Author: கிருபாநந்தினி
•Friday, April 23, 2010
திவு எழுதி ரொம்ப நாளாச்சுங்ணா... நாளச்சுங்கக்கா!

புடிக்கலை; எழுதுறதையே உட்டுடலாம்னு இருந்தேன். கிருபாதான், ‘சும்மா எழுது! தப்பா ஒண்ணும் எழுதலியே? உன்னோட அபிப்ராயங்களத்தானே எழுதறே? அது சில பேருக்குப் புடிக்கலேன்னா, அதுக்கு நாமென்ன பண்றது?’ங்கிறாரு.

பொதுவா எல்லாரும், உங்க கருத்த தகிரியமா சொல்லோணும்கிறாங்க; அப்படிச் சொன்னா, உனக்கு ஒரு கருமமும் தெரியலங்கிறாங்க; சிலர் நாம எழுதுறதைப் பாராட்டுறாங்க; அவிங்களைப் பத்தியே வெளிப்படையா நம்ம கருத்தச் சொன்னா, மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போயிர்றாங்க! கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு வெறுமே பேசிட்டிருக்கோம். கருத்து சொன்னா பதிலுக்கு எதிர்க் கருத்து சொன்னா பரவால்ல; நீ இன்னா கருத்து சொல்றதுன்னு திருப்பிக் கேட்டா இன்னா சொல்றது? ஆனா, அப்படிக் கேக்குறவங்க எல்லாம் அவங்க கருத்தச் சொல்லலாமாம்; அத எல்லாரும் ஏத்துக்கணுமாம்! நம்ம கருத்தச் சொல்லக்கூடாதாம்! இதான் நாட்டுல நியாயமாட்டம் இருக்குது!

அதான், நான் மத்தவங்க வலைப்பூக்களைப் படிச்சிட்டு, கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துர்றது. தமிழ்நதியோட வலைப்பூவுல சில மேட்டர் பாத்தேன். எனக்குச் சிலது புரியலை. விளக்கம் கேட்டேன். சொல்லிச்சு. மறுபடி புரியலை. திரும்பக் கேட்டேன். ‘உனக்குப் பதில் சொல்லிட்டிருக்கிறதே எனக்கு வேலை இல்லை’ன்னு அக்கா கோவிச்சுக்கிச்சு. சரின்னு, கட்டக் கடைசியா ஒரே வரி கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துட்டேன். அதை தமிழ்நதி பப்ளிஷ் பண்ணலை. அவ்ளோ காண்டு எம் மேல!

ரொம்ப ரசிச்சுப் போட்ட அந்த கமெண்ட்டை மட்டும் என் ஆசைக்கு இங்கே போட்டுட்டு, அடுத்த மேட்டருக்கு நகந்துர்றேன்.

//ஆறுவது சினம்; கூறுவது தமிழ்(நதியல்ல)! நன்றி தமிழ்நதி!//

ஓகே! நான் இனிமே ஒருத்தர் வம்புக்கும் போறதா இல்ல. உட்டேன்... உட்டேன்... உட்டுட்டேன்..!

உருப்படியா(!) சில கட்டைங்களைப் பத்திப் பேசலாம்.

‘கட்ட... கட்ட... கட்ட... நாட்டுக்கட்ட...’ன்னு ஒரு பாட்டு இருக்குது. விக்ரமும் கிரணும் ஆடுற பாட்டு. கிரணக்காவ நாட்டுக்கட்டன்னு சொல்லிப் பாடுறாரு விக்ரம். அத எந்தத் தாய்க்குலமும், மனைவிகுலமும், மகள்குலமும் எதிர்த்த மாதிரி தெரியல. நேத்துக்கூட அந்தப் பாட்டு டி.வி-யில ஓடிச்சு. மேல்மாடியில குடும்பத்தோட ஒக்காந்து ரசிச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க.

