•Wednesday, January 27, 2010

சில நாளைக்கு முன்னால, ஆனந்த விகடன்ல யார் யாருக்கெல்லாமோ 25 குறிப்புகள் போடுறாங்க; சிவாஜி பத்திப் போடவே இல்லியேன்னு ஆதங்கப்பட்டு எழுதியிருந்தேன். இந்த வார விகடன்ல

ஆர்வமா படிச்சுப் பார்த்தேன். என் ஆர்வம் மொத்தமும் புஸ்ஸுனு போயிருச்சுங்கய்யா. ‘சிவாஜி’ பட்டம் கொடுத்தது பெரியார்தான், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச ஒரே படம் கூண்டுக்கிளி, பெருமாள்தான் சிவாஜியை அறிமுகம் செய்தாரு, கூட்டுக் குடும்பமா வாழ்ந்தாரு, காமராஜர் மேல பக்தி கொண்டவருன்னு ஆண்டாண்டு காலமா படிச்சு, அலுத்து, சலிச்சு, உளுத்துப் போன குறிப்புகளா, கடனேன்னு போட்டு ரொப்பியிருந்தாங்க. ஏங்க, தெரியாமதான் கேக்கறேன்; கலைத் தாயின் தவப் புதல்வனான சிவாஜிக்குப் பெருமை சேர்க்கிற விதமா, சுவாரஸ்யமான ஒரு 25 குறிப்புகளை உங்களால தேத்த முடியலையா? சரி விடுங்க, இவ்ளோ நாள் கழிச்சு இத்தயாச்சும் போட்டாங்களேன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்!
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட முழுப் பக்க பத்திரிகை விளம்பரத்துல, பாகிஸ்தான் விமானப் படை முன்னாள் தளபதி தன்வீர் முகமது படமும் இருக்குதாம். அதுதான் இப்போ பெரிய சர்ச்சையாம். பேப்பர்ல போட்டிருக்காங்க.

அவர் படம் இந்த விளம்பரத்துல எப்படி இடம்பெறலாம்கிற சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்; இந்த விளம்பரம் என்ன, நாகரிகமாகவா இருக்கு?
“உங்கள் தாய் பிறக்க அனுமதிக்கப்படாமல் இருந்தால்...”னா என்ன அர்த்தம்? அதாவது, “உங்க அம்மாவைக் கருவிலேயே அழிச்சிருந்தா, நீங்க எல்லாம் எங்கே இருப்பீங்க?”ன்னு கேக்குறாங்க. இது யாரைப் பார்த்துக் கேக்க வேண்டிய கேள்வி? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க மக்கா..! யார் யாரெல்லாம் பெண் குழந்தையை வேணாம்னு ஒதுக்குறாங்களோ, யார் யாரெல்லாம் பெண் சிசுக் கொலையை ஆதரிக்கிறாங்களோ, யார் யாரெல்லாம் பெண் சிசுக் கொலை பண்றாங்களோ அவங்களைப் பார்த்தல்லவா இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கணும்? மன்மோகன் சிங் மாதிரி மதிப்புக்குரியவங்களைப் பார்த்தா கேக்குறது?
புரியலையா? விளக்கமாவே சொல்றேன். தன் பெண்டாட்டி வயித்துல வளர்றது பெண் சிசுன்னு தெரிஞ்சுக்கிட்ட ஒருத்தன், அதை உடனே கலைக்கச் சொல்லி அவளை டார்ச்சர் பண்றான்னு வெச்சுக்குவோம்; அப்ப அவன் பெண்டாட்டியோ அவளைச் சேர்ந்தவங்களோ அவனை, “ஏண்டா நாயே! உங்க அம்மாவைக் கருவுலேயே அழிச்சிருந்தா, நீ எங்கேடா இருப்பே?”னு அவனைக் கேக்கலாம். சரியா?
அப்படின்னா, இந்த விளம்பரம் வேறெப்படி வந்திருக்கலாம்? மதிப்புக்குரிய பெரியவங்க படத்தைப் போட்டு, ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்தால், இத்தகைய மாமனிதர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா?’னு கேட்டிருந்தா, அதுல ஒரு அர்த்தம் இருக்கு.
ஹூம்.. இங்கிதமில்லாத விளம்பரம்; அதுல வெட்டித்தனமான ஒரு சர்ச்சை! ஹையோ, ஹையோ!

