Author: கிருபாநந்தினி
•Wednesday, December 02, 2009
னக்குப் புடிச்ச நடிகர் விஜய். சும்மா துறுதுறு விறுவிறுன்னு அவர் பேச்சும், ஆட்டமும், ஸ்டைலும் எனக்கு ரொம்பப் புடிக்கும். காமெடிகூட அவருக்கு நல்லா வருது. அவரோட ‘கில்லி’ என் ஃபேவரைட் படம்!

இதத் தெரிஞ்சுக்கிட்ட என் ஃப்ரெண்ட்ஸுங்க சும்மா சும்மா விஜய்யைக் கிண்டல் பண்ணி எனக்கு எஸ்.எம்.எஸ்ஸுல ஜோக்ஸா அனுப்பிக் கடுப்பேற்படுத்திக்கிட்டு இருக்காங்க. பதிலுக்கு அஜீத்தைக் கிண்டல் பண்ணி ஏதாச்சும் ஜோக்ஸ் அனுப்பலாம்னா தெரியமாட்டேங்குது. இத்தப் படிக்கிறவங்க யாருக்காச்சும் ‘தல’யக் கேலி பண்ற மாதிரி ஜோக்ஸ் தெரிஞ்சா, கொண்டு வந்து பின்னூட்டத்துல கொட்டுங்கய்யா!

விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்:

பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.

என்னைக் கடுப்பேற்படுத்தின இன்னும் சில விஜய் ஜோக்ஸ்:

1. ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.

2. குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்?

3. ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட ‘குருவி’!

4. நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!” இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.

5. விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”

6. விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.

7. விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!

8. ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?
மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!

|
This entry was posted on Wednesday, December 02, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

68 comments:

On Dec 2, 2009, 10:30:00 PM , ஸ்ரீ.கிருஷ்ணா said...

kalakkal akka

 
On Dec 2, 2009, 10:30:00 PM , ஸ்ரீ.கிருஷ்ணா said...

all are good jokes.

 
On Dec 3, 2009, 9:44:00 AM , கிரி said...

நீங்க விஜய ஆதரிக்கறீங்களா இல்ல கலாய்க்கறீங்களான்னே தெரியலையே! :-))

 
On Dec 3, 2009, 11:26:00 AM , SenthilMohan K Appaji said...

நீங்க மெய்யாலுமே விஜய் ரசிகையா? எழுதியிருப்பதைப் பாத்தா அப்படி தெரிலயே. But ஆனா அந்த ஒபாமா-பின்லேடன் தகவல் எனக்கு புதுசு. அத அனுப்பி உங்கள மாதிரி 4 பேர கடுப்பேத்திட வேண்டியது தான்.
தேங்க்ஸ்சுங்கோ.
//* அஜீத்தைக் கிண்டல் பண்ணி ஏதாச்சும் ஜோக்ஸ் அனுப்பலாம்னா தெரியமாட்டேங்குது.**/
'தல'ன்னா சும்மாவா? தெரியமாட்டேங்குது இல்ல. கிடைக்காது. அப்டியே கிடைச்சாலும், அது உங்க தளபதியப் பத்தி வந்ததாகத் தானிருக்கும். அதப் பாத்து கடுப்பான உங்கள மாதிரி தீவிர ரசிகர்களில் யாராவது ஒருவர் அதில் உள்ள தளபதிக்கு பதிலாக தல பேர மாத்தி Forward பண்ணியிருப்பான்.

 
On Dec 3, 2009, 12:17:00 PM , Sangkavi said...

உண்மையிலேயே விஜய் ரொம்ப பாவங்க................

அப்ப விஜய் படத்த பார்க்கிற நாம...................?

 
On Dec 3, 2009, 12:44:00 PM , ரிஷபன் said...

ஹை இது நல்ல டெக்னிக் விஜய் பிடிக்கும்னு சொல்லி அவர கலாய்க்கற அத்தனை மேட்டரயும் போட்டுட்டீங்க.. கில்லாடிம்மா நீங்க..

 
On Dec 3, 2009, 2:17:00 PM , Mohan Kumar said...

கலக்கல். என் மனைவி விஜய் fan. இதில் கொஞ்சமாவது அவளுக்கு சொல்லி வெறுப்பேதனும்..

