Author: கிருபாநந்தினி
•Tuesday, December 29, 2009
ஹா... வந்துட்டேன்யா... வந்துட்டேன்யா..!

நம்ம ‘தல’ (எங்களுக்கு எப்பவுமே தல எங்க ரஜினி சார்தான்!) பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்ன கையோடு, பெங்களூர்ல சொந்தக்காரர் ஒருத்தருக்குக் கல்யாணம்னு போனேன். போன இடத்துல ஏகப்பட்ட சொந்தங்களைப் பார்த்தேன். அதுல முக்காவாசிப் பேரை என் கல்யாணத்தும்போது பார்த்ததுதான்! என்னைப் பார்த்ததும் விடமாட்டேன்ட்டாங்க. ‘எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் இருந்துட்டுதான் போகணும்’னு கையப் பிடிச்சு இழுக்காத குறை-னு சொல்ல மாட்டேன்; நெஜம்மாவே இழுத்துட்டாங்க! பெங்களூர்லயும், சுத்திமுத்தி உள்ள ஊர்கள்லயும் பல சொந்தங்கள் இருந்ததுனால, அங்கே ரெண்டு நாள், இங்கே மூணு நாள்னு தங்கி, வக்கணையா தின்னுட்டு, நேத்திக்கு சொந்தக் கூட்டுக்கு வந்து சேர்ந்துடுச்சு இந்தப் பறவை!


ஆமா... தெரியாமத்தான் கேக்கறேன்... என்னடா, பிளாக் எழுதறேன் பேர்வழின்னு மொக்கை போட்டுட்டிருந்தாளே கிருபாநந்தினி கிருபாநந்தினின்னு ஒருத்தி; அவளைக் கொஞ்ச நாளா காணோமேனு யாராச்சும் ஃபீல் பண்ணி ஒரு மெயில் பண்ணியிருப்பீங்களா எனக்கு; இல்லேன்னா பின்னூட்டம்தான் போட்டிருப்பீங்களா? எங்கேயாச்சும் போய்த் தொலையட்டும் சனியன், திரும்பி வந்து நம்ம கழுத்தை அறுக்காத வரைக்கும் சரின்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்கபோல! அதாங் கண்ணுங்களா நம்ம கிட்ட நடக்காது!

உங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடோய்..! வேற, வேற, வேர்ர்ர்ற... மொக்கை போட வேட்டைக்காரிதாண்டா வேணும்! அதான்... வந்துட்டேன்ல, வந்துட்டேன்ல..!

ooo ooo ooo


புத்தாண்டு பொறக்கப் போகுது! எல்லாரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க! வருகிற 2010 உங்களுக்கு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணுமா? எதுக்கு இருக்கேன் இந்தக் கிருபாநந்தினியானந்தாஜி! பலன்களை அள்ளி விடுறேன், புடிச்சுக்கோங்க!

அதுக்கு முன்னால, உங்க எல்லாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

1 முதல் 9 வரையுள்ள அடிப்படைப் பிறப்பு எண்களுக்குரிய 2010-க்கான பலன்களைக் கீழே தந்திருக்கேன். அடிப்படைப் பிறப்பு எண்ணைக் கண்டுபிடிக்கிறது எப்படி? ரொம்பச் சுலபம்க! உங்க பிறந்த தேதி, மாசம், வருஷம் எல்லாத்தையும் போட்டு சிங்கிள் டிஜிட் வர்ற அளவுக்குக் கூட்டிக்குங்க. உதாரணமா, என்னோட பிறந்த தேதி 20.5.1982. (ஹூம்... அப்பயாச்சும் யாராவது ஒரு புண்ணியவான் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்றீங்களான்னு பார்ப்போம்!) அதில் இருக்கிற எல்லா எண்களையும் கூட்டினா 27 வருதா? (அட, என் வயசு!) அதையும் கூட்டினா 9 வருதா? அதான், என்னோட அடிப்படைப் பிறப்பு எண். இதுபோல உங்க பிறப்பு எண்ணைக் கண்டுபிடிச்சு, கீழே அதுக்கான பலனைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, 2010-ஐ சந்தோஷமா கொண்டாடுங்க மகா ஜனங்களே!