இந்தப் படம் ரிலீசானப்பவே, அற்புதமான படம்கிறாங்களே, அவசியம் போய்ப் பார்க்கணும்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். முடியாம போச்சு!


தடக் தடக்குனு எல்லாரும் நல்லவங்களா திருந்திடறது, காலமெல்லாம் சண்டை போட்டுக்கிட்டிருந்த கணவன் மனைவி சடக்குனு ராசியாயிடறது, க்ளைமாக்ஸ்ல பையன் பிழைப்பானா, சாவானான்னு கெடக்குறப்போ கும்பலா திரண்டு வந்து பாட்டுப் பாடுறதுன்னு இந்தப் படத்துக்கு ஒட்டாத காட்சிகளும் இருக்கு. சரி, 100 சதவிகிதம் ஒரு படத்தை ஒரு குறையுமே இல்லாம கொடுத்துட முடியுமா என்ன?
பாண்டிராஜுக்கு என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன். இந்தப் படத்தைத் தியேட்டர்ல போய்ப் பார்க்காம விட்டுட்டேனேன்னு இப்ப வருத்தப்படுறேன்.
‘பசங்க’ படத்துக்காக, சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது பாண்டிராஜுக்குக் கிடைச்சிருக்காம்.
விருது கொடுத்துக் கேலி பண்றதுங்கிறது இதுதான்!
இது எப்படியிருக்குன்னா... ஒரு ஜோக் சொல்றேன்.
“நம்ம கட்சியோட கொள்கைகளை விவரிச்சுப் பேசினதை ஒளிபரப்பினதுக்காகவா நம்ம தலைவர் அந்த சேனல் மேல கடுப்புல இருக்காரு?”
“ஆமாம்! ‘சிரிப்பொலி’ சேனல்ல சிறந்த நகைச்சுவைக் காட்சின்னு ஒளிபரப்பினாங்களாம்!”
...அப்படியிருக்கு!
ஞாபகம் இருக்கா, ‘தாரே ஜமீன் பர்’ படத்துல நடிச்ச அந்தக் குட்டிப் பையன் தர்ஷீல் தனக்குச் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கொடுத்தா வாங்க மாட்டேன்னு அடம் புடிச்சு, சிறந்த கதாநாயகனுக்கான விருதை வாங்கிக்கிட்டது?
17 comments:
நல்ல பதிவு.
"க்ளைமாக்ஸ்ல பையன் பிழைப்பானா, சாவானான்னு கெடக்குறப்போ கும்பலா திரண்டு வந்து பாட்டுப் பாடுறதுன்னு இந்தப் படத்துக்கு ஒட்டாத காட்சிகளும் இருக்கு."
பாட்டெல்லாம் பாடலையே. எல்லாரும் சேர்ந்து கை இல்ல தட்டினாங்க?.
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
// ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்தால், இத்தகைய மாமனிதர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா?’னு கேட்டிருந்தா, அதுல ஒரு அர்த்தம் இருக்கு.//
சரியாச் சொன்னீர் போங்கோ!
//‘பசங்க’ படத்துக்காக, சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது பாண்டிராஜுக்குக் கிடைச்சிருக்காம்...//
பாண்டிராசுக்கு ஒரு வேலை சிறந்த குழந்தை இயக்குனர் விருது கொடுத்திருக்கலாமோ? குழந்தைகளை வைத்து படமெடுத்ததர்க்காகவும் அவரே ஒரு குழந்தை போல் இருப்பதாலும். ஹி... ஹீ ...
\\ ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்தால், இத்தகைய மாமனிதர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா//
இது நல்லா இருக்கே
