Author: கிருபாநந்தினி
•Friday, December 04, 2009
“ஏற்கெனவேதான் எழுதியாச்சே... மறுபடியும் விமர்சனம்கிற பேர்ல கிழிக்கணுமா? அதென்ன ‘கோலங்கள்’ சீரியல் பேர்ல மட்டும் உனக்கு அத்தனை காண்டு?”ன்னு நீங்க கேக்கலாம்.

ஓடாத படத்துக்கு யாராச்சும் விமர்சனம் எழுதுவாங்களா? அது மாதிரிதான் இதுவும். என்னவோ இந்த சீரியலைப் போல இதுவரைக்கும் வந்ததே இல்லையாக்கும், ஏழு வருஷம் ஒரு சீரியலை எடுத்துட்டு (இழு இழுன்னு இழுத்துட்டு) வந்ததே ஒரு திறமையாக்கும், கின்னஸ் ரிக்கார்டுல பதிய வேண்டிய சாதனையாக்கும் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட பில்டப் கொடுத்து இத்தனைக் காலம் ஓட்டியிருக்கிற சீரியல்ல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்க வேணாமா?

தேவயானி அபியாவே வாழ்ந்துட்டாங்களாம். பின்னே, ஏழு வருஷத்துக்கு இந்த இழுவை இழுத்தா, சொந்தப் பேரேகூட மறந்து போகும்தான்! ஆதிக்கும் அபிக்கும் தொழில் பகை. ஒரு பெண் ஒரு ஆண் கொடுக்குற தொல்லைகளையெல்லாம் சமாளிச்சு, எதிர்த்து நின்னு, தைரியமா போராடி, தொழில்ல எப்படி முன்னேறுறான்னு காட்டினா அது கதை! கோலங்கள்ல அதைத் தவிர, எல்லாமே நடந்துது.

நினைச்சபோது நினைச்சவங்களையெல்லாம் பொட்டு பொட்டுனு போட்டுத் தள்ளிக்கிட்டே இருந்தாங்க ஆதியும், அவன் கையாள் தில்லானும். தில்லான் ஏன் ஆதிக்காக அத்தனை கொலை பண்ணினான்னே தெரியலை. இத்தனைக்கும் அவனுக்கு ஆதி ஒண்ணுமே பண்ணலை. ஒரு சமயம் பெரிய பங்களா தரேன், சிங்கப்பூர்ல வீடு வாங்கித் தரேன்னு என்னென்னவோ சொல்லித் தராம ஏமாத்தவும் செஞ்சிருக்கான். அப்படியிருந்தும் இந்தத் தில்லான் மரை கழண்டவன் மாதிரி எதுக்கு ஆதிக்கு சேவகம் செஞ்சான்னு புரியலை. அதே மாதிரிதான் ஆதியின் பி.ஏ. கிரியும். ‘பாஸ்... பாஸ்...’னு அவன் கூப்புடறதே புளியேப்பம் விடுறது மாதிரிதான் இருந்துது. (பழைய நடிகர் பாலையா பேரனாமே! பாவம், பாலையா!)

அம்மாவைச் சுட்ட பின்பு ஆதி எங்கே அந்த ஓட்டம் ஓடினான்? எதுக்காகக் கட்டடத்துலே மேல ஏறினான்? டைட்டானிக் ஹீரோ, ஹீரோயின் மாதிரி எதுக்குக் கைகளை விரிச்சிட்டு நின்னான்? தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தவன் அம்மாவைச் சுட்ட அதே இடத்திலேயே சுட்டுத் தற்கொலை பண்ணிட்டிருக்க வேண்டியதுதானே? நமக்கும் ஒரு எபிஸோடு மிச்சமாகியிருக்குமே?

ஆதி செத்தது மாதிரி காட்டாம, மூளை குழம்பிய பிண்டமாய்க் காட்டியது ஏன்? வேறென்ன, ‘கோலங்கள் பார்ட் டூ’-வுக்கான அஸ்திவாரமா இருக்கும். ஐயோடா சாமி! கோலங்கள் இரண்டாம் பாகம் வரும்னு கற்பனையில நினைக்குறப்பவே, என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது..!

