Author: கிருபாநந்தினி
•Sunday, March 14, 2010
ருத்ரன் ஐயா! வணக்கங்கய்யா! நல்லாருக்கீங்களா?

உங்களை நான் ரொம்ப உயர்வா மதிக்கிறேன். என் வலைப்பூவை நீங்க படிச்சுப் பார்த்ததோட மட்டுமில்லாம, பாராட்டிப் பின்னூட்டம் இட்டது எனக்குப் பெரிய கௌரவம். அதனாலதான் தலைகால் புரியாத மகிழ்ச்சியில நன்றி சொல்லி எழுதினேன். அதுக்காக தமிழ்நதி உள்ளிட்ட சில பேர்கிட்ட வசவையும் கேலிப் பேச்சையும் வாங்கிக் கட்டிக்கிட்டேன். அதுக்காகக் கூட நான் வருத்தப்படலீங்கய்யா..! எனக்கு வக்காலத்து வாங்கினதுக்காக உங்களைக் கூட சில பேரு கன்னாபின்னானு திட்டி எழுதியிருந்தாங்க. அதுதான் என்னை வருத்தப்பட வெச்சுது. எனக்காக நீங்க திட்டு வாங்கும்படி ஆயிருச்சேன்னு உண்மையிலேயே ரொம்ப வேதனைப்பட்டேங்கய்யா!

ஆனா, இப்ப எனக்கு அதைவிடப் பெரிய வேதனை என்னான்னா, என் மதிப்புக்குரிய உங்களையே விமர்சனம் பண்ணி, கண்டிச்சு பதிவு எழுதும்படி ஆயிருச்சேன்னுதான்!

ஆமாங்கய்யா! நான் உங்க ஃபாலோயரா இருக்கேன். தவறாம உங்க பதிவுகளைப் படிச்சுட்டு வரேன். அதுல ஓவியத் தாத்தா எம்.எஃப்.ஹுசேனுக்கு வக்காலத்து வாங்கி நீங்க எழுதியிருந்ததைப் பார்த்து எனக்குக் கடுப்பாயிருச்சுங்கய்யா! இந்து மதத்துலதான் உங்களை மாதிரி ரொம்பப் பேர், ‘நாங்க நடுநிலைமைவாதிங்க; மதச்சார்பின்மைவாதிங்க; இந்து மதத்தையே திட்டுவோம். இந்துக்களை மட்டும்தான் கண்டிப்போம். மத்தபடி எவன் என்ன செஞ்சாலும் பொத்திக்கிட்டுப் போயிருவோம்’னு யோக்கிய வேஷம் போடுறவங்க இருக்காங்க. வேற எந்த மதத்துலயும் இல்லீங்க. அப்படியே ஒருத்தன், ரெண்டு பேர் இருந்தாலும் அவன் உசுருக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சு, தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதுதான். உங்களை மாதிரி தைரியமா ஊருக்குள்ள நடமாடிட்டிருக்க முடியாது.

நாஸ்திக வாதம் பேசுறவனையும் அரவணைச்சுப் போற மதம் இந்து மதம்தான். அதனாலதான் உங்களை மாதிரி ஆளுங்கள்ளாம் மனச்சாட்சியை அடகு வெச்சுட்டு, நம்மவங்களையே போட்டுக் காய்ச்சி எடுக்குறீங்க. அடுத்தவன் பண்ணின தப்பை தைரியமா எடுத்துச் சொல்லப் பயப்படுறீங்க; அல்லது, அடுத்தவனைக் குத்தம் சொல்றதுல என்னா இருக்கு; நம்மாளைச் சொன்னாலாவது நடுநிலைமையான ஆள்னு தலைல தூக்கி வெச்சுக் கொண்டாடுவாங்கன்னு நினைக்கிறீங்க.

\\அவன் செய்தது எல்லாம் சில ஓவியங்கள் வரைந்ததுதான்; அது குற்றமாகப் பார்க்கப்படுவது அவன் ஒரு முஸ்லிம் என்பதால்தான்!// நீங்கதான் அப்படிக் கோணல் புத்தியோட நினைக்கிறீங்க. வரைஞ்சது கிறிஸ்துவரா இருந்தாலும், இந்துவாவே இருந்தாலும்கூட இதே அளவு எதிர்ப்பு வந்திருக்கத்தான் செய்யும். நீங்க உங்க வசதிக்கு மதச் சாயம் பூசி மழுப்பாதீங்க.


\\அவனுக்கு என்ன எதிர்ப்பு? அவன் ஒரு மதத்தினரின் மனத்தைப் புண்படுத்திவிட்டானாம்! அதனால் அவன் இந்தியாவிற்குள்ளே வரக்கூடாதாம்! ஒரு மசூதியை இடித்து, அதன் மூலம் பல முஸ்லிம் மனங்களை நொறுக்கியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.// ஐயா! மசூதியை இடிச்சது தப்புதான். அதை யாரும் சரின்னு சொல்லலே! மகா தப்பு. அதுக்காக ஹூசேன் பண்ணது சரியாயிடுமா? எதுக்கும் எதுக்கும்யா முடிச்சுப் போடுறீங்க? மசூதியை இடிச்ச மகா பாவிங்களை என்னென்ன திட்ட முடியுமோ திட்டுங்க. நாங்களும் கூடச் சேர்ந்து குரல் கொடுக்குறோம். அதுக்காக இந்த ஆளு தன் இஷ்டத்துக்கு கேவலப்படுத்தி இந்துச் சாமிகளைப் படம் வரைவாரு; நாங்க பார்த்துக்கிட்டு கம்முனு இருக்கணுமா? ஏன்யா இப்படி வரையறீங்கன்னு கேக்கக்கூடாதா? என்னாங்கய்யா நியாயம்?

\\அவன் என்ன அப்படிக் கேவலமாக வரைந்தான்? சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தான் என்பதே குற்றச்சாட்டு! சீதையும் அனுமனும் நெருக்கமாக இருப்பதாய் வரைந்தான் என்று ஒரு குற்றச்சாட்டு!! நெருக்கமாய் இருந்ததால்தானே தூதுவனிடம் தன் மோதிரம் தந்தாள்? நிர்வாணமான சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்ட படம் எந்தக் காலத்தில்?
// நல்லாக் கேக்குறீங்கய்யா கேள்வி. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நீங்க தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுற ஹூசேன் ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு... ‘ஒருத்தனை மட்டம் தட்டி இகழ வேண்டுமானால், வேறெதுவும் செய்யத் தேவையில்லை; அவனை நிர்வாணமாய் வரைந்தால் போதும்!’னு. அப்படின்னா என்ன அர்த்தம்... இவரு இந்துச் சாமிகளை மட்டம் தட்டி இகழுறதுக்காகத்தானே அப்படி வம்படியா வரைஞ்சுக்கிட்டிருக்காரு!

அப்புறம் என்னா கேட்டீங்க... சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்டது எந்தக் காலத்தில்? ஐயா... நம்ம ஆதி முன்னோருங்க ஆடையே இல்லாம நிர்வாணமா சுத்திட்டிருந்தாங்க. அதுக்காக நாமளும் அப்படியே சுத்திட்டிருக்கணும்னா எப்படிங்கய்யா? இன்னிய கதைய பேசுங்க.

\\கடவுளுக்கு மனித முகம் எப்போது வந்தது? ரவிவர்மா வரைந்த சரஸ்வதி மாதிரிதான் அவள் இருப்பாளா? ரவிவர்மா காலத்தில் பார்டர் வைத்த ரவிக்கையை அவளுக்குப் போட்டு அழகு பார்த்தால், இப்போது ஸிலீவ்லெஸ் டாப்ஸுடன் அவளை அழகுப் படுத்தலாமா? ரவிவர்மா என்ன பிரம்மலோகத்தில் எடுத்த பாஸ்போர்ட் படத்தை மாடலாக வைத்துத்தான் அவளைப் படம் வரைந்தாரா? ஹொய்ஸாலா சிற்பங்களில் பலவற்றில் அவளுக்கு ஆடை அணிவிக்கப்படவில்லை! அவற்றைப் பார்க்கும் போது பாலுணர்வு தூண்டப்படுகிறதா? அவை ஆபாசமாகத் தெரிகின்றனவா?//

மன நல மருத்துவர் இல்லீங்களா... அதான், உக்காய்ந்து யோசிச்சுக் கேள்விகளைக் கேட்டிருக்கீங்க. சூப்பருங்கய்யா! பெரியார் கட்சிக்காரங்களுக்குக்கூட இப்படியெல்லாம் கேக்கத் தோணுமோ, என்னவோ! சிற்பங்களைப் பார்த்தா ஆபாசம் தோணாதுங்கய்யா; வக்கிரமான ஒரு சின்ன கோட்டுப் படத்தைப் பார்த்தா தோணும். வெள்ளைக்காரப் பொண்ணுங்க டூ பீஸ் டிரஸ்ல வந்தா தப்பா, ஆபாசமா தோணாதுங்க; நம்ம பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக்காரம்மா அப்படி வந்தா தோணும். டென்னிஸ் ஆடுற பொம்பளைங்க குட்டைக் கவுன் போட்டுட்டு வந்தா ஆபாசமா தோணாதுங்க; ஆபீஸ்ல கூட வேலை செய்யுற பொம்பளைங்க அப்படி வந்தா தோணும். நாம எப்படியான சூழ்நிலையில இருக்கோம்கிறதைப் பொறுத்ததுதான் எது ஆபாசம், எது ஆபாசம் இல்லேங்கிற விஷயம்! உங்களுக்குத் தெரியாதது இல்லீங்க. சரஸ்வதிக்கு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டு அழகுபடுத்தலாமான்னு மேதாவித்தனமா ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க. போடலாங்கய்யா! ஆனா, இப்ப இல்லே; நூறு, இருநூறு வருஷங்களுக்கப்புறம் அப்படியும் ஒரு காலம் வந்தாலும் வரும். அப்ப எல்லாருமே பழைய காட்டுமிராண்டிக் காலத்துக்குப் போய், ஆடையில்லாம திரிஞ்சுட்டிருப்பாங்களா இருக்கும். அப்ப, சரஸ்வதி ஜீன்ஸும் டாப்ஸும் போட்டுக்கட்டும். இப்ப வேணாங்கய்யா!

