Author: கிருபாநந்தினி
•Thursday, February 11, 2010
கொஞ்ச நாளா எதுவும் எழுதலை. காரணம், சார் (என் கணவர் கிருபாதான்!) ஊர்ல இல்லை. டெல்லி போயிருக்கார். இரண்டு மாச கேம்ப். அதனால எதுவும் எழுதத் தோணலை. அவர் இருந்தா ஏதாவது பேச்சுக் கொடுத்துக்கிட்டிருப்பார். இதை எழுதலாமே, அதை எழுதலாமேன்னு ஐடியா கொடுப்பார். எழுதினதைப் படிச்சுட்டுப் பாராட்டுவார். தப்பு இருந்தா திருத்துவார். எனக்கும் எழுதுறதுல ஒரு உற்சாகம் இருக்கும். தவிர, புஜ்ஜிம்மா (என் செல்ல வாரிசு) படுத்தல் அதிகமாயிடுச்சு. சதா நை... நை...ன்னு அழுதுட்டேயிருக்கா! (நைனா, நைனான்னு அழுவுறாளோ?!)

சரி, அதிருக்கட்டும்..! என்னை இப்ப எழுத வெச்சதே ‘டமில் ரிவர்’ அக்காதான். அதாங்க, தமிழ்நதி அக்கா! ‘படுத்தாதீங்க தமிழ்நதி’ன்னு நான் போட்டிருந்த பதிவுக்கு ஏற்கெனவே கடுப்பாகி அவங்க ஒரு பின்னூட்டம் இட்டுட்டாங்க. அதுக்கு நான் பதிலும் போட்டுட்டேன். அப்புறமும் அவங்க மனசு குமுறிக்கிட்டே இருந்திருக்குபோல! பிப்ரவரி 6-ம் தேதி நீள நீளமா மூணு பின்னூட்டம் இட்டிருக்காங்க.

டமில் ரிவர் அக்காவுக்கு என்னோட தேங்க்ஸ்! ஏன்னா, அக்கா பெரிய எழுத்தாளி. கவிதாயினி. அவங்க எழுதினா, வெக்கங்கெட்ட குமுதமும் ஆனந்தவிகடனும் அவங்க எழுத்தைப் பிரசுரிக்கக் காத்திருக்கு. என் எழுத்தை யாரு சீண்டுவாங்க? 110 கோடிப் பேரில் நான் ஒரு சுண்டைக்காய்! ம்ஹும்... சித்தெறும்பு. சித்தெறும்புகூடக் கிடையாது. எறும்பின் வாய் உணவு! அப்படியிருந்தும் என்னை ஒரு பொருட்டா மதிச்சுப் பின்னூட்டம் இட்டிருக்காங்கன்னா, என் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னுதானே அர்த்தம்! அதுக்குதான் தேங்க்ஸ்!

அவங்களும் ‘ரதி’யக்காவும் கொதிச்செழுந்து தண்டி தண்டியா பின்னூட்டம் இட்டதுல, நான் என் விளக்கத்தைச் சொல்லாம விட்டா, அவங்களை அலட்சியப்படுத்தறேன்னு ஆயிடுமேன்னு பயந்துதான் ரொம்ப யோசனைக்குப் பிறகு இப்ப இதை எழுதறேன். தன்னிலை விளக்கம்னு வெச்சுக்கோங்களேன்.

முதல்ல ‘ரதி’யக்காவோட பின்னூட்ட வரிகளைப் பார்ப்போம்.

ஜனவரி 23: \\காலத்தே செய்யும் உதவி ஞாலத்தில் பெரிது என்பார்களே. இனிமேல் நீங்கள் புத்தகம் விற்றாலும், உங்கள் தளங்களில் எங்களுக்காய் பதிவு தான் போட்டாலும் எங்கள் ஐம்பதாயிரம் அப்பாவி உயிர்கள் மீண்டு வரப்போவதில்லை. எப்படியோ போங்கள்.//

என் பதிவுல அப்பாவி ஈழத் தமிழர்கள் படுகொலையானதை நான் கேலியோ கிண்டலோ பண்ணியிருக்கிற மாதிரி ஏன் இந்தக் கோபம்? அவர்களைக் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசாங்கங்களின் கடமை. தமிழ்நாட்டு மக்கள் மனிதச் சங்கிலி நடத்தி எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. அவங்க வேறென்ன செய்ய முடியும்? பத்திரிகைகள் ஈழப் படுகொலையைப் பத்திப் பக்கம் பக்கமா எழுதின. அவங்களும் வேறென்ன செய்ய முடியும்? அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு சொல்றது அயோக்கியத்தனம்! தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஈழச் சகோதரர்கள் மீதுள்ள ஈர உணர்வைக் கொச்சைப்படுத்துற மாதிரி இருக்கு. அந்தக் கோபத்தைதான் நான் என் வலைப் பதிவுல வெளிப்படுத்தினேன்.

ஜனவரி 25: \\ராஜீவ் கொலைங்கிற கொடுமையைத் தாண்டியும்...// அதெப்படிங்க உங்களைப்போன்ற சில இந்தியர்களால் கொஞ்சம் கூட கூசாமல் இப்படி பேசமுடிகிறது? அமைதிப்படை என்ற பெயரில் வந்து எங்களை கொடுமைப்படுத்தினீர்கள், கற்பழித்தீர்கள், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தீர்கள்.//

திருத்தம். என்னைப் போன்ற சில இந்தியர்களால் அல்ல; பல கோடி இந்தியர்களால்! எங்கிருந்தோ வருவீங்க; எங்க பிரதமரை (அந்தச் சமயம் பிரதமராக இல்லாவிட்டாலும்) எங்கள் மண்ணிலேயே கொன்று குவிப்பீங்க. இந்தச் செயலுக்கு நீங்க கூசமாட்டீங்க. பின்னாடி ‘துன்பியல்’ ’துடைப்பைக்கட்டை இயல்’னு புதுசா ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சு நீலிக் கண்ணீர் வடிப்பீங்க. அதை நாங்க கண்டுக்காம சகிச்சுக்கிட்டிருக்கணுமா? அமைதிப் படை வேணும்பீங்க. அப்புறம், ‘வேணாம்; இது எங்க நாட்டுப் பிரச்னை. இதுல இந்தியா போன்ற அந்நிய நாடு தலையிட வேணாம்’பீங்க. உங்களுக்குத் தேவைன்னா தமிழ்நாடு தொப்புள்கொடி உறவு; வேண்டான்னா அங்கே நடப்பது ‘சகோதர யுத்தம்’ ஆயிடும்; சிங்களவர்கள் சோதரர்கள் ஆகிடுவாங்க. தமிழ்நாடு அந்நிய தேசமாயிடும். அப்படியா? அப்பாவி ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி, யுத்தம் பண்ணி, தப்புக்கு மேல தப்பு பண்ணி, இன்னிக்கு அவங்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிட்டுப் பழியை மாத்திரம் ஏன் அடுத்தவங்க மேல தூக்கிப் போடுறீங்க?

\\தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு தம் இனம் என்ற ரீதியில் ஓர் கடப்பாடும் உண்டு. அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால் தான் அவமானம். அது தவிர இந்தியாவிற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் இதில் பங்கு உண்டு என்கிற கவலையில் அதை சுட்டிக்காட்டும் தார்மீக கடமை தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு உண்டு என்பதால் எழுதினார்கள்.//

உண்மைதான்! அந்த தார்மிகக் கடமையில்தான் தமிழ்ப் பத்திரிகைங்க ஈழத்து மக்களின் வலிகளையும் வேதனைகளையும் பக்கம் பக்கமா எழுதித் தள்ளின. அதுக்குக் கிடைச்ச பரிசுதாங்க ‘காசு பார்க்கும் கயமைத்தனம்’கிற அபவாதப் பேச்சு! அதையும் தமிழ்நாட்டுல மிகப் பிரபல தமிழ்ப் பத்திரிகையான ‘குமுதம்’தான் வெளியிட வேண்டியிருக்கு. ஏன், டமில் ரிவரக்கா கனடாவிலோ, மலேசிய முரசிலோ போய் எழுத வேண்டியதுதானே? \\அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால்தான் அவமானம்.// செய்ததுக்கும்தான் அவமானக் கரியை அள்ளிப் பூசிட்டீங்களே! ஈர இதயமுள்ள தமிழ்நாட்டுத் தமிழனின் அனுதாப உணர்வுகளைக் கொச்சைப் படுத்திப் பேசிட்டீங்களே? போதாதா?

\\நீரெல்லாம் எங்களுக்காக நேரத்தை வீணடிக்கவில்லை என்று எந்த அப்பாவி ஈழத்தமிழன் உம்மிடம் அழுதான்? //

ஈழத் தமிழருக்காக உண்மையிலேயே மனம் விட்டு அழுத, அவங்க நல்வாழ்வுக்காகத் தங்கள் உணர்வுகளை அழுத்தமாகப் பதித்த தமிழகத் தமிழனுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!

ஜனவரி 26: \\தமிழ்நதி குறித்த எழுத்துக்களிலும், ஷோபாசக்தியையெல்லாம் தேடி எடுத்து இணைத்த விதத்திலும் ஒரு வன்மம் இருக்கிறது சகோதரி! // இது செல்வேந்திரன் அண்ணாச்சியின் பின்னூட்டம்.

மன்னிக்கணும் அண்ணா! சத்தியமா ஷோபாசக்தி யார்னே எனக்குத் தெரியாது - அவரது வலைப் பதிவை இணைச்சப்போ! தமிழ்நதின்னு தேடினப்போ வந்து சிக்கினதுதான் அது. படிச்சேன். என் கருத்துக்களோடு ரொம்பவும் ஒத்துப் போகுற மாதிரி இருந்ததால, என் கட்டுரைக்கு வலிமை சேர்க்க அதை இணைச்சேன். மத்தபடி வன்மம்கிறதெல்லாம் பெரிய வார்த்தைங்ணா!

இனி, டமில் ரிவர் அக்காவோட பின்னூட்டங்களுக்கு வர்றேன்.

