Author: கிருபாநந்தினி
•Sunday, November 29, 2009
புதிர் 1:
சின், த்ரிஷா, ஸ்ரேயா மூணு பேரும் ஒரு ‘பப்’ல... - வேணாம், கோவிச்சுப்பாங்க; - ஒரு காபி ஷாப்ல யதேச்சையா ஒண்ணா சந்திச்சாங்க.

நடிகைகள் மூணு பேரு ஒண்ணாச் சந்திச்சா கேக்கணுமா... என்னென்னவோ அரட்டைகள்!

பேச்சு நடுவுல திடீர்னு ஸ்ரேயா சொன்னாங்க... “ஹாய்! ஒரு விஷயம் கவனிச்சீங்களா? நாம மூணு பேரும் இப்ப நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் மூணுமே கிராமத்து சப்ஜெக்ட். நம்ம கேரக்டர் பேரெல்லாமே பச்சையம்மா, சிவப்பி, நீலான்னு வேடிக்கையா, விநோதமா இருக்கு. கேரக்டர் பேர்ல கலர்கள் இருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதே கலர் டிரெஸ்களைத்தான் நாம இப்ப போட்டுக்கிட்டிருக்கோம்!”

மத்த ரெண்டு பேரும் இதை அப்பத்தான் கவனிச்சு, “அட, ஆமால்ல?”னாங்க.

“இன்னொண்ணையும் கவனிங்க. நாம யாரும் நம்ம கேரக்டர் பேர்ல இருக்கிற அதே கலர் டிரெஸ்ஸைப் போட்டுக்கலை. மாத்திப் போட்டுக்கிட்டிருக்கோம்!”

ஸ்ரேயா இப்படிச் சொன்னதும், “ஆமா ஸ்ரேயா! இப்பத்தான் நாங்களே இதைக் கவனிக்கிறோம். நீ சொல்றது கரெக்டுதான்! உனக்கு நல்ல மூளைடீ! உன் கிட்ட நல்ல ஆப்சர்வேஷன் பவர் இருக்கு!”ன்னாங்க பச்சையம்மாவா நடிச்சுட்டிருக்கிற நடிகை.

சரி, இப்ப நீங்க சொல்லுங்க... எந்தெந்த நடிகை என்னென்ன கேரக்டர்ல நடிச்சுட்டிருக்காங்க?


புதிர்
2:வைகைப் புயல் வடிவேலுவும், சின்னக் கலைவாணர் விவேக்கும் வெவ்வேறு ஊர்கள்லேருந்து சைக்கிள்ல கிளம்புறாங்க. ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்கிற தூரம் சரியா 20 கி.மீ. ரெண்டு ஊருக்கும் நடுவுல நேர்க் கோடு போட்டதுபோல தார் ரோடு. ரெண்டு பேரும் எதிரெதிர் திசையில, அதாவது ஒருத்தரை நோக்கி ஒருத்தர் அந்தத் தார் ரோடுல சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்துட்டிருக்காங்க. ரெண்டு பேருமே ஒரே நேரத்துல கிளம்பி, சரியா 10 கி.மீ. வேகத்துலதான் சைக்கிளை ஓட்டறாங்க.

அப்ப ஒரு பட்டாம்பூச்சி என்னா பண்ணிச்சு தெரியுமா? வடிவேலு கெளம்புறதுக்கு முன்னாடி அவரோட சைக்கிள் ஹேண்ட்பார்ல உட்கார்ந்திருந்த அது, அவர் சைக்கிள் மெதிக்க ஆரம்பிச்சதுமே பறக்க ஆரம்பிச்சு, எதிரே வந்துட்டிருந்த விவேக்கை நோக்கிப் போச்சு! அவரைத் தொட்டதுமே மறுபடி எதிர்த் திசையில திரும்பிப் பறந்து, இங்கே வந்துட்டிருந்த வடிவேலுவைத் தொட்டுச்சு. உடனே மறுபடி திரும்பிப் பறந்து விவேக்கை நோக்கிப் போய், அவரைத் தொட்டுச்சு. கடைசி வரைக்கும் அது ஒரே சீரான வேகத்துலதான் (மணிக்கு 15 கி.மீ.) பறந்துச்சு.

இப்படியே அந்தப் பட்டாம்பூச்சி வடிவேலுவும் விவேக்கும் மீட் பண்ற வரைக்கும் மாறி மாறிப் பறந்துட்டிருந்தது. அப்படின்னா, அது மொத்தம் எத்தனைக் கிலோ மீட்டர் தூரம் பறந்திருக்கும்?


து போல நிறைய புதிர்கள் உள்ள ஒரு புஸ்தகம் என் கிட்டே இருக்கு. அதுல எனக்குப் பிடிச்ச, சுலபமா விடை கண்டுபிடிக்கக்கூடிய புதிர்களைத்தான் இங்கே வரிகளை வேற மாதிரி புதுசா மாத்திக் கொடுத்திருக்கேன். கொஞ்சம் யோசிச்சீங்கன்னா, ரெண்டு புதிர்களுக்குமே நீங்க ரொம்ப ஈஸியா விடை சொல்லிடலாம். அடுத்த பதிவு வரைக்கும் காத்திருங்க. விடை சொல்றேன்.