உங்க தோஸ்த் விக்னேஷ்வரி பற்றி எழுதி இருக்கேன் என் blog-ல். படிச்சு பாருங்க.

 
On Dec 3, 2009, 2:55:00 PM , வால்பையன் said...

ஹாஹாஹா

செம காமெடிங்க!

 
On Dec 3, 2009, 7:14:00 PM , Anonymous said...

you are vijay fan or Ajath fan??????????????/

 
On Dec 3, 2009, 7:23:00 PM , பின்னோக்கி said...

சிரிப்பு.

விடுங்க. வேட்டைக்காரன் ட்ரெயிலர் குழந்தைங்க மத்தியில ஹிட்டு. சன் டிவி வேற. நம்ம மூளையத் திறந்து வேட்டைக்காரன்னு பச்சைக்குத்தி தியேட்டருக்கு அனுப்பிடுவாங்க. படமும் ஹிட் ஆகிடும்.

 
On Dec 3, 2009, 7:27:00 PM , வரதராஜலு .பூ said...

செம சிரிப்பா இருக்கு

பாவமாதான் இருக்கு விஜய பார்த்தா.

 
On Dec 3, 2009, 7:37:00 PM , ஸ்ரீ.கிருஷ்ணா said...

all are good jokes.

 
On Dec 4, 2009, 12:50:00 AM , Βπφkέη й♥earŧ said...

Hello.. Neenga nallavala illa kettavala... Unga characterayey purinjika mudiyala... Are you sure you are vijay's visiri?

 
On Dec 4, 2009, 12:52:00 AM , vijay fanz said...

ஒரு பிரபலத்திர்க்கு பின் ஏதிரி இருந்தால் அவன் ஏற வழிகாட்டி
ஓபாமாவை அறிந்த அதே உலகம்தான் விஜயை அறிந்துள்லது
விஜய்யை பற்றி ஜோக்ஷ் எழுதுராங்கள் என்றால் அவரை எல்லோருக்கு தெரிந்த படியால்தான் அது மட்டுமில்லை ஒபாமா அலவுக்கு தெரிந்திருக்குரது இந்த ஜோக்ஷில்
தலயை யாருக்கும் தெரியாதனால் தான் எழுதமாட்டங்கள்

எமக்கு தெரிந்ததில்:
தல ஒரு தருதல

 
On Dec 4, 2009, 3:44:00 AM , arumbavur said...

good comedey baavam vijau

 
On Dec 4, 2009, 5:07:00 AM , Romeoboy said...

கலக்கல் ஜோக்ஸ்...

இந்தாங்க அஜித்த கவுக்குற ஜோக் .

மகன்: அப்பா எனக்கு பேய் கதை சொல்லுங்க

அப்பா: ஒரு கதைல " அஜித்"ன்னு தமிழ் ஹீரோ இருந்தாரு .

மகன்: ஐயோ பயமா இருக்குபா ! இன்னைக்கு இது போதும் ...
சூர்யா 6 பேக்.

விஷால் 8 பேக்.

அஜித் லஞ்ச் பேக்

 
On Dec 4, 2009, 8:26:00 AM , Venkateshan.G said...

நிசமா சொல்லுங்க , நீங்க விஜய் ரசிகைய ? இது வஞ்ச புகழ்ச்சி அணி போல் தெய்ரிகிறது. ஆனாலும் நல்ல ஜோக்ஸ் , நான் தலையின் ரசிகன் ,என் காட்டில் மழை.

 
On Dec 4, 2009, 9:47:00 AM , Sachanaa said...

hahahahahaha

nalla iruku unga jokes ellam...

 
On Dec 4, 2009, 11:30:00 AM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ கிரி said...
நீங்க விஜய ஆதரிக்கறீங்களா இல்ல கலாய்க்கறீங்களான்னே தெரியலையே! :-))//

அதானே!! :))

 
On Dec 4, 2009, 12:30:00 PM , SenthilMohan K Appaji said...

கீழ்க்கண்டவை அனைத்தும் http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/12/blog-post.html -லிருந்து எடுக்கப்பட்டது.