\\சிவனை, விஷ்ணுவை, முருகனை நிர்வாணமாக வரைவதில் யாருக்கும் பெரிய ஆத்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் தெய்வங்களின் கற்பு பற்றித்தான் இவர்களுக்கு அதிகம் கவலை வருகிறது. வர்த்தகத் திரைப்படக் கதாநாயகன் போல உடனே சட்டையைக் கழற்றி அவள் மீது போர்த்திவிடத் துடிக்கிறார்கள்.// ஐயா, பெண்களை உயர்ந்த இடத்தில் வெச்சுக் கொண்டாடுறது இங்கேதாங்க. ‘பெண்களைச் சுயமா சிந்திக்க விடலே, அடிமைகளா வெச்சிருக்காங்க’ன்னு ஒரு கோஷ்டி புலம்பிக்கிட்டிருக்கு. மகளிரை நாங்கதான் முன்னேத்தப் போறோம்கிறாங்க. பெண்களை பிரெயின்வாஷ் பண்ணி, அவங்களுக்கு நல்லது பண்றதா பொய் சொல்லி, சுதந்திரம் வாங்கிக் கொடுக்குறதா சொல்லி, அவங்களைத் தங்களோட வலையில வீழ்த்தி லாபம் அடையத் துடிக்கிறவங்க இவங்கதான். பாவம், ஏமாந்த பொம்பளைங்க இந்தப் பசுத்தோல் போர்த்தின புலிங்க கிட்டேயும் ஏமாந்து நிக்கிறாங்க. நித்தியானந்தனெல்லாம் இந்தப் பசுத்தோல் போர்த்தின புலிக்கூட்டத்துல ஒருத்தன்தான். அவனை மாதிரி போலி ஆசாமிகளையெல்லாம் டார் டாரா கிழிச்சு எழுதுங்க. இந்துச் சாமிகளை விட்டுருங்க.

பெண்கள் உரிமை விஷயத்துல முஸ்லிம் மதத்தைக் குறை சொல்லுறவங்க இருக்காங்க. உண்மையில, பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்குறது முஸ்லிம் மதம்தாங்க. அதனாலதான் புரட்சி எழுத்தாளரா இருந்த கமலா சுரையா முஸ்லிமா மதம் மாறின பின்னாடி, ‘நான் இந்த மதத்துக்கு வந்த பின்னாடிதான் பாதுகாப்பா இருக்கேன். பர்தா அணியறது எனக்குப் பாதுகாப்புக் கவசமா இருக்கு’ன்னு பேட்டி கொடுத்தாங்க.

\\யார் யாரைக் காப்பாற்றுவது? யார் யாருக்காக வக்காலத்து வாங்குவது? சர்வசக்திக்கு நீங்கள் பாதுகாப்பு தரத் துடிக்கிறீர்களா?
“அவன் தாயை அவன் நிர்வாணமாக வரைந்து கொள்ளட்டும், என் தாயை அப்படி வரையக்கூடாது” என்று சொல்பவர்கள் எந்தத் தாயை தங்கள் தாயென்று கூறுகிறார்கள்? பராசக்தியையா? அவள் என்ன உன் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் தாயா நீ பிரத்யேக உரிமை கொண்டாட? லோகமாதா என்று ஏன் அழைக்கப்படுகிறாள்? எல்லார்க்கும் அவள் தாய் என்றால் எல்லாருக்கும் அவள் மீது உரிமை இல்லையா? உனக்கு மட்டுமே தாய் என்றால் அவள் எப்படி உலகத்துக்கே தெய்வமாகிறாள்? உலகில் இத்தனை சத விகிதத்திற்கு மட்டும் அவள் தாயென்றால் மீதிக்கு யார்? உன் தெய்வத்தின் சக்தியை நீயே இவ்வளவு குறுக்குவதை உணர்கிறாயா?//

நல்லாத்தாங்க இருக்கு இந்தக் கேள்விங்க எல்லாம்! சர்வ சக்திக்கு நாம பாதுகாப்பு தர முடியாதுதாங்க. பிரச்னை அங்கே இல்லீங்கய்யா. நான் தெய்வமா வழிபடற ஒரு தெய்வத்தைக் கேவலப்படுத்தி வரைஞ்சா என் மனசு புண்படுது இல்லீங்களா? என் மனசைப் புண்படுத்த உங்களுக்கு என்ன ரைட்டு? நான்னா நான் இல்லீங்க. என்னைப் போல பல லட்சக்கணக்கான பக்தர்களைச் சொல்றேன். உங்க மத்த கேள்விங்களுக்குச் சொல்றேன்... எந்தத் தாயை அப்படிக் கேவலப்படுத்தி வரைஞ்சாலும் தப்பு தப்புதான். உங்க தாய், எங்க தாய்னு எந்த வித்தியாசமும் இல்லே. கோபத்துல ஒரு பேச்சுப் பேசுறதுதான். அதையே புடிச்சுக்கிட்டா எப்படி?

‘அடுத்த மதத்தை விமர்சனம் செய்யாதே! அடுத்த மதத்தின் கொள்கைகளைக் குற்றம் சொல்லாதே! உன் மதத்தின் பெருமைகளைச் சொல். அடுத்த மதத்தை விமர்சிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை’ன்னு குரான் சொல்லுது. ‘அல்லா’ படத்தைக் கேவலமாகூட வேணாம், கண்ணியமாதான் வரையறேன்னு ஒருத்தன் வரைஞ்சாலும் அது தப்புதான். அது முஸ்லிம் மதத்தோட நம்பிக்கை. அதைத் தப்பு சொல்ல முடியாது. ஹுசேனே அல்லாவை வரைஞ்சாலும் தப்புதான். ஆனா, வரைவாரா? மாட்டார் இல்லியா? ஏன், அவங்க மதத்தின் கொள்கைக்கு மதிப்புக் கொடுக்குறார். நல்லது. ஆனா, இந்து மதச் சாமிங்கன்னா அவருக்கு ஏனுங்கய்யா இந்த வக்கிர புத்தி! நீங்க எல்லாம் இருக்கீங்கன்ற தைரியம்தான்!

ஹூசேன் தாத்தா இந்துச் சாமிகளை இப்படி நிர்வாணமா வரையறதை பெரும்பாலான இஸ்லாமியப் பெரியவங்களே விரும்பலீங்கன்றதுதான் நிஜம். நாம எப்படி நித்தியானந்தக் கோமாளிகளை இந்துச் சாமியார்னு சொல்லிக்க வெக்கப்படறமோ அப்படித்தான் இந்த ஹுசேன் ஏன் இப்படிப் பண்ணுறார்னு பெரும்பாலான உண்மையான முஸ்லிம்கள் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க. உங்களை மாதிரி ‘நடுநிலைமைவாதிங்க’தான் வக்காலத்து வாங்கிட்டு இருக்கீங்க.

கீழே ஹுசேன் தாத்தா வரைஞ்ச சில படங்களைக் கொடுத்திருக்கேன். ருத்ரன் ஐயா, நீங்களே பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க!

பக்கத்துல இருக்கிற படத்தை வரைஞ்சது ஹுசேன்தான். அதுக்கு அவர் கொடுத்திருக்கிற தலைப்பு ‘இந்தியக் கற்பழிப்பு’ (Rape of India). கேட்டா, ‘மும்பை தீவிரவாதம்’ எழுப்பின கோபத்தை இப்படி வெளிப்படுத்தினதா சொல்றாரு. சரி, இதே மாதிரி அரபு நாடுகள்லேயோ, இப்ப அவர் அடைக்கலமாகியிருக்கிற ‘கட்டார்’லேயோ நடந்தா Rape of UAE-னோ அல்லது Rape of Qutar-னோ தலைப்புக் கொடுத்துப் படம் வரைவாரா?

ஹுசேன் வரைஞ்ச துர்க்கையம்மன் படம்தான் இடப் பக்கத்துல இருக்கு. இரண்டாவதா இருக்கிறது அவர் வரைஞ்ச கடவுள் லக்ஷ்மி. அதுவே, நபிகளாரின் திருமகள், அன்னையர் திலகம் பாத்திமாவை எவ்வளவு கண்ணியமா வரைஞ்சிருக்கார் பாருங்க (வலது ஓரம் உள்ள படம்).
இடப் பக்கம் உள்ளது ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி; பக்கத்துல இருக்கிற நிர்வாண சரஸ்வதி, ஹுசேன் வரைஞ்சது.

