில்லைதான். ஆனா, இன்னிக்கு எந்தப் படிச்ச இளைஞர்கள் அப்படி நினைக்கிறாங்க? தன் மனைவி தனக்குத் துரோகம் பண்றாளான்னு ஆள் போட்டு செக் பண்றாங்க. ஒரு கணக்கு எடுத்துப் பாத்தீங்கன்னா தெரியும், கள்ளக்காதல் தொடர்பான கொலைங்க 1995-2000-ல் இருந்ததைவிட 2001-2005-ல் ரெண்டு மடங்கு அதிகமாகி இருக்கு; 2006-2010-ல் நாலு மடங்காகியிருக்கு.

குஷ்பு என்னா சொல்றது... பெரியார் அன்னிக்கே சொல்லிட்டார், ‘கல்யாணம்கிற தளையிலிருந்து பெண்கள் விடுபடணும்’னு. ஆனா, கல்யாணம் இல்லேன்னா குடும்ப அமைப்பு இல்லே; அப்பா, அம்மா, அண்ணன், தங்கைங்கிற எந்த உறவுகளும் இருக்காது. அப்புறம் காட்டுமிராண்டி வாழ்க்கைதான்!

பெண்ணை அடிமைப்படுத்த ஆண் குயுக்தியா கொண்டு வந்த அமைப்புதான் திருமணம்கிறது சிலரோட வாதம். ஆதி நாள்ல அப்படி இருக்கலாம். ஆனா, ஆணை அடிமைப்படுத்துற அமைப்பாதான் இன்னிக்குத் திருமணம் இருக்கு. கல்யாணம் ஆகுற வரைக்கும் ஜாலியா, சந்தோஷமா லைஃபை எஞ்ஜாய் பண்ற இளைஞர்கள் கல்யாணம் ஆன பிறகு முன்னைப் போல ஃப்ரெண்ட்ஸ்களோடு ஊர் சுத்த முடியாம, தன் விருப்பப்படி காசை செலவழிக்க முடியாம, சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து பெண்டாட்டி கிட்ட கொடுக்குறவங்கதான் அதிகம்.

திருமண அமைப்பே வேண்டாம்னா, அது ஆண்களுக்குக் கொண்டாட்டம்தான். இருக்கிற வரைக்கும் ஒரு பெண்ணோடு ஜாலியா, சந்தோஷமா இருந்துட்டு, அப்புறம் மனசு ஒத்துப் போகலே, திருமணம் வேண்டாம்னு பிரிஞ்சுடலாம். எந்த கமிட்மென்ட்டும் கிடையாதுன்னா சந்தோஷம்தானே! ‘ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர, வேறு பெண்களோடு ரகசியத் தொடர்பு வெச்சுக்கலாம்; ஆனா, ஒரு மனைவிக்கு அந்தச் சுதந்திரம் கிடையாதா?’ன்னு, ஆடு நனையுதேன்னு அழுகிற ஓநாய்கள் இங்கே நிறைய இருக்கு. தப்பு செய்யற ஆணைத் திருத்துங்கப்பா; பெண்ணையும் ஆணுக்குச் சரியா தப்பு செய்யத் தூண்டாதீங்க ராசா!

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். தன் மனைவியைத் தவிர, வேறு பெண்ணோடு தொடர்பு வெச்சிருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிடறதில்லே. பெண்டாட்டி மேலயும் பிரியமாதான் இருக்காங்க. கணவனின் கள்ள உறவு தெரிஞ்சு, பெண்டாட்டி அவனை டார்ச்சர் பண்றப்போதான் சண்டையே வருது. அதுக்காக, கணவனின் கள்ளத் தொடர்பு சரின்னு நான் இங்கே சொல்ல வரலை. அந்த நிலையிலயும் கணவன் தன் மனைவி மேலயும், பிள்ளைங்க மேலயும் பாசமாதான் இருக்கான்னு சொல்றேன்.

அதுவே, ஒரு பெண்ணுக்கு வேறு ஆம்பிளையோடு தொடர்பு ஏற்பட்டுச்சுன்னு வைங்க, அவ தன் புருஷனையும், ஏன், மணி மணியான பிள்ளைங்களையும்கூட கொன்னு போடத் தயங்க மாட்டா. நான் சொல்றது தப்பா சரியான்னு சமீப கால பேப்பர்களை எடுத்துப் பாருங்க. கள்ளக் காதல் காரணமா, காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனையும் பிள்ளைங்களையும் கொன்ன பொண்ணுங்க லிஸ்ட்தான் அதிகம்.