பொம்பளைங்களை ‘கட்ட’ன்னு சொல்றது, ‘ஃபிகர்’னு சொல்றதுல ஆம்பளைங்களுக்கு அவ்ளோ ஆசை. கணக்குப் பண்ணிடலாம்கிற ஆசையில ஃபிகர், உணர்ச்சியே இருக்கக்கூடாதவ பொண்ணுங்கிற மனோபாவத்துல ‘கட்ட’... இப்படி பொம்பளைங்களை மட்டப்படுத்திப் பேர் வைக்கிறதைக்கூடப் புரிஞ்சுக்காம சில பொம்பளைங்க அதைக் கேட்டுக் கெக்கெக்கேன்னு சிரிக்குறதைப் பாத்தா, எனக்குப் பத்திக்கிட்டு வருது.

சரி, அந்த மூஞ்சி மொகரக்கட்டைகளை விடுங்க! நாம கட்ட ஆராய்ச்சிக்குப் போகலாம்.

முந்தியெல்லாம் ‘கட்டை’யானவன்னு சொன்னா, கொஞ்சம் அகலமா, ஆனா குள்ளமா வளர்ந்தவனைக் குறிக்கும். கட்டை விரல் மத்த விரல்களைவிடக் கட்டையா, குட்டையாதானே இருக்கு!

பாகவதர் ஏழரைக்கட்டை சுருதியிலே பாடறார்னு சொல்லுவாங்க. அந்தக் கட்டை எதைக் குறிக்குதுன்னு எனக்குத் தெரியலே. நாலு கட்டையில பாடுறதும்பாங்க. குரல் தொனியோட அதிர்வு எண்ணைக் குறிக்குதா அந்தக் கட்டைன்னு யோசிக்கிறேன்.

கிராமத்துல பாட்டிமார்களெல்லாம் ‘அடக் கட்டைல போறவனே’ன்னு சர்வ சாதாரணமா திட்டி நான் பாத்திருக்கேன். திருவிளையாடல் படத்துல ‘கட்டைல போகாம நீ மட்டும் கழுதை மேலயா போவே?’ன்னு கேப்பாரு சிவா(ஜி). இப்ப அந்த வசனம் செல்லாது... செல்லாது! ‘கட்டைல போகாம நான் கரண்ட்ல போவண்டா பேராண்டி’ன்னு ஆயா சொல்லிடும்.

பாவம், பச்சக் கொழந்தை! வாயில கட்ட விரலைக் கொடுத்தாக்கூடக் கடிக்கத் தெரியாதுங்கிற மாதிரி சில பேர் நடந்துக்குவாங்க (‘நீதான்... நீதான் அது!’ சில பேர் என்னைப் பாத்துக் கத்துற சத்தம் கேக்குது!) பயில்வான்கிட்டே கர்லாக் கட்டை இருக்கும். பயில்வான் ரங்கநாதன்கிட்டே இருக்குமான்னு தெரியலே. ‘கர்லா’ன்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியலே!

டி.வி-யில மாமியார்-மருமக சண்டை இல்லாத சீரியலே இல்லே. நேத்திக்கு ஒரு சீரியல்லே, ‘ஏண்டி மரக்கட்டை மாதிரி நிக்கிறே! சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்ணு, போ!’ன்னு சீரியல் மாமியார் சீரியல் மருமகளைப் பாத்து சீறிக்கிட்டிருந்ததைப் பாத்தேன். அப்படித்தான் சில மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டையாகி, அடிதடி உறவுகள் வாய்ச்சுடுது. எரிச்சல்லே மருமக ‘இந்தக் கிழங்கட்டை என்னிக்கு மண்டையப் போடுமோ’ன்னு மாமியார் காதுல விழுவுற மாதிரியே புலம்பிட்டுப் போவா. மாமியார்க்காரி கொஞ்சம் தெம்பா இருந்தா, “என்னாடி சொன்னே?”ன்னு மருமக கையை முறுக்கி, மணிக்கட்டை உடைப்பா. சீரியல் பாத்துப் பாத்து எல்லா வீடுகள்லேயும் டெய்லி நெஜம்மாவே நடக்கிற கதையாயிடுச்சு இது.

“பையனுக்குக் காலாகாலத்துல ஒரு கால்கட்டைப் போடுங்க. எவ்வளவு நாள்தான் அவன் ஒண்டிக்கட்டையா இருப்பான்?”ன்னு அம்மாக்கள் நச்சரிக்கிறதுக்குக் காரணம், வெறும் காத்துல எவ்வளவு நாள்தான் நாம குத்து விட்டுப் பழகுறது, எதிர்ல ஒரு ஆள் இருந்தாத் தேவலையேன்னு நினைக்கிறதுதானோன்னு ஒரு யோசனை வருது. அப்புறம் அடிதடியில மருமக கை ஓங்கிச்சுன்னா, மாமியார் உடம்புதான் கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கிக்கும்.