இப்பப் புரியுதுங்களாய்யா ஹுசேன் தாத்தாவோட வக்கிர புத்தி? மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா, ஐஸ்வர்யா ராய்னு கிழ வயசுலயும் கூசாம ஜொள்ளு விட்டவர்தானே அவரு? அது அவரோட பர்சனல் விஷயம். நாம கேக்க முடியாது. ஆனா, திரும்பத் திரும்ப ஏன் இந்துக் கடவுள்களையே இப்படிக் கேவலப்படுத்தி ஓவியங்கள் வரையணும்னுதான் கேக்கறேன். இதனால இந்துச் சாமிகளோட மகிமை ஒண்ணும் குறைஞ்சுடப் போறதில்லே; ஆனா, அந்தத் தெய்வங்களையெல்லாம் மனசாரக் கும்புடற எங்களை மாதிரி பக்தர்கள் மனசை ஏன் நோகடிக்கிறீங்கன்னுதான் கேக்குறேன்.

முதல் தடவை ஹுசேன் இப்படி இந்துக் கடவுளை நிர்வாணமா வரைஞ்சப்போ, உண்மையிலேயே அதை ‘கலை’ நோக்குல அவர் வரைஞ்சிருக்கலாம். ஆனா, எப்போ பக்தர்கள் கோபப்பட்டுக் கொந்தளிச்சு, அவர் கலைக்கூடத்தை அடிச்சு, உடைச்சு நொறுக்கினாங்களோ, (அந்த வன்முறையை நான் நியாயப்படுத்தலே. மகா அக்கிரமம்தான் அது!) அப்பவே, ‘சரி, இப்படி வரையறது இந்து மதத்தில் உள்ள பக்தர்கள் மனசைப் புண்படுத்துது போலிருக்கு’ன்னு அவர் அப்படி வரையறதை விட்டிருக்கணுமா இல்லியா? அதானேங்க ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு! அப்படி விட்டிருந்தார்னா, நான்கூட, ‘பாவங்க! ஏதோ இயற்கையா வரையணும்கிற ஆசையில ஹுசேன் தாத்தா அப்படி வரைஞ்சுட்டாரு. அந்தப் படம் பக்தர்களை இந்த அளவுக்கு வேதனைப்படுத்தும்னு அவருக்குத் தெரியாது, பாவம்! அதுக்கு இந்தப் படுபாவிப் பசங்க அவர் மேல இப்படிக் காட்டுத்தனமா பாய்ஞ்சி, அடிச்சு நொறுக்கியிருக்காங்களே! சே... கொஞ்சம்கூட சகிப்புத் தன்மையே இல்லே!’ன்னு பதிவு எழுதியிருப்பேன்.

ஆனா, நடந்தது என்ன? ‘போங்கடா பொங்கிங்களா... நான் அப்படித்தான் வரைவேன். நீங்க வருத்தப்பட்டா எனக்கென்ன, வேதனைப்பட்டா எனக்கென்ன? என் படத்தை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிப் போய் வீட்டுல மாட்டி வெச்சுக்க எனக்கு ஆள் இருக்கு’ன்னு ஒரு அழும்புலதானே அவர் திரும்பத் திரும்ப இப்படியே வக்கிரமா வரைஞ்சுக்கிட்டிருக்காரு?

நித்தியானந்தனைக் கண்டிச்ச நீங்க ஹுசேனையும் கண்டிச்சிருந்தீங்கன்னா, உங்களை நடுநிலைமையாளர்னு நான் ஒப்புக்கிட்டிருப்பேன். நீங்க அப்படி இல்லேங்கிறதுதான் வருத்தமா இருக்குங்கய்யா!

என் மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். இதனால உங்க மேல உள்ள மதிப்பும் மரியாதையும் எனக்குக் கொறைஞ்சுடுச்சுன்னு அர்த்தப்படுத்திக்காதீங்க!

வணக்கம்.

பணிவுடன்,

கிருபாநந்தினி.
,
|
This entry was posted on Sunday, March 14, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

68 comments:

On Mar 14, 2010, 9:30:00 PM , ரிஷபன் said...

ருத்ரனுக்குத் தேவை நல்ல மன நல மருத்துவர்!

 
On Mar 14, 2010, 9:31:00 PM , Dr.Rudhran said...

i have also drawn a nude saraswathi...so what now ? i have to go to mexico?

 
On Mar 14, 2010, 10:36:00 PM , Anonymous said...

மூளை வளர்ச்சி கம்மியோ ? வளர ரொம்ப நாள் ஆகும் போலிருக்கு.

 
On Mar 14, 2010, 11:40:00 PM , learners grid said...

சபாஷ் கிருபா நந்தினி,

நீ உன் கை தடி சுற்றும் உரிமை என் மூக்கு நுனிக்கு முன்னால் முடிந்து விடுகிறது என்பது பலருக்கு புரிவது இல்லை.
நல்ல பதிவு. உன்னை கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன் - சீற வேண்டாம் என்று சொல்லவில்லை என்பது தான் நீதி.

அன்புடன்
இராமச்சந்திரன்

 
On Mar 15, 2010, 12:29:00 AM , பத்மநாபன் said...

எந்த மதமாகட்டும் , நம்பிக்கையாகட்டும் , அதை புன்படுத்தவேண்டும் என்று நினைப்பதே அது வக்ரமான செயல் ... ஏற்கனவே உலகில் மதநல்லிணக்கம் மங்கியநிலையில் உள்ளது . கிட்டத்தட்ட மனநிலை குன்றிய நிலையில் உள்ளது. அதுக்கு டாக்டரே மேல் விளக்கம் சொல்லி மேலும் அதை வக்ரமாக்கினார் என்றால் மக்கள் எங்க போவது ? .. தெனாலி பட டாக்டர் மாதிரி இதுவும் ட்ரீட்மென்ட்ன்னு
எடுத்துகிறதா ? பெரியசக்தி, பெரியகடவுள் இதையெல்லாம் தனி மனிதர்கள் தானாக தேடி கொள்ளட்டும் .. அதுவரைக்கும் கூட்டு நம்பிக்கைக்கு
மதிப்பு கொடுத்து தான் ஆகவேண்டும் .. எல்லாம் ஒண்ணுதான் சொல்லற தத்துவம், ஒன்றிற்கு ஒன்று மதிப்பு கொடுத்துகொள்வதர்க்கு தானே ஒழிய காழ்ப்புணர்வை பரப்ப அல்ல ..
நந்தினி, வழக்கம்போல் கருத்தை எடுத்து வச்சிட்டிங்க ....டாக்டரும், மக்களும் எவ்வளவு தூரம் நேர்மறையாக கொண்டுசெல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

 
On Mar 15, 2010, 1:12:00 AM , Anonymous said...

Rightly said in polite manner. adding to your points

1. When he says that nudity is common in Indian temples he is confusing the issues - on whatever temples nude pictures are there, they are not of Gods and Goddesses but are nude human figures.

2. Issue is not just of nudity - it is of pervert intention like showing a nude woman on the tail of a monkey and naming it as Sita and Hanuman, or a nude woman in act with lion and naming it as Durga.

3. Hindus would not bother if he draws such perverted pictures and secularists want to enjoy that perversion and freedom of expression. But Hindus have all the right to object when he names these pervert pictures with the names of Hindu gods and goddesses. For example if his picture of a nude woman on the tail of a monkey he had called it as 'enjoyment' or 'Jannat ki pari', no Hindu would have any objection. As it is his business to be pervert! But if he uses the names of Hindu Gods and Goddesses we have all the right to object to it.

4. Representing India as a woman being raped, is nothing but terrible denigration. For an Indian, 'Bharat Mata' (Mother India) is a Goddess and not some figurative concept and showcasing her in this manner is highly outrageous and a completely unacceptable form of denigration.

5. It would be appropriate to ask MF Husain if he would have dared to make a similar painting had there been an attack on the UK, the UAE or Qatar and named it the 'Rape of UK, UAE or Qatar' ? (Husain has recently become a citizen of Qatar)


6. India has been wounded by innumerable terrorist attacks. Instead of expressing her pain, MF Husain has humiliated her and has added insult to her injury by showing her being raped and that too with the perverted suggestion of an animal straddling her and of a man pulling at her blouse and staring at her breast.

7. If MF Husain is truly an artist (as claimed by the artist community) and that all his thoughts about being outraged by terrorism were genuine, then why does he not paint others being nude and having sex with animals ? But as we have observed he depicts only India and Hindus in this manner.

Thus, for these reasons this painting is unacceptable to an Indian and it hurts and rapes our sensibilities.

 
On Mar 15, 2010, 2:29:00 AM , K.MURALI said...

Good post

 
On Mar 15, 2010, 3:37:00 AM , Dr.SK said...

superb blog! Dr.Rudhran seems to embark on a false secularism crticising our own religion. And your blog had exposed his false (pseudo) secularism Keep it up

 
On Mar 15, 2010, 4:11:00 AM , கால்கரி சிவா said...
This comment has been removed by a blog administrator.
 
On Mar 15, 2010, 4:20:00 AM , கால்கரி சிவா said...

மேலும் ஒன்று. இவர் ஒரு படம் எடுத்தார். அதை முல்லாக்கள் ஃபட்வா போட்டவுடன் இவர் கலைசுதந்திரம் என்று கோஷமிட்டு அழவில்லை அமைதியாக அந்த படத்தை ஸ்க்ராப் செய்துவிட்டார்.