ஆதி டரியல் ஆனப்பவே கதை முடிஞ்சுடுச்சு. அப்புறம் பார்க்குறதுக்கு ஒண்ணுமில்லே. (சரி, முன்னே மட்டும் ஏதாவது இருந்ததாக்கும்?) அபி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா? இதான் கிளைமாக்ஸ். அவ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? பாஸ்கரை (அபிஷேக்) பண்ணிப்பான்னு சஸ்பென்ஸ் வைக்குறாங்களாம். அந்த ஆளு அபிஷேக் எப்பவுமே ஒரே மாதிரி, ஈஸ்னோஃபீலியா தொல்லைக்கு ஆளானவர் போல தஸ்ஸு புஸ்ஸுன்னுதான் பேசிக்கிட்டிருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டவர் கிட்டே, “நீ கொலைகாரன். உன் பெண்டாட்டியைக் கொன்னவன்”கிறா அபி. எப்படி அவர் தன் பெண்டாட்டியைக் கொலைதான் செஞ்சாருன்னு அபி தெரிஞ்சுக்கிட்டாள்னு தெரியலே. எந்த ஆதாரமும் கிடைக்காத ஒரு பக்கா விபத்தாதான் அதை அபிஷேக் செட்டப் செய்திருந்தாரு. நமக்கும் அப்படித்தான் காட்டினாங்க. அதை அபி எப்படிக் கண்டுபிடிச்சாங்கிறதுக்குக் காரணமே இல்லை. திடீர்னு போலீஸ் வருது. பாஸ்கர் தன் துப்பாக்கியால சுட்டுக்கிட்டுச் சாகுறாரு. ஏன்? புரியலை. சரி, கதையை ஒருவழியா முடிச்சா போதும்னு திருச்செல்வம் நினைச்சிருப்பார் போல!

‘நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்’னு அபி தொல்காப்பியன் கிட்ட சொல்லும்போது, ‘நான் ஒரு நல்ல நண்பனாதான் இருக்க முடியும். நல்ல கணவனா இருக்க முடியாது’ங்கிறாரு தொல்ஸ். காரணம், தன் கணவன் வேற ஒரு பொண்ணோட நட்பு வெச்சிருக்கிறதை எந்தப் பெண்ணாலும் ஏத்துக்க முடியாதுன்னு சொல்றாரு. இதுவே உளறல். நிஜமான நட்பை இந்தக் காலத்துப் பெண் ஏத்துக்கவே செய்வா. சரி, அப்படியே இருக்கட்டும். அடுத்த காட்சியில, அபியின் அம்மா தொல்ஸ் கிட்டே, ‘அபிக்கு கல்யாணமாகி நல்லபடியா ஒரு குடும்ப வாழ்க்கை அமையணும். அது உங்க கையிலதான் இருக்கு’ன்னு சொல்றப்போ, ‘என் கையிலயா? நான் என்ன பண்ணணும்?’னு ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிறாரே, ஏன்? உடைச்சு சொன்னப்புறம்தான் அவர் மர மண்டைக்குப் புரியுதாம்! இத்தனைக்கும் இந்தப் பிரச்னை ஏற்கெனவேயும் ஒரு முறை வந்து, அபி கிட்டேர்ந்து விலகித் தனியா இருந்தவர்தான் தொல்ஸ்.

நேற்றைய காட்சியில அபியைத் தியாகத்தின் திருவுருவா கொண்டாடிட்டாங்க. தங்கச்சி பேர்ல இத்தனை கோடியாம், தம்பி பேர்ல இத்தனைக் கோடியாம், மாமனுக்கு வீடாம், கடையாம்னு சகலருக்கும் கோடிக் கோடின்னு பத்திரம் எழுதி வெச்சிருக்காளாம் அபி. ஆடிட்டர் நீளமா படிச்சுக்கிட்டே போறார். புராஜெக்டை முடிக்கக் காசில்லேன்னு தவிச்ச அபி, கட்டட வேலையா ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத அபி எங்கேர்ந்து இத்தனைக் கோடிகளைச் சேர்த்தா... அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை. சரி, ஆதி கதை முடிஞ்சதுமே மளமளன்னு எல்லாத்தையும் பண்ணி முடிச்சுட்டாள்னு ரெண்டொரு சீன்ல காமிச்சாச்சுன்னு சொன்னாலும், அதுவரைக்கும் தம்பியும், தங்கச்சியும் என்ன பண்ணிட்டிருந்தாங்க, அப்போ தனியாப் போற பிரச்னையைக் கிளப்பலியா, பத்திரம் ரெடியானதுமே அவங்க கிட்ட அபி கொடுத்திருக்கலாமே? ஏன் கொடுக்கலை. ம்ஹூம், ஒண்ணும் புரியலை! தங்கச்சி ஆனந்திக்கு (மஞ்சரி) பாவம், ஒண்ணுமே செய்யலை அபி! அதை பார்ட் டூ-ல மறக்காம சேர்த்துடுங்க திருச்செல்வம்!

