Author: கிருபாநந்தினி
•Friday, December 11, 2009
ன் அபிமான சீனியர் நடிகர் ரஜினிகாந்துக்கு என்னோட 60-வது பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!

ரஜினியைப் பத்தித் தனியே ஒரு பதிவே போடணும்னு நினைச்சிருக்கேன். அது நாளைக்கு!

ட்பு, காதல், கல்யாணம்கிற வார்த்தைக்கெல்லாம் ஆளாளுக்குப் புதுப்புது விளக்கமும் வியாக்கியானமும் கொடுத்துட்டிருக்காங்கப்பா... தாங்கலை!

‘பாண்டவர் பூமி’ படத்துல ஒரு பாட்டு வரும்... ‘தோழா, தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்...’னு. ரொம்ப நல்ல பாட்டுதான்! ஆனா, அதுல சில கருத்துக்கள் எனக்குச் செரிமானமாகலை.

நட்புங்கிறது ஒரு நிலை; காதல்ங்கிறது ஒரு நிலை; கல்யாணம்கிறது ஒரு நிலை.

ஒரு ஆணும் ஆணும் நட்பா இருந்தா, ஒரு பெண்ணும் பெண்ணும் நட்பா இருந்தா அது அந்த அளவிலேயே நிக்கும். காதல், கல்யாணம்னு அடுத்தடுத்த ஸ்டேஜ்களுக்குப் போகாது. அதுவே ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருந்தா, அது இன்னும் கொஞ்சம் இறுகி காதலா மாறுறதுக்கு சான்ஸ் இருக்கு. காதல் உறுதியா இருந்தா அது கல்யாணத்துல முடியவும் வாய்ப்பிருக்கு. அதுல தப்பு ஒண்ணும் இல்ல.

நட்பிலிருந்துதான் காதல் பிறக்கும். ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ வகைக் காதல் எல்லாம் சரியான காதல்தானாங்கிறதுல எனக்கு டவுட்!

‘தோழா, தோழா’ பாட்டுக்கு வருவோம். நட்பைப் பத்தி சிலாகிச்சுப் பாடுற அதுல ஒரு வரி... ‘காலம் பூரா காதல் இல்லாம வாழ்ந்துக்கலாம்; அது ஆயுள் வரைக்கும் களங்கப்படாம பார்த்துக்கலாம்...’ அதாவது, அவங்க நட்பு களங்கப்படாம பார்த்துக்குவாங்களாமா!

இப்படித்தான் ‘கோலங்கள்’ சீரியல்லயும் (‘ஆஹா! ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டானு வேலன், மகா... ரெண்டு பேரும் கோவிச்சுக்காதீங்க. அந்த சீரியல் பத்தி எழுதி அறுக்க மாட்டேன்.) கடைசி எபிசோட்ல நட்பு, நட்புன்னு உருகினாங்க திருச்செல்வமும் அபியும்! (கடைசி எபிசோட் பாக்கலேன்னு எழுதியிருந்தியேன்னு கேக்கறீங்களா? சிம்பா கருணையோட அதுக்கான யூ-டியூப் லின்க் அனுப்பி, வம்படியா என்னைப் பார்க்கச் சொல்லி, விக்கி விக்கி அழ வெச்சுட்டாரே!) அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நட்பு களங்கப்பட்டுடுமாம். அதனால, கடைசி வரைக்கும் உனக்கு நான், எனக்கு நீனு இருந்துடறாங்களாம். நட்பு புனிதமாயிடுதாம்! அடங் கொக்கமக்கா!

நட்பு காதலா மலர்ந்தா அது களங்கப்பட்டுடுமா? அதெப்படிங்க. எனக்குப் புரியலை. அப்ப, நட்பு ஒரு சந்தனம், காதல் ஒரு சாக்கடைன்னு சொல்றாங்களா இவங்க?

ஆண்-பெண்ணின் நட்பின் அடுத்த மேல் படி காதல்; காதலின் அடுத்த மேல் படி கல்யாணம். இதுல களங்கம் எங்கேருந்து வந்துச்சுன்னு எனக்குப் புரியலீங்க.