"வேட்டைக்காரன் படம் பார்க்க போற எல்லோருக்கும் ரெண்டு பஞ்சு தராங்கலாமே? காதுல வைக்கிரதுக்கா? பின்னணி இசை அவ்வளவு கொடூரமாவா இருக்கு?"

"அதுக்கு இல்லன்னே.. அந்தப் பஞ்சு ரெண்டும் படம் பார்த்து முடிக்கிறப்ப ஆளத் தூக்கி விடுவாங்கல்ல.. அப்ப மூக்குல வைக்கிறதுக்கு.."

---------------------

போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட..

---------------------

ஹட்ச் - இப்போ.. வோடபோன்
மெட்ராஸ் - இப்போ.. சென்னை
பாம்பே - இப்போ.. மும்பை
கல்கத்தா - இப்போ கொல்கத்தா

சர்தார் - இப்போ.. விஜய்..

 
On Dec 4, 2009, 2:48:00 PM , Anonymous said...

ippadi kalaikkirathu nallathille.vijay padam paarkka pidikkalennaa paarkkaamalirukkavendiyathuthaane.

 
On Dec 4, 2009, 3:28:00 PM , butterfly Surya said...

செம.. செம..

வில்லு பார்த்துட்டு எனக்கும் இரண்டு நாள் தூக்கம் வரல..

 
On Dec 4, 2009, 5:03:00 PM , வெண்ணிற இரவுகள்....! said...

eela prachanayum pesuvaaru anga ragul ghandhiyayum paarparu......foreign oodannumla....
ivan ellam paavama .....naam than paavam

 
On Dec 4, 2009, 8:17:00 PM , SenthilMohan K Appaji said...

@ vijay fanz:
'தல'யே தருதல என்றால் இளைய தளபதி?
உமக்குத் தெரிந்த வரைதான் என்றால், தெரியாததும் இருக்கும் என்று ஒப்புக் கொள்கிறீர்கள் தானே?

 
On Dec 4, 2009, 8:18:00 PM , Anonymous said...

very interesting keep it up

 
On Dec 4, 2009, 10:01:00 PM , கிருபாநந்தினி said...

Sri.Krishna, Tan-Q brother!

 
On Dec 4, 2009, 10:02:00 PM , கிருபாநந்தினி said...

கிரி, சும்மா என்னை கிரிகிரி பண்ணாதீங்க! நெஜம்மாவே நான் விஜய் ரசிகைதான்!

 
On Dec 4, 2009, 10:04:00 PM , கிருபாநந்தினி said...

எஸ்ஸெம்! நீங்களுமா? சத்தியமா ஙொப்புரான நான் விஜய் ஃபேன்தான்! ஏன்தான் நம்ப மாட்றீங்களோ!

 
On Dec 4, 2009, 10:05:00 PM , கிருபாநந்தினி said...

சங்கவி! மொதொ வரியைப் படிச்சு ஆறுதலடைஞ்சா அடுத்த வரியிலேயே கவுத்திட்டீங்களே!

 
On Dec 4, 2009, 10:06:00 PM , கிருபாநந்தினி said...

ரிஷபன்! வரிசையா இப்படியே எல்லாரும் என்னைச் சந்தேகப்பட்டுக்கிட்டே போனா, அப்புறம் நா அழுதுடுவேன்!

 
On Dec 4, 2009, 10:07:00 PM , கிருபாநந்தினி said...

மோகன்குமார், நீங்க என்ன ‘தல’ ஃபேனா? விக்னேஷ்வரி தங்கச்சி பத்தி நீங்க எழுதியிருந்ததைப் படிச்சுட்டேன். எப்படி மேட்டர் தேத்துறீங்க? அவங்க கிட்டேயே கேட்டுருவீங்களோ?

 
On Dec 4, 2009, 10:08:00 PM , கிருபாநந்தினி said...

வால்பையன், நல்ல காமெடியா! இருக்கட்டும், இருக்கட்டும்! ‘தல’ பத்தி யாராச்சும் ஜோக்ஸ் எழுதாமயா போவாங்க?

 
On Dec 4, 2009, 10:08:00 PM , கிருபாநந்தினி said...

ஆஹா! அனானிமஸ் அண்ணாச்சி/அக்காவுக்கும் இதே டவுட்டா?