1
: பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள். இந்த ஆண்டு நீங்கள் தொட்டதெல்லாம் பொன்தான்! அதுக்காக சீட்டுக் கம்பெனில கொண்டு போய் உங்கள் பணத்தைக் கொட்டாதீங்க. (நீங்களே சீட்டுக் கம்பெனி நடத்துபவராக இருந்தால், முதல் இரண்டு வரிகளும் உங்களுக்கு ஓ.கே.!) பொது இடத்தில் அரசியல் பேச வேண்டாம். தர்ம அடி விழ வாய்ப்புண்டு. எதுக்குங்க வம்பு... அழகிரி, ஸ்டாலின், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், அத்வானி, சோனியா, மன்மோகன்சிங், மதுகோடா, பால் தாக்கரே, என்.டி.திவாரி எல்லாரும் இந்த நாட்டுக்குக் கிடைச்ச வரம்னு சொல்லிட்டுப் போவீங்களா..!

2: எதிரிக்கும் நல்லதே நினைப்பவர் நீங்கள். பணத் தட்டுப்பாடு அகலும். (பாங்க்காரங்க எஸ்.எம்.எஸ். வழியா வந்து லோன் வேணுமா, லோன் வேணுமான்னு கேட்டு நச்சரிப்பாங்களே?!) ஜனவரி 1-ம் தேதி காலை 6:30 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி இரவு 9:30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு! (அட, மத்தவங்க உயிர்ங்க!)

3: ராஜ தந்திரத்துடன் செயல்படுபவர் நீங்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். (இல்லேன்னா மேலதிகாரி கிட்ட உங்களைப் போட்டுக் கொடுத்துடுவாங்க.) நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு உங்களுக்குக் கண்டிப்பாகக் கிட்டும் (அப்படி யாராச்சும் உங்களுக்கு இருந்தா!). டி.வி., ஃபிரிஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். (பின்னே, பத்து வருஷத்துக்கு முன்னே வாங்கியதையே இன்னும் கட்டிக்கிட்டு அழுதா எப்படி? புத்தாண்டு ஆஃபர்ல எல்லாத்தையும் புதுசா வாங்கிப் போடுவீங்களா..!)

4: பிறரது மனம் கோணாமல் நடப்பவர் நீங்கள். (ஆமாங்க, ‘வேட்டைக்காரன்’ படத்துக்கு என் ஃப்ரெண்டு கூப்பிட்டப்போ கூட மறுக்காம, ரிஸ்க் எடுத்து அவன்கூடப் போனேன்னு எனக்குப் பின்னூட்டம் போடக் கூடாது! அப்புறம் என் மனசு கோணிடும்!) வயிற்று வலி, மூச்சுப் பிடிப்பு ஆகிய உபாதைகளுக்கு ஆளாக வேண்டி வரலாம். (கண்டதையும் உள்ள தள்ளாதீங்க. புத்தாண்டுங்கிற பேர்ல ஆளாளுக்கு கேக், சோன்பப்டின்னு கொண்டு வந்து தருவாங்கதான். எல்லாத்தையும் நாமே மொசுக்கணும்கிறது இல்லே!) நெடுநாள் வராமல் இருந்த பாக்கி வசூலாகும் - அவங்க பிறப்பு எண் 5-ஆக இருந்தால்!

5
: நாணயம் மிகுந்தவர் நீங்கள். வாங்கின கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுக்காவிட்டால் தூக்கமே வராது உங்களுக்கு. அதுவும் பிறப்பு எண் 4-க்கு உரியவரிடமிருந்து வாங்கிய கடன் ஒன்றை இந்த ஆண்டு பைசல் (பதறாதீங்க! 2010 டிசம்பர் 31 வரைக்கும் டயம் இருக்கு!) செய்துவிடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது நல்லது! (இன்னும் எத்தனை பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கீங்களோ!) உங்களைப் பற்றிச் சிலர் அவதூறாகப் பேசுவார்கள். (யாரைப் பத்திதான் எவன்தான் அவதூறா பேசாம இருக்கான்!) காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாதீர்கள். அவர்களுக்குரிய தண்டனையை ஆண்டவன் அளிப்பான் (உங்களுக்கு அளிச்ச மாதிரியே!).

