Author: கிருபாநந்தினி
•Saturday, May 08, 2010
தி, ரதி, ரவி... இன்னும் பலருக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய செய்தி ஒண்ணைக் கடைசியில சொல்றேன்.

ன்னோட ‘சட்டங்களும் தர்மங்களும்’ பதிவைப் படிச்சுட்டுக் கடுமையா திட்டி வந்த கடிதங்கள் அத்தனையையும் நான் பப்ளிஷ் பண்ணிட்டேன். வழக்கம்போல ஆபாச வார்த்தைகளைக் கொட்டி வந்த பின்னூட்டங்கள் நிறைய. அது எதையும் பதிவிடலே!

இதுல எனக்கு ஒரு ஆச்சரியம் என்னன்னா... நான் ஆண்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருந்த அந்தப் பதிவைப் படிச்சுட்டு என்னை ஆபாசமா திட்டியிருக்கிறதும் ஆண்கள்தான். சொல்லப்போனா ‘வெளியூர்க்காரன்’ போல ஒரு சில பதிவர்களேகூட மகா மோசமா, ஆபாச வார்த்தைகளால என்னை அர்ச்சனை பண்ணியிருந்தாங்க. பெண்களுக்கு வக்காலத்து வாங்க இத்தனை ஆம்பிளை சிங்கங்கள் இருக்கிறதை நினைச்சு எனக்கு ஒரு விதத்துல பெருமையாவும் இருக்கு; சந்தோஷமாவும் இருக்கு.

இங்கே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க விரும்பறேன். பெண்ணுரிமை, பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்கணும்னு வாயளவில் பேசுற ஆண்கள் யாரும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்க விரும்புறது இல்லே. மத்த பெண்கள் ‘சுதந்திரமா’ இருந்தாதான் அவங்களுக்குச் சந்தோஷம்.

தமிழ்நாட்டுல கவிராஜர்களா உலா வந்துட்டிருக்கிற இரண்டு கவிஞர்களைப் பத்தி நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்றேன். ஒருத்தரோட பொண்டாட்டியும் நல்ல கவிதாயினிதான். பிரமாதமா கவிதை எழுதக்கூடியவங்கதான். ஆனா, வெளியில பெண்ணைப் போற்றிப் பேசியும், கவிதைகள் எழுதியும், பாரதிக்கு அடுத்த வாரிசா தன்னை நிரூபிச்சுக்க விரும்புற அந்தக் கவிஞர், தன் பெண்டாட்டியோட எழுத்துக்குத் தடா போட்டுட்டாரு. காரணம், அந்தம்மா எழுதினா இவருக்குப் பேரும் புகழும் போயிடுச்சுன்னா என்னா பண்றதுங்கிற கவ்லைதான்! அது மட்டுமில்லே; அந்தம்மா எந்தப் பத்திரிகைக்கும் பேட்டியே கொடுக்கக்கூடாது; கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதித் தரக் கூடாது. அப்படியே பேட்டி கொடுத்தாலும், கதை, கட்டுரை, கவிதை எழுதினாலும், இவரோட அனுமதி வாங்கிட்டுதான் செய்யணும். அதையும் இவர் வாங்கி, வரிக்கு வரி படிச்சுத் திருத்தம் செய்வாரு. அப்புறம்தான் அதை அந்தப் பத்திரிகை வெளியிடணும். பொது நிகழ்ச்சி எதுலயும் அந்தம்மா கலந்துக்கக்கூடாது. இப்படி ஏகப்பட்ட உத்தரவுகளைப் போட்டு, அந்தம்மாவை வீட்டுச் சிறை போல முடக்கி வெச்சுட்டாரு.

இன்னொருத்தர் இருக்காரு. பெண்ணே தெய்வம், பெண்ணைப் போற்றாத நாடு உருப்படாதுன்னெல்லாம் வீரம் கொப்பளிக்கக் கவிதை எழுதுவாரு. அவரு இன்னும் மோசம். முந்தியெல்லாம், வெளியே போகும்போது தன் பெண்டாட்டியை வீட்டுக்குள்ள வெச்சுப் பூட்டிட்டுதான் போவாராம். சாயந்திரம் அவர் திரும்பி வர்ற வரைக்கும் அந்தம்மாவுக்கு வீட்டுச் சிறைதான். இப்பவும் அப்படித்தான் இருக்காருன்னு தெரியலே.

இவங்கெல்லாம்தான் பெண்ணுரிமையைப் பத்தி வாய் கிழியப் பேசுறவங்க. இப்படித்தான் பல பேர் இருக்காங்க.

ஆனா, ஒண்ணு நிச்சயம். பெண் உரிமை, பெண் சுதந்திரம்னு வாயளவுல பேசாம, என்னோட கணவர் கிருபா போல, நிஜமாவே தங்களோட பெண்டாட்டியை அன்பாவும், மகிழ்ச்சியாவும் வெச்சிருக்கிற ஆண்கள் அதிகம்.

கிருபா டெல்லி போய் மூணு மாசத்துக்கு மேல ஆகுது. சாஃப்ட்வேர்ல கில்லாடி அவரு. சைபர் கிரைம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதுல அவரோட பங்களிப்பும் உண்டு. சில காரணங்களுக்காக, அவரோட வேலைகளைப் பத்தி அதிகம் விவரிச்சு எழுத முடியாத நிலையில இருக்கேன்.

ஒரு வாரம் முந்தி அவர் கோயமுத்தூர் வந்தார். நான்தான் போன் பண்ணி அவரை உடனே வரச் சொன்னேன்.

எனக்கு ரொம்ப நாளாவே தலைவலி அதிகம் உண்டு. போன மாசம் ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போ, மூளையில ஒரு கட்டி இருக்குன்னு தெரிஞ்சுது. (ஆஹா..! இப்பத்தானே புரியுது நீ ஏன் அத்தனை உளறினேன்னு!) உடனே ஆபரேட் பண்ணணும்னாங்க டாக்டருங்க. இதை கிருபாவுக்குத் தெரியப்படுத்தினா, துடிச்சுப் போயிடுவாரேன்னு சொல்லலை. கட்டியைக் கரைக்குறதுக்கு மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்.