சிவாஜி மேட்டர் கூட எனக்கு கொஞ்சம் கோவமே. சிலது படிக்கும் போது ஏற்கனவே படித்த நியாபகம் வருவதை நிறுத்த முடியவில்லை..
விருது கொடுத்து கேலி பண்றத விடுங்க.. இப்போல்லாம் விருது கொடுக்கறதே கேலிக்கூத்தால்ல இருக்கு.. பணமும், அரசியல் பின்னணியும் இருந்தா நமக்கு வேணுங்குறத ஆர்டர் பண்ணி வாங்கலாம் போல..
நடப்பு செய்திகளை உங்கள் பாணியில் சிரிப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
என்னது ? சிவாஜின்னு பேர் வெச்சது பெரியாரா ?. (பாருங்க.. எங்களை மாதிரி ஆளுக்காகத்தான் இந்த மாதிரி தகவல் எழுதுறாங்க :) )
கிருபாநந்தினி! கிண்டலும் கேலியுமான உங்கள் எழுத்து நடை வசீகரிக்கிறது. தவிர, செய்திகளை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழ்ந்து யோசிக்கிறீர்கள் என்பதும் தங்கள் பதிவுகளிலிருந்து தெரிகிறது. குறிப்பாக, இந்தப் பதிவில் மத்திய அரசின் விளம்பரத்தில் இங்கிதமில்லாததைச் சுட்டிக் காண்பித்தது, பசங்க படத்துக்காக இயக்குநருக்குக் கொடுத்த விருது பற்றிய தங்கள் கருத்து இரண்டுமே சூப்பர்ப்! தொடர்ந்து வாசிக்கிறேன்.
//சரி, 100 சதவிகிதம் ஒரு படத்தை ஒரு குறையுமே இல்லாம கொடுத்துட முடியுமா என்ன?//
அப்படி கொடுத்தா! அப்புறம் மக்கள் கொட்டாவி விட்டுடுட்டு இருப்பாங்க!.. ரொம்ப சரியா எடுத்தா ஆர்ட் பிலிம் மாதிரி ஆகிடும். கொஞ்சம் மசாலா அவசியம் தான்..படம் ஓட! (திரையரங்கை விட்டல்ல)
சிவாஜி பற்றி ஆதங்கம் மிக மிக சரி.
பரவாயில்லை! நல்லாருக்கு.
regards
ram
www.hayyram.blogspot.com
வெங்கட் நாகராஜ்! என்னது... பாட்டெல்லாம் பாடலையா? புது தில்லியிலே கட் பண்ணிட்டாங்களா? :) நான் பார்த்தப்போ கை தட்டுறதுக்கு முன்னாடி கோரஸா ஏதோ பாடினாங்களேங்க்கேங்கேங்கே?!
ஆதி மனிதன்! வரிகளை உன்னிப்பா படிச்சு ரசிச்சுப் பாராட்டினதுக்கு தேங்க்ஸ்!
நன்றி ரோமியோ, நன்றி!
நச்சுனு சொல்லியிருக்கீங்க மணிகண்டன்!
பின்னோக்கி! பின்னூட்டத்துக்கு நன்றி! ரவிபிரகாஷ் சார் உங்க தலைப்பையும் தேர்ந்தெடுத்துப் புத்தகப் பரிசு கொடுத்திருக்கார் போலிருக்கே! அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்!
நன்றி ரவிபிரகாஷ் சார்! புத்தகப் பரிசுக்கும் சேர்த்து நன்றி சொல்லிக்கிறேன்!
கிரி! மசாலா அவசியம்தான். நானும் ஒத்துக்கறேன். ஆனா, நெடி தூக்கலா இல்லாம இருந்தா நல்லது! :)
சிங்கக் குட்டியாச்சே! சிம்மக் குரலோனை ஆதரிக்காம இருக்குமா? :)
ஹேராம்! உங்க வலைப்பூவைப் பார்த்தேன். ‘பகுத்தறிவு’ன்னதும் கொஞ்சம் பயந்துட்டேன். அப்புறம்தான் புரிஞ்சுது, இது உண்மையான பகுத்தறிவுன்னு! ஏகப்பட்ட மேட்டர்களைப் போட்டு, ஒரு புஸ்தகம் படிக்கிற எஃபெக்டைக் கொடுத்திருக்கீங்க.
பசங்க திரைப்படம் குழந்தைகளுக்கானதுதான். அதிலே பெரியவர்களுக்கும் சமாச்சாரம் வைத்திருப்பதுதான் சிறப்பு.. உங்களுக்கு இதுகூடவா புரியல?