நான் என் வீட்டுக்காரரைக் காதலிச்சுதாங்க கட்டிக்கிட்டேன். அவர் குடும்பமும் என் குடும்பமும் நெருங்கிய நட்புக் குடும்பங்கள். நான் பிராமின். அவரு சைவ வேளாளர் குலம். நாங்க அடுத்தடுத்த குடித்தனம். எங்க குடும்பத்துக்கு அவரு ரொம்பவே உதவியிருக்காரு. அவர் முயற்சியிலதான் என் தம்பியை நல்ல காலேஜில் சேர்க்க முடிஞ்சுது. என்னைப் பெண் பார்க்க வர்றப்ப எல்லாம், வந்தவங்க உட்கார தன் வீட்டுலேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் கொண்டு வந்து போடுவாரு. தன் வீட்டு ஃப்ரிஜ்லேர்ந்து எல்லாருக்கும் ஜூஸ் கொண்டு வந்து உபசரிப்பாரு. நாலஞ்சு பேரு என்னைப் பெண் பார்க்க வந்துட்டு, சொஜ்ஜி பஜ்ஜி மொக்கிட்டு, ‘போய் லெட்டரு போடறோம்’னு போய், ஜாதகம் சரியில்ல, சகுனம் சரியில்லன்னு ஏதாவது நொட்டைக் காரணம் சொல்லித் தட்டிக் கழிச்சுட்டாங்க.

அப்பத்தான் முதல் முறையா எனக்கு அந்த யோசனை வந்தது. அதுவரைக்கும் கிருபாகரனும் நானும் சினிமாக்கள்லயும் சீரியல்கள்லயும் சொல்ற மாதிரி நல்ல நட்போடதான் பழகிட்டிருந்தோம். நான்தான் முதல் முதல்ல கிருபா கிட்ட என் விருப்பத்தைச் சொன்னேன். “கிருபா, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?”ன்னேன். “கேளு! நீ தப்பாவே கேட்டாலும் நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்”னாரு. “யாரோரோ வந்து என்னைப் பொண்ணு கேட்டுட்டுப் போறாங்களே, நீயும்தான் வந்து என்னைப் பொண்ணு கேளேன். போய் லெட்டர் போடறேன்னுட்டு போயேன்”னேன். “ஏய், நீ சீரியஸா சொல்றியா? மத்தவங்க மேல இருக்குற கடுப்புல சொல்றியா?”ன்னாரு. “ஏன், சீரியஸாதான் சொல்றேன். உனக்குப் புடிச்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!”ன்னேன்.

சினிமாக்கள்ல காட்டுற மாதிரி வெக்கப்பட்டோ, நெளிஞ்சுக்கிட்டோ நான் இதைக் கிருபா கிட்ட கேட்கலை. ஒரு நல்ல நண்பன் கிட்ட யதார்த்தமா கேட்கிற மாதிரிதான் இயல்பா கேட்டேன். கிருபாவும் ஒண்ணும் ஷாக்கான மாதிரி தெரியலை. “நந்தினி! எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. எங்க வீட்டுலயும் ஒத்துப்பாங்க. ஆனா, உங்க வீட்டுல இதுக்கு என்ன சொல்வாங்களோ தெரியலையே!”ன்னார்.

இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியலை. ஏன்னா, எங்களை நல்ல நண்பர்களா பழக அனுமதிச்சிருக்கிற எங்க அப்பா, அம்மா, கல்யாணம் வந்தா என்ன சொல்வாங்களோங்கிற பயம் எனக்கும் இருந்துது.

“மொதல்ல உங்க அப்பா, அம்மா கிட்ட கேளு. அவங்க சம்மதிச்சா கல்யாணம் செஞ்சுப்போம். நான் தயார். ஆனா, அவங்க மறுத்துட்டா, அதை மீறி சினிமாவுல வர்றாப்ல நீ என் கூட ஓடி வர்றதுங்கிறதெல்லாம் சரிப்படாது. அவங்கவங்க அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருப்போம். நாம தொடர்ந்து நண்பர்களா இருக்க முடியும். ஏன்னா, நாம இப்ப வரைக்கும் காதலர்கள் இல்லை”ன்னாரு.