போன வாரம், தலைவலி அதிகமா போயி, மயங்கி விழுற நிலைமை. இனியும் சொல்லாம இருந்தா நல்லாருக்காதுன்னு, அவருக்கு போன் பண்ணேன். உடனே ஓடி வந்தாரு. டாக்டர்கிட்ட காண்பிச்சோம். “நிலைமை சீரியஸா இருக்கு. உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க”ன்னாரு டாக்டரு.

கிருபாவுக்கு டெல்லி வேலை முடியலை. அதனால, அங்கே அவருக்குத் தற்காலிகமா கொடுத்திருக்கிற குவார்ட்டர்ஸிலேயே போய்த் தங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அவரோட அம்மாவும், தங்கச்சியும் எங்களோட வராங்க. குழந்தை புஜ்ஜிம்மாவும் எங்களோடு வருது.

டெல்லியில இருக்கிற ஒரு நல்ல ஆஸ்பத்திரியில, வர புதன்கிழமைக்குள்ள சேர்ந்துடுவேன். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு பொழைச்செழுந்து வருவேனாங்கிறது சந்தேகம்தான்! அதனால, இப்பவே உங்க அத்தனை பேர் கிட்டயும் விடைபெற்றுக்கிறேன்.

தமிழ்நதி, ரதி, செந்தழல் ரவி உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வணக்கம். குறுகிய காலத்துல எனக்கு ஃபாலோயரா சேர்ந்திருக்கிற 70 பேருக்கும் வணக்கம். எனக்கு முதன்முதல்ல விருது கொடுத்து ஊக்குவிச்ச ‘என் ரசனை’ பதிவர் ‘ரசிக்கும் சீமாட்டி’க்கு வணக்கம். எனக்குப் புத்தகப் பரிசு கொடுத்து ஊக்குவிச்ச பதிவர் ரவிபிரகாஷுக்கு வணக்கம். கடைசியா, என்னை ஊட்டிக்கு வரச் சொல்லி அன்போடு அழைச்ச பதிவர் லதானந்துக்கு வணக்கம்.

‘போயிட்டு வரேன்’னு சொல்லத்தான் ஆசை. ஆனா, தெரியலை! நாளை என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? மறுபடி நான் வரலாம்; வராமலும் போகலாம்!

மனுஷங்களாப் பிறந்தவங்க ஒரு நாள் போய்ச் சேர வேண்டியவங்கதான். அதனால, மரணத்தைக் கண்டு எனக்குப் பயம் ஒண்ணும் இல்லை. ஆனா, என் புஜ்ஜிம்மாவை விட்டு.......

வரேங்க! முடிஞ்சா பின்னாடி சந்திப்போம்.

உங்க அன்புள்ள, கிருபாநந்தினி.

.
|
This entry was posted on Saturday, May 08, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

95 comments:

On May 8, 2010, 7:11:00 PM , மதுரை சரவணன் said...

u will be cured. v pray for u . v hope u will write more and more colorful than before.

 
On May 8, 2010, 7:59:00 PM , Dr.Rudhran said...

wish you a speedy recovery

 
On May 8, 2010, 8:04:00 PM , Paleo God said...

//மனுஷங்களாப் பிறந்தவங்க ஒரு நாள் போய்ச் சேர வேண்டியவங்கதான். அதனால, மரணத்தைக் கண்டு எனக்குப் பயம் ஒண்ணும் இல்லை. ஆனா, என் புஜ்ஜிம்மாவை விட்டு.......//

நல்லபடியா சிகிச்சை முடிந்து திரும்பி வாங்க சகோதரி. :)

 
On May 8, 2010, 8:42:00 PM , ரிஷபன் said...

திரும்பி வரப் போகிறீர்கள்.. நிச்சயமாய்..

 
On May 8, 2010, 9:09:00 PM , Veliyoorkaran said...

சகோதரிக்கு வணக்கம்...
என் பிரெண்ட் எனக்கு போன் பண்ணி சொன்னான்...நீங்க வெளியூர்க்காரன் என்ன மோசமா திட்டி எழுதிருக்கராருன்னு உங்க பதிவுல போட்ருகீங்கன்னு...உங்கள மாதிரி எனக்கு ஒரு அக்கா இருக்காங்க...ஒரு அம்மாவும் இருக்காங்க...அவங்க மேல சத்தியமா சொல்றேன்...ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்க வலைப்பூவுக்கே நான் இப்பதான் வர்றேன்...யாரோ சில விசமிகள் வெளியூர்க்காரன் லிங்க்க குடுத்து அந்த மாதிரி ஆபாசமா திட்டிருகாங்க...நிறைய செக்ஸ் வெப்சைட்ல போய் வெளியூர்க்காரன் லிங்க்க குடுத்து ஆபாசமா கமெண்ட்ஸ் போடறாங்க..அது நான் இல்லைங்க..வெளியூர்க்காரன் உங்க கிருபாவ விட நல்லவன்...என்ன நம்புங்க...நான் உங்க வலைப்பூல போட்ட ஒரே கமென்ட்..ஆனந்த விகடன பத்தி நீங்க எழுதிருந்த பதிவுல மட்டும்தான்...அதுக்கு அப்பறம் இப்பதான் வர்றேன்....அட அத விட்டு தள்ளுங்க..நீங்க ட்ரீட்மென்ட் போறதா சொல்லிருகீங்க....உங்க உடம்ப பத்திரமா பார்த்துக்கங்க...நந்தினியோட அடுத்த பதிவிற்காக காத்திருக்கேன்...! நன்றி..!

 
On May 8, 2010, 9:27:00 PM , Madumitha said...

சர்வ நிச்சயமாய்
நீங்க வருவீங்க.
காத்திருக்கிறோம்
கையில் ஒரு
பூங்கொத்துடன்.

 
On May 8, 2010, 10:06:00 PM , Unknown said...

