Author: கிருபாநந்தினி
•Thursday, January 21, 2010
புதுக் குமுதம் படிச்சுட்டீங்களா? மீனாக்கா அட்டைப் படம் போட்டது.

மீனா பத்தி நான் ஒண்ணும் எழுதப்போறது இல்லை. பாவம், அழகான பொண்ணு. நல்ல நடிகை. சின்ன வயசுலேயே ரஜினி, கமல்னு சீனியர் ஆர்ட்டிஸ்ட்டோட எல்லாம் ஜோடி சேர்ந்து வயசான நடிகை மாதிரி ஒரு லுக் வந்துடிச்சி அதுக்கு. அடுத்ததா ரஜினிக்கு அம்மாவா நடிக்கப் போனாத்தான் உண்டு. சரி விடுங்க, சிலருக்கு ராசி அப்படி எகனை மொகனையா அமைஞ்சுடுது. என்ன பண்றது!

ராசின்னதும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா ஞாபகம் வந்துடுச்சி எனக்கு. அந்தப் பகுத்தறிவுப் பெரியவர் “எனக்கு ராசியில்லை அதுக்கு”ன்னெல்லாம் ஒரு தடவை பேசினாரே, அதை நெனைச்சுக்கிட்டேன். இப்ப ஏன் அந்த வேண்டாத நெனைப்பு உனக்குங்கிறீங்களா?

சொல்றேன். போன பதிவுலதான் அவர் ‘நல்ல காலம்...’னு பேசினதைப் பத்திக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதுக்குள்ள அடுத்த பகுத்தறிவுச் சுடர் ஒண்ணு தெறிச்சு விழுந்திருக்கு அவர் வாயிலேர்ந்து. ‘நீராரும் கடலுடுத்த...’ன்னு தொடங்குற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்ல, ‘ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து...’ங்கிற வரிகளை ஐயா நீக்கச் சொன்னாராம். ஏன்னா, மங்கல விழாக்கள்ல அந்த மாதிரியான வரிகள் வேணாமேன்னுதானாம். அப்ப என்ன சொல்ல வரார், பெரியார் பாசறையில் பயின்றவர்? மங்கலம், அமங்கலம் எல்லாம் உண்டுன்னு ஒப்புக்கறாரா? அது மூட நம்பிக்கையாச்சுங்களே? தமிழ்ச் சொல்லுலகூட அமங்கலச் சொல்னு உண்டுன்னு ஐயா நினைக்கிறார் போலிருக்குதே!

பெரியார் நெஞ்சுல தெச்ச முள்ளைப் பிடுங்கினார் கலைஞர் ஐயான்னு பாராட்டி சில மாசங்கள் முன்னேதான் தமிழ்நாடு பூரா போஸ்டர் ஒட்டினார் வீரமணி ஐயா. கலைஞர் இப்படி அடிக்கடி தலைவிதி, ராசி, நல்ல காலம், மங்கலம், அமங்கலம்னு பேசிக்கிட்டே இருந்தா பெரியார் நெஞ்சுல மேல மேல இவரே முள்ளைக் கொண்டு தைக்கிற மாதிரி தோணுதுங்க எனக்கு. சரி, மாண்புமிகுவாச்சு, மானமிகுவாச்சு! அவங்களுக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். நான் ஆரம்பிச்ச விஷயத்துக்கு வரேன்.

இந்த வார குமுதத்துல ‘இங்கு ஈழம் விற்கப்படும்’கிற தலைப்புல ஈழக் கவிஞர் தமிழ்நதி எழுதியிருந்ததைப் படிச்சேன். என்ன சொல்றாங்கன்னா... புத்தகக் காட்சிக்குப் போயிருந்தாங்களாம். அங்கே பல பதிப்பகங்கள் ஈழத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களைத்தான் முன்னிலைப்படுத்தி இருந்துச்சாம். இது இனம்புரியாத கசப்பு உணர்வை அவங்களுக்குத் தந்துச்சாம்.