இதுக்காக நேரம், காலெமெல்லாம் பார்க்கலை. அடுத்த நிமிஷமே எங்க அப்பா, அம்மா கிட்ட போனேன். விஷயத்தைச் சொன்னேன். “அப்பா! போறும்ப்பா யார் யாரோ என்னைப் பொண் பார்க்க வந்தது. பேசாம நம்ம கிருபாவை எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுருங்க. அவன் கிட்டயும் கேட்டுட்டேன். அவன் ஓ.கே-ன்னுட்டான்” என்றேன் தடாலடியாக.

“லவ் பண்றியாடி?”ன்னாங்க அப்பாவும், அம்மாவும். “ஐயே! அதெல்லாம் கிடையாது. ஏதோ தோணித்து. அவன் கிட்ட கேட்டேன். அவனும் சரின்னுட்டான். ரொம்ப நல்ல பையன்மா. உங்களுக்குதான் தெரியுமே!”ன்னேன்.

கிருபாவைக் கையோட கூப்பிட்டு வரச் சொன்னாங்க. குஷியா ஓடிப் போய்க் கூப்பிட்டேன். வந்தார். “என்னப்பா, இவ என்னவோ சொல்றாளே!”ன்னாங்க.

“ஆமா சார்! திடீர்னு வந்து கேட்டா. மொதல்ல எனக்கும் ஒண்ணும் புரியலை. அப்புறம்... ஏன், இவளைக் கட்டிக்கிட்டா என்னன்னு தோணுச்சு. சரின்னுட்டேன். எங்களுக்கு ஓ.கே-தான். இனிமே உங்க முடிவைப் பொறுத்துதான் எல்லாம் நடக்கும்”னாரு.

“நீங்க சைவம்தானே?”ன்னு கேட்டாங்க என் அம்மா. “சுத்த சைவம்மா. முட்டையைக் கூட சேர்த்துக்க மாட்டோம்”னாரு.

“உங்க குடும்பம் பத்தித் தெரியும்ப்பா. நான் உன்னைக் கேட்டேன். வெளியில சாப்பிடுவியோ?”ன்னாரு அப்பா. “சேச்சே! அசைவம் தொட மாட்டேன். சிகரெட் பழக்கம், தண்ணியடிக்கிற பழக்கம் எதுவும் என் கிட்ட இல்லை. உங்களுக்குதான் தெரியுமே?”ன்னாரு.

அவ்வளவுதான். அடுத்தபடியா நேரே அவங்க வீட்டுக்கு எல்லாருமா போனோம். அவங்க அப்பா, அப்பா அம்மா கிட்ட பேசினோம். நாள் குறிச்சோம். அடுத்த மூணாவது மாசம் ஒரு சுப யோக, சுப முகூர்த்தத்துல எங்க கல்யாணம் நடந்தே நடந்துடுச்சு. அந்த மூணு மாசமும் நாங்க சுத்தாத இடமில்ல; போகாத சினிமா இல்ல. முழுமையான ஒரு காதல் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தோம். கல்யாணத்துக்குப் பிறகும் எங்களைக் காதலர்களாதான் நினைச்சுக்கறோம். நண்பர்களாத்தான் பழகிட்டு வரோம்.

இப்ப சொல்லுங்க, எங்க நட்பு களங்கப்பட்டுடுச்சா? கல்யாணம் பண்ணிக்கிட்டதால காதல் அழிஞ்சு போயிடுச்சா? இல்லையே! அப்புறம் ஏன் ஆளாளுக்கு நட்பு நட்புதான், காதல் காதல்தான்; நண்பர்களா இருக்கிற ஓர் ஆணும் பெண்ணும் காதலிக்கவே கூடாதுங்கிற மாதிரியெல்லாம் பாட்டு எழுதுறாங்க, சீரியல் தயாரிக்கிறாங்க?

இந்தக் கேள்விகளுக்கு யாருக்காச்சும் பதில் தெரிஞ்சா எழுதுங்கய்யா! உங்க குடும்பத்துல சண்டை, சச்சரவில்லாம ஆயுசு முழுக்க ஆனந்தமா வாழுவீங்க!


|
This entry was posted on Friday, December 11, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

51 comments:

On Dec 11, 2009, 10:59:00 PM , அண்ணாமலையான் said...