‘எனக்குக் குழந்தைங்க இருக்கும்மா’ன்னு அபி சொன்னதும் அம்மா, ஆடிட்டர், தம்பி, தங்கச்சின்னு எல்லாரும் புரியாம மலைச்சு மலைச்சுப் பார்க்குறாங்க! இதுல என்ன குழப்பம் வேண்டியிருக்குன்னு புரியலை. அபியே பல தடவை மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்தைப் பத்திச் சொல்லியிருக்கா; கடைசியாவும் அவங்களுக்கு ஒரு டிரஸ்ட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதா சொன்னா. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு?

நான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கும்போது இந்தியில ‘ஜுனூன்’னு ஒரு சீரியல் வந்தது. இப்படித்தான் இழு இழுன்னு அஞ்சாறு வருஷம் இழுத்தாங்க. கடைசியில, ‘சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும்’னு சொல்லி, அத்தோடு ஊத்தி மூடிட்டாங்க. அந்த மாதிரியெல்லாம் இல்லாம, சொதப்பலா இருந்தாலும் ஒரு சீரியலை முழுசா முடிச்சாரே திருச்செல்வம், அதுக்காக அவரைப் பாராட்டலாம்! பின்னே... அபிக்கு என்ன ஆச்சு, ஆதிக்கு என்ன ஆச்சு, அபி ஜெயிச்சாளா தோத்தாளான்னு யாரு ஆயுசு முழுக்கக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறது!

மத்தபடி, இதுல நடிச்சிருந்த தேவயானி, ஆதி, திருச்செல்வம், மோகன்ராவ் (அபியோட அப்பாவா வர்ற இவரு நடிகை லட்சுமியோட மாஜி புருஷனாமே, அப்படியா!), சத்தியப்ரியா, தில்லான் (சமயத்துல கலாபவன் மணி மாதிரி ஓவர் கிறுக்குத்தனம் பண்ணினாலும்), தோழர் பாலகிருஷ்ணனா வந்த டைரக்டர் ஆதவன், அபிஷேக் (பிராங்கைடிஸ் குரல்ல பேசிக் கடுப்படிச்சாலும்), நளினின்னு அத்தனை பேருமே தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமா செஞ்சாங்க. அருமையா நடிச்சாங்க. ‘கோலங்களை’ நான் விடாம பார்க்க அதுதான் முக்கியக் காரணம். பாராட்டுக்கள்.

ஐயோடா சொக்கி! இன்னிக்கு முடிவையும் பார்த்துப்புட்டு அதைப் பத்தியும் நாலு வார்த்தை எழுதலாம்னு நெனைச்சிருந்தேனே... இப்படி என் நெனைப்புல மண்ணள்ளிப் போட்டுட்டுப் போயிட்டியே ராசா! கேபிள் புட்டுக்குச்சே! நான் என்ன செய்வேன்... ஏது செய்வேன்... பார்த்த மகராசிங்க யாராச்சும் அபிக்கு என்ன ஆச்சு, காப்பகக் குழந்தைகளோட போயி செட்டிலாயிட்டாளான்னு சொல்லுங்களேன்! இல்லாட்டி என் தலையே வெடிச்சிடும் போலிருக்கே!


.
|
This entry was posted on Friday, December 04, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

38 comments:

On Dec 5, 2009, 2:28:00 PM , பின்னோக்கி said...

மன நலம் குன்றிய குழந்தைகளைக் காட்டி பரிதாபம் சம்பாதிப்பது வருந்தத்தக்கது. இந்த அலங்(கோலத்து)ல வந்த பணத்துல கொஞ்சம் அந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 
On Dec 5, 2009, 7:30:00 PM , ப்ரியமுடன் வசந்த் said...