அப்போது எங்கே இருந்தார்கள் இந்த கலைதாகம் எடுக்கும் ருத்ரன்களும் நடுவுநிலைமைவியாதிகளும்

கிழிவது சாமியார்களின் முகமூடி மட்டுமல்ல இந்த மாதிர் அறிவுசீவி வேஷம் போடும் கபடதாரிகளின் முகமும்தாம்.

 
On Mar 15, 2010, 4:40:00 AM , நாளும் நலமே விளையட்டும் said...

நீங்க பதில் சொன்ன விதமே மிக்க நிறைவு. நம் நிலையில் நாம் தெளிவாக இருக்கும்போது
எவ்வளவு பெரியவரா இருந்தாலும் நம்மைத் தாழ்த்திக் கொள்ளத் தேவையில்லை.

ஒரு சிலரால் மதிக்கப்படும் சின்னங்களை அவர்கள் முன் உதாசீனம் செய்வது மகா மட்டமான செயல்.
இரு கோடுகளே கொண்ட சிலுவையை யாரேனும் தவறான நோக்கில் வரைந்து வைத்தால் ஏற்றுக் கொள்வாரோ அதை நம்பும் மக்கள் ?
மதத்தில் எதுவும் இல்லை என்பது வேறு. அதை நம்பும் மக்களை இழிவு படுத்த வேண்டும் என்று நினைப்பது வேறு. ஹுசைன் அவர்களின் உண்மையான எண்ணம்
இந்தியாவில் உள்ள இந்து மக்களை இழிவு படுத்துவதே. அதை தெரிந்தும் தெரியாதது போல் நடிகர்கள் நம்மில் நிறைய.

 
On Mar 15, 2010, 6:34:00 AM , Veliyoorkaran said...

Valid points..?..But,still I feel you misunderstood Mr.Ruthran..!..! :(

 
On Mar 15, 2010, 9:26:00 AM , Mehar said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

 
On Mar 15, 2010, 9:38:00 AM , பத்மநாபன் said...

டாக்டரின் முதல் அணுகுமுறை எதிர் மறையாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது . விசு பட வசனம் தான் ஞாபகம் வருகிறது.
மெக்ஸிகோ போவதற்கு பிரியப்பட்டால் அதற்க்கு முன்னால் கீழ்பாக்கம் போய்விட்டு போவது தான் நல்லது .

 
On Mar 15, 2010, 9:38:00 AM , NO said...

அன்பான தோழி திருமதி கிருபா நந்தினி,

உங்களின் எழுத்துகள் அருமை!

உங்கள் எழுத்துகளை சிலர் எதிர்ப்பார்கவில்லை என்று தெரிகிறது! இந்த முற்போக்கு முகமூடிகளை மக்கள் எப்பொழுதும் நம்புவார்கள், நம்மை எப்பொழுதும்
துதிக்கும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்ற சிலரின் மன மாயையை உங்கள் இந்த கட்டுரை ஆணித்தரமாக கிழிக்கிறது!

அநேகமாக இவரைச்சார்ந்த கூட்டம், அதாவது, இணையத்தளத்தில் புரட்சிக்கு மொத்த குத்தகை எடுத்து எல்லோரையும் திட்டும் கூட்டம் உங்களின் மேல் போரை எந்நேரமும் ஆரம்பிக்கலாம்! கண்டபடி வசை உங்கள் மேல் பொழியும்! மதவாதி, பிற்போக்கு, என்று முத்திரை குத்துவார்கள்! அதெற்கெல்லாம் கலங்காதீர்கள்!

போலிச்சாமியார்கள், போலி மதவாதிகள், போலி தேசியவாதிகள் லிஸ்டில் விட்டுப்போனது போலி புரட்சியாளர்கள்! இவர்களை நன்றாக இனம்கண்டு எழுதியிருக்கிறீர்கள்! போலிச்சாமியார்களின் தற்போதைய பிரதிநிதி நித்த்யானந்தா என்றால், போலி புரட்சியாளர்களின் தற்போதிய பிரதிநிதி இந்த புரட்சி புருடாவின் புதிய கன்வெர்ட் சுவாமி சிவப்பானந்தாதான்!!!

மேலும் எழுதுங்கள்!

நன்றி

 
On Mar 15, 2010, 10:23:00 AM , erbalaji said...

நாஸ்திக வாதம் பேசுறவனையும் அரவணைச்சுப் போற மதம் இந்து மதம்தான்

அருமையா இருக்கு நண்பரே! இந்து என்பது எந்தச் சொல் என்று தெரியுமா? இந்து என்ற வார்த்தையை வெள்ளைக்காரந்தான் கொடுத்தான் என்பதாவது தெரியுமா? (வெளிநாட்டுக்காரன் எதைக்கொடுத்தாலும் அப்படியே பிரம்மிச்சிப்போறவங்கதானே நாம?)

கி.பி 13ம் நூற்றாண்டுவரை இந்து என்ற சொல் எந்த இடத்திலும் பயன்படுத்தப்பட்வில்லை என்பதாவது தெரியுமா?

உதாரணமாக எல்லா படைப்புகளின் தந்தை (பிரம்மா)தான் பெற்ற மகளையே (சரஸ்வதி) மனைவியாக்கிக் கொண்டதாவது தெரியுமா?

கி.மு 13ம் நுற்றாண்டில் இந்துகுஸ் மலைவழியாக வந்த ஆரியர்கள் இந்த நாட்டை ஆளவே இன்றளவும் இந்த இந்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதாவது தெரியுமா?

முதலில் மதம் என்ற சொல் மனிதனுக்கானது அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மதம் என்பது பிராணிகளுக்கான சொல்.

 
On Mar 15, 2010, 10:34:00 AM , Anonymous said...

மற்ற மதத்தினரை புண்படுத்தாம இருப்பவங்கதான் தன் மதத்தை சரியா பின்பற்றுவாங்க. உங்க கோணமும் நல்லா இருக்கு. ஆனா ஹுசைன் இந்தியரா இருக்கும் பட்சத்தில் வெளிநாடு ஒன்றில் தஞ்சம் அடைவது இந்தியர்களாய் நமக்கு அவமானம். குறிப்பாய் இந்த காரணத்திற்கு.

 
On Mar 15, 2010, 10:47:00 AM , Anonymous said...

Excellant Views!. Any body can draw or replicate nude Goddess as it is in our temples, But when someone objects because of his faith. You should value his sentiments. Let him draw his religion mockery first.

 
On Mar 15, 2010, 11:42:00 AM , Anonymous said...

eppadi vekkame illaama pathivulagil viLambaram theduvathunnu neenga oru post podalaam. mothalla tamilnathy. ippo rudhran. sabaash.

 
On Mar 15, 2010, 12:19:00 PM , கிரி said...

கிருபா நந்தினி சிறப்பான விளக்கம்.. உங்கள் கருத்துடன் முழுதும் உடன் படுகிறேன்.

 
On Mar 15, 2010, 2:20:00 PM , Virutcham said...

I appreciate you for a neat and polite way of expressing your point to a person you respect a lot.
---
Hussain hates Hitler and has said in an interview 8 years ago that he has depicted Hitler naked to humiliate him and as he deserves it !
---

There is a lot of diff between being a secularist and projecting oneself as a seclularist.
When we raise our words for such things it is sad that we are seen as part of gundas.


virutcham

 
On Mar 15, 2010, 3:31:00 PM , Virutcham said...

Husaain's intention is questioned more than his actual paintings (same way Dr's approach on the topic is questioned more than his stand toward's husaain's paintings from an artiste point of view).

Just an ex from Husaain's - the Parvathy and Vinayagar duo as a Mother and son is an art there in its sense even though these godly creations aren't like human births.

But what would have helped to make all these as not an art would be his approach he has maintained to paint some one as naked when he wants to insult them.

Whoever criticises this also knew about the silpas in temples. Comparison is acceptable when it is like கோவிலில் இருக்கும் சில்பங்களை பாத்தால் நமக்கு தப்பா தெரியவில்லை தானே. But when someone says கோவிலில் இல்லாத ஆபாசமா etc. So this kind of jusification only shows these supporters were looking at those silpas from a different view.

virutcham

 
On Mar 15, 2010, 5:55:00 PM , Anonymous said...

He should realise...

 
On Mar 15, 2010, 7:21:00 PM , விக்னேஷ்வரி said...

உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன் கிருபானந்தினி. ஆனால் அதை எழுத்துக்களில் வெளிப்படுத்திய விதம் மிக கோபமாக வந்திருக்கிறது. நல்ல கருத்துக்கள் கூட சொல்லப்படும் விதத்தால் அவமதிக்கப்படலாம். வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுங்கள். உங்கள் கருத்துகள் இன்னும் மதிக்கப்படும்.

பணிவுடன்,

கிருபாநந்தினி. //
முற்றிய கோபத்துடன் எழுதிவிட்டு முடிவில் இப்படி எழுதினால் மட்டும் சரியாகிவிடுமா...

பொறுமை வேண்டும் தோழி.

 
On Mar 15, 2010, 9:33:00 PM , Anonymous said...