6: நிஜத்தில் கலகலப்பானவர் நீங்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக உங்கள் வீட்டில் தினமும் அழுகையும், புலம்பலுமாகவே இருந்ததல்லவா... அந்த நிலை அநேகமாக
2010-ல் மாறிவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. (நாலஞ்சு மெகா சீரியல்கள் முடிஞ்சு போயிடுச்சு போலிருக்கே! புதுசா எதையும் பார்த்துத் தொலைக்காதீங்க!) சேமிப்பு கரையும். (ஸ்கூல்ல, காலேஜ்ல சேர்ற பசங்க இருக்கா உங்களுக்கு?) உடல் நிலை பாதிக்கும். (பணத்துக்கு என்ன பண்றதுங்கிற கவலைதான்... வேறென்ன?) குல தெய்வத்துக்குப் பிரார்த்தித்துக்கொண்டு நிறைவேற்றாமல் விட்ட பிரார்த்தனை ஏதாவது இருந்தால் (இத்தனை கோயில்ல மண் எடுக்கிறேன்னு எக்குத்தப்பா ஒண்ணும் வேண்டிக்கலையே?) உடனே நிறைவேற்றிவிடவும்.

7: யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவர் நீங்கள். (எப்படி பிட்டைப் போட்டேன் பாருங்க! பின்னே, இன்னாருக்குக் கெடுதி நினைச்சேன்னு நீங்க ஒப்புக்கவா போறீங்க!) செவ்வாய் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். (அப்ப திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆறும் சாதகமா இல்லைன்னா பரவாயில்லையான்னு கேக்கப்படாது!) பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். (பொல்லாதுங்க! எப்ப என்ன செய்யும்னு தெரியாது. ஜாக்கிரதை!) சுக்கிரனால் திடீர் பயணம், வீண் செலவு ஆகியவை ஏற்படும். (யாரவன் சுக்கிரன்னு கேக்கறீங்களா? உங்களுக்குத் தெரிஞ்சவன் எவனாவது மண்டையப் போட்டால் அவன் சுக்கிரன்; எவனாவது கல்யாணம் கட்டிக்கிட்டா அவனும் சுக்கிரன்தான். மொத்தத்துல, நீங்க புடுங்குற ஆணி எல்லாமே வேண்டாத ஆணிங்கதாங்கிறாப்ல, உங்களுக்குச் செலவு வைக்கிறவன் எல்லாருமே வக்கிரம் புடிச்ச சுக்கிரன்கள்தான்!)

8: அமைதியாக இருந்தே சாதிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். பெண்கள் புதிய டிசைனில் நகையோ அல்லது புடவையோ வாங்குவீர்கள். ஆண்களுக்குப் புதிய வாகனப் பிராப்திரஸ்து! கடன் தொல்லைகள் அதிகரிக்கும். (பின்னே, நகையும் புடவையும் வாகனமும் வாங்கினா கடன் தொல்லை அதிகரிக்காம என்ன செய்யுமாம்?) தம்பதிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்க வாய்ப்புண்டு. (‘என்னடி சமையல் இது, வாயில வைக்க வழங்கலே!’ என்றோ, ‘ஆபீஸ்லேர்ந்து நேரா வீட்டுக்கு வராம இவ்ளோ நேரம் எங்கே சுத்திட்டு வரீங்க?’ என்றோ கேட்காமலிருந்தால்!)