சரி, கட்டை ஆராய்ச்சியை இத்தோட நிறுத்திக்குவோம். இனிமே இப்படியேதான் எழுதப்போறேன். இப்ப யாரும் போட மாட்டாங்கன்னு நெனைக்கிறேன் என் எழுத்துக்கு முட்டுக்கட்டை?

.
|
This entry was posted on Friday, April 23, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On Apr 23, 2010, 11:57:00 PM , செந்தழல் ரவி said...

&&அவ்ளோ காண்டு எம் மேல!^^

உங்களைப்போல ஒரு வெத்துவேட்டு அரைகுறை மேல் அவருக்கென்ன காண்டு இருக்கமுடியும் ? உங்களை விட்டால் அவரது இடத்தை பிடித்துக்கொண்டு அவரது எழுத்தாளர் பட்டத்தை பறித்துக்கொண்டுவீர்கள் என்றா ?

 
On Apr 24, 2010, 1:09:00 AM , டவுசர் பாண்டி... said...

அவ்வவ்வ்வ்வ்வ்வ்....

இவங்க கிட்ட என்னோமே இருக்கு...

 
On Apr 24, 2010, 6:32:00 AM , Sangkavi said...

வாங்க நந்தினி.....

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு வாழ்த்துக்கள்.....

//அவிங்களைப் பத்தியே வெளிப்படையா நம்ம கருத்தச் சொன்னா, மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போயிர்றாங்க!//

இது தாங்க உலக இயல்பு....

//கேக்குறவங்க எல்லாம் அவங்க கருத்தச் சொல்லலாமாம்; அத எல்லாரும் ஏத்துக்கணுமாம்! நம்ம கருத்தச் சொல்லக்கூடாதாம்//

உங்க கருத்த உங்க பதிவு சொல்லுங்க அத கேட்க யாருக்கும் உரிமையில்லை...

நீங்க எழுதிய கட்டை எல்லாம் முந்தி எல்லோரும் அழைத்தது.....

ஆனா இப்ப இருக்குற ஆட்களிடம் கட்டை என்று கூறினால்.....

அதற்கு நாட்டுகட்டையைத் என்று தான் யோசிப்பார்கள்...

 
On Apr 24, 2010, 11:39:00 PM , கிருபாநந்தினி said...

செந்தழல் ரவி! பேருக்கேத்த மாதிரி சுட்டெரிக்கிறீங்ணே! ரவின்னாலே சூரியன். அந்த வெப்பம் பத்தாதுன்னு செந்தழலையும் சேர்த்துக்கிட்டீங்க. அனல் காந்துது!

 
On Apr 24, 2010, 11:40:00 PM , கிருபாநந்தினி said...

டவுசர் பாண்டி! டாங்க்ஸு!

 
On Apr 24, 2010, 11:41:00 PM , கிருபாநந்தினி said...

சங்கவி! வந்ததுக்கும் ஆறுதலா ரெண்டு வார்த்தை தந்ததுக்கும் தாங்க்ஸுங்ணா!

 
On Apr 26, 2010, 6:39:00 PM , செந்தழல் ரவி said...

அதே போல, கட்டை, பிகர் என்ற மேட்டர்.

காண்டு என்பது தமிழ் சொல்லா ? பொறாமை என்று உபயோகப்படுத்தாமல் ஏன் காண்டு என்றீர்கள் ? இதை தமிழ்தாய் தட்டிக்கேட்கமாட்டாள் என்ற தெகிரியம் தானே ?

அதே போல அழகான பெண்ணை பிகர் என்றும் அக்ளியான பெண்ணை அட்டு என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் வழங்குகிறது. (உங்களை சொல்லவில்லை, இதுவேற பெண்ணீயவியாதிகள் நான் இதனை ஆணாதிக்கக்கூறுடன் சொல்வதாக எழுதிடப்போறாங்க)

 
On Apr 27, 2010, 12:36:00 PM , ~~Romeo~~ said...