இனிமேலாவது இம்மாதிரியான ஆட்கள் தெளிவா பேச பழகட்டும். மதச்சார்ப்பின்மைன்னா என்னன்னு தெரிஞ்சு பேசணும. இல்லேன்னா ருத்ரன் மாதிரியான ஆட்கள் வாங்கி கட்டிக்கிறதை தவிர்க்க இயலாது. இத படிங்க கிருபா நந்தினி.

http://tamilnerrupu.blogspot.com/2010/03/blog-post.html

 
On Mar 15, 2010, 10:14:00 PM , Anonymous said...

ஹைய்... இந்த ஐடியா நல்ல இருக்கே. இன்னிக்கு எவ்வளவு ஹிட் ரேட்? நானும் ஃபாலோ பண்றேன். அடுத்த பிரபலத்தை எனக்கு விட்டு கொடுங்களேன் பிளீஸ்...

 
On Mar 15, 2010, 10:27:00 PM , வால்பையன் said...

இந்து மதத்தில் கடவுள் என்பது யார் பயங்கர குழப்பமாக இருக்கிறது!

காலண்டர் படம்!
கண்ணாடி ப்ரேம் போட்ட படம்!
மர பொம்மை!
சுண்ணாம்பு பொம்மை!
மேக்கப் போட்ட
ரம்யா கிருஷ்ணன், மீனா!

யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கப்பா!

 
On Mar 15, 2010, 10:35:00 PM , கிருபாநந்தினி said...

ரிஷபன்! வரவுக்கு நன்றி!

ருத்ரன் ஐயா! பிறர் மனசு புண்படும்னு தெரிஞ்சும் வம்படியா சரஸ்வதியை நீங்க நிர்வாணமா வரைஞ்சாலும் தப்புதானுங்கய்யா! நீங்க மெக்ஸிகோதான் போங்க, மெல்போர்ன்தான் போங்க... அது உங்க இஷ்டம்!

எனக்காங்க அனானிமஸ் அண்ணாச்சி/அக்கா?

நன்றி இராமச்சந்திரன்!

 
On Mar 15, 2010, 10:37:00 PM , கிருபாநந்தினி said...

பத்மநாபன், நன்றிங்ணா! ஐயா என் மேல கடுப்பாகி பேர் சொல்லாம ஒரு பதிவே போட்டுட்டாரு! போய்ப் பாருங்க.

இரண்டாவது அனானிமஸ்! ரொம்ப விலாவாரியா எழுதியிருக்கீங்க. தேங்க்ஸ்!

குட் ஃபீட்பேக் முரளி!

 
On Mar 15, 2010, 10:40:00 PM , கிருபாநந்தினி said...

டாக்டர் எஸ்.கே. ரொம்ப நன்றிங்க ஐயா!

கால்கரி சிவா! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க!

நாளும் நலமே விளையட்டும்! அதைத்தானுங்க நானும் எதிர்பார்க்கிறேன்.

 
On Mar 15, 2010, 10:45:00 PM , கிருபாநந்தினி said...

வெளியூர்க்காரன்! வருகைக்கு நன்றிங்ணா! நான் டாக்டர் ருத்ரன் ஐயாவைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேனா? அப்படின்னா நல்லதுதாங்க. எங்கே அவரைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டுத்தான் கோபப்பட்டுட்டேனோன்னு பார்த்தேன்! :)

மெஹருன்னிசா! "Bloggers, Internet users and their intelligence". ஏங்க்கா! இண்டலிஜெண்ட்னா கிலோ என்ன விலைன்னு கேக்குற பொண்ணுக்கா நானு! எங்கிட்டே போய்... விளையாடாதீங்க்கா!

 
On Mar 15, 2010, 10:51:00 PM , கிருபாநந்தினி said...

பத்மநாபன்! நன்றிங்ணா! ருத்ரன் ஐயா பின்னூட்டத்தைப் பார்த்துக் கடுப்பாயிட்டீங்கபோல! :)

’நோ’ன்னு பேரு வெச்சுக்கிட்டு நான் எழுதினதுக்கெல்லாம் ‘யெஸ்’னு சொல்லி ஊக்குவிச்ச உங்களுக்கு நன்றி ‘நோ’ன்னு என்னால எப்படிங்ணா சொல்ல முடியும்? :)

இரா.பாலாஜி! \\முதலில் மதம் என்ற சொல் மனிதனுக்கானது அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மதம் என்பது பிராணிகளுக்கான சொல்.// கரெக்ட்டுதான்! மதம் பிராணிகளுக்கானதுதான். மனிதம்தான் மனிதர்களுக்கானது. மனிதம்னா சக மனிதனையும் நேசிக்கிறது. அவன் மனசை நோகடிக்கிறது இல்லீங்க!

 
On Mar 15, 2010, 10:54:00 PM , கிருபாநந்தினி said...

சின்ன அம்மிணி! \\ஹுசைன் இந்தியரா இருக்கும் பட்சத்தில் வெளிநாடு ஒன்றில் தஞ்சம் அடைவது இந்தியர்களாய் நமக்கு அவமானம்.// கரெக்டுதாங்க்கா! இந்தக் கருத்து தஸ்லிமா நஸ்ரினுக்கும், தலாய் லாமாவுக்கும்கூடப் பொருந்துமில்லீங்களா?

 
On Mar 15, 2010, 10:58:00 PM , கிருபாநந்தினி said...

நன்றி மூணாவது அனானிமஸ்!

நன்றி நாலாவது அனானிமஸ்! நல்ல ஐடியா குடுத்திருக்கீங்க! தேங்க்ஸ்!

நன்றி கிரி!

தேங்க்ஸ் விருட்சம்! பல கருத்துகள் சொல்லியிருக்கீங்க.

ஐந்தாவது அனானிமஸ்! கருத்துக்கு ரொம்ப நன்றிங்க!

 
On Mar 15, 2010, 11:03:00 PM , கிருபாநந்தினி said...

விக்னேஷ்வரி தங்கச்சி! நெஜம்மாவா? கோபமாவா எழுதியிருக்கேன்? ரொம்ப யோசிச்சு, அதுவும் ருத்ரன் ஐயாவைப் பத்தி எழுதறோம்கிறதால, வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்துத்தானே போட்டேன்? ரொம்ப ஓவராத்தான் போயிட்டிருக்கோமோ! போவோம்..! இன்னா பண்ணிருவாங்க! :) சும்மா காமெடிக்கு. அடுத்தடுத்த பதிவு எழுதும்போது உன் அட்வைஸை மனசுல வெச்சுக்கறேன் தங்கச்சி!

 
On Mar 15, 2010, 11:05:00 PM , கிருபாநந்தினி said...

நன்றி கறுப்பு! மதச்சார்பின்மைன்னா வேற நாட்டுலல்லாம் வேற அர்த்தம். இந்தியாவுல மட்டும், நித்தியானந்தன் மாதிரி வசமா மாட்டுற இந்துக்களைத் திட்டிட்டு, மத்தவங்க தப்பு பண்ணினாலும் கண்டுங்காணாம இருந்துடறதுன்னு அர்த்தம்!

 
On Mar 15, 2010, 11:05:00 PM , smart said...
This comment has been removed by a blog administrator.
 
On Mar 15, 2010, 11:08:00 PM , கிருபாநந்தினி said...

அடுத்த பிரபலத்தை விட்டுக் கொடுக்கச் சொல்லி நேர்மையா கேட்ட நீங்க உண்மையிலேயே the good lady-ங்க்கா!

 
On Mar 15, 2010, 11:11:00 PM , கிருபாநந்தினி said...

வால்பையன்! நெஜம்மாவே வெஷமக்காரப் பையன்தான் தம்பி, நீங்க!
\\தி.க-வில் பெரியார் என்பது யார்? பயங்கர குழப்பமாக இருக்கிறது!

காலண்டர் படம்!
கண்ணாடி ப்ரேம் போட்ட படம்!
மர பொம்மை!
சுண்ணாம்பு பொம்மை!
கல் சிலை!
மேக்கப் போட்ட
சத்யராஜ்!

யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கப்பா!//
:)

 
On Mar 15, 2010, 11:29:00 PM , கிருபாநந்தினி said...

smart! என்னுடைய உயிருக்குயிரான தோழிங்க பல பேர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்கள்தான். அவங்களோட பேசினப்பதான் தெரிஞ்சுது, ஹுசேன் பண்ற அழும்புத்தனம் அவங்களுக்கே பிடிக்கலைன்னு. அதைத்தான் என் பதிவுலயும் குறிப்பிட்டிருக்கேன். நமக்கு வாய்ச்சதுங்க சரியில்லேன்னா, பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க? இஸ்லாம் மதம் ஒரு கட்டுக்கோப்பான, ஒழுக்க நெறிமுறைகள் நிரம்பிய மதம். பள்ளிக்கூடமோ, அலுவலகமோ, அரசியல் மேடையோ... எங்கேயானாலும் ஒரு விதிமுறைக்குக் கட்டுப்பட்டு நடந்தாத்தான் எதுவுமே சீரா நடக்கும். சுதந்திரம்கிற பேர்ல ஆளுக்காள் வெவ்வேற திக்குல போனா, சிதறித்தான் போகும். அல்லாவை வரையக்கூடாதுன்னா கூடாதுதான். ‘இல்லே, வரைஞ்சு அவங்க மனசை புண்படுத்துவேன்’னு கிளம்பினா அது அயோக்கியத்தனம். அப்படிச் செய்யவும் கூடாது. நம்ம ஆளுங்க அதெல்லாம் பண்ண மாட்டாங்க. இவங்களுக்கு இளிச்சவாய் இந்து மதம் இருக்குதே, அதுவே போதுமானது!