9: பொறுமையின் சிகரம் நீங்கள்! பாதச் சனி நடைபெறுவதால் கையிருப்பு குறையும்! (பெங்களூர் போய் வந்ததுல என் கையிருப்பு கணிசமா குறைஞ்சு போனது உண்மை! ஆனா, பாதச் சனின்னு போட்டிருக்கே? நான் போனது ரயில்ல, டாக்ஸியில, ஆட்டோவிலதானே!) எவரையும் விமர்சித்துப் பேசவோ எழுதவோ வேண்டாம். (ஆஹா! வெச்சுட்டாங்கய்யா ஆப்பு! நமக்கு அதானே பொழப்பு! அது சரி, இதுக்கு என்ன சனி? வாய்ச் சனி, கைச் சனியா?) அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். (கண்டிப்பா! எனக்கு சோப்பு, பவுடர், நெயில் பாலீஷ் போன்ற முக்கியமான செலவுகள் தவிர, வெளியில டீ குடிக்கிறது, புக்ஸ் வாங்குறது மாதிரியான அநாவசிய செலவு எதையும் செய்யக் கூடாதுன்னு என் கணவர் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்!) மகன், மகள் ஆகியோரால் மனக் கஷ்டம் ஏற்படும். (ஆமாங்க! ரொம்பப் படுத்தறா என் செல்லக் குட்டி!). அதே போல், உங்களையும் அறியாமல் நண்பர்களின் மனங்களை நீங்கள் காயப்படுத்தி விடவும் வாய்புண்டு! (பிளாகால இருக்கலாமோ?!)

.
|
This entry was posted on Tuesday, December 29, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

30 comments:

On Dec 29, 2009, 10:32:00 PM , Anonymous said...

Hey, Addamathu sani varum ennanka... athu eppo therethudi..

 
On Dec 29, 2009, 11:13:00 PM , அண்ணாமலையான் said...

கிருபாநந்தினியானந்தாஜி நான் உங்க சிஷ்யனுங்கோவ்...பாத்து அருள் புரியுங்கோவ்....(உண்மையிலே கானோம்னு தேடினேங்க..நம்புங்க)

 
On Dec 29, 2009, 11:39:00 PM , - இரவீ - said...

Happy New Year!!!

 
On Dec 30, 2009, 2:17:00 AM , Ranjit said...

நல்லா எழுதுறிங்க. நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறேன்.

 
On Dec 30, 2009, 2:19:00 AM , Ranjit said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
On Dec 30, 2009, 9:59:00 AM , Sangkavi said...

வாங்க கிருபாநந்தினி......... நலமா?

எளிமையான, அழகான வரிகள்.....

எப்ப இருந்து ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சீங்க........?

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............

 
On Dec 30, 2009, 10:23:00 AM , வி. நா. வெங்கடராமன். said...

கிருபா நந்தினிஜி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. உங்களது ராசியை வைத்து பார்க்கும் போது நீங்களும் 2010-இல் நிறைய பதிவுகளை தருவீர்கள்!!!!.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com

 
On Dec 30, 2009, 12:01:00 PM , Raja said...

room potu yusipingalu...very nice one...

 
On Dec 30, 2009, 12:45:00 PM , மகா said...

ப்ளாக் எழுதுன கை சும்மா இருக்காதுன்னு தெரியும் எப்டியும் நீங்க திரும்ப வருவேங்கனு தெரியும்ல ......

 
On Dec 30, 2009, 12:48:00 PM , மகா said...

கிருபாநந்தினியானந்தாஜி!....

//பாதச் சனின்னு போட்டிருக்கே? நான் போனது ரயில்ல, டாக்ஸியில, ஆட்டோவிலதானே//

எப்படி இப்பிடி எல்லாம் யோசிக்கிறிங்க ....

 
On Dec 30, 2009, 2:35:00 PM , Romeoboy said...

ரொம்பா நாள் கழிச்சு எழுதி இருகிங்களே எதாவது உருப்படியா இருக்கும்னு வந்தேன் ... ஹ்ம்ம் எப்பயும் போல மொக்கை ..

But heartily Welcome back and Happy New Year wishes .

 
On Dec 30, 2009, 10:14:00 PM , அன்புடன்-மணிகண்டன் said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. பதிவு ஏதும் இருக்கான்னு ஒரு நாளைக்கு நாலுமுறை படித்துறைக்கு வந்திட்டுபோன பலரில் நானும் ஒருத்தன்..
நமக்கு எப்பவுமே ரஜினிதான் தல'ன்னு சொன்னீங்க பாருங்க.. அங்கதான் நிக்கறீங்க.. (தள்ளி நிக்கவான்னு கேக்கப்பிடாது.. :)
பிறப்பு எண்ணை வச்சி வருடபலன் அதுவும் ரொம்ப சுவாரசியம் மற்றும் நகைச்சுவையா.. கலக்கல்..
யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவைய்ங்க... நாங்கெல்லாம்.. அக்காங்... வர்ட்டா.. :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

 
On Dec 31, 2009, 11:31:00 AM , Rajasekar said...