எப்படியோ கணவர்களுக்கு இனி கொஞ்சம் ரிலாக்ஸ்..

//பின்னோக்கி said...
மன நலம் குன்றிய குழந்தைகளைக் காட்டி பரிதாபம் சம்பாதிப்பது வருந்தத்தக்கது. இந்த அலங்(கோலத்து)ல வந்த பணத்துல கொஞ்சம் அந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.//

ரிப்பீட்ட்.,

 
On Dec 5, 2009, 7:45:00 PM , Unknown said...

மெகா சீரியல்கள் நம்பர் ஒன் டி.ஆர்.பி. இருக்கறவரைக்கும் இழுக்கறாங்க. அது எறங்க ஆரம்பிச்சதும் முடிச்சாக வேண்டிய கட்டாயத்துல பட்டு பட்டுன்னு எல்லாரையும் திருத்தி, திருந்தாதவங்கள காலி பண்ணி ரெண்டே வாரத்துல முடிச்சுடறாங்க. அதுக்கு பதிலா அவுங்களே தேதி குறிச்சு முடிச்சா, முடிவையும் ஓரளவு ஒத்துக்கற மாதிரி விரிவா கொண்டு போக முடியும்.

கோலங்கள்ள ஆனதும் அதுதான். சுவிட்ச் போட்டாப்ல எல்லாரும் நான் திருந்திட்டேன்னு சும்மா டப்பு, டப்புன்னு சொன்னாங்க பாருங்க அது வடிவேலு காமெடிய விட படா டமாசா இருந்துச்சு.

இந்த அபிஷேக் பேச்ச நீங்க நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க. அவரு ஜெயா டிவில நடத்தற ப்ரோக்ராம்ல நல்லாத்தான் பேசறாரு. இதுல மட்டும் ஏன் அப்படி மூச்ச இழுத்து இழுத்து பேசினாருன்னு தெரியல. இத்தனைக்கும் மொதல்ல நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்த கேரக்டர். (நடிகர் கார்த்திக் வாயில வாழப்பழம் இருக்கறாப்ல பேசி எரிச்சல் மூட்டியது ஞாபகம் வருது).

நல்ல வேளை நீங்க கடைசி நாள் பாக்கல, சத்திய ப்ரியாவும், மோகனும் பார் மகளே பார் ரேஞ்சுக்கு தெருவுல “அபி, அபி”ன்னு ஓடினது தனிக்கொடுமை.

சத்தியமூர்த்தி
http://www.sathyamurthy.com

 
On Dec 5, 2009, 7:51:00 PM , வேலன் said...

அலோ படித்துறை. போதுங்க. ப்ளீஸ். வேற ஏதாவது பேசுங்க. பதிவுலகத்தையாவது உருப்பிட விடுங்க . இதையும் உங்க வீட்டு டிவிரூம் ஆக்காதீங்க.

 
On Dec 5, 2009, 9:35:00 PM , சிம்பா said...

நீங்க முடிவை பார்க்க முடியலை என்று சொன்னா நாங்க உட்டுடுவோமா?

இதோ கீழ இருக்க இணைப்புல போய் பாருங்க. சந்தோசமா அதையும் பார்த்து, இன்னும் கொஞ்சம் அர்ச்சனை பண்ணுங்க.

http://tamiltv4u.com/kolangal/kolangal-tamil-serial-04-12-09/

 
On Dec 6, 2009, 12:18:00 AM , butterfly Surya said...

அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை. ////////// சூப்பர்.

நந்தினி.உங்களுக்கு நகைச்சுவை பதிவு நல்லா வருது. தொடருங்கள்..

சிரிச்சு படிச்சு ரசிச்சேன்.

ஒரு வழியா கோலங்கள் முடிந்தது. 8-30 மணிக்கு இனிமே சோறு கிடைக்கும்.

 
On Dec 6, 2009, 5:56:00 AM , Gokul Visweswaran said...

Hi, please check kolangaltv.blogspot.com to watch all episodes for the last one year. Enjoy.

 
On Dec 6, 2009, 10:46:00 AM , சத்ரியன் said...

//அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை.//

கிருபா நந்தினி,

காமெடி பதிவுலயும்....லைட்டா சமூக அக்கறைய காட்டியிருக்கீங்களே.....சமத்து சகோதரி.

 
On Dec 6, 2009, 12:02:00 PM , காரணம் ஆயிரம்™ said...

//அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை..

ஆத்தி.. ஏதோ சின்னச்சின்ன விஷயத்திலிருந்து, டபால்னு பெரிய விஷயத்துக்கு போயிட்டீங்க..

//அதை பார்ட் டூ-ல மறக்காம சேர்த்துடுங்க திருச்செல்வம்!

வேணாம்.. அழுதுருவேன்..(ஆறேழு வருஷம் அழுதது போதாதா)

http://kaaranam1000.blogspot.com

 
On Dec 6, 2009, 12:47:00 PM , கமலேஷ் said...

அழகான பதிவு...

 
On Dec 6, 2009, 8:17:00 PM , angel said...

‘கோலங்கள் பார்ட் டூ’-


nooooooooooooooooooooooooooooo

 
On Dec 7, 2009, 7:21:00 AM , Romeoboy said...

யப்பா கடைசி எபிசோடு பார்க்காத முன்னாடியே இத்தனை பெரிய விமர்சனமா ??

உங்க காமெடி சென்ஸ் சூப்பர்க

 
On Dec 7, 2009, 8:12:00 AM , SenthilMohan K Appaji said...

மீண்டும் கோலங்கள் பதிவா? நான் படிக்கலீங்கோ. எஸ்கேப்புங்கோ.

 
On Dec 7, 2009, 12:33:00 PM , மகா said...

//அலோ படித்துறை. போதுங்க. ப்ளீஸ். வேற ஏதாவது பேசுங்க. பதிவுலகத்தையாவது உருப்பிட விடுங்க . இதையும் உங்க வீட்டு டிவிரூம் ஆக்காதீங்க.// Repeat....

 
On Dec 7, 2009, 4:32:00 PM , ப்ரியா கதிரவன் said...

சூப்பர்ங்க. ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.

 
On Dec 7, 2009, 4:51:00 PM , Suddi said...

Hi,

Caution : A lengthy essay on Kolangal !!!.

Kolangal - is a proper example for bubble gum mega serials..

Many characters came in between and escaped..
I will give a small list, whom I can remember..

1) Chandra - murdered by Dilla.
2) Madhupal - lover of Menaka
3) Ganga - 1 side lover of Thols ( or Thols also loved her?). Who cares and bothers?.
4) Ganga's parents - Male dominating father, ayyo pavam amma.
5) Sivasu - The setup of Adhi, who extracts money from Mano and Rajesh..
6) Sivasu's co-called sister or setup or whoever it is.
7) Landlord of Thol's house, who wanted 1 of his
daughters to marry Thols.

My mother will have more detailed information..

Some stupid but thought provoking questions, which you have missed :
1) The Police AC took 1 crore from Adhi.. And
why the court did not take action against that ACP?.
2) Why Adhi was not shot in court itself?.
Adhi went to the extent of going near to the
Judge's table, taking the judge himself as a hostage.
3) If Abhi knew the reality that Bhaskar killed his wife and father-in-law, why the hell she did not go to police prior?. Why was she waiting till the last few episodes to tell the truth?. Abhinaya is so fond of following the law right?.
4) One fine point of time, Abhi was supposed to bear 300 Crores (appa.. dont even know the number of zeroes), for doing the Digital Valley Corporation project.. What happened to this 300 Crores?.
5) In reality as well as realty sector, Adhi's vengence is totally stupid.

Except the Tatas, Birlas, Ambanis, TVS group,
who ever is in the market, from Infosys, Wipro, Sathyam, IFlex, local nadaar stores etc.,
1 day, all people would have worked somewhere, gained experience and knowledge in a particular field and then made it big.

Even a road side mechanic shop who does puncture work for your 2 wheeler, would have worked as a "apprentice" or edubidi in another shop.

No man will ever think about going to the level of Adhi and his madness. Reason - it's easy to concentrate and improve self's business, rather to go behind my ex-employee and kill him or her.
If I do this, there will never be an end to this.