\\எல்லா படைப்புகளின் தந்தை (பிரம்மா)தான் பெற்ற மகளையே (சரஸ்வதி) மனைவியாக்கிக் கொண்டதாவது தெரியுமா?//ன்னு கேட்டிருக்காரு பாலாஜி. எல்லாரும் ஆதாம், ஏவாள்லேருந்து தோன்றினவங்கதான்னு சொல்லுது கிறிஸ்துவ மதம். அப்படின்னா... கேட்டிருக்கலாம். ஆனா, கேக்கலை. அதான் சொன்னேனே, நம்மவங்களே சரியில்லேங்குறதுக்காக மத்தவங்களை வம்புக்கு இழுக்குறது தப்பு!

 
On Mar 16, 2010, 1:12:00 AM , பத்மநாபன் said...

அவர் தான் பின்னூட்ட விளையாட்டு இல்லை ன்னு சொல்லிவிட்டார் ... கடைசியில வாள் .... வாள் ன்னு இத்து போன வாள் விளையாட்டுக்கு வந்துட்டார் ... அவனவன் உழைச்சா சோறுங்கற நிலையில் சின்ன சின்ன நம்பிக்கைக்களை வைத்துக்கொண்டு
வாழ்ந்துகொண்டு இருக்கிறான் . அவனவன் நம்பிக்கை அவனவனுக்கு . முதல் மனோதத்துவ பயிற்சி '' இன்னொருவனின் நம்பிக்கை
உங்களை பாதிக்காதவரை அவன் நம்பிக்கையை இகழவேண்டாம் '' அப்படி பாதிக்கும் பட்சத்தில் '' காழ்ப்புணர்வோ, சர்ச்சைகளோ இல்லாமல் அழகாக புத்திமதி கொடுக்கலாம் ( அதுக்குதான் படிச்சோம் ....காலம் முழுவதும் படிச்சிட்டு இருக்கோம் ) ...

 
On Mar 16, 2010, 1:13:00 AM , அறிவன்#11802717200764379909 said...

Excellent post..

Keep going.

 
On Mar 16, 2010, 4:24:00 AM , Anonymous said...

//சின்ன அம்மிணி! \\ஹுசைன் இந்தியரா இருக்கும் பட்சத்தில் வெளிநாடு ஒன்றில் தஞ்சம் அடைவது இந்தியர்களாய் நமக்கு அவமானம்.// கரெக்டுதாங்க்கா! இந்தக் கருத்து தஸ்லிமா நஸ்ரினுக்கும், தலாய் லாமாவுக்கும்கூடப் பொருந்துமில்லீங்களா?//

நிச்சயம் தஸ்லிமா நஸ்ரினுக்கும் பொருந்தும் நந்தினி, நாமும் தாலிபான்களாக மாறணுமா. போட்டுத்தள்ளீடுவேன்னு பயமுறுத்தி ஓட விடுவது தவறுன்னு நினைக்கிறேன்.

 
On Mar 16, 2010, 7:08:00 AM , பித்தனின் வாக்கு said...

என்னது இது இப்படி பண்ணீட்டிங்க. போச்சு, உங்களால அகில உலக பிரபல பதிவர் ஆக முடியாது. திராவிடம்,கடவுள் எதிர்ப்பு (இந்து மதம் மட்டும்,) சாதி எதிர்ப்பு (பார்ப்பனியம் மட்டும்) இப்படி எழுதினா மட்டும் தான் ஆக முடியும். இதுதான் டிரண்ட்.

தெரு நாய்கள் குறைத்து ஆதவன் புனிதம் கெடுவது இல்லை. வீணர்கள் பேசி ஒரு காரியம் ஆவது இல்லை, அது மாதிரி தான் இது என்று விட்டு விடுங்கள். நன்றி.

 
On Mar 16, 2010, 9:55:00 AM , வால்பையன் said...

//தி.க-வில் பெரியார் என்பது யார்? பயங்கர குழப்பமாக இருக்கிறது!//

நியாயமான கேள்வி தான்! ஆனால் தி.க கட்சிகாரர்களை பார்த்து கேட்க வேண்டியது!

நாத்திகம், பகுத்தறிவு என்றாலே நம் மக்களுக்கு பெரியாரும், தி.க. வும் தான் ஞாபகம் வருகிறது என்றால் இன்னும் படித்தவர்கள் கூட பொதுபுத்தியில் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது!

பெரியாரிஷம் மதமாகவும், பெரியார் கடவுளாகவும் மாற்றப்பட்டு கொள்கைகள் அடகு வைக்கப்பட்டு வெகு நாட்கள் ஆகிறது!

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தலும், இந்து மதத்தின் உருவ வழிபாடும் ஒன்றே!

அட பதருகளா, இந்து மதமே இப்படி தான் தலைவனுக்கு சிலை வைத்து வணங்கி உருவாச்சுன்னு சொன்னாலும் இப்போ நம்ப யாரும் தயாரா இல்ல!

 
On Mar 16, 2010, 10:10:00 AM , வால்பையன் said...

//என்னது இது இப்படி பண்ணீட்டிங்க. போச்சு, உங்களால அகில உலக பிரபல பதிவர் ஆக முடியாது. திராவிடம்,கடவுள் எதிர்ப்பு (இந்து மதம் மட்டும்,) சாதி எதிர்ப்பு (பார்ப்பனியம் மட்டும்) இப்படி எழுதினா மட்டும் தான் ஆக முடியும். இதுதான் டிரண்ட்.//

அப்ப, டோண்டு, அன்புடன் பாலா, இட்லிவடை பிரபல பதிவர்கள் இல்லையா!?

என்ன கொடும சரவணா இது!

 
On Mar 16, 2010, 2:05:00 PM , Ilan said...

a new member to karseva and the "secular" RSS. Sometimes i think "cho" is a bit correct on women though i always differed on his views.

 
On Mar 16, 2010, 2:27:00 PM , சீனு said...

I second this. Good questions.

 
On Mar 16, 2010, 3:50:00 PM , எம்.எம்.அப்துல்லா said...

//ஹூசேன் தாத்தா இந்துச் சாமிகளை இப்படி நிர்வாணமா வரையறதை பெரும்பாலான இஸ்லாமியப் பெரியவங்களே விரும்பலீங்கன்றதுதான் நிஜம் //

ஆம்.உசேனின் செயலில் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு உடன்பாடில்லை என்பதுதான் உண்மை.உசேன் செய்தது என் பார்வையில் தவறு.


அதே நேரத்தில் இது நம்வீடு. எந்தப் பிரச்சனையையும் பிறர் தயவின்றித் தீர்த்துக்கொள்ளும் அறிவும்,துணிவும் உடைய இந்த தேசத்தில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக ஒரு முதியவன் தேசம் கடக்கும் நிலை ஏற்பட்டது வெக்கக்கேடான தலைகுணிவு.

 
On Mar 16, 2010, 4:23:00 PM , Anonymous said...

மிகச் சரியாக எழுதப் பட்ட பதிவு. பதில் சொல்லத் தெரியாமல் நானும் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்திருக்கிறேன் அதனால் என்ன மெக்சிகோ போக வேண்டுமா எனக் கேட்கும் ருத்ரனின் பதில் அவரது பதிலளிக்க முடியாத இயலாமையால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

இந்துக் கோவில்களில் காட்டப் படாத நிர்வாணமா என்று கேட்கும் முட்டாள்களுக்கு சரியான படி விளக்கம் அளித்திருக்கிறீர்கள்.

அழகு என்பது பொருளில் மட்டுமல்ல பார்ப்பவர் கண்களிலும் இருக்கிறது -அதுவும் இடம் , பொருள் , ஏவல், சூழ்நிலை பொருத்து மாறும் என்பது என்றைக்கு மரமண்டைகளில் ஏறுமோ...

சக மனிதர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத முட்டாளைக் கலைஞன் என்று கொண்டாடும் மாக்கள் திருந்த இறைவன் அருள் புரியட்டும்.

Individual Freedom Vs Social Responsibility க்கு வித்தியாசம் தெரியாத இன்னும் சில அல்லக் கைகளும் ஆதரவுப் பதிவு போட்டு தன்னை முற்போக்கு வியாதியாகக் காட்ட முயற்ச்சிக்கின்றனர்..பாவம்

சரவண குமரன்

 
On Mar 16, 2010, 4:32:00 PM , தமிழ் உதயம் said...

\\தி.க-வில் பெரியார் என்பது யார்? பயங்கர குழப்பமாக இருக்கிறது!

காலண்டர் படம்!
கண்ணாடி ப்ரேம் போட்ட படம்!
மர பொம்மை!
சுண்ணாம்பு பொம்மை!
கல் சிலை!
மேக்கப் போட்ட
சத்யராஜ்!

யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கப்பா!//
:)

ரசித்தேன். சமயோசித புத்தி உங்களிடம் நன்றாக வேலை செய்கிறது.

 
On Mar 16, 2010, 8:55:00 PM , K.R.அதியமான் said...

இதையும் பார்க்கவும் :

எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்
http://www.jeyamohan.in/?p=4864

 
On Mar 16, 2010, 11:21:00 PM , NO said...