உங்களுக்கு என்னுடய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வர இருக்கும் ஆண்டு இனிய ஆண்டாக அமைய என்னுடய வாழ்த்துக்கள்!

 
On Jan 1, 2010, 7:55:00 PM , - இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

 
On Jan 1, 2010, 8:31:00 PM , கிருபாநந்தினி said...

\\அஷ்டமத்துச் சனி வரும்னாங்க. அது இப்போ தெரியுது!// வரும்க, வரும்! அனானிமஸ்ங்கிற போர்வைல புகுந்துகிட்டுத் தப்பிச்சுக்கிட்டீங்க! இல்லேன்னா, அஷ்டமத்துச் சனி என்ன, ஏழரை நாட்டுச் சனி, பொங்கு சனி, மங்கு சனின்னு எல்லாச் சனியையும் பிடிச்சு உங்க மேல ஏவியிருப்பேன்! :)

 
On Jan 1, 2010, 8:33:00 PM , கிருபாநந்தினி said...

அண்ணாமலையாரே! அருள் புரியறது இருக்கட்டும்... \\உண்மையிலே கானோம்னு தேடினேங்க..நம்புங்க// எங்கே தேடினீங்க, என் பிளாகுக்கு வந்தா? அப்படித் தெரியலையே! வந்து போன சுவடே தென்படலையே? ச்சும்மா ரீல விடாதீங்க அண்ணாமலை அண்ணாச்சி!

 
On Jan 1, 2010, 8:38:00 PM , கிருபாநந்தினி said...

இரவீ! நீங்க மேஜர் சுந்தர்ராஜனுக்கு ஏதாச்சும் உறவா? ஆங்கிலத்துல புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிட்டு, கூடவே தமிழ்லயும் சொல்லியிருக்கீங்களே? :) ஆனா, அவர் உடனே உடனே ரெண்டையும் சொல்லிடுவாரு. நீங்க ஒரு நாள் லேட் பண்ணிட்டீங்க. (அதிருக்கட்டும், உங்க ‘கண்டுகொண்டே’னைக் கண்டுகொண்டேன். அட, அப்படியே என் வலைப்பூ டெம்ப்ளேட்! அதெப்படி எனக்கு முன்னாடியே என்னைப் பார்த்துக் காப்பியடிச்சீங்கன்னு புரியலையே? :))

 
On Jan 1, 2010, 8:42:00 PM , கிருபாநந்தினி said...

ரஞ்சித் அண்ணா! நீங்க எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்றேன்னு சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா, எனக்கு யானையோட ஞாபக சக்தி. கரெக்டா என் பிறந்த நாளைக்கு வாழ்த்துச் சொல்றீங்களான்னு பார்த்துக்கிட்டே இருப்பேன். இல்லேன்னா... இல்லேன்னா... அப்ப தெரியும்!

 
On Jan 1, 2010, 8:43:00 PM , கிருபாநந்தினி said...

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு ரொம்ம்ம்ப நன்றி ரஞ்சித்!

 
On Jan 1, 2010, 8:46:00 PM , கிருபாநந்தினி said...

\\வாங்க கிருபாநந்தினி......... நலமா?// கேப்பீங்களே இப்ப நல்லா! மெய்யா சொல்லுங்க, மொக்கை போட வந்துட்டா சனியன்னுதானே மனசுல நினைச்சீங்க? எவ்வளவோ பார்த்திருக்கோம், இதப் பார்க்கமாட்டமா? சரி சரி, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப டாங்க்ஸ்!

 
On Jan 1, 2010, 8:48:00 PM , கிருபாநந்தினி said...