இந்த விஷயம் உண்மையா இருந்தா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிதான். congrajulations

 
On Dec 12, 2009, 1:20:00 AM , ப்ரியமுடன் வசந்த் said...

தோழா தோழா நல்ல விளக்கம்..டரியலாக்கிட்டீங்க அவ்வ்வ்வ்...

 
On Dec 12, 2009, 3:20:00 AM , sathishsangkavi.blogspot.com said...

//“மொதல்ல உங்க அப்பா, அம்மா கிட்ட கேளு. அவங்க சம்மதிச்சா கல்யாணம் செஞ்சுப்போம். நான் தயார். ஆனா, அவங்க மறுத்துட்டா, அதை மீறி சினிமாவுல வர்றாப்ல நீ என் கூட ஓடி வர்றதுங்கிறதெல்லாம் சரிப்படாது. அவங்கவங்க அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருப்போம். நாம தொடர்ந்து நண்பர்களா இருக்க முடியும். ஏன்னா, நாம இப்ப வரைக்கும் காதலர்கள் இல்லை”ன்னாரு.//

இங்க தாங்க நிற்கிறார் உங்க அத்தான்.....

உங்களுக்கு கிடைச்சமாதிரி அப்பா, அம்மா எல்லாருக்கும் அமைஞ்சா நட்பும் களங்கப்படாது, காதலும் அழியாது....
எல்லாருக்கும் இப்படிக்கிடைப்பதில்லை இதனால் தான் இத்தனை சீரியல், சினிமா பாட்டு வருது எல்லாம் ஹிட் ஆகுது...
வாழ்வில் நட்பு காதலாகி தோல்வில் அடைந்தவர்கள் தான் அதிகம்.......வெற்றி பெற்றவர்கள் உங்ளைப்போல் என்னைப்போல் குறைவுதான்........

கிருபாநந்தினி ஆயுசு முழுக்க ஆனந்தமா வாழ வாழ்த்துக்கள்...........

 
On Dec 12, 2009, 5:25:00 AM , பூங்குன்றன்.வே said...

நல்ல நட்பு இப்போ நல்ல குடும்பமாகியிருக்கிறது.நல்ல கணவரை பெற்ற உங்களுக்கும்,நல்ல மனைவியை பெற்ற மிஸ்டர்.கிருபாவிற்க்கும் வாழ்த்துக்கள்.

 
On Dec 12, 2009, 7:16:00 AM , Romeoboy said...

காதலிக்காமல் ஒரு காதல் கதை.. ச்சே பீலிங் பீலிங் ... நான் காதலிச்சேன் ஆனா அது கைகூடவில்லை நீங்க காதலிக்கவில்லை ஆனா கை கூடிடுச்சு . நட்புக்கும் , பெற்றோர்களுக்கும் மரியாதையை தந்த உங்கள் காதல் வாழ்கை அருமை ..

 
On Dec 12, 2009, 10:15:00 AM , Cable சங்கர் said...

அருமையான பகிர்வு.. எவ்வளவு பேருக்கு கிடைக்கும் இம்மாதிரியான ஒரு அனுபவம்.. உங்க்ள் வாழ்வு மேலும் சிறந்துவிளங்க, என் வாழ்த்துக்கள்..

அப்புறம் நீங்கள் உங்கள் அவரிடம் ப்ரோபோஸ் செய்த விதம் சிம்ப்ளி க்யூட்.. எனக்கு ஒரு நல்ல காட்சியை இலவசமாய் கொடுத்துள்ளீர்கள்.. நன்றி..:)

 
On Dec 12, 2009, 12:52:00 PM , அன்புடன் மணிகண்டன் said...

நெகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது உங்கள் காதல் கதை..
சூப்பர் ஸ்டார் பத்தி நானும் எழுதியிருக்கேன்.. வந்து பாருங்க..
http://anbudan-mani.blogspot.com/2009/12/blog-post_12.html

 
On Dec 12, 2009, 2:45:00 PM , N.SRINIVASAN said...

very good comment. my suggewtion also the same. first friendship. than lovae. than marriage. no other opinions.its very good .

 
On Dec 12, 2009, 5:15:00 PM , CS. Mohan Kumar said...

அட.. இவ்வளவு எளிமையான காதல் கதையா? இப்படி பெற்றோர் புரிஞ்சு நடந்து கிட்டா பிரச்சனையே இல்லை.