\\கேலி செய்யக்கூடாத விடயங்களும் உலகத்தில் இருக்கின்றன என்பதை உங்கள் நாட்டில் பேரழிவு வருங்காலம் நீங்களாகவே தெரிந்துகொள்வீர்கள்.//

டமில் ரிவர் அக்கா! சத்தியமா எனக்குப் புரியத்தான் இல்லை. என் பதிவில் எதைக் கேலி பண்ணினேன்? உங்கள் துயரங்களையா? இல்லையே! ஈழத்தில் நடந்து முடிந்த இனப் படுகொலை எங்கள் இதயங்களில் எத்தனை ஆழமான ரணத்தை ஏற்படுத்தியிருக்குன்னு உங்களுக்குத்தான் புரியலை. அதனாலதான் அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு கொச்சைப்படுத்துறீங்க. இதைச் சொன்னா, உங்களுக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருது. விகடனுக்கும் குமுதத்துக்கும் உங்களுக்கும் சிண்டு முடியறேன்கிறீங்க. இவங்களை இல்லைன்னா பின்னே யாரைக் குறிப்பிடுறீங்கன்னு அந்தப் பத்திரிகைங்க பெயர்களை அந்த பேட்டியில் தெளிவாச் சொல்ல வேண்டியதுதானே அக்கா? அதை விட்டுட்டு சாபம் எல்லாம் எதுக்கு?

\\உங்களை நான் அறிந்ததில்லை. உங்கள் எழுத்தை நான் முன்பின் படித்ததுமில்லை. எதற்காக என்னை நீங்கள் வந்து தாக்குகிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை.//

அறிந்திருக்க முடியாதுதாங்க்கா. காரணம், நான் ஒண்ணும் உங்களைப் போல உலகம் அறிஞ்ச எழுத்தாளர் இல்லியே! ஒரு சாதாரண ஹவுஸ் வொய்ஃப்! இதுக்கும் பெண்ணியவாதிங்க என்னைக் கேலி பண்ணலாம். அதனால, ஹோம் மேக்கர்னு ஸ்டைலா வேணும்னா வெச்சுக்கோங்க. உங்களை நான் தாக்கவே இல்லை அக்கா! தமிழகப் பத்திரிகைங்களோட ஆத்மார்த்த உணர்வுகளை நீங்க காயப்படுத்தினதுதான் என்னை வருத்தப்பட வெச்சுது. அதன் விளைவுதான் அந்தப் பதிவு.

\\"அந்தச் செய்திகளையெல்லாம் புத்தகமா போட்டு விக்கிறதுகூட, தமிழ் மக்கள் மனசுல ஈழத்து மக்களின் வேதனைகளை அழுத்தமா பதிய வைக்கிற ஒரு முயற்சிதான்."

அப்பூடியா? பதியவைச்சு அப்புறம் என்ன நடக்கும்? ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் பண்ணின மத்திய, மாநில அரசாங்கங்களைப் போட்டுக் காச்சு காச்சுன்னு காய்ச்சி ஆட்சில இருந்து தூக்கிடுவீங்களா? சும்மா போங்க கிருபாநந்தினி.//

ஈழப் படுகொலை தொடர்பா உங்களுக்கு யாரையாவது திட்டணும்போல் இருந்தா, ஒண்ணே முக்காலரைக்கா மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவரைத் திட்டுங்க; கை கட்டி வேடிக்கை பார்த்த மத்திய அரசைத் திட்டுங்க. பாவம், உங்க மேல கருணையோடு உள்ள உங்க தொப்புள் கொடி உறவான (இந்த வார்த்தைங்க எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்ததுதான்!) எங்களையும், எங்க பத்திரிகைங்களையும் திட்டாதீங்க.

\\ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் தனித் தனியான பின்னூட்டங்களின் வழி பதில் சொல்வதன் வழியாக உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன். மேலும் டாக்டர் ருத்ரன் போன்றவர்கள் வந்து பின்னூட்டும்போது 'ஐயகோ நீங்களா...?'என்று ஓவராகக் குதிப்பதைப் பார்த்ததும் மேலும் விளங்கியது.//

தனித் தனியா பதில் சொல்றதுதான் பண்பாடுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன் - ஒவ்வொருத்தருக்கும் நாமே நேரடியா போய் அழைப்பிதழ் வைக்கிற மாதிரி! அப்படி இல்லியா? சரி, விட்டுட்டா போச்சு! ஆனா, ‘உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன்’னு ஏன் குன்ஸா சொல்றீங்க? அப்படி என்னதான் அறிஞ்சுக்கிட்டீங்கன்னு உடைச்சே சொல்லியிருக்கலாமே அக்கா! ருத்ரன் பெரிய மனோதத்துவ மேதை. நான் சாமானியள். என் பதிவை அவர் படிச்சுப் பாராட்டிப் பின்னூட்டம் இட்ட சந்தோஷத்தில் ஓவரா குதிச்சுட்டேன்தான். அது ஒரு தப்பாக்கா? (உங்க பின்னூட்டம் வந்தப்பவும்கூட நான் குதிச்சேன்கிறதுதான் உண்மை.) அதுல உங்களுக்கு ‘மேலும் விளங்கியது’ என்னன்னுதான் இந்த மடைச்சிக்குப் புரியலை.

\\கவிதைப் புத்தகத்தில் அந்தப் படத்தைப் போட்டிருப்பது உண்மைதான். அதற்கான தகுதி எனக்கிருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். //

உங்களுக்குத் தகுதி இருக்குன்னு நீங்களாவே நெனச்சுக்கிட்ட மாதிரி, தங்களுக்கும் தகுதி இருக்குன்னு தமிழ்ப் பத்திரிகைங்க நெனைச்சுக்கக் கூடாதா? மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன்குடமா?

\\ஷோபா சக்தி கட்டுரைதான் உங்களுக்கு உவப்பாக இருந்ததா? ஒருவரைத் தூற்றவேண்டுமென்றால், உங்கள் சுயபலத்தில் நின்று தூற்றுங்கள். பக்கபலம், பின்பலம் தேடாதீர்கள்.//

இப்படிச் சொன்ன நீங்கதான்...

\\எனது நண்பர்களில் ஒருவர் எழுதிய கடிதத்தை எனது வலைப்பூவில் பிரசுரித்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது போய் வாசித்துப் பாருங்கள். //னும், \\நான் சொல்லவேண்டிய பலவற்றை ரதி பேசியிருப்பது ஆசுவாசம் அளிக்கிறது.//னும் பிறர் பலத்தைச் சார்ந்து நிக்கிறீங்க டமில் ரிவர்! மகா பெரிய எழுத்தாளினி-கம்-கவிதாயினியான நீங்களே பிறரைத் துணைக்கு அழைக்குறப்போ, ஈழத் தமிழர்களின் வலிகளை அறிந்த ஷோபா சக்தியை நான் துணைக்கு அழைக்கிறது மட்டும் உங்களுக்கு ஏங்க்கா கசக்குது?

இதே தேதியில், மூணாவதா டமில் ரிவர் இட்ட பின்னூட்டம் குப்பன் யாஹூக்கான மறுமொழி. அதுல நான் கருத்துச் சொல்ல விரும்பலை.

தமிழ்நதி அக்காவை ‘டமில் ரிவர்’னே கட்டுரை முழுக்கக் குறிப்பிட்டிருக்கேனேன்னு பாக்கறீங்களா? அக்கா அளவுக்கு எனக்குத் தமிழ் உணர்வு கொஞ்சமும் கிடையாதுங்க. அதான்!

(மறுபடி டமில் ரிவர் அக்கா படத்தை நெட்ல தேடப் போறேன். ஷோபா சக்தி மாதிரி வேற எந்தச் சக்தியும் வந்து சிக்கிறக்கூடாதுன்னு முப்புடாதியம்மனை வேண்டிக்கிறேன்!)

ஆஹா..! சிக்கிடுச்சுய்யா, சிக்கிடுச்சு! நான் ஒண்ணு தேடினா அதுவா வந்து விழுதே, நான் என்ன பண்ணுவேன்? இந்த வலைப்பூ யாருதுன்னு எனக்குத் தெரியலை. கண்ணுல பட்டுது. (அது சரி, என் கெரகம்... என் கண்ணுல படுறதெல்லாம் இப்படி அக்காவுக்கு எதிர்ப்பாவே இருக்கணுமா?) அதிலிருந்து சில வரிகளை காப்பி பண்ணிக் கீழே கொடுத்திருக்கேன்.

\\ஆனால் அவ்வாறு அரசியல் பார்வை கொண்டவர்களையும் தமிழ்நதி வசைபாடுகிறார். அந்த பதிவில் உள்ள சிலவரிகள் தமிழ்நதியின் அரசியல் பார்வை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு உதாரணம். ‘‘விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… ” என்னும் தமிழ்நதியின் அப்பதிவிலுள்ள வரிகள். ஆக, தமிழ்நதிக்கு மேற்கண்ட புலிகள் இழைத்த கொடுமைகள் எல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ நொட்டாங்கையால் தள்ளக்கூடிய விஷயங்கள். இப்போது புலிகள் வீழ்ந்துபோனதால்தான் இதுகுறித்தாவது தமிழ்நதி எழுதுகிறார். புலிகள் போரில் வென்றிருந்தால் சோணகத்துரோகிகள் என எம் மக்களைத் துரத்தத்தான் செய்வார்கள், மாற்று இயக்கங்களை, ஜனநாயகப் போராளிகளைக் கொன்றுதான் போடுவார்கள். ஆனால் தமிழ்நதி அதுகுறித்து ஒரு சொல்லும் எழுதமாட்டார். //

போதுங்க்கா... இந்த ஆட்டத்துக்கு இனி நான் வரலை!


.
|
This entry was posted on Thursday, February 11, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

70 comments:

On Feb 11, 2010, 11:40:00 PM , PADMANABAN said...

ஒரு ஆரோக்கியமான விஷயம் : தமிழ்நதியின் பின்னுட்டத்தை அப்படியே வெளியிட்ட விஷயம் . பதிவுலகத்தில் சிறப்பான எடுத்துக்காட்டு . தமிழ்நதி அவர்களும் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் பதில் அளித்திருந்தார். அதற்கு சற்றும் குறைவில்லாமல் உங்களது அறிவு பூர்வமான பதில் விளக்கம் அமைந்தது ... ( டமில் ரிவர் தவிர்த்து ). தமிழ்நதி அவர்களின் நியாயமான கவலைகளை இந்திய தமிழர்கள் தெளிவாகவே புரிந்துள்ளார்கள் .. அரசியலார்களின் அநியாயமான உணர்ச்சிகரமான நடவடிக்கைகளுக்கு அப்பாவிகள் பலியாவது என்பது முன்னேறிய மனித சமுதாயத்தின் சாபக்கேடு . நாம் மேலும் இதை சிக்கலாக்காமல் இருப்பதே அதற்கு விமோசனம் தேடும் முதல் அடி. அதற்கு அச்சாரமாக அமைந்தது உங்களது கடைசி வரி .. விவாதம் வேண்டாம் ... சீரான சிந்தனையே தீர்வுக்கு வழி..