\\உங்களது ராசியை வைத்து பார்க்கும் போது நீங்களும் 2010-இல் நிறைய பதிவுகளை தருவீர்கள்!!!!.// வி.நா.வெங்கடராமன், வீணா என்னை உசுப்பேத்தி விடாதீங்க! :)

 
On Jan 1, 2010, 8:51:00 PM , கிருபாநந்தினி said...

\\ரூம் போட்டு யோசிப்பீங்களோ!// ஆமா ராஜா, என் மூளைக்குள்ளே எட்டுக்கு ஆறு இன்ச்ல ஒரு ரூம் போட்டுருக்கேன் இதுக்காகவே! :) வெரி நைஸ்னு பாராட்டினதுக்கு வெரி தேங்க்ஸ்!

 
On Jan 1, 2010, 8:52:00 PM , கிருபாநந்தினி said...

\\ப்ளாக் எழுதுன கை சும்மா இருக்காதுன்னு தெரியும் எப்டியும் நீங்க திரும்ப வருவேங்கனு தெரியும்ல ......// இவளை எப்படிரா தடுக்கலாம்னு யோசிச்சீங்களோ, மகா? :)

 
On Jan 1, 2010, 8:53:00 PM , கிருபாநந்தினி said...

மகா! \\எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?// ரூம் போட்டுதான்! :)

 
On Jan 1, 2010, 8:55:00 PM , கிருபாநந்தினி said...

ஹாய் ரோமியோபாய்! \\ஹ்ம்ம் எப்பயும் போல மொக்கை ..// மனப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி! :) புத்தாண்டு வாழ்த்துக்கு தேங்க்ஸ்!

 
On Jan 1, 2010, 8:57:00 PM , கிருபாநந்தினி said...

\\யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவைய்ங்க... நாங்கெல்லாம்.. அக்காங்... வர்ட்டா.. :)// அன்புடன் மணிகண்டன்னு பேர்லயே அன்பைப் பொழியும்போதே தெரியும்! :) புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி மணிகண்டன்!

 
On Jan 1, 2010, 8:57:00 PM , கிருபாநந்தினி said...

ராஜசேகர், தங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கு மிக்க நன்றி!

 
On Jan 1, 2010, 9:16:00 PM , பின்னோக்கி said...

கூகிள் ரீடர்ல பார்போங்க. எதுவும் வேலையா இருக்கும்னு நினைச்சுப்போம். மத்தபடி யாரையும் திட்ட மாட்டோம். ஒழிஞ்சுது சனியன்னு நினைக்க மாட்டோம். நம்புங்க.

 
On Jan 3, 2010, 6:31:00 AM , கிரி said...

//எங்களுக்கு எப்பவுமே தல எங்க ரஜினி சார்தான்//

அது! :-)

//கொஞ்ச நாளா காணோமேனு யாராச்சும் ஃபீல் பண்ணி ஒரு மெயில் பண்ணியிருப்பீங்களா எனக்கு//

நினைத்தேன்.. மெயில் பின்னூட்டம் பண்ணல ;-) சரி ஆர்வக்கோளாருல கொஞ்சம் பதிவ போட்டுட்டு எஸ் ஆகிட்டீங்க போலன்னு நினைத்தேன் ..இல்லை புதிய தலைமுறைல இருந்து உங்களுக்கு மிரட்டல் எதுவும் வந்ததோ என்று நினைத்தேன் (ஹி ஹி இது நம்ம பில்டப்பு)

//அப்பயாச்சும் யாராவது ஒரு புண்ணியவான் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்றீங்களான்னு பார்ப்போம்!) //

பாருங்க இந்த வருஷம் வந்து எப்படி குவியுதுன்னு.. அட! வாழ்த்தை சொன்னேங்க!

//அன்புடன்-மணிகண்டன் said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. பதிவு ஏதும் இருக்கான்னு ஒரு நாளைக்கு நாலுமுறை படித்துறைக்கு வந்திட்டுபோன பலரில் நானும் ஒருத்தன்.. //

இவரு வந்ததுல படியே தேஞ்சு போச்சுனா பாருங்களேன் :-))))

 
On May 19, 2010, 11:07:00 PM , பத்மநாபன் said...

Dear sister Nandhini,

Happy birthday to you..

Be blessed by the divine...

Padmanaban..