நட்பு காதலா மாறுவதில் எந்த தப்பும் இல்லை. அது தான் சரியும் கூட. எப்படி பட்ட ஆள் என தெரிந்து நேசிப்பது தானே சரி? தெரியாமல் கண்டதும் காதல் என்றால் அது நீண்ட காலம் நீடித்திருப்பது எப்படி இயலும்?

நிற்க. ரஜினி பிறந்த நாளுக்கு நான் ஸ்பெஷல் பதிவு எழுதிட்டேன். இயலும் போது வாசிக்கவும்

 
On Dec 12, 2009, 6:58:00 PM , கிரி said...

// நான் பிராமின்.//

ஐயையோ இதை வேற சொல்லிட்டீங்களா! போச்சு போங்க!

//நீங்க சைவம்தானே?”ன்னு கேட்டாங்க என் அம்மா. “சுத்த சைவம்மா. முட்டையைக் கூட சேர்த்துக்க மாட்டோம்”னாரு.//

ஹா ஹா ஹா

//இப்ப சொல்லுங்க, எங்க நட்பு களங்கப்பட்டுடுச்சா? கல்யாணம் பண்ணிக்கிட்டதால காதல் அழிஞ்சு போயிடுச்சா? இல்லையே! அப்புறம் ஏன் ஆளாளுக்கு நட்பு நட்புதான், காதல் காதல்தான்; நண்பர்களா இருக்கிற ஓர் ஆணும் பெண்ணும் காதலிக்கவே கூடாதுங்கிற மாதிரியெல்லாம் பாட்டு எழுதுறாங்க, சீரியல் தயாரிக்கிறாங்க?//

அவனுக பொழப்பத்த பசங்க :-))

 
On Dec 13, 2009, 2:17:00 PM , Paleo God said...

// நான் பிராமின்.//

ஐயையோ இதை வேற சொல்லிட்டீங்களா! போச்சு போங்க!

//நீங்க சைவம்தானே?”ன்னு கேட்டாங்க என் அம்மா. “சுத்த சைவம்மா. முட்டையைக் கூட சேர்த்துக்க மாட்டோம்”னாரு.//

ஹா ஹா ஹா

//இப்ப சொல்லுங்க, எங்க நட்பு களங்கப்பட்டுடுச்சா? கல்யாணம் பண்ணிக்கிட்டதால காதல் அழிஞ்சு போயிடுச்சா? இல்லையே! அப்புறம் ஏன் ஆளாளுக்கு நட்பு நட்புதான், காதல் காதல்தான்; நண்பர்களா இருக்கிற ஓர் ஆணும் பெண்ணும் காதலிக்கவே கூடாதுங்கிற மாதிரியெல்லாம் பாட்டு எழுதுறாங்க, சீரியல் தயாரிக்கிறாங்க?//

அவனுக பொழப்பத்த பசங்க :-))////

க க க போ.....:)

அருமையான பதிவு உங்கள் கணவருக்கு வாழ்த்துக்கள்...

 
On Dec 13, 2009, 5:34:00 PM , பின்னோக்கி said...

சினிமா எடுக்கக் கூடிய அளவுக்கு ரொமாண்டிக். வாழ்த்துக்கள். ரொம்ப ஈசியா இருந்திருக்கு கல்யாணம் உங்கள் பெற்றோர்களால்.

 
On Dec 15, 2009, 12:14:00 PM , SenthilMohan K Appaji said...

வாழ்த்துக்கள்.
//*ரஜினியைப் பத்தித் தனியே ஒரு பதிவே போடணும்னு நினைச்சிருக்கேன். அது நாளைக்கு!**/
எத்தன நாளைக்கு?

 
On Dec 15, 2009, 3:17:00 PM , மகா said...

அடுத்த பதிவுல கோலங்கள இழுக்க கூடாது இப்பவே சொல்லிட்டேன் .....

 
On Dec 15, 2009, 3:18:00 PM , மகா said...

நீங்க எழுதினத படிச்சப்ப பக்கத்தில இருந்து பார்த்த மாதிரியே இருந்துச்சு.. ...

அருமையான பதிவு .....