இதுல என்ன சைக்காலஜின்னா, ஆணுக்கு வேறு ஒரு பொண்ணு மேல ஏற்படறது ‘வீக்னஸ்’! பொண்ணுக்கு வேற ஒரு ஆண் மேல ஏற்படறது ‘ஸ்ட்ரெங்த்’! ஆண்களுக்கு வேற பொண்ணு மேல ஆசை வந்தாலும், பெரும்பாலானவங்களுக்குக் குடும்பமும் மனைவியும்தான் முக்கியம். அந்தப் பொண்ணு இரண்டாம்பட்சம்தான். ஆனா, வேற ஆண் மேல ஆசை வைக்கிற பொண்களுக்கு அவன்தான் முக்கியம்; கணவனும், குழந்தைங்களும் இரண்டாம்பட்சம்தான்!

அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, கல்யாணம் பண்ணிக்காமலே ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு வெச்சுக்கிறது சட்டப்படி தப்பில்லாததா இருக்கலாம்; ஆனா, மனோதர்மப்படி தப்புதான்! அம்மாவும் பிள்ளையும், அப்பாவும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும்தான் சட்டம் எட்ட நின்னு கைகட்டி வேடிக்கை பார்க்கும். அதுக்காக அதையும் சரின்னு சொல்லிடலாமா?

சட்டப்படி தப்பு இல்லேன்னாலே, தர்மப்படியும் அது தப்பு இல்லேன்னு ஆகிடாது. அதே போல, சட்டப்படி தப்புங்கிறதுக்காக மனோதர்மப்படியும் அது தப்புன்னு ஆகிடாது.

பிரபாகரனின் தாயார் இங்கே தமிழ்நாட்டுல சிகிச்சை பெற வந்தாங்க. அவங்களை விமானத்தை விட்டுக் கீழேயே இறங்க விடாம அப்படியே திருப்பி அனுப்பிச்சுடுச்சு தமிழக அரசாங்கம். இது சட்டப்படி தப்பில்லைன்னு வாதிடுது ஒரு கூட்டம்.

பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கு. தேடப்படும் கைதியா அறிவிச்சுது இந்திய அரசு. அவர் கொல்லப்பட்டார்னு சிங்கள அரசு அறிவிச்சு ஒரு வருஷம் ஓடிப்போச்சு. ஆனா, இன்னமும் அவர் இறந்தாரா, உசுரோட இருக்காரான்னே புரியலை. மர்மமா இருக்கு. புத்த பிட்சு வேஷத்துல இருக்கார்னும் வதந்தி.

அதெல்லாம் இருக்கட்டும். பிரபாகரனோட அம்மா பண்ணின பாவம் என்ன? அவங்களை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அவங்க என்ன, தேடப்படும் குற்றவாளியா? நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாதவர்கள் பட்டியல்ல அவங்க பேரும் இருக்காம். எதுக்காக அந்தப் பட்டியல்ல அவங்க பேர் இருக்கணும்?

ஏன்... தமிழ்நாட்டை விட்டா அவங்க சிகிச்சை பெற வேற இடமே இல்லையான்னு கேள்வி எழுப்பியிருக்காரு ஒரு படிச்சவரு. வெளிநாட்டுலதான் அவங்க பிள்ளைங்க இருக்காங்க இல்லே, அவங்க வெச்சு, சிகிச்சை அளிச்சுக் காப்பாத்த வேண்டியதுதானேன்னு கேட்டிருக்காரு இன்னொருத்தரு. ‘இட்லிவடை’ன்னு ஒரு பிளாக்ல நான் படிச்சப்போ, எனக்குக்கூட ‘அதானே?’ன்னு தோணுச்சு. ‘நீங்க தைரியமா சொல்லிட்டீங்க; என்னால சொல்ல முடியலையே’ன்னு பின்னூட்டம் போட்டேன். யோசிச்சுப் பார்க்குறப்போ, நான் போட்ட பின்னூட்டம் தப்புன்னு தோணுது.

இங்கே, 80 வயசான இந்தம்மாவுக்கே சொந்த நாட்டுல கால் வைக்க இத்தனை நெருக்கடி இருக்குறப்போ, அவங்க நிலை என்னவோ?

அவங்க எப்படி வேணா இருந்துக்கட்டும்க; சட்டப்படி அவங்களைத் திருப்பி அனுப்பினது நியாயம்னு ‘சோ’ சார் சொல்றது சரியாவே இருக்கட்டும்க; சிகிச்சைக்குன்னு வந்தவங்களைத் திருப்பி அனுப்பினது நியாயமா? என் மனோதர்மப்படி அது மகா தப்புன்னுதான் சொல்லுவேன்.

தன் கிட்டே சிகிச்சைக்குன்னு வந்தவன் ஒரு கொலைகாரனே ஆனாலும், அவனைக் காப்பாத்த வேண்டியது ஒரு டாக்டரோட கடமைன்னு அவங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கு. அப்படியிருக்குறப்போ, சிகிச்சைக்குன்னு வந்த இந்தம்மாவை தமிழ்நாடு அரசாங்கம் திருப்பி அனுப்பினது எந்த வகையில நியாயம்னு எனக்குப் புரியலே.