6) People went mad, to watch Kolam.. May be for the following reasons..
Continous problems given to Abhi by Adhi.
Abhi, being a woman, standing up and fight.
Twists and turns - well, you can never guess the next day's episode..
Even Thols wont know, who will meet whom and when and for what ?.


7) Why Adhi killed his own brother Arjun?.
If it's for the sake of money or if Arjun asked his share in business, it's madness.. Adhi being a business tycoon, should not get bogged down for such a silly thing. It's also not the sentiment, that his father's business will be split..
8) After seeing Sankara Pandian turning approver, how or why Adhi left Dilla?.
Surely, Giri and Dilla were allakais of Adhi from day 1 and when Adhi decided to kill Giri, Dilla should also be killed right?.

Few things I really liked about Kolangal :
1) The tamil of Tholar Balakrishnan.
This kind of tamil has seized to exist in TVs.
Just see Sun music for 1 hour, you will know my point.

[ I am settled in Bangalore, my son does not know that something called pure tamil existed or exists on earth. He asked 1 day, why that uncle is talking in Kannada?. ]

2) The robotic movements of Dilla.
3) Ever crying, pillar catching amma Sathya priya. Her ever favorite dialogue :
Yen abhi, yen abhi unakku mattum ippadi?.
4) Stupidity of Giri.
5) Kondal Reddy's (allakai of Dilla) tamil.
Even Kondal started talking in tamil, due to the
association with Dilla & Tholar.
6) Srilankan tamils problem - note that Kolangal only spoke (atleast they spoke) regarding that.

Ithu Yaaru thaitha Sattai,
Ithu Thatha thaitha Sattai.

You can watch the episodes of Kolam in the
following website.. Without any ads :-)

If we travel somewhere, this site is the one which will help to watch the episodes, free of cost.

http://kolangaltv.blogspot.com/

Sudharsan

 
On Dec 7, 2009, 10:02:00 PM , வால்பையன் said...

உங்களுக்கு அநியாய பொறுமை, இதெல்லாமா உட்கார்ந்து பாப்பிங்க!?

 
On Dec 8, 2009, 12:42:00 PM , கிருபாநந்தினி said...

கரெக்டா சொன்னீங்க பின்னோக்கி, உடல் ஊனத்தை வியாபாரப் பொருளாக்கிக் காசு சம்பாரிக்கிறது பிச்சையெடுக்குறதைவிடக் கேவலம். அதுக்குப் பரிகாரம் நீங்க சொல்ற மாதிரி செய்யுறதுதான்!

 
On Dec 8, 2009, 12:43:00 PM , கிருபாநந்தினி said...

பிரியமுடன் வசந்த, என்னது... கணவர்களுக்கு இனி ரிலாக்ஸா? விட்டுருவாங்களா நம்மாளுங்க. அடுத்த சரக்கோட வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க!

 
On Dec 8, 2009, 12:44:00 PM , கிருபாநந்தினி said...

சாம், நம்ம ரெண்டு பேர் எண்ணமும் சேம்!

 
On Dec 8, 2009, 12:45:00 PM , கிருபாநந்தினி said...

வேலன், ரொம்பவே நொந்திருக்கீங்க போல்ருக்கு! ஐயாம் ஸோ ஸாரி!

 
On Dec 8, 2009, 12:46:00 PM , கிருபாநந்தினி said...

சிம்பா! கடைசி எபிசோட் இணைப்பு கொடுத்து என்ன வம்பா பண்றீங்க? ஆனாலும் பார்த்துட்டேன்! ஆனா, அதைப் பத்தி எழுதாதீங்கன்றாரே நம்ம வேலண்ணாச்சி!

 
On Dec 8, 2009, 12:48:00 PM , கிருபாநந்தினி said...

எட்டரை மணிக்கு சோறு கிடைக்குமா? ஹூக்கும், ஆச தோச! கிடைக்க விட்ருவமா? தென்றல் வந்து புயலா நுழைஞ்சுடுச்சே!

 
On Dec 8, 2009, 12:50:00 PM , கிருபாநந்தினி said...

என் போன பின்னூட்டம் பட்டாம்பூச்சி அண்ணனுக்கு! இது கோகுல் விக்னேஷ்வரனுக்கு! ஒரு வருஷ எபிஸோடையும் பாருங்கன்னு சொல்லிப் படுத்தறாரே, நான் என்ன செய்வேன்!