 
On Feb 12, 2010, 12:00:00 AM , டவுசர் பாண்டி... said...

ஆத்தா பின்றீங்க....

தமிழ் நதியின் எழுத்துகளின் தீவிர ரசிகன். ஆனால் அவரின் இந்த கருத்தியல் எனக்கு உவப்பானதில்லை(அவங்களை மாதிரியே எழுதறேனா!)

வலிகள் பொதுவானது....அது பாரபட்சம் பார்ப்பதில்லை.

 
On Feb 12, 2010, 12:44:00 AM , பின்னோக்கி said...

தப்பு.. ரொம்ப தப்பு.. இன்னமும் ஆட்டமே ஆரம்பிக்கலை.. அப்புறம் எப்படி நிறுத்துவீங்க ?? :)

 
On Feb 12, 2010, 4:09:00 AM , Rathi said...

Haah!! கிருபாநந்தினி,

1 //இதே தேதியில், மூணாவதா டமில் ரிவர் இட்ட பின்னூட்டம் குப்பன் யாஹூக்கான மறுமொழி. அதுல நான் கருத்துச் சொல்ல விரும்பலை.//

அப்போ நான் (ரதி) குப்பனுக்கு சொன்ன பதிலுக்கு மட்டும் நீங்கள் ஏன் கருத்து சொன்னீர்கள்? "குப்பன்"யாஹூ என்ற "தனிமனிதர்" ஈழத்தமிழனுக்காக அழவில்லை என்று எந்த ஈழத்தமிழனும் அழவில்லை என்று சொன்னேன்.

2 //தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஈழச் சகோதரர்கள் மீதுள்ள ஈர உணர்வைக் கொச்சைப்படுத்துற மாதிரி இருக்கு.//

நீங்கள் மீண்டும், மீண்டும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் எங்களுக்கும் (ரதி, தமிழ்நதி) சண்டைமூட்டி விடுவதிலும், எங்கள் கருத்துக்களை திரிப்பதிலும் வல்லவராக இருக்கிறீர்கள். இதில் அப்படி என்ன சந்தோசம், லாபம் உங்களுக்கு?

3 //அவங்களை அலட்சியப்படுத்தறேன்னு ..//

இல்லை, நீங்கள் எங்களை அலட்சியப்படுத்தவில்லை, அவமானப்படுத்துகிறீர்கள். எங்கள் கருத்துக்களை லாவகமாக திரிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

4 //அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு சொல்றது அயோக்கியத்தனம்//
இதோ அதற்கு உதாரணம்.http://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/
http://vrinternationalists.wordpress.com/2009/11/16/ஈழம்-–-கூத்தாடிகள்-கூலிக/

5 //அப்பாவி ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி, யுத்தம் பண்ணி, தப்புக்கு மேல தப்பு பண்ணி, இன்னிக்கு அவங்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிட்டுப் பழியை மாத்திரம் ஏன் அடுத்தவங்க மேல தூக்கிப் போடுறீங்க?//
இது தான் உங்கள் அபத்தத்தின் உச்சம். நான் ஏற்கனவே சொன்னதுதான். ஈழப்பிரச்சனையின் அடிப்படை புரியாத உங்களோடு அது பற்றி பேசுவது, என் நேரத்தை வீணடிக்கும் செயல்.

6 //உண்மையில் ஈழத்தமிழர்களுக்காய் துடிக்கிற எத்தனயோ நல்ல இதயம் படைத்த தமிழ்நாட்டு தமிழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். //

இதையும் தான் நான் சொன்னேன். அதை ரொம்ப வசதியாய் தவிர்த்துவிட்டு, நீங்கள் சொன்னது இப்படி, // ஈர இதயமுள்ள தமிழ்நாட்டுத் தமிழனின் அனுதாப உணர்வுகளைக் கொச்சைப் படுத்திப் பேசிட்டீங்களே? போதாதா?//

அடிப்படையில், நீங்கள் ஒரு விடயத்தை தான் உங்கள் உளறல்கள் மூலம் உணரவைக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் என்றால் அவர்கள் அகதிகளாய், தங்களின் "அவலங்களால்" மட்டுமே இந்த உலகால் அறியப்படவேண்டியவர்கள். அப்படித்தானே? அவர்களின் எந்தவொரு திறமை மூலமாவது, குறிப்பாக தமிழ்நாட்டு ஊடங்கங்களால் அவர்கள் அறியப்பட்டால் அது கிருபாநந்தினிக்கு பொறுக்கவில்லை. தமிழ்நதிக்கும் சரி, ரதிக்கும் சரி தமிழ்நாட்டு தமிழர்களையோ, பத்திரிகைகளையோ கொச்சைப்படுத்தும், அலட்சியம் செய்யும் இன்னும் உங்கள் பாஷையில் என்னென்னவோ எல்லாம் செய்யும் எந்தவொரு நோக்கமும் கிடையவே கிடையாது. கயமைத்தனங்களை மட்டுமே நாங்கள் பேசினால் நீங்கள் அதை பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்களையும், பத்திரிகைகளையும் நாங்கள் அவதூறு சொன்னதாக கயிறு திரிக்கிறீர்கள்.

உங்களுடைய அழுகுணி ஆட்டத்திற்கு நாங்களும் வரவில்லை. ஈழப்பிரச்சனையும் தமிழ்நாடும் என்பது கிருபாநந்தினி, தமிழ்நதி, ரதி மட்டும் சார்ந்ததல்ல. நீங்கள் ஏதோ எங்களை பழி வாங்குவது போல் பதிவெழுதி எங்களை மட்டுமல்ல எங்கள் போராட்டத்தையும் சேர்த்தே களங்கப் படுத்துகிறீர்கள், கொச்சைப்படுத்துகிறீர்கள்.

பி.கு. உங்களைப்போல் எனக்கு 'ண்ணா, 'க்கா, டமில் ரிவர், என்றெல்லாம் அடுத்தவரை நக்கலாக பேசவராதுங்க.

 
On Feb 12, 2010, 11:42:00 AM , solomon said...

Yeahh.. Nice...

 
On Feb 12, 2010, 12:57:00 PM , Anonymous said...

Sila visayangal sariyagappattalum, pala visayangal thavaru.

india amaithipadaiyai patri therinthu kondu pathivu seivathu nallathu,

intha amaithipadai angu sentrathu amaithikaga alla, singalanukku Saamaram veeesa...

melum ingulla sila pathirikkaigal panathirkaga eluthiyathu unmai. Ithayum neengal satru therinthugollungal.
mattavai nantru...
sabarish
chennai

 
On Feb 12, 2010, 2:17:00 PM , satheshpandian said...

//திருத்தம். என்னைப் போன்ற சில இந்தியர்களால் அல்ல; பல கோடி இந்தியர்களால்! எங்கிருந்தோ வருவீங்க; எங்க பிரதமரை (அந்தச் சமயம் பிரதமராக இல்லாவிட்டாலும்) எங்கள் மண்ணிலேயே கொன்று குவிப்பீங்க. இந்தச் செயலுக்கு நீங்க கூசமாட்டீங்க. பின்னாடி ‘துன்பியல்’ ’துடைப்பைக்கட்டை இயல்’னு புதுசா ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சு நீலிக் கண்ணீர் வடிப்பீங்க. அதை நாங்க கண்டுக்காம சகிச்சுக்கிட்டிருக்கணுமா? அமைதிப் படை வேணும்பீங்க. அப்புறம், ‘வேணாம்; இது எங்க நாட்டுப் பிரச்னை. இதுல இந்தியா போன்ற அந்நிய நாடு தலையிட வேணாம்’பீங்க. உங்களுக்குத் தேவைன்னா தமிழ்நாடு தொப்புள்கொடி உறவு; வேண்டான்னா அங்கே நடப்பது ‘சகோதர யுத்தம்’ ஆயிடும்; சிங்களவர்கள் சோதரர்கள் ஆகிடுவாங்க. தமிழ்நாடு அந்நிய தேசமாயிடும். அப்படியா? அப்பாவி ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி, யுத்தம் பண்ணி, தப்புக்கு மேல தப்பு பண்ணி, இன்னிக்கு அவங்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிட்டுப் பழியை மாத்திரம் ஏன் அடுத்தவங்க மேல தூக்கிப் போடுறீங்க?//

அதெப்படிங்க ராஜீவ் காந்தி உயிர் தான் பெருசா?
அங்கே இந்த ராஜீவ் காந்தியின் வறட்டு பிடிவாதம், முட்டாள்தனமான கொள்கை இதனால செத்த மனிதர்கள் எல்லாம் உங்களுக்கு என்னனு தோணுது?

 
On Feb 12, 2010, 2:20:00 PM , satheshpandian said...

//உண்மைதான்! அந்த தார்மிகக் கடமையில்தான் தமிழ்ப் பத்திரிகைங்க ஈழத்து மக்களின் வலிகளையும் வேதனைகளையும் பக்கம் பக்கமா எழுதித் தள்ளின. அதுக்குக் கிடைச்ச பரிசுதாங்க ‘காசு பார்க்கும் கயமைத்தனம்’கிற அபவாதப் பேச்சு! அதையும் தமிழ்நாட்டுல மிகப் பிரபல தமிழ்ப் பத்திரிகையான ‘குமுதம்’தான் வெளியிட வேண்டியிருக்கு. ஏன், டமில் ரிவரக்கா கனடாவிலோ, மலேசிய முரசிலோ போய் எழுத வேண்டியதுதானே? \\அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால்தான் அவமானம்.// செய்ததுக்கும்தான் அவமானக் கரியை அள்ளிப் பூசிட்டீங்களே! ஈர இதயமுள்ள தமிழ்நாட்டுத் தமிழனின் அனுதாப உணர்வுகளைக் கொச்சைப் படுத்திப் பேசிட்டீங்களே? போதாதா?//

இங்கே உள்ளவர்கள் இலங்கை தூதுவர் அம்சாவிடம் பணம் வாங்கவில்லை என்று நீங்கள் சொல்லவரிங்களா?