 
On Dec 15, 2009, 6:24:00 PM , Vijay said...

இதே கேள்வியைதான் நான் தாரணி யோட “எண்டர் தட்டினது” பதிவுல கேட்டேன். எனக்கும் புரியலை ஏன் நட்பு, காதல் ஆக கூடாதுன்னு. அப்பா அம்மா புரிஞ்சிக்கிறதை பத்தி இங்க நெறய பேரு பின்னூட்டி இருக்காங்க. உங்க விசயத்துல கிருபா பத்தி உங்க வீட்டுக்கு தெரியும். பாதி பேரு லவ் பண்றது வீட்டுக்கு தெரியாதவங்களைதானே!!!!

உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்..

 
On Dec 15, 2009, 9:48:00 PM , கிருபாநந்தினி said...

எந்த விஷயம் உண்மையா இருந்தா அண்ணாமலை? ரஜினிக்கு வயசு 60-ங்கிற விஷயமா? :) Bye the bye, கங்கிராஜுலேஷன்ஸ்ங்கிற வார்த்தைக்கான ஸ்பெல்லிங் congratulations. முதலாவதாக வருகிற ‘டி’யைக் கவனிக்கவும்!

 
On Dec 15, 2009, 9:49:00 PM , கிருபாநந்தினி said...

பிரியமுடன் வசந்த், பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி!

 
On Dec 15, 2009, 9:50:00 PM , கிருபாநந்தினி said...

சங்கவி! உங்க வாழ்த்துக்களால என் மனசு நெறைஞ்சு போச்சுங்ணா! ரொம்ப தேங்க்ஸ்!

 
On Dec 15, 2009, 9:51:00 PM , கிருபாநந்தினி said...

வே.பூங்குன்றன்! நீங்க வந்து பின்னூட்டமிட்டதே பூங்கொத்து கொடுத்தது மாதிரி குதூகலத்தைத் தந்தது!

 
On Dec 15, 2009, 9:53:00 PM , கிருபாநந்தினி said...

காதலிச்சது கைகூடலைன்னா கை கூடி வரவிருப்பவளைக் காதலியுங்க ரோமியோபாய்! மற்றபடி உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

 
On Dec 15, 2009, 9:55:00 PM , கிருபாநந்தினி said...

கேபிள் சங்கர், சட்டுப்புட்டுனு ஒரு படம் டைரக்ட் பண்ணி, அதுல இந்தக் காட்சியை வெச்சு, ‘நன்றி: கிருபாநந்தினி’ன்னு டைட்டில் கார்டு போட்டு என்னய கௌரவப்படுத்துங்க! :)

 
On Dec 15, 2009, 9:56:00 PM , கிருபாநந்தினி said...

அன்புடன் மணிகண்டன், ரஜினி பத்தி நீங்க அருமையா எழுதியிருக்கீங்க. பின்னூட்டம் போட்டதா ஞாபகம். இல்லேன்னா மறுபடி ஒருக்கா வந்து போடறேன்.

 
On Dec 15, 2009, 10:01:00 PM , கிருபாநந்தினி said...

Thanks a lot for your feedback Mr.N.Srinivasan!

 
On Dec 15, 2009, 10:23:00 PM , Anonymous said...

ஆஹா... நல்ல கவிதை! கலக்குங்க நந்தினி!

சுப்ரமணியம்

 
On Dec 15, 2009, 10:39:00 PM , கிருபாநந்தினி said...

மோகன்குமார்! பின்னூட்டத்துக்கு நன்றி! உங்க ரஜினி பதிவை வாசிச்சுட்டேன். பின்னூட்டமும் போட்டுப்புட்டேன்!

 
On Dec 15, 2009, 10:40:00 PM , கிருபாநந்தினி said...

\\ஐயையோ இதை வேற சொல்லிட்டீங்களா! போச்சு போங்க!// ஏனுங்ணா கிரிங்ணா! சொன்னதனால என்னங்ணா?

 
On Dec 15, 2009, 10:41:00 PM , கிருபாநந்தினி said...

பலா பட்டறை! வாழ்த்துக்களுக்கு நன்றி!

 
On Dec 15, 2009, 10:44:00 PM , கிருபாநந்தினி said...