 
On Dec 4, 2009, 10:10:00 PM , கிருபாநந்தினி said...

போங்க பின்னோக்கி! அப்படியெல்லாம் இல்ல. பச்சை, செவப்பெல்லாம் குத்த வேணாம். நெஜம்மாவே வேட்டைக்காரன் வந்து வேட்டையாடப் போறான் பாருங்க!

 
On Dec 4, 2009, 10:11:00 PM , கிருபாநந்தினி said...

வரதராஜுலு.பூ. என் காதுல நீங்க வைக்கலியே பூ?

 
On Dec 4, 2009, 10:12:00 PM , கிருபாநந்தினி said...

புரோக்கன் ஹார்ட்டுன்னு பேரை வெச்சுக்கிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்டு, என் ஹார்ட்டை பிரேக் பண்ணிட்டீங்களே!

 
On Dec 4, 2009, 10:14:00 PM , கிருபாநந்தினி said...

விஜய் ஃபேன்ஸ், கை கொடுங்க! உங்க கட்சிதான் நானும்! ஆனா... அந்தக் கடைசி ரெண்டு வரி வேண்டாமே! பாவம், பொழைச்சுப் போகட்டும் தல!

 
On Dec 4, 2009, 10:15:00 PM , கிருபாநந்தினி said...

அரும்பாவூர், குட் காமெடின்னு சொல்லிட்டு அதென்ன பாவம் விஜய்! இதான், பிள்ளையையும் கிள்ளிட்டுத் தொட்டிலையும் ஆட்டுறதுங்கறது!

 
On Dec 4, 2009, 10:16:00 PM , கிருபாநந்தினி said...

ரோமியோபாய், கஷ்டப்பட்டு ரெண்டு ’தல’ ஜோக்ஸ் தேத்தியிருக்கீங்க! இருந்தாலும் விஜய் ஹிட்ஸ் போல வரலை! ஸாரி!

 
On Dec 4, 2009, 10:19:00 PM , கிருபாநந்தினி said...

ஜி.வெங்கடேசன், நீங்க தல ரசிகர்ங்கிறது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை நான் விஜய் ரசிகைங்கிறதும்! இதுல உங்களுக்குச் சந்தேகமே வேணாம். இந்த வாரம் குமுதம் படிச்சீங்களா? ‘தல’ என்ன அருமையா எங்க தளபதி பத்தி சொல்லியிருக்கிறாரு? ஐ லைக் இட்!

 
On Dec 4, 2009, 10:20:00 PM , கிருபாநந்தினி said...

சச்சனா! உண்டு பண்ணிடாதீங்க பிரச்சனா! அதெல்லாம் என் ஜோக்ஸ் இல்லை. எனக்கு SMSல வந்த ஜோக்ஸ்!

 
On Dec 4, 2009, 10:22:00 PM , கிருபாநந்தினி said...

முத்துலட்சுமி! கிரி சொன்னதையே நீங்களும் வழிமொழியறீங்களா? கிரிக்குச் சொன்னதையே நானும் உங்களுக்கு வழிமொழியறேன். ஆளை விடுங்க!

 
On Dec 4, 2009, 10:24:00 PM , கிருபாநந்தினி said...

எஸ்ஸெம்! இது நல்லால்ல! ‘தல’ ஜோக்ஸ் கேட்டா நீங்களும் எங்க தளபதியைக் கிண்டல் பண்ற ஜோக்ஸாவே போடறீங்களா? :((

 
On Dec 4, 2009, 10:25:00 PM , கிருபாநந்தினி said...

அனானிமஸ்! யாரைச் சொல்றீங்க அனானிமஸ்? எனக்கு SMS-ல ஜோக்ஸ் அனுப்பினவங்களைத்தானே?

 
On Dec 4, 2009, 10:29:00 PM , கிருபாநந்தினி said...

பட்டர்ஃப்ளை! நறநறநறநற... (பல்லைக் கடிக்கிற சத்தம் கேக்குதா?)

 
On Dec 4, 2009, 10:31:00 PM , கிருபாநந்தினி said...