 
On Feb 12, 2010, 2:23:00 PM , satheshpandian said...

//மன்னிக்கணும் அண்ணா! சத்தியமா ஷோபாசக்தி யார்னே எனக்குத் தெரியாது - அவரது வலைப் பதிவை இணைச்சப்போ! தமிழ்நதின்னு தேடினப்போ வந்து சிக்கினதுதான் அது. படிச்சேன். என் கருத்துக்களோடு ரொம்பவும் ஒத்துப் போகுற மாதிரி இருந்ததால, என் கட்டுரைக்கு வலிமை சேர்க்க அதை இணைச்சேன். மத்தபடி வன்மம்கிறதெல்லாம் பெரிய வார்த்தைங்ணா!///

ஷோபாசக்தியோடு உங்கள் கருத்து ஒத்து போகிறது என்றால் அப்படியானால் இந்திய உளவுதுறையோடு அதன் கொள்கைகளில் உங்களுக்கு ஒத்து போகிறது என்று அர்த்தம் கொள்ளலாமா?

 
On Feb 12, 2010, 2:26:00 PM , satheshpandian said...

வணக்கம் உங்கள் கருத்துகளில் எனக்கு ஏகப்பட்ட முரண்பாடு. அதனால் தான் இங்கே பின்னூட்டம் இட்டு உள்ளேன். உங்களுடைய கருத்துக்களை ஆக்க பூர்வமாக விவாதிக்க விரும்புகிறேன்.

 
On Feb 12, 2010, 3:24:00 PM , ஆதி மனிதன் said...

ஆரம்பிச்சிடாங்கயா...ஆரம்பிச்சிடாங்க ..
சபாஷ் சரியானா போட்டி ...
நீயா நானா?
ஜெயிக்கபோவது யாரு?

மேலே கூறியது எல்லாம் ஆரோக்கியமா இருந்தா ரசிக்கலாம்.

 
On Feb 12, 2010, 3:42:00 PM , யாசவி said...

அக்கா! எதற்கு இந்த பிரேத பரிசோதனை என்று தெரிந்து கொள்ளலாமா?
இந்த விசயங்களை விட்டு விட்டு உங்க குட்டி பாப்பாவை பாருங்கள். மற்றவர்களுக்கும் அதுவே.
நான் சொன்னது ஈழ விஷயம் பற்றி. இந்த சண்டை பற்றி எனக்கு தெரியாது

 
On Feb 12, 2010, 4:49:00 PM , குப்பன்.யாஹூ said...

These pulam peyarntha tamil people say & shout as tamil, tamil, eelam, solam but in action if you see they will live in norway or sweeden or denmark or in chennai .

They wont go to the ground and fight/agitate against srilankan govt

 
On Feb 12, 2010, 9:19:00 PM , ஜோதிஜி said...

இதில் உள்ள விசயங்களை பிறகு விவாதிப்போம். உங்கள் படித்துறை என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் ஷண்முகப்ரியன் அற்புதமான சிந்தனைகள் அடங்கிய இடுகை வைத்திருப்பதை நீங்கள் உணர்வீர்களா?

 
On Feb 12, 2010, 10:06:00 PM , துருவன் said...

கேலி செய்யக்கூடாத விடயங்களும் உலகத்தில் இருக்கின்றன என்பதை "உங்கள் நாட்டில் பேரழிவு வருங்காலம் நீங்களாகவே தெரிந்துகொள்வீர்கள்." ---- அந்த பொன் நாள் என் நாளோ ? அன்று தான் நாம் மீண்டும் சிரிப்போம்ம்ம்... மகிழ்வோம்.....
" ஈழத் தமிழனின் கனவே.....சிதறுண்டு சின்னா பின்னமாகும் இந்தியாவே "

 
On Feb 12, 2010, 11:31:00 PM , thuruvan said...

உலகில் மூன்று புறமும் கடலும் , நான்கு புறமும் எதிரிகளும் சூழ்ந்த நாடு இந்தியா.

 
On Feb 13, 2010, 1:20:00 AM , BLESSO said...

வணக்கம். நானும் உங்களை போலதாங்க, ORU EZHUTHTHAALAN ILLA. ENAKKUNU KUDUMBAM, VELAI, PORUPPUNU ROMBAVE IRUKKU... AANALUM ENNA PANNA? ORU PURATCHIYAALAN SONNAARU "MARANGAM SUMMA YIRUNDHAALUM KAATRU ADHAI SUMMA VIDAADHAAM"

AHUDHAN IPPO NAAN PINNOOTTAM EZHUDHA VANDHA PINNANI - AMBUTTU DHAAN. ENNODA GOOGLE TRANSLITERATION LA CHINNA PIRACHANA POLA - ADHU DHAAN IPPADI THAMIZHUM, AANGILAMUNM KALANDHU EZHUDHAREN. UNGALUKKU PURIYUM-NU NAMBAREN.

SARI NAAMA VISAYATHTHUKKU VARUVOEM. NANDHINI SAGODHARI - EEZHATHTHIL NADANDHA, NADAKKUM VISAYAM NEENGA NINAIKKIRA POLA ILLA. MODHALLA INDHA SIKKAL NIRAINDHA VISAYATHTHAI NEENGA EZHUDHA THUNINDHADHARKKAAI PAARAATUREN.

IHULA PALA UNMAI PUDHANJU IRUKKU
SARI MODHALLA IRUNDHE VARAEN YENNA IDHA NEENGA MATTUM ALLA UNGA VAASAGARUM PURINJIKANUM.

RAJIV KOLAI

RAJIVA KONNADHU YAARU? NUNI PULLU MEYUM SILA MA(A)KKALIN KARUTHTHU - ADHUKKU KAARANAM LTTE MATTUM DHAANAAM. SIRIPPU DHAN VARUDHU?

AKKA MAAMA OORUKKU POKUMPODHU NEENGA AIRPORT VARAI SENDRU VAZHI ANUPPIYIRUPPEERGAL. VITTAAL NEENGA DELHI- KKE SENDRU VITTUTU VANDHIRUPPEERGAL. SARI DHAANE?

SARI ONNU THERIYUMAA? RAJIV THIRUMANAMAANA PIRAKU OVVORUMURAI THAMIZHAGAM VARUM PODHUM AVAR MANAIVI THIRUMATHI.SONIA RAJIV -UM KOODAVE VARUVAAR. ORE ORU MURAI DHAAN MISSING ADHU EPPO THERIYUMAA? UNGALUKKE THERIYUM ADHU SRIPERUMBADUR VARUM BODHU DHAAAN.

NAAN IVAR DHAAN KOLAIKKU KAARANAM NU SOLLALA - UNGALIDAM SILA KELVI KEKKAREN. ADHA NADU NILAYODU YOSITHTHAAL UNGALUKKE BADHIL THERIYAVARUM.

VAZHAKKAMA ELECTION KOOTTATHUKKU VARUM THALAIVARAI VARAVETRU AVARUDANE KOOTA MUDIVU VARAIKKUM IRUPPADHU - ELLAA KATCHI KAARARGALUKKUM ULLA EZHUDHAADHA SATTAM. ANDHA VEDI VIBATHTHIN BODHU YEAN ORU CONGRESS KAARAN KOODA ARUGIL ILLAI? AVANGALUKKU MUNNAME THERIYUMAA. INNAIKKU VAAI KIZHIYA KATHTHUM CONGRESSKAARARGAL ENGE PONAARGAL? HELLO MR.CHIDAMBARAM - AAMAM NEENGA ANDHA IDATHTHUKKE POLAIYAAME YENNACHU?


RAJIV KOLAIYILE, RAJIV-ODU KOODA SILA PODHUMAKKALUM, SILA POLICE KAARANUM DHAAN SETHTHAAN. ORU THAMIZHAGA CONGRESS THALAIVANUM SAAGALIYE YEAN?

YOSINGA YOSINGA NALLA YOSINGA

50,000 perin saavukku yaar kaaranam?

sandhegame illa.

d.m.k. congress matrum raja bakshe koottaligal dhaan kaaranam.

ippo avanga vetri yenna theriyumaa? thamizhargalai azhichadhu mattumall,Namma ellore kobaththaiyum kumudham melayum, vikatan melayum thiruppittu thangalai nallavangalaa kaattikiradhum dhan.

NANDRI.

 
On Feb 13, 2010, 11:17:00 AM , Rajesh said...

Hello Madam,

First time, I have read your blog.
Very Nice. Periya writer aaga chances irukku.
Plz, AANMEEGAM patri eluthungal...Wishes...

 
On Feb 13, 2010, 11:18:00 AM , தமிழ்நதி said...

"அமைதிப் படை வேணும்பீங்க. அப்புறம், ‘வேணாம்; இது எங்க நாட்டுப் பிரச்னை. இதுல இந்தியா போன்ற அந்நிய நாடு தலையிட வேணாம்’பீங்க."

--
"ஈழத் தமிழர்களின் வலிகளை அறிந்த ஷோபா சக்தியை நான் துணைக்கு அழைக்கிறது மட்டும் உங்களுக்கு ஏங்க்கா கசக்குது?"

joke adikkaatheenka kirupananthini. naankallaam paavam.

 
On Feb 13, 2010, 3:09:00 PM , V. R said...

Ms Nandini,

I am a fellow tamil citizen, who has no acquaintance with Tamilnathi but amazed with your devious astute and guile craftiness.

May I say that you have not really understood the issue of Eelam and the socio-political situations that ruined so many lives? Without understanding or with an half backed knowledge, you can not make such comments, which is mere childish. Your attitude shows that you are one among the eccentric moron, who thinks about herself great.

You do not have proper judgment about the ethnic and socio-political issues related to Eelam and the genocide happening for the past 50 years. However, "narcissist" like you can not think about looking in the real view. You can only utter callous and silly comments with decent words.

Your writings do not hold the basic manners of a civilized communication. It has sick and gossiping language and demoralizing grammar that intimidate and daunt the readers. You better close your eyes and enjoy the vicious dream of your fundamental world.

Do not pollute the internet by such blogs.