இங்கே சிகிச்சைகூட எடுத்துக்க முடியாதபடிக்கு அவங்க பண்ணின தப்பென்ன? வயசான ஒரு பாட்டியம்மாவால தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே கெட்டுடும்னா அதைவிட காமெடி வேற இல்லீங்க.

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் சொந்த நாட்டானையே சுரண்டுவது எப்போது?’ன்னு வசனம் எழுதினார் கருணாநிதி. ‘இப்போது’ன்னு கத்திச் சொல்லணும்போல இருக்கு எனக்கு.

.
|
This entry was posted on Thursday, April 29, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On Apr 29, 2010, 10:26:00 PM , பத்மநாபன் said...

சட்டமாவது , தர்மமாவது ... எல்லாத்திலயும் அரசியலும் வியாபாரமும் தான் கொடி கட்டி பறக்குது .. சிக்குனவன் சீரழிகிறான் .. சிக்காதவன்
கடைசிவரை உத்தமனாகிறான்

 
On Apr 29, 2010, 10:54:00 PM , VISA said...

கொஞ்சம் பிற்போக்கான கருத்துக்கள். விவாதிப்போம்

 
On Apr 29, 2010, 11:02:00 PM , நந்தா said...

சட்டங்களும் தர்மங்களும்னு பேச வந்த விஷயமெல்லாம் ஓ.கே.

ஆனால் ஆண் - பெண் உறவு நிலை குறித்தும், கள்ளத் தொடர்புகள் குறித்தும் நீங்கள் பேசி இருக்கின்ற விஷயங்கள் எரிச்சலையும், சில இடங்களில் கோபத்தையும் வரவழைக்கிறது.

//இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். தன் மனைவியைத் தவிர, வேறு பெண்ணோடு தொடர்பு வெச்சிருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிடறதில்லே. பெண்டாட்டி மேலயும் பிரியமாதான் இருக்காங்க. கணவனின் கள்ள உறவு தெரிஞ்சு, பெண்டாட்டி அவனை டார்ச்சர் பண்றப்போதான் சண்டையே வருது. அதுக்காக, கணவனின் கள்ளத் தொடர்பு சரின்னு நான் இங்கே சொல்ல வரலை. அந்த நிலையிலயும் கணவன் தன் மனைவி மேலயும், பிள்ளைங்க மேலயும் பாசமாதான் இருக்கான்னு சொல்றேன்.//

ஒரு பெண்ணிடமிருந்தே இவ்வளவு ஆணாதிக்கத்தனமான எழுத்துக்க்ளை எதிர்பார்க்க வில்லை.

பேப்பர் செய்திகளைத் தாண்டி ஆண் பெண் உறவுகள் குறித்தான மேலதிக அறிவைப் பெற நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்று நினைக்கிறேன். ஒரு பதிவை போடுவதற்கு குறிப்பாய் சீரியஸான விஷயங்கள் குறித்து பேசும் முன்பு நல்லா யோசிச்சுட்டு போட்டால் நன்றாக இருக்கும்.

 
On Apr 29, 2010, 11:06:00 PM , ஆதவன்சுடர் said...

உங்க பதிவுல என்ன பிரச்சினைனா எதுக்கு கருத்து சொல்லுறதுன்னே புரியலை. திருமண அமைப்புக்கு சொல்லுறதா, கள்ளக்காதலுக்கு சொல்லுறதா, சட்டம் தர்மத்துக்கு சொல்லுறதா,பார்வதியம்மா பிரச்சனைக்கு சொல்லுறதா...சிரமப்பட்டு கோர்த்த மாதிரியிருக்கு...

 
On Apr 30, 2010, 12:53:00 AM , Rettaival's Blog said...

இந்தியா இப்போ வல்லரசாகிற மூடில இருக்கு நந்தினி! தர்மம் நியாயமெல்லாம் ஆட்சில இருக்கவங்களுக்கு இப்போதைக்கு எடுபடாது!
ட்வின் டவர் மாதிரி ஒரே நாளில நெஞ்சில குத்தினா தான் பச்சாதாபம் வரும். ஈராக் போலவோ..இல்லை ஆஃப்கன் போலவோ தினம் தினம் செத்தா அதெல்லாம் தர்ம லிஸ்ட்ல வராது.
உங்கள் இயல்பான எழுத்து நடை அருமை.

 
On Apr 30, 2010, 9:44:00 AM , கொல்லான் said...