விரைவில் குணம் அடைந்து திரும்பி வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

நீங்களும் இல்லைன்னா அப்புறம் யாரைக் கிண்டல் பண்ணி நான் பதிவு எழுதுறது?

 
On May 8, 2010, 10:29:00 PM , பத்மநாபன் said...

அன்பு சகோதரி .. வணக்கம் ..
நம்பிக்கை தாங்க வாழ்க்கை .. நீங்க தைர்யத்தை இழப்பதற்கு ஒன்றும் இல்லை .. உங்கள் அருமை கணவர் தலை நகரில் சிறப்பான மருத்துவ மனையில் சிகிச்சை ஏற்பாடு செய்துள்ளார் ..இப்போதுள்ள மருத்துவத்துறை முன்னேற்றத்தில் , உங்களுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கிடக்க போகிறது .. எனவே கவலை வேண்டாம் .. பிரார்த்திக்க உங்களை சுற்றிலும் நல்ல உள்ளங்கள் உள்ளன ...
இந்த வலைபூவும் இதில் எழுதுவதும் , அதற்க்கு கிடைக்கும் எதிர் வினைகள் மட்டுமே வாழ்க்கை அல்ல.. நேரம் இருந்தால் மகிழ்ச்சியாக பொழுது போக்கும் அளவிற்கு மட்டும் மதிப்பு கொடுத்தால் போதும் .. கடந்ததை கண்டு மன அசதி கொள்ளவேண்டியதில்லை .
ஒவ்வொரு நொடிக்குநொடியும் நம்மோடு இருந்து நம்மை இயக்கும் அந்த பேராற்றல் உங்களின் உடல் நிலையை சீராக்கி காக்கும் என்ற
பிரார்த்தினை யோடு .
சகோதரன்

 
On May 8, 2010, 10:52:00 PM , Unknown said...

Nimmathi

 
On May 8, 2010, 11:18:00 PM , Sibi said...

muRpOkkaana sindhanai ya sollum pothu aduthavanga manasu nogama solrathu thaan unmaiyaana vaaimai,,,,,
akkaa!!!! aandavan nallavangala soathippaan aanaa kai vida maattaan,,,,unkalukku nalla padiyaa nadakkum ,,,,kavala padaathinga,,,, naan ungalukaaga pray panrean
by
munpin theriyatha thambi,,,,

 
On May 8, 2010, 11:19:00 PM , Sibi said...

muRpOkkaana sindhanai ya sollum pothu aduthavanga manasu nogama solrathu thaan unmaiyaana vaaimai,,,,,
akkaa aandavan nallavangala soathippaan aanaa kai vida maattaan,,,,unkalukku nalla padiyaa nadakkum ,,,,kavala padaathinga

 
On May 8, 2010, 11:21:00 PM , ரோஸ்விக் said...

விரைவில் குணம் பெற வாழ்த்துகள்.

 
On May 8, 2010, 11:31:00 PM , Bala said...

I pray God to shower HIS grace and blessings. May God bless you. Be confident.

 
On May 8, 2010, 11:40:00 PM , - இரவீ - said...

இப்போ உள்ள மருத்துவ வசதிகள் முன்னாடி இது எல்லாம் ஒன்னுமே கிடையாது கிருபாநந்தினி, உடல் நலம் விரைவில் குனமடைய இறைவனை பிறார்த்திக்கறேன்.

 
On May 8, 2010, 11:46:00 PM , Ranjit said...

We will hope for the best. My Advance Birthday wishes to you.

 
On May 9, 2010, 1:27:00 AM , கிரி said...

தாங்கள் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வந்து.... மீண்டும் வந்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு எழுத்துத் தொண்டாற்ற வாழ்த்துக்கள்.

ஒன்னியும் ஆவாது வாங்கம்மா... இப்போ என்னென்னவோ மருத்துவ வசதியெல்லாம் வந்துச்சி...அல்லாத்தையும் பாத்துக்கலாம்...

 
On May 9, 2010, 5:03:00 AM , Anonymous said...

விரைவிலேயே நீங்கள் உடல்நலமும் மனநலமும் பெற்று திரும்ப ப்ரார்த்திக்கிறேன்.
தில்லியில் எனது தோழி இருக்கிறாள். அவளை வந்து உங்களை சந்திக்கச்சொல்லட்டுமா. ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வாள். உங்களுக்கு ஏதும் ஆட்சேபணையிருக்காது என்று நம்புகிறேன். மேலும் உங்கள் கணவர் கிருபா சைபர் க்ரைமுக்கு உதவியிருக்கிறார் என்றும் சொல்லியுள்ளீர்கள். எனக்குத்தெரிந்த ஒருவருக்கு சைபர் க்ரைம் பற்றிய உதவி தேவைப்படுகிறது. அதையும் அந்த தோழி மூலமே சொல்லி அனுப்புகிறேன். கிருபா லீகலாய் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வார் என்று நம்புகிறேன்.
முடியுமென்றால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். என் ஈமெயில் ஐடி அனுப்புகிறேன்.

சீரியஸ் மேட்டர்கள் போகட்டும். காண்ட்ரவர்சியலாய் எழுதுவது, பின் எதிர்ப்புகள் எழுந்தால் இப்படி செண்டிமெண்டலாய் பரிதாபம் தேடி ஏதாவது எழுதுவது எல்லாம் உங்கள் லதானந்த் அங்கிளின் பாணி. என்னதான் நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க அவர்தான் காரணம் என்றாலும் நீங்களும் அதையே நீங்களும் செய்ய வேண்டாம் :)

 
On May 9, 2010, 5:07:00 AM , Anonymous said...

கேன்ஸர் வந்து அவதிப்பட்ட அனுராதா அம்மா , கேன்ஸர் பற்றி விழிப்புணர்வுக்கு நிறைய எழுதியிருக்கிறார்கள். உங்கள் நோயைப்பற்றும் நீங்கள் சந்திக்கும் மருத்துவம், மருத்துவர்கள் பற்றியும் எழுதி விழிப்புணர்வு கொண்டு வரலாம்.