வெண்ணிற இரவுகள்! உங்க பின்னூட்டம் படிச்சதுலேர்ந்து கருநிறப் பகல்கள் ஆயிடுச்சு எனக்கு! :((

 
On Dec 4, 2009, 10:34:00 PM , கிருபாநந்தினி said...

எஸ்ஸெம், சண்டை போடாதீங்க எஸ்ஸெம்! அரியும் அரனும் ஒண்ணு; இத அறியாதவர் வாயில மண்ணு!

 
On Dec 4, 2009, 10:35:00 PM , கிருபாநந்தினி said...

அனானிமஸ் போர்வைக்குள்ள ஒளிஞ்சு வந்து புதுசு புதுசா கருத்து சொல்றாங்களே! ‘கீப் இட் அப்’பா? அனானி அண்ணாச்சி! நான் தளபதி ரசிகைங்கோ!

 
On Dec 5, 2009, 1:27:00 AM , Chitra said...

When you have a friend like this, who needs an enemy?"
When Vijay has a fan like this, ......."

 
On Dec 5, 2009, 7:29:00 PM , பிரியமுடன்...வசந்த் said...

Romeoboy said...

//சூர்யா 6 பேக்.

விஷால் 8 பேக்.

அஜித் லஞ்ச் பேக்//

ச்சூப்பரு...........மச்சி...

 
On Dec 5, 2009, 7:45:00 PM , செல்வன் said...

1.ஒரு ரஷ்யன் சொன்னான் 48 டிகிரி குளிரிலும் நாங்கள் வாழ்கிறோம் நாங்க மிக அற்புதமானவர்கள் என்று.

2.ஒரு அரேபியன் சொன்னான் 48 டிகிரி வெப்பத்திலும் வாழ்கிறோம் நாங்கள் அற்புதமானவர்கள் என்று

3. ஒரு தமிழன் சொன்னான் 48 விஜய் படங்களை பார்த்துவிட்டும் நாங்கள் வாழ்கிறோம், அதனால் நாங்கதான் சிறந்தவர்கள் என்று "கொய்யால யாருக்கிட்ட"
------------------------------------------------
டாக்டர்: என்னய்யா இப்படி அடிபட்டிருக்கு எந்த காரில் போய் விழுந்த?
அடிப்பட்டவர்: இல்ல சார் பஸ்ஸில் போய்கிட்டிருந்தேன் விஜய் படம் போட்டான் அதான்.
டாக்டர்: அதுக்கு ஏன்யா இப்படி அடிப்பட்டுது?
அடிபட்டவர்: தியேட்டர்னு நினைத்து ஓடுற பஸ்ஸில் இருந்து கதவை துறந்து வெளியே வந்துட்டேன்

 
On Dec 6, 2009, 10:39:00 AM , gayathri said...

காதலன் : ஐ லவ் யூ
காதலி : நான் உன்ன லவ் பண்ணலன்னா?
காதலன்: இப்படியே பஸ் பிடிச்சு 'ஏகன்' படம் பாக்க போயிடுவேன்.
காதலி: எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க துணிஞ்சிட்டீயோ, இதுக்கு மேல என் லவ்வ மறைக்க விரும்பல. ஐ லவ் யூ டூ!

 
On Dec 6, 2009, 10:42:00 AM , gayathri said...

நிருபர்: நீங்க நடிச்ச ஏகன் படம் 100 நாள் ஓடனும்னு நாங்க வாழ்த்துறோம்

அஜித்: நோ..200 நாள் ஓடும்!

நிருபர்: ஹிஹி ஜோக் அடிக்குறீங்களா சார்

அஜித் : அடிங்க கொய்யால யாருடா முதல ஜோக் அடிச்சா?

 
On Dec 6, 2009, 10:44:00 AM , gayathri said...

அஜித்1: டேய்.. எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?


அஜித் 2: கரண்ட் இல்லடா..


அஜித் 1: சரி சரி, பேனையாவது போடு..


அஜித் 2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?

 
On Dec 6, 2009, 10:45:00 AM , gayathri said...

ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே
சாப்பிட வேண்டியது தானே?
அஜித்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி
இருக்காரு.. அதுதான்.. !!!

 
On Dec 6, 2009, 10:45:00 AM , gayathri said...