வீரப்பன் கடத்தின சந்தணை கட்டை பத்தி எழுதுலையே ..

 
On Apr 27, 2010, 4:07:00 PM , அன்புடன்-மணிகண்டன் said...

கருத்து சுதந்திரமா? ஒயிட் கலர்ல கருப்பா எலுமிச்சம்பழம் நிறத்துல இருக்குமே அதுவா?
நீங்க வேற..
இங்கே ஒரு சிலருக்கு ஒருவிஷயம் பிடிக்கலன்னா யாருக்கும் பிடிக்கக் கூடாது.. பிடிச்சிப் போச்சின்னா எல்லாருக்கும் அது மட்டும் தான் பிடிக்கணும்.. அதான் முறை..
இவங்களையெல்லாம் கண்டுக்காம போயிக்கிட்டே இருக்கறது நல்லது..
நிறைய எழுதுங்க.. வாழ்த்துக்கள்..

 
On Apr 27, 2010, 4:23:00 PM , செந்தழல் ரவி said...

ரெண்டாவதா போட்ட கமெண்டை காணலியே ? காக்கா தூக்கினு பூட்ச்சா ?

 
On Apr 27, 2010, 6:44:00 PM , கிருபாநந்தினி said...

செந்தழல் ரவி! //காண்டு என்பது தமிழ் சொல்லா ? பொறாமை என்று உபயோகப்படுத்தாமல் ஏன் காண்டு என்றீர்கள் ? இதை தமிழ்தாய் தட்டிக்கேட்கமாட்டாள் என்ற தெகிரியம் தானே ?// அரிசிங்கிறதே தமிழ்ச் சொல் இல்லீங்ணா! ஆனா, அதைச் சொல்லித்தானே கடையில கேக்க வேண்டியிருக்கு! தவிரவும், நான் ‘தமிழச்சி’ இல்லீங்களே! எங்கிட்ட போயி... ஹி..ஹி..!

 
On Apr 27, 2010, 6:46:00 PM , கிருபாநந்தினி said...

ரோமியோ! சந்தனக் கட்ட..! ஆமால்ல? அப்புறம்... திருவிளையாடல்ல ‘ஒரு கட்டைய எரிச்சா சந்தன வாசனை; இன்னொரு கட்டைய சவ்வாது வாசனை’ன்னு கட்டைப் பெருமைகளைப் பத்தி வரும். அதக்கூட எழுதியிருக்கலாம்!

 
On Apr 27, 2010, 6:47:00 PM , கிருபாநந்தினி said...

அவ்வப்போது ஊக்கம் தரும் அன்பான மணிகண்டனுக்கு நன்றிங்கோ!

 
On Apr 27, 2010, 6:54:00 PM , கிருபாநந்தினி said...

செந்தழல் ரவி! //ரெண்டாவதா போட்ட கமெண்டை காணலியே? காக்கா தூக்கினு பூட்ச்சா?// தெர்லீங்ணா! என்னைப் பொறுத்தவரைக்கும் ஆபாச வார்த்தைகள் இல்லாத, மத்தவங்களைத் தனிப்பட்ட முறையில் திட்டாத எந்தப் பின்னூட்டத்தையும் நான் பதிவிடவே செய்யறேன்கிறது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். என்னை நீங்க ‘முட்டாள்’னும், வெத்துவேட்டுன்னும், அரைவேக்காடுன்னும் சொன்னதையே நான் பதிவிடலையா?!

 
On Apr 27, 2010, 10:52:00 PM , வால்பையன் said...

//அந்த மூஞ்சி மொகரக்கட்டைகளை விடுங்க!//


மொகரகட்டையில் வரும் கட்டை என்ன கட்டை வகை!?

 
On Apr 28, 2010, 6:10:00 PM , கொல்லான் said...

''கட்ட பிரம்மச்சாரி'' பத்தி எழுதாம விட்டுட்டீங்களே.

 
On May 1, 2010, 2:53:00 AM , செந்தழல் ரவி said...

எல்லோரும் இப்படி உண்மைய ஒத்துக்கிட்டா எதுக்கு கருத்து வேறுபாடு வருதுன்னேன் ? :)))))))