பார்வதி அம்மாவ எதிர்க்கறதா காமிச்சுட்டு இருக்கறவங்க எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது. ஒரு சாதாரண, செயல்பட முடியாத பெண்ணால சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னா, இங்க இருக்கரவங்களால எப்பவோ சட்டம் ஒழுங்கு கெட்டு இருக்கணும்.
இந்த நாட்டில் நியாயம், மனோ தர்மம் இன்ன பிற உணர்வுரிமைகள் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. பி.எஸ்.வீரப்பா சொன்ன மாதிரி, ''இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்''. வேற என்னத்த சொல்றது?

 
On Apr 30, 2010, 11:06:00 AM , எண்ணங்கள் 13189034291840215795 said...

மிக தவறான தகவல் கிருபாநந்தினி..

மாற்றான் தோட்டத்து மல்லிக்காக அழிந்த சாம்ராஜ்யங்கள் உண்டு..

குடும்ப சொத்தை அழித்த ஆண்களுண்டு..

அதே போல்.. போதையில் அடிவாங்கி , குழந்தைகளோடு நல்லவரோடு தப்பித்து கடைசி நாளில் கணவனையும் சேர்த்து கவனிக்கும் நல்லுள்ளமும் உண்டு..

நீங்கள் நிறைய வாசித்துவிட்டு ஆரய்ச்சி செய்துவிட்டு எழுதுங்கள்..

அவசரமாய் எதையாவது எழுதணும்னு எழுதாதீங்க..

பெண்களை அவமானப்படுத்தியிருப்பதாய் நினைக்க வைக்குது உங்கள் பதிவு..

செய்தித்தாளில் வருவது வியாபார பரபரப்பு நோக்கம் கொண்டது..என்பதை புரியணும்..

வாழ்த்துகள்..

 
On Apr 30, 2010, 12:30:00 PM , Romeoboy said...

அடிக்கிற வெயிலுக்கு இவ்வளவு கோவாம் ஆகாது.

 
On May 1, 2010, 12:20:00 AM , Unknown said...

//இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். தன் மனைவியைத் தவிர, வேறு பெண்ணோடு தொடர்பு வெச்சிருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிடறதில்லே. பெண்டாட்டி மேலயும் பிரியமாதான் இருக்காங்க. கணவனின் கள்ள உறவு தெரிஞ்சு, பெண்டாட்டி அவனை டார்ச்சர் பண்றப்போதான் சண்டையே வருது. அதுக்காக, கணவனின் கள்ளத் தொடர்பு சரின்னு நான் இங்கே சொல்ல வரலை. அந்த நிலையிலயும் கணவன் தன் மனைவி மேலயும், பிள்ளைங்க மேலயும் பாசமாதான் இருக்கான்னு சொல்றேன்.//

உங்க கணவர் அதிர்ஷ்டசாலி...

 
On May 1, 2010, 2:58:00 AM , ரவி said...

சங்க காலத்தில் களவு என்று எல்லாம் இருந்ததே ? மனோ தர்மப்படி அதை ஏன் சங்க புலவர்கள் கண்டிக்கவில்லை ? நீங்கள் பிற்போக்கு என்றால் அப்படி ஒரு பிற்போக்கு...

 
On May 2, 2010, 2:04:00 AM , Bibiliobibuli said...

>>>ஆனா, ஆணை அடிமைப்படுத்துற அமைப்பாதான் இன்னிக்குத் திருமணம் இருக்கு.<<<<

அடேங்கப்பா! என்னவொரு கண்டுபிடிப்பு.


அப்படியே நந்தா, புன்னகை தேசம், செந்தழல் ரவி போன்றோர் சொன்னதையும் ஆமோதிக்கிறேன்.

 
On May 3, 2010, 12:19:00 PM , Unknown said...

எதிர் வினை - http://pithatralkal.blogspot.com/2010/05/blog-post_03.html

 
On May 4, 2010, 7:00:00 AM , செந்தில் நாதன் Senthil Nathan said...

சரியான உளறல் தான்...

//ஒரு கணக்கு எடுத்துப் பாத்தீங்கன்னா தெரியும், கள்ளக்காதல் தொடர்பான கொலைங்க 1995-2000-ல் இருந்ததைவிட 2001-2005-ல் ரெண்டு மடங்கு அதிகமாகி இருக்கு; 2006-2010-ல் நாலு மடங்காகியிருக்கு.//

// கள்ளக் காதல் காரணமா, காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனையும் பிள்ளைங்களையும் கொன்ன பொண்ணுங்க லிஸ்ட்தான் அதிகம்.//

ஏதாவது ஆதாரங்கள்?

 
On May 4, 2010, 1:49:00 PM , Senthil said...

I feel your thoughts reflecting more on news in magazines and newspapers. All said in news papers are not true. Eg: Google for anand-topalov match . It is not given enough importance in any magazines. You have good writing skills. Applying it with facts and figures will improve it. Nowadays ur blogs are boring