அஜித்: 1: நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வரியாடா?
அஜித்: 2: முடிஞ்சா வரேன்..
அஜித்: 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு..

 
On Dec 6, 2009, 10:45:00 AM , gayathri said...

அஜித்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..


மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..


அஜித்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா
செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்

 
On Dec 7, 2009, 8:06:00 AM , SenthilMohan K Appaji said...

எழுத ஆரம்பிச்சு 6 பதிவு போட்டாச்சு. இன்னும் சண்டை ஆரம்பிக்கலன்னா எப்படி? அதான். அப்புறம் ஒரு Request. எஸ்ஸெம்-னு போடாதீங்க. SM-னு போடுங்க.
@ gayathri : நான் முதலில் சொன்னத நிரூபிச்சிட்டாங்க. அவங்க சொன்னதில் பாதிக்கும் மேல தளபதிய பத்தி வந்தது தான். :)

 
On Dec 8, 2009, 12:29:00 PM , கிருபாநந்தினி said...

என்ன சித்ரா இப்படிச் சொல்லிட்டீங்க? மனசு கஷ்டமாயிடுச்சு, போங்க!

 
On Dec 8, 2009, 12:30:00 PM , கிருபாநந்தினி said...

பிரியமுடன் பின்னூட்டம் இட்ட வசந்துக்கு நன்றிங்ணா!

 
On Dec 8, 2009, 12:32:00 PM , கிருபாநந்தினி said...

ஹ்ம்... ஹ்ம்... செல்வா! என்னதிது. ‘தல’யக் கலாய்க்கிற மாதிரி ஜோக் கேட்டா, திருப்பியும் தளபதியவே கலாய்ச்சிருக்கீங்க?

 
On Dec 8, 2009, 12:34:00 PM , கிருபாநந்தினி said...

காயத்ரி! ‘தல’யப் பத்தி ஜோக் கொட்டுங்கன்னதும் ஆறு அற்புதமான ஜோக்ஸைக் கொண்டு வந்து கொட்டிட்டீங்களே! கை கொடுங்க காயூ!

 
On Dec 8, 2009, 12:39:00 PM , கிருபாநந்தினி said...

SM-க்கும் எஸ்ஸெம்முக்கும் ஆறு வித்தியாசம் ஏதாச்சும் இருக்குங்களா? காயத்ரி, SM சொன்னாருன்னு கவலைப்படாதீங்க. காய்ச்ச மரம்தான் கல்லடி படும்! ஏதாவது பண்ணினாத்தானே விமர்சனம் பண்றதுக்கு!

 
On Dec 8, 2009, 2:59:00 PM , Anonymous said...

Killi - vilayada vandhavangalai mattum adippan.
Kuruvi - Oralavukku height la parandhu vanthu koththum.
Villu - Thooramai irundhaalum oru particular direction la vandhu kuththum.
Vettaikkaran - Enga oodinalum , padhunginaalm thedi vandhu kuththuvaan
Sura - Tharayila ellarayum konnachu. Aduththu thanni kku poraru..

 
On Dec 12, 2009, 5:22:00 PM , Mohan Kumar said...

நான் தல fan எல்லாம் இல்லீங்கோ. என் மனைவிக்கு மட்டும் தான் நான் fan. ஹி ஹி.

மேட்டர் தேத்துவது பல விதங்களில். சில நேரம் அவர்களிடமே பேசுவேன். சுத்தமாய் அவர்களுக்கு தெரியாமலே எழுதி வெளியிட்டு விடுவதும் உண்டு

 
On Dec 18, 2009, 3:03:00 PM , senthils said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்.

 
On Dec 20, 2009, 12:04:00 PM , saran said...

very amazing to all.i am very intrested for reading bcz i'm thala fan.

 
On Dec 25, 2009, 1:50:00 PM , surya said...

hello.. this is stupid blogspot, we have a lot of works and we dont have a enough time to learning good things instead of the media persons commands.i think u and ur readers one of the waste persons in this world u write like this article and read some peoples this blog spot. do what ur work and we a lot of good things in this world so change ur thinking and give the useful information to all (peoples). sorry KIRUPA NANDHINI & READERS. and i want to say to the readers don't encourage like this blog spot and one thing i want to say i am not the VIJAY fan.