 
On Dec 8, 2009, 12:54:00 PM , கிருபாநந்தினி said...

சத்ரியன், நீங்க சத்யன்னுகூடப் பேர் வெச்சிருக்கலாம். பின்னூட்டத்துல உண்மையைப் புட்டுப் புட்டு வெச்சுட்டீங்களே! (கொஞ்சம் பாராட்டி எழுதினா போதுமே?!)

 
On Dec 8, 2009, 12:56:00 PM , கிருபாநந்தினி said...

காரணம் ஆயிரம்! அதென்ன, வாரணம் ஆயிரம் படம் வந்த பிறகு பிளாக் எழுத ஆரம்பிச்சீங்களா, என்ன?! பட்... உங்க பின்னூட்டம், ஐ வெரி லைக் இட்!

 
On Dec 8, 2009, 12:57:00 PM , கிருபாநந்தினி said...

கமலேஷ்! அழகான பின்னூட்டம்!

 
On Dec 8, 2009, 12:59:00 PM , கிருபாநந்தினி said...

ஏஞ்செல் இன் டு தி ஹெவன்! நீங்களே நோ.......ன்னு அலறினா, டெவில் இன் டு தி ஹெல்னு ஆக்கிடுச்சு போலிருக்கே அந்த சீரியல்! :)

 
On Dec 8, 2009, 1:01:00 PM , கிருபாநந்தினி said...

கடைசி எபிசோட் பார்த்திருந்தா காமெடி சென்ஸ் டிராஜிடி சென்ஸ் ஆகியிருக்குமோ ரோமியோ பாய்?

 
On Dec 8, 2009, 1:01:00 PM , கிருபாநந்தினி said...

SM, Sகேப் ஆனா விட்ருவமா?

 
On Dec 8, 2009, 1:04:00 PM , கிருபாநந்தினி said...

\\ரொம்பவே நொந்திருக்கீங்க போல்ருக்கு! ஐயாம் ஸோ ஸாரி!// எனக்கும் போடத் தெரியும் மகா, ரிப்பீட்டு...

 
On Dec 8, 2009, 1:06:00 PM , கிருபாநந்தினி said...

ப்ரியா! சீரியல் பார்த்து அழுததுக்கு ஒரு நல்ல மாற்றமா இருந்துதா? தேங்க்ஸ்!

 
On Dec 8, 2009, 1:10:00 PM , கிருபாநந்தினி said...

சுத்தி! \\If Abhi knew the reality that Bhaskar killed his wife and father-in-law, why the hell she did not go to police prior?. Why was she waiting till the last few episodes to tell the truth?. Abhinaya is so fond of following the law right?// பதிவெழுதும்போது இதையும் குறிப்பிட நினைச்சேன். ரொம்ப நீண்டுடப் போகுதேன்னு விட்டுட்டேன். நீங்க மறக்காம குறிப்பிட்டதுக்கு நன்றி! (அட, எம்மாம்பெரிய பின்னூட்டம்!)

 
On Dec 8, 2009, 1:11:00 PM , கிருபாநந்தினி said...

வால்பையன்! நீங்க நெஜம்மாவே வாலுதாங்கோ! இத்த யாராவது பொறுமையா பாப்பாங்களா? அப்பப்ப பார்த்ததுதான்!

 
On Dec 16, 2009, 7:58:00 PM , ப்ரியா கதிரவன் said...

//ப்ரியா! சீரியல் பார்த்து அழுததுக்கு ஒரு நல்ல மாற்றமா இருந்துதா? தேங்க்ஸ்!
//
சீரியல் பார்க்குற தப்பெல்லாம் பண்றதில்லைங்க.
வீட்டில பெரியவங்க பாக்குறப்போ, காதாலேயே சில சமயங்கள் சீரியல் பார்க்குறதுண்டு.

 
On Dec 20, 2009, 3:12:00 PM , ராக்கி said...

ஹலோ, நந்தினி. மாதவி பற்றி விமர்சனம் எழுதுவீர்களா?

 
On Dec 20, 2009, 7:50:00 PM , Nara said...

;-)

 
On Dec 28, 2009, 3:02:00 PM , UshaMathan said...

I like ur post very much