அதுவரைக்கும் யோசிங்க... யோசிங்க... யோசிச்சுக்கிட்டே இருங்க!

|
This entry was posted on Sunday, November 29, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On Nov 29, 2009, 10:30:00 PM , பரிசல்காரன் said...

பின்றீங்க நந்தினி!

வலையுலகைக் கலக்க வாழ்த்துகள்!!

 
On Nov 29, 2009, 11:10:00 PM , பின்னோக்கி said...

இது ஆவுறதில்லை. யோசிக்கனும்னா கஸ்டம். மூளை சூடாகிடும். அப்பீட்டு. பிறகு வந்து விடை பார்த்துக்கொள்கிறேன் :)

 
On Nov 30, 2009, 3:17:00 AM , மதி said...

பொதுவா ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம் இல்ல, புலியாக மாறிடுவோம் (அதாகப்பட்டதாவது பாய்வதற்காக என்று சொல்லிக் கொண்டு பதுங்கிடுவோம்).
ஆனா இதில கலர் கலரா அசின், திரிஷா, ஸ்ரேயா எல்லாம் வர்ரதால கோதாவில எறங்கறதா முடிவு பண்ணியாச்சு.
1. அசின் - சிவப்பி, திரிஷா - பச்சையம்மா, ஸ்ரேயா- நீலா
2. 15 கி.மீ
குத்தம் குறை இருந்தா அதுக்கு மட்டும் குறைத்துக் கொண்டு பொற்காசுகளை..... அட! பரிசு ஒன்னும் இல்லயா? ஆகா, மூளைய கசக்கியது வேஸ்டா போச்சே..

 
On Nov 30, 2009, 11:26:00 AM , creativemani said...

கஷ்டமா ஏதும் கேப்பிங்கன்னு பார்த்தா... ஈசியா கேக்குறீங்களே... (ரெண்டுத்துக்கும் விடை தெரியல.. அவ்வ்வ்வ்.....)

 
On Nov 30, 2009, 11:58:00 AM , SenthilMohan K Appaji said...

பள்ளிகூடத்திலேயே எனக்கும் கணிதத்திற்கும் ஆவாது. இங்கேயுமா? No.

 
On Nov 30, 2009, 8:05:00 PM , பரிசல்காரன் said...

ஆஹா ஒஹோ...

(கொடுத்த வாக்கை காப்பாத்தீட்டேனா?)

 
On Dec 1, 2009, 10:52:00 AM , Romeoboy said...

1 + 1 = ?? என்ன ?
2 + 2 = ?? என்ன ?

இந்த மாதிரி கேளுங்க சூப்பரா பதில் சொல்லுறேன். அத விட்டு என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.

 
On Dec 2, 2009, 7:04:00 PM , கிருபாநந்தினி said...

பரிசல்காரன் என்றால் அஞ்ஞானத்தைக் கடக்க உதவுபவர்னு ஒரு அர்த்தம் ஆன்மிகரீதியா சொல்வாங்க. உங்க வாழ்த்தும் பாராட்டும் என்னை இந்த வலைதளத்தை நீந்திக் கடக்க உதவும்னு நம்புறேன்! தேங்க்ஸ்ங்ணா!

 
On Dec 2, 2009, 7:07:00 PM , கிருபாநந்தினி said...

அன்புடன் மணிகண்டன், [உங்களுக்கு வெறுப்பாவே பதில் எழுத முடியாதுபோல! :)] கஷ்டமா கேட்டிருந்தா ஈஸியா பதில் சொல்லியிருப்பீங்க இல்லியா? புரியுது!

 
On Dec 2, 2009, 7:08:00 PM , கிருபாநந்தினி said...

செ.மோ.கே.அப்பாஜி! அஸின், த்ரிஷா, ஸ்ரேயா புதிர்ல என்னங்க கணக்கு இருக்கு?

 
On Dec 2, 2009, 7:10:00 PM , கிருபாநந்தினி said...

மதி! பேரைக் காப்பாத்திக்கிட்டீங்க. சரியான விடைதான் ரெண்டுமே! ஆனா, கணக்குல விடை எழுதினா பத்தாது. வழிமுறை அவசியம்!

 
On Dec 2, 2009, 7:11:00 PM , கிருபாநந்தினி said...

பின்னோக்கி! இப்படிப் பின்னோக்கி ஓடலாமா? :))

 
On Dec 2, 2009, 7:12:00 PM , கிருபாநந்தினி said...

பரிசல்! டாங்ஸுங்ணா... டாங்ஸுங்ணா... டாங்ஸுங்ணா! அப்படியே உங்களுக்குத் தெரிஞ்சவுங்க அறிஞ்சவுங்ககிட்ட நம்ம பெருமையைக் கொஞ்சம் அவுத்து விடறது?!

 
On Dec 2, 2009, 7:14:00 PM , கிருபாநந்தினி said...

ரோமியோ பாய்! (குஷாலா வெச்சிருக்கீங்க ஒரு பேரு!) சின்ன கணக்காவே கேக்குறேன். மைனஸ் ஒண்ணும் மைனஸ் ஒண்ணும் கூட்டினா எம்புட்டு?

 
On Dec 4, 2009, 5:08:00 AM , Romeoboy said...

\\மைனஸ் ஒண்ணும் மைனஸ் ஒண்ணும் கூட்டினா எம்புட்டு?//


மைனஸ் ஸ்கியார்

இது எப்படி . ஹா ஹா ஹா