Swamy.

 
On Feb 13, 2010, 3:42:00 PM , Anonymous said...

Very filthy language. It shows your Indian House Wife Mentality.

 
On Feb 13, 2010, 4:45:00 PM , Roshma said...

Muttal

 
On Feb 13, 2010, 5:16:00 PM , Sakthi Varun said...

கிருபா நந்தினி,

உங்களுடைய எழுத்துக்களில் தனி நபர் தாக்குதல் தான் அதிகமாக உள்ளது. தமிழ்நதி என்ற பெயரை மொழி மாற்றம் செய்து tamil river என நீங்கள் சொன்னால் - grace bulluck - என்று உங்கள் பெயரை மாற்றலாமா?

 
On Feb 13, 2010, 8:17:00 PM , கிருபாநந்தினி said...

பின்னூட்டம் இட்டுத் தங்கள் கருத்துக்களை நாகரிக வார்த்தைகளில் தெரிவிச்ச அத்தனை பேருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன் - தமிழ்நதி அக்கா, ரதி அக்கா உள்பட! எள்ளளவும் கண்ணியம் குறையாத வார்த்தைகள்ல தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினதுக்கு அவங்க ரெண்டு பேருக்கும் என் ஸ்பெஷல் தேங்க்ஸ்!

இந்தப் பிரச்னையை வளர்த்த விரும்பலை. ஒரு சில கருத்துக்களை மட்டும் சொல்லி முடிச்சுக்கறேன்.

எல்லா விஷயங்களிலுமே இரண்டு வித கருத்துக்கள் உண்டு. இந்தக் கருத்துக்கள் பலப் பல ஊடகங்கள் மூலமாக அவரவர்க்கு வந்து சேரும் தகவல்கள் மூலம் உருவாவது. யாரும் நேரடியா போய் தெரிஞ்சுக்கிறதில்லை. தெரிஞ்சுக்கவும் முடியாது. அத்தனை பேருக்குமே அந்த வாய்ப்பு கண்டிப்பா இருக்காது. இதில் என்னுள் உருவான கருத்துக்களை வெச்சுத்தான் நான் என் வலைப்பூவை எழுத முடியும். அது என் கருத்துதானே தவிர, அதுவே உண்மையாக இருக்கணும்னு அவசியமில்லைன்னு ஆரம்பத்திலேயே ஒரு பதிவுல நான் குறிப்பிட்டிருக்கேன். நான் மட்டுமில்லை, யாருடைய கருத்துமே அவங்களுக்குத்தான் 100 சதவிகிதம் உண்மையாக இருக்க முடியுமே தவிர, எல்லாருக்கும் அல்ல! தங்களுக்குத் தாங்களே நீதிபதியாகிட முடியாது.

சரி, இதுல பின்னூட்டம் இட்டிருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் ஓரிரு வரிகள்ல பதில் சொல்ல விரும்பறேன்.

 
On Feb 13, 2010, 8:25:00 PM , கிருபாநந்தினி said...

ரதியக்கா! நாகரிகமும் கண்ணியமுமான உங்க பின்னூட்டத்துக்கு என் வணக்கம்க்கா! ஆனா, \\பி.கு. உங்களைப்போல் எனக்கு 'ண்ணா, 'க்கா, டமில் ரிவர், என்றெல்லாம் அடுத்தவரை நக்கலாக பேசவராதுங்க.// அண்ணா, அக்காங்கிற வார்த்தையெல்லாம் நக்கலானதாக்கா? இப்பத்தான் புரியுது எனக்கு. ‘டமில் ரிவர்’ங்கிறது கேலித் தொனியில் எழுதின வார்த்தைதான். அதுக்கான காரணத்தைக் கடைசியில சொல்லியிருக்கேன். ஆனா, தமிழ்நதி அக்காவைத் தாக்குற தரக் குறைவான வார்த்தை இல்லையே அது? நாகரிக கேலி கூடச் செய்யக்கூடாதுன்னா எப்படிக்கா?

 
On Feb 13, 2010, 8:44:00 PM , கிருபாநந்தினி said...

சக்தி வருண்! பின்னூட்டத்துக்கு நன்றி! \\உங்களுடைய எழுத்துக்களில் தனி நபர் தாக்குதல் தான் அதிகமாக உள்ளது.// சத்தியமா இல்லீங்ணா! தமிழ்நதியைப் பத்தி எனக்குத் தெரியாது. சில வருஷத்துக்கு முன்னே ஒருதரம் ஆனந்த விகடன்ல அவரோட ஒரு கட்டுரையைப் படிச்சதா ஞாபகம். மத்தபடி, அவரின் எழுத்தைப் படிச்சது சமீபத்துல குமுதத்துல அவரோட மேற்படி கட்டுரையைத்தான். அதனால, தனிப்பட்ட முறையில அவரைத் தாக்கணும்கிற என்கிற எண்ணம் எனக்கு இல்லை. என்னோட சில கருத்துக்களைச் சொல்ற நையாண்டி பாணியில் உங்களுக்கு அப்படித் தோணியிருந்தா, அதுக்காக என்னை மன்னிக்கவும். மத்தபடி, என் பெயரை grace bulluck -னு மாத்துறதுல எனக்கு வருத்தமெல்லாம் இல்லை. ஏன்னா, அது ஒண்ணும் வசைமொழி இல்லையே!

ஆனா, ஒரு திருத்தம். Bulluck ஸ்பெல்லிங் தப்பு. Bullock-னுதான் வரணும். தவிர, நந்தினிங்கிறது பெண் பசு. அதனால, grace cow-னு வேணா வெச்சுக்கலாமா? :)

 
On Feb 13, 2010, 9:15:00 PM , கிருபாநந்தினி said...

+ இந்தப் பதிவை ஆதரிச்சும் எதிர்த்தும் பின்னூட்டம் இட்டிருந்தவங்களோட அத்தனை பேரின் கருத்துக்களையும் இங்கே நான் பதிவு செஞ்சிருக்கேன். என்னை ‘முட்டாள்’னு சொன்ன ரோஷ்மாவின் பின்னூட்டத்தைக்கூட இங்கே பதிவிட்டிருக்கேன். ஆனா, பத்துப் பன்னிரண்டு பேரோட பின்னூட்டங்களை மட்டும் பதிவு செய்யாம ஒதுக்கிட்டேன். அதுக்குக் காரணம், அவங்க என்னைத் தாக்கி ரொம்பக் கடுமையா எழுதியிருந்தது இல்லே; ரொம்ப ஆபாசமா, ரொம்ப வக்கிரமா தங்களோட எதிர்ப்பைத் தெரிவிச்சிருந்ததுதான். இதுவரைக்கும் நான், கெட்ட வார்த்தைகளை ஏதோ படிக்காத பாமரர்கள்தான், மிக அடித்தட்டு மக்கள்தான் பயன்படுத்தி ஒருத்தருக்கொருத்தர் வசைமாரிப் பொழிவாங்கன்னு நினைச்சிருந்தேன். ஆனா, கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பண்பாடு இல்லாம திட்டுறவங்க நல்லாப் படிச்ச, இணைய தளத்தைப் பயன்படுத்திப் பின்னூட்டம் இடத் தெரிஞ்ச அறிவுஜீவிகளிலும் உண்டுங்கிறதைப் புரிய வெச்சுது என்னோட இந்தப் பதிவு!

கருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லலாம்; கடுமையாவும் சொல்லலாம். ரோஷ்மா போல ‘முட்டாள்’னுகூடச் சொல்லலாம். தப்பில்லை. அது கொஞ்சம் கடுமையான விமர்சனம். அவ்வளவுதான்! ஆனா, மட்டரகமான வார்த்தைகளைப் போடுறது எந்த விதத்தில் எதிர்ப்பாகும்னு புரியலை.

ஸாரி! ரொம்ப வருத்தமா இருக்கு!

 
On Feb 13, 2010, 11:43:00 PM , பத்மநாபன் said...

கருத்துக்கு கருத்து சொல்லாமல் , வேறோ ஏதோ ஏதோ சொன்னவர்களை என்ன சொல்வது .... ஜஸ்ட் ஒதுக்கி தூக்கி வீசிட்டு ,
உங்க ஸ்டைல்ல ஒரு நகைச்சுவை பதிவு ஒன்ன போடுங்க .... கூல்...... கூல் ......

 
On Feb 14, 2010, 12:47:00 AM , Anonymous said...

You feel "வருத்தமா இருக்கு" ?

The way you have written has hurt so many. Why dont you look that? When people want to express their hurt feelings, not every one use decent words. However, you better avoid such "nakkal + kindal" writings.

 
On Feb 14, 2010, 1:14:00 AM , Anonymous said...

ஹலோ நந்தினி,

என்னம்மா ஒரே பீலிங் காட்டுற? போ போ போயி புள்ளைகளை நல்லா படிக்க வை.

 
On Feb 15, 2010, 5:56:00 AM , ~~~Romeo~~~ said...

நீங்களும் ரவுடி ஆகிட்டு வரிங்க சகோதிரி..

 
On Feb 15, 2010, 10:43:00 AM , Jose Antoin said...

கிருபா நந்தினி,

நீங்கள் தமிழ்நதி குமுதத்தில் எழுதியதற்கு எதிர்வினையாக உங்கள் ப்ளாகில் எழுதியிருந்ததையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தேன். உங்கள் புரிதலில் உள்ள குறைபாடுகளையும், எழுத்திலுள்ள நாகரீக குறைவையும் பின்னூட்டத்தில் சிலர் சரியாக குறிப்பிட்டிருந்தார்கள். இருப்பினும் நானும் ஒரு சில விசயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஒருவருடைய எழுத்தை பற்றி விமர்சிக்கும் போது அவரை பற்றி விமர்சகர்கள் எழுதியிருப்பதை படிப்பதற்கு முன்பாக அவரின் எழுத்துக்களை படிப்பதுதான் சரியாக இருக்கும். (தமிழ்நதியின் ப்ளாக் www.tamilnathy.blogspot.com) நீங்கள் அதை செய்யாமல் அவரை பற்றிய விமர்சனங்களையே தேடி பிடித்து உங்கள் விவாதத்திற்கு பயன்படுத்தியிருப்பது நீங்கள் முன்முடிவுகளுடன் எழுத விளைந்திருப்பதை காட்டுகிறது.