எல்லோர் கவனத்திற்கும்
---------------------------------------------
தன்னுடைய கடவுளை அவமானப்படுத்துகிறார்கள் என்று எண்ணி தன்னின் எதிர்ப்பை எழுத்துகளில் காண்பித்தால் அது மதவாதம்! அதுவும் இந்த்துக்கள் செய்தால் அது இந்துதுவம்!

அவமானம் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் அந்த படங்களை மறுபடியும் தன்னின் தளங்களில் போட்டு இவர் இது மட்டும்தானே செய்தார், இதில் என்ன தவறு, இதை கண்டித்து மறுப்பு தெரிவிப்பவறேல்லாம் இந்து மத வாதி, இந்து பாசிஸ்டு என்று வேறு விளாசல்கள்!
சரி. தன்னுடையய மதத்தை அவமானப்படுத்தினார் ஒருவர் என்று செய்யப்பட்ட ஒரு காரியத்தை வைத்து (இந்த விடயத்தில் ஒரு நிர்வாண படம் வரையப்பட்டது, அது பலராலும் மறு பதிவு செய்யப்படுகிறது) பதிவு போட்டாலோ பின்னூட்டம் போட்டாலோ அது இந்துத்துவவாதம்.

ஒப்புக்கொள்கிறோம்!
இதை தற்ச்சமயம் ஒரு பதிவு போட்டு சொன்னது திரு செந்தழில் இரவி! அதாவது, இவரின் கொள்கைப்படி தன்னுடைய கடவுளாரை தூக்கிப்பிடித்தால் அது மதத்துவம்! அதாவது, கடவுள் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும், நம்பும் ஒரு உருவத்தை நிர்வாணமாக வரைந்தாலும் கூடஅதை எதிர்த்தோ விமர்சித்தோ பேசினால் அது இந்துத்துவம்!
இதை கொஞ்சம் கவனியுங்கள்!
புதுச்சேரி இரா சுகுமாரன் என்பவர் 2006 ஆம் வருடம் "தேவாலயங்களில் இயேசு இல்லை" என்ற ஒரு பதிவை அவரின் தளத்தில் எழுதினர்!!
http://rajasugumaran.blogspot.com/2006/04/blog-post_20.html

அதில் இயேசு கிருத்துவைப்பற்றி ஒரு விமர்சனமும் இருக்கிறது! அதில் இயேசு ஒரு மத போதகரோ, காவலரோ இல்லை மற்றும் கிருத்துவ மதம் எந்த இயேசுவின் அங்கீகாரம் பெற்றதும் அல்ல என்று மட்டும் நில்லாது, இயேசு ஒரு நாத்திகர் என்று சொல்ல விழைகிறது! கவனிக்கவேண்டிய விடயம் இப்பொழுது நான் எழுதுவது இயேசு பற்றிய விமர்சனம் அல்ல. அதில் எனக்கு ஆர்வமும் அல்ல. மாறாக அந்த பதிவிற்கு வந்த வந்த ஒரு எதிர்ப்பை
பற்றிதான் இது!
தான் வணகும் கடவுளாரை பற்றி யாரவது விமர்சனம் செய்தால் அதை கோபம்கொண்டு மறுப்பது இயல்புதான் என்ற நோக்கில் ஒரு சிலர் எழுதிய பின்னூட்டங்களை படித்ததில் ஒருவரின் பின்னூட்டம் பளீரென்று நம்மை அறைகிறது!
அந்த பின்னூட்டத்தை முதலில் கவனிப்போம்!

"அன்பை போதித்தவரை இழி சொல் கூற வேண்டாம்..நீங்களும் இது போன்ற உபயோகமற்ற பதிவுகள் போட வேண்டாம்..."

அதாவது தன் கடவுளை இழிசொல் கொண்டு தாக்கவேண்டாம் மேலும் இந்த மாதிரி குப்பையான பதிவுகளை எழுதவேண்டாம் என்று இந்த பின்னூட்டக்காரர் ஆணித்தரமாக சொல்லுகிறார்!

OK, தவறில்லை என்றுதான் முதலில் சொல்லத்தோன்றுகிறது! Afterall he is defending his own beliefs and Gods!

திருமதி கிருபா நந்தினியும் இதேபோல்தான் ஒருவரின் சரஸ்வதி பற்றிய பதிவிற்கு பதில் போட்டார்கள்! என்ன பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு பதிவையே போட்டு தன கோபத்தை வெளிப்படுத்தினார்! அது அவர் இஷ்டம். அவரின் நம்பிக்கையை சாடிய ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடினால் அவருக்கு வந்தது கோபம்! ஆனால் அவருக்கு இப்பொழுது கொடுக்கப்படும் பெயரோ, இந்து மதவாதி!!! அவருக்கு மட்டும் அல்ல, ஹுசைனை கண்டித்து எழுதிய அத்துணை மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட பெயர் "இந்துத்துவவாதி"!!!

அப்படியானால் அதேபோல தன் கிருத்துவ கடவுளை விமர்சித்ததால் கோபம்கொண்டு பின்னூட்டம் போட்டவரை என்னவென்று சொல்லலாம் ??????????

கிருத்துவவாதி அல்லது கிருத்துவ மதவாதி, கிருத்துவ பாசிஸ்டு !!!!!!!!!!!

அந்த பின்னூட்டத்தை போட்டவர் திரு செந்தேழில் ரவி அவர்கள்! இது நடந்தது
Monday, April 24, 2006 4:18:00 PM
அதாவது சரஸ்வத்தியை களங்க படுத்தி பேசுவதை எதிர்த்தால் அது இந்து மதவாதம்! சொல்லுவது திரு ரவி! அதே அவர் தன் கடவுளாரை தூக்கி பிடித்தால் அது பகுத்தறிவு!!!!

வெட்கக்கேடு

நன்றி

 
On Mar 17, 2010, 12:38:00 AM , Virutcham said...

Kirupa

From my point of view one cannot try to restrict an artiste that he can draw only this or that. Artiste has his freedom to be within or beyond a boundary.
If Dr has drawn something it is purely his wish. An artise's art is questioned only when he puts his art in public and demand others to accept it and abuse others when they refuse to accept it.

you may or may not accept it. I just told my view.

virutcham

 
On Mar 18, 2010, 12:53:00 AM , ரவிஷா said...

நெத்தியடி! சரியாய்ச் சொல்லி் ருத்ரனையே மடக்கிவிட்டீர்கள்!

வாழ்த்துக்கள்!

 
On Mar 18, 2010, 11:31:00 AM , முகிலன் said...

அன்பின் கிருபாநந்தினி..

ஒரு ஓவியருக்கு படைப்புச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே போல அவரது படைப்பு மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டியதும் முக்கியமாகிறது.

ஹுசைன் செய்தது ஒரு ஓவியர் என்ற முறையில் சரியாக இருக்கலாம். ஆனால் அவரது ஓவியங்களுக்கு அவர் சார்ந்த நாட்டு மக்களில் ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது அவர் அந்த ஓவியங்களை வரைந்ததற்காக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

அப்படி அவர் மன்னிப்பு கேட்டதும் அவரை மன்னித்திருக்கவும் வேண்டும். உள்ளர்த்தம் பார்த்தோம் என்று அவர் சார்ந்த மதத்தைக் காரணம் காட்டி அவர் மீது வன்முறையை ஏவி விடக் கூடாது.

மேலே சொன்னது ஹுசைன் அவர்களின் ஓவியங்களையும் அதன் காரணமாய் நிகழ்ந்த வன்முறைகளையும் பற்றிய என் கருத்து.

இப்போது நிகழ்வுக்கு வருவோம். டாக்டர் ருத்ரன் அவர்கள் ஹூசைன்னுக்கு ஆதரவாக பதிவெழுதினார் என்றால் அங்கே சென்று உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள். அவர் உங்கள் நியாயமான் வாதங்களை பொருட்படுத்தாமலோ இல்லை பதில் சொல்லாமலோ போனால், அதன் பிறகு உங்கள் வலைப்பூவில் பதிவாக வெளியிடுங்கள். அதை விடுத்து உடனடியாக வாள் சுழற்றுவது, ருத்ரன் போன்ற ஆட்களின் மேல் தனி நபர் தாக்குதல் நடத்த ஏதுவாகிவிடுகிறது.

உங்கள் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் 50% சதத்திற்கும் மேல் ருத்ரன் அவர்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் தாக்கி எழுதப் பட்டிருக்கிறது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ருத்ரன் அவர்கள் உங்கள் மீது சைபர் க்ரைமில் புகார் கொடுத்தால் நீங்கள் உங்கள் தளத்தை இழுத்து மூடவேண்டியிருப்பதோடு சிறைக்கும் செல்ல நேரலாம். ஏனென்றால் உங்கள் வலைப்பூவில் விழும் கமெண்டுகளுக்கு நீங்களே பொறுப்பு.

ஆகவே ஆரோக்கியமான விவாதங்களை எழுதியவருடைய பதிவிலேயே நடத்துங்கள். உதாசீனப் படுத்தப்படும் பட்சத்தில் தனிப் பதிவெழுதலாம்.

 
On Mar 18, 2010, 11:32:00 AM , முகிலன் said...

//ஆமாங்கய்யா! நான் உங்க ஃபாலோயரா இருக்கேன். தவறாம உங்க பதிவுகளைப் படிச்சுட்டு வரேன். அதுல ஓவியத் தாத்தா எம்.எஃப்.ஹுசேனுக்கு வக்காலத்து வாங்கி நீங்க எழுதியிருந்ததைப் பார்த்து எனக்குக் கடுப்பாயிருச்சுங்கய்யா!//

இதை ஏன் நீங்கள் அங்கேயே சொல்லவில்லை???