பின்னோக்கி! இத்தனை சுலபமா காதலிச்சு, இத்தனை சுலபமா அதைப் பெரியவங்க கிட்ட சொல்லி, இத்தனை சுலபமா அவங்க ஒப்புக்கிட்டு, இத்தனை சுலபமா எங்க கல்யாணம் நடந்திருச்சுன்னா அது நிச்சயமா எங்க கொடுப்பினைதான்! ஆனா என்ன, எங்க காதல்ல ஒரு த்ரில்லே இல்லாம போயிருச்சு பார்த்துக்குங்க!

 
On Dec 15, 2009, 10:47:00 PM , கிருபாநந்தினி said...

SM, நீங்க கேட்டது நியாயம்தான். ஆனா, மத்த பதிவருங்க ரஜினி பத்தி எழுதியிருந்ததையெல்லாம் படிச்சேன். இதைவிடப் பெரிசா என்ன எழுதிடப் போறோம் நாமன்னுதான் விட்டுட்டேன்! ஸாரி!

 
On Dec 15, 2009, 10:49:00 PM , கிருபாநந்தினி said...

மகா! கோலங்கள் பத்தி இனிமே பதிவுல எழுதவே மாட்டேன். அவ்வளவு ஏன், நான் வீட்டு வாசல்ல போடுற கோலங்கள் பத்திக்கூட எழுத மாட்டேன்னா பார்த்துக்குங்க!

நெக்ஸ்ட்டு... பாராட்டினதுக்கு தேங்ஸு!

 
On Dec 15, 2009, 10:51:00 PM , கிருபாநந்தினி said...

\\பாதி பேரு லவ் பண்றது வீட்டுக்கு தெரியாதவங்களைதானே!!!!// அங்கதான் விஜய் எல்லாக் கோளாறும் ஆரம்பிக்குது. யாருக்கும் தெரியலேன்னா ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி கம்பி நீட்டிட அவனுக்கு வசதியாப் போயிடுது!

 
On Dec 15, 2009, 10:55:00 PM , கிருபாநந்தினி said...

\\ஆஹா... நல்ல கவிதை! கலக்குங்க நந்தினி!// கவிதயா? எது கவித? இன்னா சொல்றீங்ணா? ஒண்ணுமே புரியலீங்களே! :<

 
On Dec 15, 2009, 11:40:00 PM , butterfly Surya said...

உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் வாழ்த்துகள்.

ஆழ்ந்த நட்புடனும் காதலுடன் வாழ வாழ்த்துகள்.

 
On Dec 16, 2009, 1:23:00 AM , அண்ணாமலையான் said...

கவனித்தேன்,நன்றி.

 
On Dec 16, 2009, 11:01:00 AM , மகா said...

//நான் வீட்டு வாசல்ல போடுற கோலங்கள் பத்திக்கூட எழுத மாட்டேன்னா பார்த்துக்குங்க//

அய்யோ அய்யோ.... ஏங்க சீரியல் தான் வேணாமுன்னு சொன்னேன் அதுக்காக ஒரேடியா கோலம் பக்கம் கூட போகமட்டேனு அடம் பிடுச்சா எப்பிடி .........

 
On Dec 16, 2009, 7:55:00 PM , ப்ரியா கதிரவன் said...

Well done and Well said.
Congrats and wish you a great life.

 
On Dec 19, 2009, 7:48:00 PM , கிருபாநந்தினி said...

சூர்யாஜி! வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்ணா!

 
On Dec 19, 2009, 7:50:00 PM , கிருபாநந்தினி said...

அண்ணாமலையானுக்கு அரோகரா! நன்றியெல்லாம் எதுக்குங்ணா?

 
On Dec 19, 2009, 7:52:00 PM , கிருபாநந்தினி said...

இல்லை... நான் இல்லை... எழுத மாட்டேன்... ம்ஹூம், கோ---- பத்தி... ம்ஹூம், எழுதவே மாட்டேன். என்னை விட்டுடுங்க மகா!

 
On Dec 19, 2009, 8:00:00 PM , கிருபாநந்தினி said...