நீங்கள் குமுதத்திலும் ஆனந்த விகடனிலும் உங்களது எழுத்துக்களை பிரிசுரிக்கமாட்டார்கள் என்ற ஆதங்கத்தை வெளிபடுத்தியிருப்பதிலிருந்து நீங்கள் அந்த பத்திரிகைகளை தொடர்ந்து படிக்கிறீர்கள் என நினக்கிறேன். படிக்கும் பட்சத்தில் நீங்கள் எழுதியிருக்கும் விதம் எந்த அளவுக்கு நாகரீக குறைவாக இருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. இந்த மாதிரி கேவலமான தனி நபர் தாக்குதல்களை பத்திரிகைகள் அனுமதிப்பதில்லை. இனியாவது நாகரீகத்துடன் எழுத முயற்சி செய்யுங்கள்.

எழுதுவதற்கு எழுத எடுத்துகொண்டிருக்கும் விசயங்களை பற்றிய புரிதலும், அவதானிப்பும், படிப்பும் முக்கியமான தேவைகளாகும். அது உங்களுகளுக்கு இயலாத பட்சத்தில் சமையல் குறுப்புகள் எழுதுவதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

 
On Feb 15, 2010, 12:37:00 PM , Raja said...

Yennaku onu matum poriyala..yen yarume seriya yosikamatarnkanu thriyala.. Oru aarasangam yedhukum yendha mudivu oru sararuku matum than nanmai payakum, apadi irukum pothu rendhu nathu aarasangam yedhukum mudivu yepadi irrukumnu sola theva illa..ithuku poi yelurum mati mati aadichikatha koraiya sanda poduringa...

Idhuvarai nadanthadai yaralaiyum matha mudiyadhu, ini yena aakapuruvamaka seiyalamnu discuss manunga...atha veitutu mathi mathi seitha vari pusikiringa...

 
On Feb 15, 2010, 11:26:00 PM , Sakthi Varun said...

மற்றவர்களை பற்றி அவதுராகவும் குதர்க்கமாகவும் எழுதும் உங்களுக்கு கிடைத்த சரியான எதிர்வினை தான் உங்களுக்கு வந்த அவதுறுகளும். நீங்கள் செய்தது சரி என்றால் அவர்கள் செய்ததும் சரிதான். உங்களுக்கு தேர்ந்த மொழியில் நீங்கள் செய்த குதர்க்கத்தை அவர்கள் தங்கள் மொழியில் செய்து இருக்க்றீர்கள். எவ்வளவு ஆனாலும் உங்கள் தவறு உங்களுக்கு தெரிந்ததா? உங்களுடைய பார்வையை மேலும் மேம்படுத்துங்கள்.

 
On Feb 17, 2010, 2:18:00 PM , பேநா மூடி said...

உங்க கருத்துல நிறைய முரண்பாடுகள் உண்டு.., நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பிராபகரன் உயிருடன் இருக்கிறார் என்று கிராபிக்ஸ் படங்கள் போட்டது வியாபார எண்ணம் கொண்ட கயமைதனமே...,

மட்டமான வார்த்தைகளால் பின்னோட்டம் இட்டவர்களுக்கு தெரிந்தது அவ்வள்வு தான்.., இணையம் பயன்படுத்துவர்கள் எல்லாம் அறிவுஜீவிகள் அல்ல

 
On Feb 18, 2010, 2:08:00 AM , செந்தழல் ரவி said...

கிருபாபூந்தினி..

உங்களுக்கு புருசன் இருக்கிறார். புள்ளை இருக்கிறது. அதை பார்ப்பதை விட்டுவிட்டு முட்டாள்தனமாக மண்டையில் ஒரு மசாலாவும் இல்லாமல் எழுதுவது ஏன் ? எதாவது கவிதை கதை என்று முயற்சி செய்யலாமே ?

ஷாக்கிங்கா இருக்கா ?

உங்களுக்கு வரலாறும் தெரியவில்லை. பொது அறிவும் இல்லை. நாகரீகமும் தெரியவில்லை. சரளமாக எழுத மட்டும் வருகிறது. நீங்கள் சமையல் குறிப்பு பற்றி வலைப்பதிவு ஆரம்பித்து எழுதலாமே ? அதை விட்டுவிட்டு, ஒரு ஈழத்து எழுத்தாளரின் உண்மையான வலியை கிண்டல் செய்ய புறப்பட்டது ஏன் ? உங்களுக்கு மனதளவில் ஏதோ கோளாறு. நீங்கள் டாக்டர் ருத்ரனிடம் செல்லலாமே ? திருமதி கிருபாபூந்தினி. நான் நீங்கள் செய்தமாதிரி டமில்ரிவர் மாதிரி உங்கள் பெயரை தான் திருத்தி அழைக்கிறேன். கண்டுக்கவேண்டாம். கிருபாபூந்தினி. ஷோபா சக்தி யார் என்றே தெரியாத உங்களுக்கு ஈழத்து வரலாறு தெரியும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ, அதே போல ஒருவர் எழுதும் எழுத்தை கிரகித்து அதில் சொல்லப்பட்டுள்ளதை எடுத்து தெளிவீர்கள் என்று நம்புவதும்.

படித்துறை என்ற பெயரில் வேறு ஒருவர் பதிவு வைத்துள்ளாரே. உங்களுக்கு முன் ஆரம்பித்தது. நீங்கள் ஏன் அடுத்தவரின் பெயரை திருடினீர்கள் என்று எல்லாம் நான் கேட்கமாட்டேன். to be cont...

 
On Feb 18, 2010, 2:44:00 PM , உயிரோடை said...

//அதெப்படிங்க உங்களைப்போன்ற சில இந்தியர்களால் கொஞ்சம் கூட கூசாமல் இப்படி பேசமுடிகிறது? அமைதிப்படை என்ற பெயரில் வந்து எங்களை கொடுமைப்படுத்தினீர்கள், கற்பழித்தீர்கள், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தீர்கள்//

ர‌தி/த‌மிழ்ந‌தி கிருபாந‌ந்தினியின் முந்தைய‌ ப‌திவில் என்னுடைய‌ பின்னூட்ட‌த்தை ப‌டித்துவிட்டு வ‌ந்து இந்த‌ பின்னூட்ட‌த்தை ப‌டிக்க‌வும். நீங்க‌ள் செய்வ‌து த‌வ‌று ர‌தி/த‌மிழ்ந‌தி.

கிருபாந‌ந்தினி உங்க‌ளுடைய‌ ப‌ழைய‌ ப‌திவுக்கு இன்று நான் இட்ட‌ பின்னூட‌ம் நீங்க‌ள் த‌ற்ச‌மய‌ம் இட்டிருக்கும் ப‌திவையும் த‌மிழ்ந‌தியின்/ர‌தியின் பின்னூட்ட‌த்தை பார்க்கும் முன் இட‌ப்ப‌ட்ட‌து வ‌ருந்துகிறேன்.

த‌மிழ்ந‌தி ம‌ற்றும் ஈழ‌ ச‌கோத‌ரிக‌ள் அனைவ‌ர்க்கும் உங்க‌ளை நாங்க‌ள் ந‌ட்பாக‌ தான் பார்க்கின்றோம் நீங்க‌ள் தாம் அதை உண‌ராம‌ல் வேறு சில‌ர் செய்த‌ த‌வ‌றுக்கு எங்க‌ளை ப‌ழிக்கின்றீர்க‌ள். மேலும் எங்க‌ளில் ஒருவ‌ராக‌ நீங்க‌ள் நினைப்ப‌தில்லை. அது கூட‌ தேவ‌லை எங்க‌ளை எதிரி போல‌ பாவிக்காதீர்க‌ள்.

ஈழ‌ம் விட்டு வ‌ந்த‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் இன‌த்துக்காக‌ இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு செய்யும் மாபெரும் உத‌வியினும் இந்தியாவும் இந்திய‌ ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளும் அதிக‌ம் தான் செய்கின்றோம். இன்னும் செய்வோம். அதை நீங்க‌ள் உண‌ர‌வில்லை என்றாலும் ச‌ரி இப்ப‌டி எங்க‌ளை சாடி வ‌ருத்த‌ப்ப‌டுத்தீர்க‌ள்.

 
On Feb 18, 2010, 4:13:00 PM , செந்தழல் ரவி said...

முட்டாள்

http://tvpravi.blogspot.com/2010/02/blog-post_18.html

 
On Feb 18, 2010, 6:23:00 PM , Anonymous said...

அவ்வளவு ஈழத்தமிழரோட வலிகளையும், அவங்க விடுதலைப் போராட்டத்தையும் வக்கிரமா எழுதிருக்கீங்க. மனித மாண்புக்கான மரியாதை கூட உங்க கிட்ட கிடையாது. அத விடவா உங்களுக்கு யாரும் வக்கிரமா பின்னூட்டம் போட்டிருக்க முடியும்?

ணா, க்கா போட்டு ஏளனத்தொனியில் கருத்து பதிந்து விட்டு அது எள்ளலான்னு வேற கேட்குறீங்க!
விஷயமே என்னனு புரியாம, ஈழப் பிரச்சினையே புரியாம வெறும் கோபாவேசத்துல இந்திய தேசிய, பார்ப்பனியக் கண்ணோட்டத்துல எழுதப் பட்ட ஒரு சிறுபுள்ளத் தனமான தனிமனிதத் தாக்குதல் பதிவு!

 
On Feb 18, 2010, 7:17:00 PM , முகிலன் said...

ஈழப் பிரச்சனை, விடுதலைப் புலிகளின் வரலாறு, ராஜீவ் கொலை போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களைப் பற்றி உங்களுக்கு இருப்பது அரைவேக்காட்டுத்தனமான புரிதல் எனபதை நீங்கள் இங்கே எடுத்திருக்கும் வாந்தி காட்டுகிறது.

 
On Feb 18, 2010, 7:23:00 PM , Anonymous said...

//இந்தக் கருத்துக்கள் பலப் பல ஊடகங்கள் மூலமாக அவரவர்க்கு வந்து சேரும் தகவல்கள் மூலம் உருவாவது. யாரும் நேரடியா போய் தெரிஞ்சுக்கிறதில்லை. தெரிஞ்சுக்கவும் முடியாது. அத்தனை பேருக்குமே அந்த வாய்ப்பு கண்டிப்பா இருக்காது.//

You may get another perspective reading the following articles.