 
On May 9, 2010, 9:08:00 AM , முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்கள் பதிவுக்கு நன்றி..
எங்களின் பார்வையில், எங்கள் கருத்துக்களை, இக்கே பதிவு செய்துள்ளோம்..

நேரம் கிடத்தால் பார்க்கவும்..
நன்றி.. பட்டாபட்டி..

http://pattapatti.blogspot.com/2010/05/blog-post_09.html

 
On May 9, 2010, 10:28:00 AM , Ramesh said...

நலமுடன் திரும்பி வருவீர்கள். நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்

 
On May 9, 2010, 11:12:00 AM , Anonymous said...

நீங்கள் நலத்துடன் வெற்றிகரமாகச் சிகிச்சை முடிந்து திரும்ப வாழ்த்துக்கள்! - உங்கள் சிகிச்சை வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

Om Namo Bhagavathe
Maha Sudharsa
Vasu Devaya Dhanvandharaye
Amrutha Kalasa Hasthaya
Sarva Bhaya Vinasaya
Sarva Rogha Nivaranaya
Thrylokya Pathaye
Thrylokya Nidhathe
Sri Maha Vishnu Swaroopa
Sri Dhanvandhri Swaroopa
Sri Sri Oushad Chakra
Narayana Swaha:

Om Namo Bhagavathe
VasuDevaya Dhanvandharaye
Amrutha Kalasa Hasthaya
Sarva Aamaya Vinasaaya
Thry Lokya Nathaya
Sri Maha Vishnave Nama.

(Sri Dhanvandhri Maha Mantram)

 
On May 9, 2010, 12:20:00 PM , ஹுஸைனம்மா said...

//மத்த பெண்கள் ‘சுதந்திரமா’ இருந்தாதான் அவங்களுக்குச் சந்தோஷம்.//

இப்படியும் பலர் உண்டு. உண்மை.

உடல்நலம் குறித்து கவலை கொள்ள வேண்டாம். எவ்வளவோ கடுமையான நோய் தாக்கியோரெல்லாம் பிழைக்குமளவு மருத்துவத் துறை முன்னேறியுள்ளது. இறைவன் மீது நம்பிக்கை வைத்து தைரியமாகப் போய், நலமே திரும்பிவாருங்கள்.

 
On May 9, 2010, 5:37:00 PM , VinothS said...

HI Kirupanandhini,

I strongly believe, I will soon meet you again in Padithurai...to read and njoy your writings...

All the best to get back to normal health.

 
On May 9, 2010, 5:46:00 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

viraivil kunamadaiya vazhthukkal

 
On May 9, 2010, 6:25:00 PM , Mahima said...

‘போயிட்டு வரேன்’னு சொல்லத்தான் ஆசை. ஆனா, தெரியலை! நாளை என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? மறுபடி நான் வரலாம்; வராமலும் போகலாம்! ............ Please வரவே வேண்டாம்.

 
On May 9, 2010, 6:56:00 PM , Anonymous said...

mudhal murai ungal valaipakkam varugiraen.tamilish moolamaaga.

yenna operationaga irundhalum, neengal marupadiyum nalla padiyaaga tirumbi vara, matrum operation nallapadi nadakka kadavulai vaendikolgiraen.

 
On May 9, 2010, 8:18:00 PM , முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல உடல்நலம் பெற வாழ்த்துகிறேன்..

அன்புடன் பட்டாபட்டி...

 
On May 9, 2010, 9:15:00 PM , பனித்துளி சங்கர் said...

//////‘போயிட்டு வரேன்’னு சொல்லத்தான் ஆசை. ஆனா, தெரியலை! நாளை என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? மறுபடி நான் வரலாம்; வராமலும் போகலாம்!/////////


நம்பிக்கை தானே வாழ்க்கை . வருவீர்கள் எதிர் பார்க்கிறேன்

 
On May 9, 2010, 9:18:00 PM , ungalrasigan.blogspot.com said...

கிருபாநந்தினி! உங்கள் சமீபத்திய பதிவைப் படித்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது. ஒரு வாரத்துக்கு முன்புதான் ‘ரிப் வான் விங்கிளும்...’ என்கிற உங்களின் ஜாலியான பதிவைப் படித்து ரசித்து, பின்னூட்டம் இட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அதற்குள் இப்படியொரு பதிவு! கவலைப்படாதீர்கள். கடவுள் இருக்கிறார். உடல்நிலை தேறி நிச்சயம் வருவீர்கள். விரைவிலேயே உங்களின் அடுத்த பதிவில் உங்களைச் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

 
On May 9, 2010, 10:42:00 PM , Anonymous said...

நந்தினி நல்லபடியா சிகிச்சை முடிந்து திரும்பி வருவீங்க.வந்து பழையபடி உங்க ஸ்டைல்ல எழுதுரத தொடருவீங்க.கடவுளோட ஆசிர்வாதம் என்னிக்கும் உங்களுக்கு இருக்கு.

இப்படிக்கு
திருமதி.ராதாசாமி

 
On May 10, 2010, 1:26:00 AM , கொல்லான் said...

சகோதரி,
நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து எங்களுக்கு நிறைய செய்திகள் கொடுப்பீர்கள்.
என் அப்பன் சிவன் உங்களைக் குணப்படுத்திக் கொண்டு வருவார்.
நம்பிக்கை வைத்து போய் வாருங்கள் சகோதரி.

 
On May 10, 2010, 5:37:00 AM , கிரி said...

நந்தினி பதிவுலகை விட்டுச்செல்வது உங்கள் விருப்பம். உங்கள் உடல் நலம் அடைய இறைவனை வேண்டுகிறேன். நலம் பெற்று வழக்கம் போல கலக்க வாழ்த்துக்கள் :-)

உங்க புஜ்ஜிமா கூட ரொம்ப சந்தோசமா இருப்பீங்க! கவலையே படாதீங்க.

 
On May 10, 2010, 6:30:00 AM , தாராபுரத்தான் said...

