•Monday, December 07, 2009
நிறைய விடுகதைங்க கைவசம் இருந்துது. அதுல ரெண்டு ஒண்ணு எடுத்து விடுவோமேன்னு நினைச்சேன். அது சரி, பக்கத்துல யார் யார் படமெல்லாமோ போட்டிருக்கேனேன்னு பார்க்கிறீங்களா? பின்னே, வெறுமே விடுகதை போட்டா நல்லாருக்குமா? கூட ஏதாவது படம் இருந்தாத்தானே கலர்ஃபுல்லா, பார்க்கவும் படிக்கவும் சுவாரசியமா இருக்கும்? என்னது... அந்த விடுகதைக்கும் பக்கத்துல உள்ள படத்துல இருக்குறவங்களுக்கும் தொடர்பு இருக்குற மாதிரி தெரியுதா? ஐயையோ! அதெல்லாம் இல்லீங்க. நீங்களா அப்படி நெனைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லே. அது உங்க தப்பு!
1. இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது! அது என்ன?
2. பளிங்கு மண்டபம் கட்டி, பாலாறு ஒன்று வெட்டி, மகாராணி ஒருத்தி மஞ்சள் நீராடுகிறாள். அவள் யார்?
3. குண்டு முழி ராசாவுக்குக் குடல் எல்லாம் பல். அது என்ன?
4. மரத்துக்கு மரம் தாவுவான்; குரங்கல்ல. பட்டை போட்டிருப்பான்; சாமியும் அல்ல. அவன் யார்?
5. சின்னத் தம்பிக்குத் தொப்பியே வினை. அது என்ன?
6. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்! அது என்ன?
7. கிணற்றில் அம்புகள் போடுவாரே தவிர, எடுக்க மாட்டார். அவர் யார்?
8. என்னை நீங்கள் பார்க்கலாம்; தொடலாம். ஆனால், பிடிக்கவே முடியாது. நான் யார்?
9. அண்ணன் போவான் முன்னே; தம்பிகள் போவார்கள் பின்னே! அவன் யார்?
10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை; அவன் யார்?
11. என்னை எவ்வளவு வேண்டுமானாலும் வளைக்கலாம்; ஆனால், ஒடிக்கவே முடியாது. நான் யார்?
12. பச்சை உடலுக்காரி; பழுத்த உதட்டுக்காரி. அவள் யார்?
13. நான் மயிலிறகைவிட மென்மையானவள். ஆனால், என்னை அதிக நேரம் பிடித்து வைக்க முடியாது. நான் யார்?
14. பேசாதவரை நான் இருப்பேன். பேசினால் உடைந்துவிடுவேன். நான் யார்?
விடைகள்:
1. பட்டாசு; 2. முட்டை; 3. மாதுளம்பழம்; 4. அணில்; 5. தீக்குச்சி; 6. வெங்காயம்; 7. மழை; 8. நிழல்; 9. ரயில் இன்ஜின், பெட்டிகள்; 10. செருப்பு; 11. தலைமுடி; 12. கிளி; 13. சுவாசம்; 14. அமைதி
21 comments:
முடியல.. எங்க இருந்து தான் இந்த மாதிரியான மண்டை காய வைக்கும் விடுகதை கிடைக்குதோ உங்களுக்கு .
எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லைங்கோ ..
ethukku photo?
வாவ்.............
படத்துக்கும் விடுகதைக்கும் சம்பந்தமே இல்லைனு சொல்லிட்டே
எல்லாரையும் போட்டுத்தள்ளிட்டீங்க...........
உங்க விடுகதைக்கு நீங்க கொடுத்த விடையை விட
பக்கத்தில் இருக்கும் படந்தானுங்க சரியான விடை......
அனுராதரமணன், விஜய் தொடங்கி இப்ப அரசியல் விமர்சனம் சூப்பர்.......
தொடந்து இது மாதிரி கலக்குங்க.........
superrrrrrrr
நமீதா போட்டோ'வ போட்டு எங்களை ஏமாற்றியதை "மென்மையாக" கண்டிக்கிறேன்... :)
ஹாஹாஹா!
படம் செம பொருத்தம்!
விடுகதையும் அதற்கு சம்பந்தமான படங்களும் அருமை.
ரோமியோபாய், ஒரு பெரிய புஸ்தகமே இருக்குதுங்க என்கிட்ட!
ரோமியோபாய், அதென்ன சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டீங்க. படிச்சாலே சம்பந்தம் உண்டுன்னு அர்த்தம்தான்! வசமா மாட்டிக்கிட்டீங்க!
மஞ்சள் ஜட்டியா! ஐயய்ய... என்னா பேருப்பா! எதுக்கு போட்டோவா? அதான் ரோஸ் கலர் முன்னூட்டத்துலயே வெலாவாரியா சொல்லியிருக்கிறனே!
சங்கவி! உங்களை நான் அக்காச்சின்னே நினைச்சுட்டேன். புரொஃபைலுக்குப் போயிப் பார்த்தப்புறம்தான் தெரியுது, நீங்க என் அண்ணாச்சி! தொடர்ந்து கலக்குங்கன்னு கொடுத்த எக்ஸ்ட்ரா ஊக்கத்துக்கு டாங்க்ஸுங்ணா!
To Anonymous, Thankssssss!
அன்புடன் மணிகண்டன், ஏமாத்தீட்டேனா... என்னங்ணா சொல்றீங்க? :o
வால்பையா! பாராட்டுக்கு தாங்க்ஸ்!
பின்னோக்கிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
ஏனுங்க ஃப்ர்ஸ்ட்(ஆச்சரியம் பாருங்க எல்லா எழுத்தும் புள்ளி வச்சிருக்குது) டைமா படிச்சேனுங்க, வோட்டும் போட்ருக்கேனுங்க பாத்து செய்யுங்க. தொடர்ந்து எழுதுனுமுங்க. வாழ்த்துக்களுங்க.டைம் கெடச்சா நம்ம ப்ளாக் பக்கம் வாங்க ஈ மொய்க்குதுங்க..வரட்டுமாங்க...
ஊஹும்... ப்ளான் பன்னி ஏமாத்தி வீட்டீர்களே:( நமீதா, தமன்னா படத்தை பார்த்து இதைப் படித்த என்னை இப்படி ஏமாத்தி விட்டீர்களே:<
சுப்ரமணியம்
அண்ணாமலை அண்ணா! பிளாக் பக்கம் வாங்க, ஈ மொய்க்குதுன்னு நீங்க சொன்னதை நம்ம்ம்ம்ம்ம்ம்பி அங்கே வந்தா... என்னாங்ணா, இப்படி டுமீல் விட்டிருக்கீங்க. உங்க பதிவுக்கு இருபது இருபத்தஞ்சு கமெண்ட்டு, தமிழிஷ்ல எக்கச்சக்க ஓட்டு! கலக்கறீங்களே!
நாந்தான் இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லேன்னு தலைப்பே வெச்சிருக்கனே, சுதாரிச்சிக்கிற வேணாமா? என்ன போங்க சுப்ரமணியம்! வந்ததுக்கும் பின்னூட்டம் தந்ததுக்கு தாங்க்ஸ்!
Sabaasu...