ராஜீவ் காந்தி ஈழ ஒப்பந்த தொடக்க ரகஸ்யங்கள்

பிரபாகரன் ராஜீவ் காந்தி சந்தித்த வேளையில்

தூங்காத ரா(RAW)வுகள்

ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தொடக்க ரகஸ்யங்கள்

இந்திய அமைதிப்படை(IPKF) வேரும் விழுதுகளும்

பிரபாகரன் பொதுக்கூட்டம்

அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும்

காந்திய பாதையில் அழிவுப்படை

தொடங்கியவரும் இழந்தவர்களும் (IPKF)

பேனா போர் கொஞ்சம் அவலம்

அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை

 
On Feb 19, 2010, 4:45:00 AM , Anonymous said...

தினமும் உதிரும் பூக்கள்………
அவள் ஒரு 21 வயது நிரம்பிய இளம் தமிழ் நங்கை.
“மீன் பாடும் தேன் நாடு” என அழைக்கப்படும். ஈழத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்தவள்.
அழகான தேவதை ஒன்றை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா……..?
அப்படியேயிருப்பாள் அவள். மிகவும் வசதியான குடும்பத்தின் அழகான இராஜகுமாரி அவள்.

ஒரு நாள் (வந்தே இருக்கக் கூடாத ஒரு நாள்)……….
ஒரு ஆசிரியர் நேர்முகப் பரீட்சைக்கு கொழும்புக்கு சென்று,
மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பஸ் வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
பஸ் மட்டக்களப்பிற்கு 30 கிலோ மீற்றர் தூரத்தில் வரும்போது இராணுவத்தால் மறிக்கப்படுகிறது.
திமு திமுவென பஸ்ஸில் ஏறியது இராணுவம்.

அதில் பயனித்த 17 இளைஞர்களையும், 3 யுவதிகளையும் துப்பாக்கி முனையில் கீழே இறக்குகின்றனர்.
அதில் அவளும் அடக்கம். அனைவருக்கும் பயத்தில், இதயத்தில் உள்ள இரத்தமே உறைகிறது.
இரணுவம் என்றாலே அந்தக் கொடூரம் அவர்களுக்கு எப்படி வருகிறதோ தெரியவில்லை.
அவர்களின் முகங்களில் கொலை வெறி தாண்டவமாடுகிறது.
ஒவ்வொருவரிடமும் புலிகளுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் உண்டா எனக் கேட்கப் படுகிறது.
அனைவருமே இல்லை என்றே பதிலளிக்கின்றனர்.
ஆனாலும் அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப் படுகின்றனர்.
நடக்கப் போவது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.
பயத்தில் உடல் நடுங்குகிறது. ஏதேதோ நினவுகள் வந்து போகின்றன.

அதிகாரியின் ஒரு கண்ணசைவைத் தொடர்ந்து,
திடீரென ஒரு இயந்திரத் துப்பாக்கி சீறிக்கொண்டு குண்டுகளைத் துப்புகிறது.
வரிசையாக எங்கள் கண்மணிகள் தரையில் சாய்கிறார்கள்.
குருதிக்கடல் தாய் மண்ணை நோக்கி ஓடி அதனுடன் கலக்கிறது…….

இளம் குருத்துகளை வீழ்த்திய இராணுவம் கொக்கரித்தபடி நகர்கிறது.
எவ்வளவு கனவுகள், எவ்வளவு ஆசைகள், எவ்வளவு காதல்கள்.
எல்லாமே…..! எல்லாமே……!! குருதிக் குளத்தில் மிதக்கிறது.
மொத்தமாக இருபது உயிர்கள்.

தமிழனின் உயிருக்கு ஏன் மதிப்பில்லாமல் போயிற்று?
கொலை செய்யும் அதிகாரத்தை யார் கொடுத்தார் இவர்களுக்கு?
கடவுள் கூட அந்தக் கொடியவர்கள் பக்கம்தானா?
என்ன நியதி இது?

அவள்……., அந்தத் தேவதையின் வாயிலிருந்து கடைசியாக வந்த வார்த்தைகள்,
” ஐயோ…..! என் அடி வயிறு வலிக்கிறதே…….!! “
அந்த வார்த்தைகளுடன் அவள் உயிர் காற்றில் கலக்கிறது…………….

ஆ…..இரண்டு விசயங்களை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன்………..
1, அந்தத் தேவதை யாருமல்ல, எனது சகோதரியின் இரண்டாவது மகள். என் ஆசை மருமகள்.
2. அந்த இராணுவம் இலங்கை இராணுவமல்ல.

அந்த உயிர்ப் பூவிற்கு, என் வலைப்பூவைக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்…………

http://leenaroy.wordpress.com/

 
On Feb 19, 2010, 9:14:00 PM , டவுசர் பாண்டி... said...

வலிகள் பொதுவானவை....பாரபட்சம் பார்ப்பதில்லை..

வலிகள் மறைந்து போகும்....வடுக்கள்?

வாழ்த்துகள் சகோதரி!

 
On Feb 19, 2010, 9:51:00 PM , V R said...

உங்களை சாடும் பினுடங்களை அனுமதிதத்துக்கு பாராட்டுகள். உங்கள் பார்வை சரியானால் நல்லது.

 
On Feb 19, 2010, 10:35:00 PM , Karthi said...

தமிழ்நதியைத் தாக்கி வலைப்பதிவு ஒன்றில் பொறுப்பற்றதனமாக எழுதப்பட்டிருந்ததைப் படித்தபோதுதான், வலைப்பதிவு சுதந்திரம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. எழுதியிருப்பவரும் ஒரு பெண்தான். கிண்டல் என்கிற பெயரில் ஈழக் கொலைகளையும், தமிழ்நதியின் பெயரையும் அருவருக்கத் தக்க பொருள்படும்படி அவர் எழுதியிருப்பது அபத்தம் மட்டமல்ல ஆபத்தானதாகவும் தெரிகிறது. அதுவும் தமிழ்நதியின் படத்தையெல்லாம் போட்டு தமிழக புலனாய்வுப் பத்திரிகைகளை மிஞ்சிவிட்டார்.

தமிழ்நதியை விமர்சிக்கக்கூடிய அளவுக்கு அந்தப் பெண் பதிவருக்கு போதிய அனுபவம் இல்லையென்பது அவரது எழுத்துக்களிலேயே தெரிந்தது. அவர் குழந்தைத் தனமாக அறிமையாமையில்தான் இப்படி எழுதினார் என்று எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், எப்படியாவது புகழ்பெற வேண்டும் என்கிற ஆசையையும் யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்கிற துடுக்குத் தனத்தையும் ஊக்கப்படுத்த முடியாது. இதைப் பார்க்கும்போது, ஒரு விவகாரம் தொடர்பாக ஓரளவுக்காவது தெரியாதவரை அதைப் பற்றி எழுதுவது தவறு என்கிற அடிப்படையைக் கூட நமது வலைப் பதிவர்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லையே என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

ஒரு கண்ணியமான பத்திரிகையாளனுக்குரிய எல்லா வரையறைகளும் நமக்கும் பொருந்தும் என்பதை வலைப்பதிவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறாகச் செய்தியையும் கட்டுரையையும் வழங்கினால் பலருக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்கிற பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும். புகழ்பெற்றவர்கள் தங்களுக்குள் போலியாகச் சண்டையிட்டுக் கொண்டு புகழை அதிகரித்துக் கொள்வதும், வளரும் பதிவர்கள் பலர், புகழ் பெற்றவரைத் தாக்கி அதன் மூலம் புகழ் பெறுவதும் வலைப்பதிவுகளில் அதிகரித்து வரும் நிலையில் இதெல்லாம் சாத்தியம்தானா என்கிற கவலை நியாயமானதுதானே?

 
On Feb 20, 2010, 8:34:00 AM , வருண் said...

திருமதி. கிருபாநந்தினி,

உங்க எழுத்து ரொம்ப நல்லாயிருக்கு. நல்ல நடை. உங்களுக்கு "sarcasm" நல்லா எழுத்தோட கலந்து வருது.

இந்த வலையுலகில் இதுபோல் வம்பில் மாட்டிக் கொள்வதை தவிர்க்க முடியாது. Take it +vely as a good lesson.

நீங்க தமிழ்நதி அவர்களையும் அவர்கள் கருத்தை விமர்சித்தாலும், ஈழத்தமிழர்கள் மேலே உண்மையான அன்பும், அவர்கள் வலியையும் வேதனையையும் உணர்ந்தாலும், அவர்களுக்காக கண்ணீர் சிந்தினாலும், உங்கள் கருதுக்களை தவறாக பலரும் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். இதில் நீங்க மட்டுமல்ல யாருமே விதிவிலக்கல்ல. அதனால் நடந்ததை ஒரு நல்ல பாடமாக எழுத்துக்கொண்டு தொடர்ந்து எழுதுங்கள்.

நாகரிகமில்லாமல் இடப்படும் பின்னூட்டங்களை அகற்றிவிடுங்கள். பொதுவா ஈழத்தமிழர்கள் நாகரிகமாகத்தான் விவாதிப்பார்கள். நம்ம தமிழ்நாட்டு மக்கள்ல ஒரு சிலதுகள்தான் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி பின்னூட்டமிடுங்கள்.

Let us learn from your mistakes and refine our thoughts and bring out best out of it in the future!

Good luck! :-)

 
On Feb 20, 2010, 10:23:00 AM , Immunology said...

செந்தழல் ரவி யின் லிங்க் முலம் உங்கள் ப்ளாக் படித்தேன். உங்கள் எழுத்தில் நாகரீகம் இல்லா விட்டாலும், உங்களுக்கு எதிரான பின்னுட்டங்களை அனுமதித்த கருத்து சுதந்திரம் மகிழ்சி அளிக்கிறது. ரவி யின் எதிர் வினை படித்தீர்களா? அது குறித்து உங்கள் கருத்து?

http://tvpravi.blogspot.com/2010/02/blog-post_18.html

 
On Feb 20, 2010, 10:52:00 AM , V R said...

தனிமனிதர்களை கொச்சைப்படுத்தும் உங்கள் இச்சை தீர்ந்ததா?

 
On Feb 20, 2010, 2:17:00 PM , Meenakshi said...