என்னம்மா இது.. சிறுபிள்ளை தனமா இல்ல இருக்குது.. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமைதியாய் சிகிச்சை முடித்து திரும்பி வருவாய்..படித்துறையில் சந்திப்போம்.

 
On May 10, 2010, 7:27:00 AM , Bibiliobibuli said...

கிருபாநந்தினி,

படித்ததும் கண் கலங்கிவிட்டது. உங்கள் surgery நல்லபடியே நடந்து சீக்கிரம் குணமாகி வந்து பதிவு எழுதுங்கள். காத்திருக்கிறோம். Good Luck.

ரதி.

 
On May 10, 2010, 9:42:00 AM , லதானந்த் said...

அன்புள்ள திருமதி கிருபாநந்தினி அவர்களுக்கு,
நீங்கள் நிச்சயம் உடல்நலம் தேறி விரைவில் புதிய உத்வேகத்தோடு வருவீர்கள். எங்களது பிரார்த்தனைகளுக்கு உறுதியாகப் பலன் கிடைக்கும். உங்களது அபாரமான திறமை எழுத்துலகத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது.

மனசின் ஓரத்தில் ஒரு மாபெரும் ஆசை. ச்சும்மா விளையாட்டுக்காகக் கிருபாநந்தினி இதை எழுதிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!

 
On May 10, 2010, 9:59:00 AM , SenthilMohan K Appaji said...

அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க்கா. நீங்க பத்திரமா திரும்பி வந்து இன்னும் இன்னும் நெறையா பதிவு போடுவீங்க. தைரீமா போயிட்டு வாக்கா.

 
On May 10, 2010, 4:39:00 PM , துளசி கோபால் said...

என்னங்க இப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்துருக்கீங்க:(

உங்களுக்கு பிரச்சனை ஒன்னும் இல்லைன்னா உங்க தொலைபேசி எண்ணை அனுப்பித்தாங்க.

என்னுடைய மின்முகவரி:

tulsi.gopal@gmail.com

மனசுலே தைரியம் நிறைய இருக்கட்டும்.

எங்கள் பூரண ஆசிகள் உங்களுக்கு உண்டு.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும் (சண்டிகரில் இருந்து)

 
On May 10, 2010, 4:46:00 PM , CS. Mohan Kumar said...

எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் உள்ள வயதான் பெண்மணிக்கு கூட மூளையில் கட்டி இருந்து ஆபரேஷன் ஆகி சரியானது. நிச்சயம் குணமடைந்து மீண்டு வருவீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள்

 
On May 10, 2010, 4:51:00 PM , மணிஜி said...

என்ன சொல்றதுன்னு தெரியலை..ஆறுதலைத்தவிர..நம்பிக்கையுடன் இருங்கள்..நல்லதே நடக்கும்

 
On May 10, 2010, 4:52:00 PM , - யெஸ்.பாலபாரதி said...

//வரேங்க! முடிஞ்சா பின்னாடி சந்திப்போம்.//

முடிஞ்சா என்னங்க முடிஞ்சா.. நிச்சயம் சந்திப்போம்.. போயிட்டு வாங்க..! காத்திருக்கோம்..!

நலமுடன் திரும்ப வாழ்த்துகள் பல!!

 
On May 10, 2010, 5:58:00 PM , puduvaisiva said...

அருள் பெரும் ஆற்றலால் பூரண உடல் நலம் பெற வேண்டுகிறேன்.

 
On May 10, 2010, 6:34:00 PM , dunga maari said...

அன்புத் தங்கை நந்தினிக்கு,

நிச்சயம் நீங்கள் உடல் நலம் தேறி பல்லாண்டு வாழ்வீர்கள். கவலையின்றி மருத்துவ சிகிச்சைக்கு சென்று வாருங்கள். மீண்டும் நீங்கள் எழுத ஆரம்பிப்பீர்கள். அப்போது நிச்சயம் சந்திப்போம். உங்கள்

 
On May 10, 2010, 8:34:00 PM , நிகழ்காலத்தில்... said...

நிச்சயம் திரும்பி வருவீர்கள்..

வாழ்த்துகள்..

வாய்ப்பு இருக்குமானால் ஆபரேசனை
தவிர்க்க முடியுமா..தள்ளிப்போட முடியுமா..

வாய்ப்பு இருப்பின் தொடர்பு கொள்ளவும் arivhedeivam@gmail.com

 
On May 10, 2010, 8:44:00 PM , Iyappan Krishnan said...

விரைவில் குணம் பெற்று திரும்பி வர பிரார்த்தனைகள்.

 
On May 10, 2010, 8:56:00 PM , Senthilkumar Ramasamy said...

Dear கிருபாநந்தினி,

I am so sorry to hear that you are ill.Praying for your quick recovery.

Get well soon.

Regards,
Senthil

 
On May 10, 2010, 11:47:00 PM , rajasundararajan said...

நாங்க காத்துக்கிட்டிருக்கோம். என் ஒரு துளிக் கண்ணீருக்கு உங்களைக் காப்பாற்றும் வல்லமை உண்டு. நிச்சயமாத் திரும்பி வருவீங்க. வாங்க.

 
On May 11, 2010, 10:50:00 AM , ஆதி மனிதன் said...

தலைப்பை பார்த்து சாதரணமா ஏதோ நினைச்சேன். ஆனா மனசு கனத்து போச்சு. நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆண்டவன அதிகமா கும்பிடாதவன் நான். இருந்தாலும் உங்களுக்காக நாளைக்கு கும்பிடறேன். நிச்சயமா நீங்கள் நல்லா குணமாகி எனக்கு நன்றி சொல்ல மீண்டும் எழுதுவீங்க.

நன்றி மீண்டும் எழுதுக/வருக.

 
On May 11, 2010, 2:43:00 PM , novelist olerzor said...

அன்பு சகோதரி,

உங்கள் எழுத்து என் மனதை ரணமாக்கி விட்டது.

கண்டிப்பாக வருவீர்கள்.