ப்ரியா! என்ன ஒரு அழகான பேரு! உங்க வலைப்பூ போயிப் பார்த்தேனுங்க்கா! பாட்டு க்விஸ்ல நாலாவது பாட்டு தவிர எனக்கு வேறொண்ணும் தெரியல. பதறியடிச்சுத் திரும்பி வந்துட்டேன்க்கா. அடிக்கடி வந்து எட்டிப் பார்ப்பேன் அங்கே! :) Bye the bye, Thanks a lot for your wishes! _/\_

 
On Dec 19, 2009, 8:04:00 PM , ரிஷபன் said...

காதல் வேண்டாம்னு யார் அம்மிணி சொன்னது.. பெருசுங்க கிட்ட தனியா விசாரிங்க.. ஒரு காதல் தோல்வி இருக்கும் உள்ளார.. அதுங்க மனசுல ஒரு பயம் நம்ம புள்ளயும் கஷ்டப்பட்டுரக்கூடாதுன்னு.. அம்புடுதேன்.. சக்சஸ் பண்ணி காமிச்சுட்டா.. அடுத்த தலைமுறை ஹாப்பியா லவ்வுதான்..

 
On Dec 20, 2009, 8:08:00 PM , ஆதி மனிதன் said...

நட்பு காதல். என்னைப் பொருத்தவரைக்கும் ரெண்டுமே ஒன்னு தான். ரெண்டுமே புனிதமானது. ஆனால் நட்பு என்றால் நட்புதான் - எல்லோருக்கும். ஆனால் காதலுக்கு மட்டும் பல definitions. எதுவாக இருந்தாலும் இரண்டுமே அன்பின் வெளிப்பாடு தான். ஆதலால் நட்பு காதலாக மாறுவதால் ஒன்றும் பாவமில்லை. அது எதிர் பாலாரிடம் தினிக்கப்படாமலிருக்கும் வரை.

பி. கு. உங்களுக்கு முன்னே நான் படித்துறையை என் வலைக்கு தேர்ந்தேடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் என்ன காரணத்தாலோ அதை தவற விட்டு விட்டேன். தற்போது மீண்டும் உங்கள் வலையின் பெயராக பார்ப்பதில் சற்று மகிழ்ச்சியே.

 
On Dec 21, 2009, 5:36:00 PM , கிருபாநந்தினி said...

\\பெருசுங்க கிட்ட தனியா விசாரிங்க.. ஒரு காதல் தோல்வி இருக்கும் உள்ளார..// ரிஷபன் சார், நீங்க பெருசுங்களா, சிறுசுங்களா?! அனுபவம் பேசுறாப்ல இருக்கே?! :)

 
On Dec 21, 2009, 5:47:00 PM , கிருபாநந்தினி said...

வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்ணா, ஆதிமனிதன்! நீங்க படித்துறையைத் தவற விட்டீங்க; ‘படித்துறை’யை யதேச்சையா நான் புடிச்சுக்கிட்டேன். :)

 
On Dec 21, 2009, 8:03:00 PM , Sanjai Gandhi said...

நீங்க கோவை தானா? உங்க பதிவுகளை படிக்க சொல்லி ஒருத்தர் 2 நாள் என்னை தாளிச்சி எடுத்துட்டார். நல்லா தான் எழுதறிங்க.

//என்னோட 60-வது பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!//
உங்களுக்கு 60வது பிறந்த தினமா? வாழ்த்துகள் பாட்டிமா..

 
On Dec 24, 2009, 10:02:00 AM , Unknown said...

உங்கள் வாழ்க்கையை அழகா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்...

 
On Dec 29, 2009, 11:37:00 PM , - இரவீ - said...

வாழ்த்துக்கள்...

 
On Jan 22, 2010, 2:36:00 PM , C.N.Raj said...

Congrats....For your Love Marriage..

Your blogs give a feel of taking Life easy but with an inner core which says Be Happy.

Raj.

 
On Feb 24, 2011, 12:00:00 AM , SABARI said...

பட்டைய கெளப்பிட்டிங்க... உண்மையாலும் இது ரொம்ப அழகான நிகழ்வு.... வாழ்த்துக்கள்...

 
On Feb 24, 2011, 12:10:00 AM , SABARI said...

இது ரொம்ப நல்ல நிகழ்வு.... படிக்கற என்க்கு சிலிர்ப்பை தருது... வாழ்த்துக்கள்....