 
On Mar 18, 2010, 11:38:00 AM , முகிலன் said...

//\\அவன் செய்தது எல்லாம் சில ஓவியங்கள் வரைந்ததுதான்; அது குற்றமாகப் பார்க்கப்படுவது அவன் ஒரு முஸ்லிம் என்பதால்தான்!// நீங்கதான் அப்படிக் கோணல் புத்தியோட நினைக்கிறீங்க. வரைஞ்சது கிறிஸ்துவரா இருந்தாலும், இந்துவாவே இருந்தாலும்கூட இதே அளவு எதிர்ப்பு வந்திருக்கத்தான் செய்யும். நீங்க உங்க வசதிக்கு மதச் சாயம் பூசி மழுப்பாதீங்க.//

இந்தக் கருத்தில் நான் டாக்டரோடு உடன்படுகிறேன்.

ஹூசைன் ஒரு முஸ்லிமாக இருந்திருக்காவிட்டால் இந்தப் பிரச்சனை இவ்வளவு பெரிதாயிருக்காது. கத்தாரும் அவருக்கு குடியுரிமை வழங்கியிருக்காது.

ஒரு உதாரணம் தருகிறேன். கமலஹாசன் தன் பல படங்களில் மடிசாரை கவர்ச்சியாகவும் கேவலமாகவும் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது உரத்த கண்டனங்கள் வந்ததில்லை.

அதுவே ந்யூ படத்தில் (அந்தப் படம் ஒரு நாலாந்தரப் படம் என்பது வேறு விசயம்) மடிசாரைக் கவர்ச்சியாகக் காட்டினார் என்பதற்காக எழுந்த எதிர்ப்பை நாம் அறிவோம்? எதற்காக? எஸ்.ஜே.சூர்யா அந்த சமூகத்தையோ அந்த மதத்தையோ சேராதவர் என்பதற்காக.

 
On Mar 18, 2010, 12:19:00 PM , முகிலன் said...

// கிருபாநந்தினி said...
வால்பையன்! நெஜம்மாவே வெஷமக்காரப் பையன்தான் தம்பி, நீங்க!
\\தி.க-வில் பெரியார் என்பது யார்? பயங்கர குழப்பமாக இருக்கிறது!

காலண்டர் படம்!
கண்ணாடி ப்ரேம் போட்ட படம்!
மர பொம்மை!
சுண்ணாம்பு பொம்மை!
கல் சிலை!
மேக்கப் போட்ட
சத்யராஜ்!

யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கப்பா!//
:)//

நீங்க சொல்றது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?

நான் பெரியாரை நேர்ல பாக்கலைன்னாலும் எங்கப்பா பாத்துருக்கார்.


நீங்க கடவுளை நேர்ல பாத்திருக்கீங்களா? இல்ல உங்கப்பா? உங்க தாத்தா? உங்க முப்பாட்டன்?

பி.கு: நான் நாத்திகன் அல்ல. பெரியாரின் கடவுள் மறுப்பு தவிர மற்ற கொள்கைகளில் பிடிப்புள்ளவன்.

 
On Mar 18, 2010, 11:16:00 PM , கிருபாநந்தினி said...

பத்மநாபன், அறிவன் இருவருக்கும் நன்றிங்ணா!

சின்ன அம்மிணி! நீங்க சொல்றது கரெக்டுதான். நான் இல்லேங்கலையே?

பித்தனின் வாக்கா இருந்தாலும் எத்தனைத் தெளிவா இருக்கு!

நன்றி வால்பையன்! \\பெரியாரிஷம் மதமாகவும், பெரியார் கடவுளாகவும் மாற்றப்பட்டு கொள்கைகள் அடகு வைக்கப்பட்டு வெகு நாட்கள் ஆகிறது!

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தலும், இந்து மதத்தின் உருவ வழிபாடும் ஒன்றே!// அப்படிப் போடுங்க அருவாள!

 
On Mar 18, 2010, 11:21:00 PM , கிருபாநந்தினி said...

இலன், சீனு இருவருக்கும் ரொம்ப நன்றிங்க!

எம்.எம்.அப்துல்லா! \\அதே நேரத்தில் இது நம்வீடு. எந்தப் பிரச்சனையையும் பிறர் தயவின்றித் தீர்த்துக்கொள்ளும் அறிவும்,துணிவும் உடைய இந்த தேசத்தில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக ஒரு முதியவன் தேசம் கடக்கும் நிலை ஏற்பட்டது வெக்கக்கேடான தலைகுணிவு.// நிச்சயம் அது தலைகுனிவுதான். அதுல சந்தேகம் இல்லை. உங்க கருத்தோடு நான் உடன்படுறேன்.

சரவணகுமரன், தமிழ் உதயம், அதியமான், நோ, விருட்சம், ரவிஷா... எல்லார்க்கும் ரொம்ப நன்றிங்க!

 
On Mar 18, 2010, 11:26:00 PM , கிருபாநந்தினி said...

முகிலன்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி! ஹுசைன் மீதான வன்முறை சரி என்று நானும் சொல்லவில்லை. உங்கள் கருத்துதான் எனக்கும். ருத்ரன் வலைப்பதிவைப் படித்ததும், அதிலேயே என் மொத்தக் கருத்தையும் பதிவிட முடியாது என்றுதான் தனிப் பதிவாக எழுதினேன். \\உங்கள் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் 50% சதத்திற்கும் மேல் ருத்ரன் அவர்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் தாக்கி எழுதப் பட்டிருக்கிறது.// நீங்கள் சொன்ன பிறகு பின்னூட்டங்களை மறுபடி ஒருமுறை படித்தேன். அப்படி திரு.ருத்ரன் குடும்பத்தாரைத் தாக்கி எந்தப் பின்னூட்டமும் இல்லை. எனினும், இரண்டு பின்னூட்டங்களை டெலிட் செய்துள்ளேன். அதற்குக் காரணம் அவை சற்றுக் கடுமையாக இருந்தது என்பதுதானே தவிர, அவற்றிலும் ருத்ரன் குடும்பத்தாரைப் பற்றிய தாக்குதல் எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி!

 
On Mar 18, 2010, 11:31:00 PM , கிருபாநந்தினி said...

முகிலன்! \\நீங்க சொல்றது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?// ஐயோ! அதை சீரியஸா எடுத்துக்கிட்டீங்களா? வால்பையனைக் கொஞ்சம் தமாஷ் பண்ணினேங்க. மத்தபடி உங்க மூணு பின்னூட்டமும் நேர்மையா, சிந்திக்க வைக்கிறதா இருந்துச்சு. ரொம்ப நன்றிங்ணா! இத்த கேலின்னு நெனைச்சுராதீங்க. நெஜம்மாவே உங்க பின்னூட்டம் எனக்குப் பயனுள்ளதா இருந்துச்சு. அடிக்கடி வந்து ஏதாச்சும் இப்படி உபயோகமா எழுதிட்டுப் போனிங்கன்னா உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு!

 
On Mar 18, 2010, 11:49:00 PM , Virutcham said...

//கமலஹாசன் தன் பல படங்களில் மடிசாரை கவர்ச்சியாகவும் கேவலமாகவும் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது உரத்த கண்டனங்கள் வந்ததில்லை.//

அவ்வை சண்முகியில் மாமியை பறந்து பறந்து அடிக்கும் சண்டை மாச்டராகக் காட்டியதற்கும் கொஞ்சம் கொச்சைபடுத்தும் படி காட்டியதற்கும் அவருக்கு கண்டனகள் வைக்கப் பட்டன. அது சில பத்திரிக்கைகளிலும் வந்தது

virutcham

 
On Mar 19, 2010, 6:56:00 PM , Anonymous said...

இங்க வாங்க.

http://tamilnerrupu.blogspot.com/2010/03/blog-post_18.html

 
On Mar 20, 2010, 12:53:00 PM , Virutcham said...

பென்சில் கோடுகளை கோவில் சிற்பங்களோடு ஒப்பிட்டு தனது செய்கைக்கு அங்கீகாரம் எடுத்துக் கொள்பவதற்கும் ரவி வர்மா ரவிக்கை போட்டுக் கொடுத்து விட்டானா என்று ஏளனம் செய்வதற்கும், எனது எதிர்வினை


பென்சில் கோடு
கள் கோவில் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கதா? link http://www.virutcham.com/?p=1004

 
On Mar 23, 2010, 2:35:00 AM , sakthi said...

அன்பு தோழி கிருபா நந்தினி ,
அவரவர்களுக்கு அவர் அவர் மதம் பெரிது .ஒருவர் மனதை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை .இப்படி கூறுவதால் தற்குறி பகுதறிவில்லாதவன் என்று கூறுபவர்கள் பற்றி கவலை வேண்டாம் .கடவுள் இல்லை என்றும் , கடவுளை பற்றி விமர்ச்சிபவர்களும் பகுத்தறிவாளர்கள் போல் ஒரு மாயை உருவாக்கி வைத்துள்ளார்கள் அவ்வளவே .
கோவை சக்தி

 
On Mar 26, 2010, 7:44:00 PM , vijaya said...

It is well said in a Polite manner. Hope everyone completely agree what is Kriupa Nandhini's view.