மீண்டும் எழுதுவீர்கள். என் மனது சொல்கிறது.
உங்கள் ஆபரேஷன் முடிந்து வரும்போது, எனக்கு கண்டிப்பாக எழுதுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
ஒளிர்ஞர்

இமெயில்
novelist@live.com

 
On May 12, 2010, 2:39:00 PM , UshaMathan said...

நீங்க கவலை படாதீங்க. கண்டிப்பா ஆபரேஷன் success ஆகும். நீங்களும் நல்ல படியா திரும்ப வந்து blog போடுவீங்க. நான் கடவுள் கிட்ட வேண்டிகறேன்.

 
On May 12, 2010, 2:58:00 PM , தமிழ்நதி said...

கிருபாநந்தினி,

கருத்துமுரண்பாடுகள் வருவது இயற்கைதான். அதன்பொருட்டு மற்றவர்கள் வருந்தவேண்டும் என்று நினைக்கும் குரூர மனம் எனக்கு (ரதி,ரவிக்கும்) கிடையாது. நீங்கள் நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து விரைவில் திரும்பிவரவேண்டுமென உளமார விரும்புகிறேன். நீங்கள் டெல்லியிலிருந்து திரும்பிவந்ததும் உங்களை வந்து சந்திக்கவும் விரும்புகிறேன். எனக்கு 2004ஆம் ஆண்டு spinal code இல் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்து அகற்றினார்கள். அந்த சத்திரச்சிகிச்சையைச் செய்யவேண்டாமென்றும் சிலகாலம் உயிரோடு வாழட்டுமென்றும் பயமுறுத்தியவர்கள் (உறவினர்களில் சிலர்) உண்டு. ஆனாலும், எனது கணவரின் ஆதரவும் குடும்பத்தாரின் அன்பும் கடவுள் நம்பிக்கையும் என்னைக் காப்பாற்றின. தயவுசெய்து மனந்தளர வேண்டாம். கருத்துமுரண்பாடுகள் மனிதர்களைப் பிரிக்காது என்பதை நம்புவோம் தோழி.

நட்புடன்
தமிழ்நதி

 
On May 13, 2010, 9:29:00 PM , Senthil said...

Hope you come back with good health and blog again. Prayers to you!!!

 
On May 14, 2010, 8:01:00 AM , Anonymous said...

ஆம், தாங்கள் இப்போது நலமாக இருப்பீர்கள்.

நீங்கள் "விடைபெறுகிறேன்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் உங்கள் மரணவலியை முழுமையாக என்னால் உணர முடிந்தது.

இதே போன்ற வலியை நானும் மூன்று ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன்.

மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நீங்கள் மருத்துவமனையை விட்டு வரும்போது, கண்டிப்பாக தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்
ஜஸ்டின்

 
On May 16, 2010, 6:30:00 AM , ஜோதிஜி said...

பூரண குணம் பெற்று மறுபடியும் வருவீர்கள்.

 
On May 19, 2010, 9:02:00 PM , Senthilmohan said...

hello akka, eppadi irukeenga? Operation nallapadiyaa mudinchirukkum. nallaa rest edunga. appuram advance b'day wishes.

 
On May 22, 2010, 8:09:00 PM , சாமக்கோடங்கி said...

இப்போது சொல்கிறேன்.. உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் நலமுடன் திரும்பி வருவீர்கள்.. என் வலைத் தளத்தில் உங்கள் உடல் நலன் நன்றாக உள்ளது என்று முதல் வேலையாக ஒரு பின்னூட்டத்தைப் போடுவீர்கள்..

ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்..

நன்றி..

 
On May 22, 2010, 8:09:00 PM , சாமக்கோடங்கி said...

உங்கள் தன்னம்பிக்கைக்குப் பாராட்டுகள்..

 
On May 23, 2010, 7:15:00 PM , மார்கண்டேயன் said...

கிருபானந்தினி அவர்களுக்கு,
உங்கள் படித்துறையை அவ்வப்போது கடந்து சென்றதுண்டு, கால் நனைத்ததில்லை ., இந்த பதிவின் வழியாக கால் நனைக்கவைத்துவிட்டீர்கள் ., இந்தப்பதிவு ஏதோ நீண்ட நாட்கள் பழகிய ஒருவரின் வரிகளாய்த்தெரிகிறது . . . வருவீர்கள், உங்கள் வரிகள் என் வலைப்பூவில் தருவீர்கள் . . . அந்த வரிகளின் வரவிற்காக காத்திருக்கும் . . .

 
On Jun 7, 2010, 8:12:00 PM , Hai said...

ஒரு மாதமாகி விட்டது. என்ன ஆயிற்றோ என்று மிகவும் கவலையாயிருக்கிறது சகோதரி.

 
On Jun 19, 2010, 2:46:00 PM , Anonymous said...

///‘போயிட்டு வரேன்’னு சொல்லத்தான் ஆசை. ஆனா, தெரியலை! நாளை என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? மறுபடி நான் வரலாம்; வராமலும் போகலாம்!///

நம்பிக்கை தான் வாழ்க்கை ... தைரியமாய் இருங்கள்...

 
On Jun 21, 2010, 2:56:00 PM , Anonymous said...

ம்! எழுதுவதற்கு முன்பு , அதுவும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளான ஈழம் போன்றவற்றை... எழுதுவதற்கு முன்பு வரலாற்றை ஓரளவுக்கு படித்தபின்பு எழுதுவது நலம். தாங்கள் ஓய்வில் செல்லும் காலத்தை ஈழப்போராட்டம் பற்றி படித்து பின் எழுத எனது வாழ்த்துக்கள்!

தற்போது வலைப்பதிவில் எழுதாத அதே சமயம் ஒரு காலத்தில் அதிகம் “கலக்”கிய ஒரு மூத்த கிழட்டு பதிவர்.

 
On Jun 30, 2010, 11:49:00 PM , கொல்லான் said...

என்னாச்சுங்க சகோதரி?

 
On Jul 7, 2010, 5:38:00 PM , Night Sky said...

God Bless You
Get Well Soon

 
On Aug 15, 2010, 9:47:00 PM , Shansamy said...