நிலவை பார்த்து குரைக்கும் நாய்,

இதெல்லாம் ஒரு பொழப்பா? நான்சென்ஸ்.

 
On Feb 20, 2010, 2:51:00 PM , Anonymous said...

நான்சென்ஸ்.

மலிவான விளம்பரம் தேடும் அற்ப மனிதர்கள். உங்களை போன்ற ஈன பிறவிகளை எத்தனை பாரதி வந்தாலும் திருத்த முடியாது.

இதுதான் உங்கள் கருத்து சுதந்திரம் என்றால் நீங்களும் இந்த நாடும் நாசமாய்ப் போகட்டும்.

 
On Feb 21, 2010, 1:07:00 PM , Anonymous said...

அது என்னடா லீனாராய் பக்கத்திலே இருந்து பார்த்த மாதிரி எழுதியிருக்காரு. நீங்க சொல்றத ஒத்துகிட்டாதான் நாங்க இனவுணர்வு உள்ளவுங்க இல்லேனா சரியான பார்வை இல்லாதவங்க

போங்கடா கருத்து குருடனுங்களா......

 
On Feb 22, 2010, 11:39:00 PM , Anonymous said...

Mudevi

 
On Feb 23, 2010, 12:16:00 PM , ஆதி மனிதன் said...

என்னாசுக்கா? தமிழ் நதி வெள்ளத்துல அடிச்சுட்டு போயிட்டீங்களா? இல்ல ஆட்டோ கீட்டோ அனுப்பிச்சுட்டாங்களா?

 
On Feb 23, 2010, 11:11:00 PM , Anonymous said...

Please see this link:

http://tamilnathy.blogspot.com/2010/02/blog-post_23.html

I hope you may understand your foolishness by now.

 
On Feb 23, 2010, 11:53:00 PM , Anonymous said...

ஒரு பார்பனியிடம் இருந்து இதை விட வேறு என்ன அவதுறுக்களை எதிர்பார்க்க முடியும்? எழுத்தில் எண்ணங்களில் நச்சை பரப்பும் பயங்கரவாதம்.

 
On Feb 24, 2010, 12:23:00 AM , Anonymous said...

மலக்காற்று

 
On Feb 24, 2010, 1:39:00 AM , அரைகிறுக்கன் said...

உங்களது மற்ற படைப்புகளையும் பார்த்தேன் பெரியாரை மதிப்பவராய் இருப்பதில் மகிழ்ச்சி
மற்றபடி உங்களுக்கு ஒரே வேண்டுகோள்.

பாமரன் என்றொரு நபர் உங்கள் ஊர்காரர்தான். அவரது பாமரன் பக்கம் சென்று கீழ்கண்ட பதிவுகளை படித்துப் பாருங்கள்.

”சிறிமாவோ மகளே வருக….. சீரான ஆட்சி தருக”

சோபா சக்தி

புதுப்புது’அர்த்தங்கள்’

விடுதலைப் போராட்டம் குறித்தும் புலம் பெயர்தல் பற்றியும் படித்தால் மட்டும் புரியாது. ஆனால் ஒரு தெளிவாவது கிடைக்கப்பெறும். தவறுகள் இல்லாத மனிதனைப் போலவே அவை இல்லாத போராட்டங்களும் இல்லை.

மற்றபடி உங்களை குறை கூற விரும்பவில்லை.பெரியாரை தெரிந்த நீங்கள் விஷயம் தெரியாதவராய் இருக்க முடியாது. போதுமான புரிதல் இல்லாமல் சில விசயங்கள் நம்மிடம் தோன்றுவதுண்டு. ஆனால் வீண் பிடிவாதத்துடன் தவறான பாதையில் பயணிக்க வேண்டாம்.

ராஜீவ் கொலையா? ராஜீவ் கொலை என்பது சரியா தவறா என்பது அல்ல விசயம். ஒரு உயிருக்கு விலை பல்லாயிரம் உயிர்களா??

நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களை துப்பாக்கி தூக்கச் செய்தது எது?

வெறும் இரு பஞ்சாபிகளை எங்கோ வியன்னாவில் கொன்றதுக்கு இங்கு பஞ்சாபில் என்ன நடந்தது. ஆனால் நம்மூரில் நடந்தது என்ன?


இன்னும் தெளிவாய்ப் படித்து பின் எழுதவும்.

மற்றபடி நீங்கள் டமிழ் ரிவர் மற்றும் காப்பிக் கோப்பையுடன் புகைப்படம் இவையெல்லாம் என்ன. நீங்கள் அவரை தனிப்பட்ட வன்மைத்துடம் பார்க்க வேண்டாம் உங்கள் கருத்துக்களுடன் வாருங்கள்.

 
On Feb 24, 2010, 9:53:00 AM , Sreeni said...

Who gave the rights to you to write whatever you think without rationality? If you are a bramin, does it mean that you can write any nonsense into sense? Please explain.

 
On Feb 25, 2010, 8:45:00 AM , Uma said...

உங்களின் கேவலமான மொழி நடையும், குருரமான கருத்துகளும், தனி நபர் வெறுப்பு உமிழ்தலும் உங்களின் மன முதிர்ச்சி இல்லாமையை தெளிவாக காட்டுகிறது. அடிப்படை விசய ஞானம் இல்லாமல் வெறுப்பை தெளிக்காதிர்கள். உங்களுக்கு சரியான புரிதல் உணர்வு வந்தால் மகிழ்சிஅடைவேன். நன்றி.

 
On Feb 25, 2010, 9:54:00 AM , Vegi said...

தொடர்புடைய இரண்டு கட்டுரைகளையும் படித்தேன. வாயில் கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் வந்தது.

எனக்கு என்னவோ நீங்கள் ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது எனதோணுது.

 
On Feb 25, 2010, 7:19:00 PM , மனிதன் said...

அரைகிறுக்கன் said........... / தவறுகள் இல்லாத மனிதனைப் போலவே அவை இல்லாத போராட்டங்களும் இல்லை.....பெரியாரை தெரிந்த நீங்கள் விஷயம் தெரியாதவராய் இருக்க முடியாது. போதுமான புரிதல் இல்லாமல் சில விசயங்கள் நம்மிடம் தோன்றுவதுண்டு. ஆனால் வீண் பிடிவாதத்துடன் தவறான பாதையில் பயணிக்க வேண்டாம்.....

மிகவும் சரி. உங்களிடம் இருந்து ஆக்கபுர்வமான பதிவுகளை எதிர்பார்க்கிறோம். உங்களை சாடும் அனைத்து விமர்சனங்களிலும் ஒன்று தெரிகிறது - யாரும் உங்கள் எழுத்து திறனை குறை கூற வில்லை. சரியான பாதையில் உங்கள் படைப்புகளை உருவாக்குங்கள். நன்றி.

 
On Feb 25, 2010, 7:31:00 PM , Immunology said...

ஒரு வழியா ரெண்டு வாரத்தை இதுலே ஓட்டியாச்சு. இனி மேலே ஆகுற காரியத்தை பாருங்க

 
On Feb 25, 2010, 10:25:00 PM , Anonymous said...

ஆமா, ரொம்ப பின்னுட்டத்தை அமுகிட்டிங்கலாமே? அதை எல்லாம் போடுறது? எப்போ வந்து இருக்கும் பின்னுட்டத்தை விட ஒன்னும் மோசமா இருக்காது.

 
On Feb 26, 2010, 8:50:00 AM , ஷாரேப் said...

ஏன் நங்கள் போட்ட பின்னுட்டங்களை போடவில்லை? இப்போ வந்து இருக்கும் பின்னுட்டத்தை விட எங்கள் கருத்து நியாயமாகவே இருக்கும். அமுக்கிய பின்னுட்டங்கள்வருமா?

 
On Feb 26, 2010, 10:32:00 PM , Veni said...

வணக்கம்.

இவ்வளவு நடந்தும், நீங்கள் ஏன் உங்களின் தவறான வார்த்தை பிரயோகங்களுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை? தமிழ் நதியும் சரி ரதியும் சரி, உங்கள் கருந்தின் மேல் தான் விமர்சனம் வைத்தார்களே அன்றி கொடுரமான வார்த்தைகளால் தக்கவில்லை. தமிழ் நதியின் ப்ளோகில் அவர்களின் பின்னுட்டங்களை படித்தீர்களா? அவர்களின் வார்த்தைகளில் இருந்த முதிர்சியையும், கனிவையும் கவனித்தீர்களா?

உங்களின் இரண்டு பதிவுகளும் என்னை போன்ற பலரை மன உளைச்சல் கொள்ள செய்தன. இனிமேல் எழுதும் பதிவுகளை தயவு செய்து பொறுப்பு உணர்வோடு எழுதுங்கள். புண்ணியமா போகும்.

 
On Feb 27, 2010, 7:10:00 AM , Anonymous said...

ரெண்டு வரி பின்னுடம் போட்டா, நீ எடுத்த வாந்தி எல்லாம் சரியாகிவிடுமா?

 
On Feb 27, 2010, 12:19:00 PM , Sreeni said...

அடுத்த அருவெறுப்பு கட்டுரை எங்கே? உங்களை போன்ற philistine வாதிகள் இத்தனை பின்னுட்டங்களை சும்மாவா விடப் போகிறீர்கள்?

அடுத்த ஒரு Gauche பதிவுக்கு நீங்கள் ரெடி என்றால் அதிரடிக்கு நாங்களும் ரெடி.

வாம்ம்மா மின்னல்.........

 
On Feb 27, 2010, 12:30:00 PM , Mani said...

narrow minded, very derogating and unacceptable writings. please stop your nonsense.

 
On Mar 16, 2010, 1:00:00 AM , கால்கரி சிவா said...

சகோதரி,

தமிழ் வலைப்பதிவுகள் ஒரு ஆரோக்யமான இடமல்ல. இந்திய எதிர்ப்பாளர்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் நிறைந்த இடம். கவனம் தேவை.

 
On Mar 30, 2010, 9:26:00 AM , Anonymous said...

Do u think u have won by opposing poetess ThamizhNathi...........
You dont know the pain of the murder of one's sister or brother,because all your family is safe here,You are not sexually abused by any one...thats why you oppose sister ThamizhNathi...
If your Rajiv is a great soul means are not our Elam souls a soul...Stop your great writings Ms.KirubhaNathi.....
Thats a great thing to all of us