Hi,

what is this, you will be alright. Our Indian Doctors are very teleanded person.

You will be recovered very soon.

God bless you

Also you have good friends as a follower, they are all do pray for you.

we will meet you very soon in the blog.

Be happy.

 
On Aug 27, 2010, 2:36:00 PM , Unknown said...

i belive u will return safely.
as my neighbour who faced same problem and now she is working after operation in KG hospital cbe.

best wishes to u

 
On Oct 12, 2010, 7:55:00 PM , Anonymous said...

nalammudan vaala valthukkal
anbudan SARAVANAA Tirupur. 9150470477

 
On Nov 17, 2010, 8:07:00 AM , Unknown said...

ரொம்ப நாள் ஆட்சே... அப்பரேசன் முடிஞ்சதா திரும்பீட்டிங்களா...?

 
On Dec 18, 2010, 9:19:00 PM , சில்வியா said...

நலமாக இருக்கிறீர்களா கிருபாநந்தினி? என்ன ஆயிற்று? ஏன்?

 
On Dec 22, 2010, 8:27:00 PM , தேவன் மாயம் said...

என்னங்க இது? கண் கலங்க வைச்சுட்டீங்க!

 
On Dec 22, 2010, 9:25:00 PM , கிருபாநந்தினி said...

எனக்காகப் பிரார்த்தித்துக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். உங்க அத்தனை பேரோட குடும்பங்கள்லயும் யாருக்கும் எந்த நோயும் வராம, எந்தத் துயரமும் நிகழமா இருக்கணும்னு மும்மதக் கடவுள்கள் கிட்டயும் மனப்பூர்வமா வேண்டிக்கறேன்!

 
On Dec 22, 2010, 9:45:00 PM , கே. பி. ஜனா... said...

உங்கள் கமெண்டை பார்த்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி! சர்ஜரி நலமாக நடந்து நீங்கள் நல்லபடியாக வரும் நாளை எதிர்பார்த்திருந்தோம். மிக்க மகிழ்ச்சி!

 
On Dec 22, 2010, 9:55:00 PM , சாமக்கோடங்கி said...

அப்பாடா...

 
On Dec 23, 2010, 10:43:00 AM , கொல்லான் said...

தங்களின் மீள்வருகை என்னை மிகவும் ஆனந்தப் பட வைத்து விட்டது.

 
On Dec 23, 2010, 1:57:00 PM , பத்மநாபன் said...

நல்வரவு நந்தினி ..

இந்த வலைப்பூவுலகின் நேர்மறை ஆற்றலுக்கு உதாரணமாக எத்தனை அன்பு உள்ளங்கள் இந்த பின்னூட்டத்தில் ...

தொடர நல்வாழ்த்துக்கள்....

 
On Dec 23, 2010, 7:36:00 PM , எம் அப்துல் காதர் said...

மீண்டு(ம்) வந்த உங்களுக்கு நல் வாழ்த்துகள் மேடம்!!

 
On Jan 5, 2011, 1:21:00 PM , பின்னோக்கி said...

மீண்டு(ம்) வந்தது கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தோம்

 
On Jan 5, 2011, 11:12:00 PM , ரவி said...

மீண்டும் வந்தாச்சு ! வெல்கம். இந்த முறை நீங்க சென்னையில் இருப்பதை சொல்லிவிடலாமே ?

 
On Jan 6, 2011, 4:04:00 PM , புளியங்குடி said...

வெல்கம் பேக்!

 
On Jan 6, 2011, 8:30:00 PM , Killivalavan said...

i saw your comment is parisal's blog
Hope you are in good health

 
On Jan 7, 2011, 8:46:00 PM , முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வலையுலகம் தங்களை இனிதே வரவேற்கிறது..

உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அம்மணி..

 
On Jan 10, 2011, 12:02:00 AM , கோநா said...

u will b cured. come back soon.

 
On Jan 10, 2011, 10:53:00 PM , மார்கண்டேயன் said...

வருக நந்தினி, வாழ்வாங்கு வாழ்க,

வால்பையன் அவர்களின் வலைப்பூவை பார்த்த பொழுது, சிறப்பு விருந்தினராய், திரு. லதானந்த் அவர்களின் வருகையை அறிந்தேன்,

அப்போதே, திரு. அருண் (வால்பையனை) தொடர்பு கொண்டு, திரு. லதானந்த் அவர்களிடம் தங்களைப் பற்றி விசாரிக்கலாம் என்று நினைத்தேன்,

தாய்நாட்டை விட்டு இருப்பதால், இணையவழி தொலைபேசி அனைத்து நேரங்களிலும் சரியாய் அமைவதில்லை,

எனினும், போதிய ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்,

தாய்நாடு வரும் பொழுது, தங்களுக்கு தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கின்றேன்,

மகிழ்வுடன்,
மார்கண்டேயன்.
http://markandaysureshkumar.blogspot.com

 
On Jan 14, 2011, 6:20:00 PM , ரவி said...

நீங்கள் ஒரு ஆண் என்று சிலர் சந்தேகப்படுகிறார்கள்.

இதுவரை எந்த பெண் பதிவரையும் தொடர்புகொண்டதில்லை.

ஐ பி அட்ரஸ் வேறு ஒரு ஆண் பதிவரின் அட்ரஸை காட்டுகிறது.

பதில் சொல்கிறீர்களா அல்லது பதிவு போடலாமா :))))

 
On Jan 19, 2011, 9:31:00 PM , சிவகுமாரன் said...

வணக்கம். சகோதரி.
இன்றுதான் உங்கள் பதிவுப்பக்கம் வந்தேன்.விவரம் அறிந்து மனம் வேதனை அடைந்தது. உங்கள் சகோதரனாய் சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு வந்த இதே பிரச்சினை சில வருடங்களுக்கு என் மனைவிக்கு வந்தது. அவளுக்கு அப்போது 28 வயது. என் மகனுக்கு 2 வயது Scan இல brain tumor என்று தெரிந்தது.
சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் Dr. Sidhhartha Ghosh அவர்களிடம் சிகிச்சை பெற்றாள் . அறுவை சிகிச்சை, radiation , chemo எல்லாம் முடிய 6மாதம் ஆனது. இறுதியாய் Oligodentro glioma grade iv என்றார்கள். என் மனைவிக்கு டாக்டர் கொடுத்த கெடு அதிக பட்சம் 3 வருடம். ஆனால் நான் டாக்டரிடம் சொன்னேன் நான் உயிரோடிருக்கும் வரை அவளும் இருப்பாள் என்று உங்கள் நம்பிக்கை அவளை காப்பற்றட்டும் என்றார் டாக்டர். நான் சிவபக்தன் , என் மனைவியும் தான் . இந்த ஆகஸ்ட்டு மாதத்தோடு பத்து வருடம் முடிகிறது. எல்லாம் இறைவன் செயல். நாங்கள் மனப்பூர்வமாக இறையை நம்பினோம். இன்று நலமாக் இருக்கிறாள். முன் தலையில் சிறிது முடி இல்லை. அவ்வளவுதான். எங்கள் ஒரே மகனை ஆளாக்கும் வரை இருவருக்கும் ஏதும் நேர அனுமதிக்க மாட்டோம்.
இறையை நம்புங்கள்
நான் வணங்கும் சிவன் உங்களையும் குணப்படுத்துவான்.

உங்களுக்க்காக பிரார்த்திக்கும் .
சகோதரன்
சிவகுமாரன்.

 
On Mar 28, 2011, 4:52:00 PM , போளூர் தயாநிதி said...

nambikkai izhakka vendam nalamay varuveerkal vazhththukal

 
On Jun 3, 2011, 2:55:00 PM , erodethangadurai said...

கிருபாநந்தினி, உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது ? நலமுடன் வந்து விட்டீர்கள் என் நினைக்கிறன்,

 
On Jun 16, 2011, 10:06:00 PM , Unknown said...

ஹாய் கிருபாநந்தினி,
உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது ? நலமுடன் வந்து விட்டீர்கள் என் நினைக்கிறன், ஒரு பதிவு போடுங்க

 
On Jul 2, 2011, 4:00:00 PM , அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

 
On Jul 12, 2011, 9:39:00 PM , நான் இளைப்பாறும் இன்னுமொரு படித்துறை said...

அட... ஊருக்குள்ள வந்தா என்ன நடக்குது ஏது நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது போங்க. இப்பத்தான் உங்க வலைப்பூ பக்கம் எட்டிப் பார்க்கிறேன். உங்களோட இந்தப் பதிவ பாத்ததுக்கப்புறம் எப்படி வந்தேன்னு கூட மறந்துட்டேன். படித்துறையில அப்படியே உக்காந்துட்டேன்.

உங்க மத்த பதிவு எதையும் படிக்கல. இனிமே படிக்கவும் மனம் இடங்கொடுக்கல. பதிவ படிக்கும் போதே சல்லிக்காசு பெறாத விசயத்துக்காக சக்திய விரயம் பண்ணி ஆளாளுக்கு கூச்சல் போட்டிருப்பது போன்ற உணர்வு.

சரி விடுங்க. இப்ப எல்லாம் நலம் தானே.

படித்துறையில் அமர்ந்து ரசிப்பது எவ்வளவு அலாதியானது இல்ல!


இப்படிக்கு,

இன்னுமொரு வழிப்போக்கன்.

 
On Jul 22, 2011, 9:41:00 AM , சி.பி.செந்தில்குமார் said...

என்ன ஒரு தீர்க்கமான பதிவு? 180 படத்தில் மரணத்தின் வாயிலில் நிற்கும் ஹீரோ சாவைக்கண்டு பயந்து ஓடுவது போல் ஓடாமல்....... உறுதியுடன் ..... வாழ்த்துக்கள்

 
On Aug 30, 2011, 2:09:00 AM , Anonymous said...

Hope you are back to healthy life.
Your thoughts are very bold and i would appreciate you to come back and write more.

 
On Oct 22, 2011, 7:32:00 AM , raji said...

தாங்கள் உடல்நிலை தேறி நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
பதிவின் பக்கம் வரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால்
வலைசரம் சென்று பார்க்கவும்

தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html

 
On Oct 27, 2011, 9:21:00 AM , SURYAJEEVA said...

தங்கள் பின்னூட்டம் கண்டேன், உடல் ஆரோக்கியமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி, உள்ளம் உறுதியாகி மீண்டும் சமூக அவலங்களை நீங்கள் கிழிக்கப் போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

 
On Oct 28, 2011, 7:05:00 AM , விச்சு said...

நான் வலைப்பதிவிற்கு புதியவன். இப்போதுதான் உங்கள் வலைப்பூவைப் படித்தேன்.உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு. பிளீஸ்!! மறுபடியும் எழுத ஆரம்பிங்க. மற்றவர்களின் கமெண்ட்'க்காக எழுதுவதை நிறுத்தாதீங்க.

 
On Oct 29, 2011, 1:44:00 AM , raji said...

@கிருபாநந்தினி

வாழ்த்துக்கள் கிருபா!உடம்பு குணமாகி நல்லா இருக்கீங்கன்னு தெரிஞ்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

எழுதறதை நிறுத்த வேண்டாம் கிருபா!விமர்சனங்களால் காயப் படுபவன் உண்மையான கலைஞனா, நல்லதொரு கலைஞனா வளர முடியாது.அதனால எதையும் மனசுக்குள்ள கொண்டு போறதை ஒதுக்கிட்டு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அது உங்களுக்கு ஆத்ம திருப்தியைத் தரும் கட்டாயமா.

 
On Oct 29, 2011, 12:29:00 PM , நம்பிக்கைபாண்டியன் said...

நீங்கள் விரைவில் நலம் பெற என் பிரார்தனைகள். எழுத முடிந்தால் தொடர்ந்து எழுதுங்கள்,அவரவர் கருத்தை சொல்ல எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு, பிடிக்காதவர்கள் விலகிச்செல்லட்டும்,