அது என்ன ‘இனம்புரியாத’ன்னு புரியலை. இனம் புரிஞ்ச கசப்பு உணர்வுதான் அது. அவங்களே பின்னாடி ஒரு இடத்துல சொல்றாங்க, ‘காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத் தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன’ன்னு. ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு.

ஈழத்துப் பிரச்னைகளைப் பத்திப் பேச, அவங்க துக்கங்களை தமிழ் மக்கள் கிட்டே கொண்டு சேர்க்க எனக்குத் தெரிஞ்சு குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், நக்கீரன்னு எல்லாப் பத்திரிகைகளுமே வரிஞ்சு கட்டிக்கிட்டு உழைச்சிருக்கு. செய்திகளை உடனுக்குடன் போட்டிருக்கு. ஈழத்து மக்களின் வலியைத் தமிழன் கொஞ்சமாவது இப்ப உணர்ந்திருக்கான்னா அதுக்குக் காரணமே தமிழ்ப் பத்திரிகைகள்தான். அப்போவெல்லாம் அது காசு பார்க்கிற கயமைத்தனமா தெரியலையா தமிழ்நதிக்கு? அந்தச் செய்திகளையெல்லாம் புத்தகமா போட்டு விக்கிறதுகூட, தமிழ் மக்கள் மனசுல ஈழத்து மக்களின் வேதனைகளை அழுத்தமா பதிய வைக்கிற ஒரு முயற்சிதான். வார பத்திரிகைகள்னா அப்போதைக்கப்போது படிச்சிட்டு, பழைய பேப்பர் கடைக்குப் போட்டுக் காசு பார்க்கிறதோட மறந்துடுவாங்க. ஒரு புத்தகமா வந்தா, அந்த ரணம் இன்னும் ஆழமா படியும். அதைக் காசு பார்க்கிற கயமைத்தனம்னு இந்தம்மா சொல்றதுதான் மகா கயமைத்தனமா தெரியுது எனக்கு. வேடிக்கை என்னன்னா இவங்க குமுறலையும் என் அபிமான ‘குமுதம்’தான் வெளியே கொண்டு வர வேண்டியிருக்கு.

‘சோறு கிடைத்தால் போதுமல்லவா நண்பரே! அடுத்தவர்களின் ரத்தமாவது, சதையாவது!’ன்னு பஞ்ச் டயலாகோட கட்டுரையை முடிச்சிருக்காங்க தமிழ்நதி.

ஒரு தடவை, காந்திபுரம் மார்க்கெட் போயிருந்தப்போ கண்ணு தெரியாத ஒரு பொம்பளையைக் கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போய் உதவி பண்ணலேமேனு போனப்போ, “லீவ் மி அலோன்! ஐ வில் மேனேஜ். உங்க பரிதாபமோ, பச்சாத்தாபமோ எனக்குத் தேவையில்லை. ஹெல்ப் பண்ணுங்க. பட், உச்சுக் கொட்டாதீங்க”ன்னு என்னென்னமோ கடுமையா சொல்லிடுச்சு அந்தப் பொம்பளை. எனக்குப் புரியலை. நாம நல்லது பண்ணத்தானே வந்தோம்னு யோசிச்சேன். கிருபா கிட்டே இதைச் சொல்லி வருத்தப்பட்டேன். “பார்வையற்ற ஒரு சிலர் இப்படிக் கடுமையா நடந்துக்கறது உண்டுதான். அவங்களுக்குள்ள ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கும். தான் சுயமா, சொந்தக் கால்ல நிக்க முடியலையேங்கிற வருத்தம் இருக்கும். உதவி பண்ண வரவங்களையே இப்படி எடுத்தெறிஞ்சு பேசிடுவாங்க. அதையெல்லாம் நீ மனசுல வெச்சுக்காதே!”ன்னார்.

தமிழ்நதியோட கட்டுரையைப் படிச்சப்போ, அந்தப் பார்வையற்ற பெண்மணி ஞாபகம்தான் வந்துச்சு எனக்கு.

அதே மாதிரி, ‘டமில்மீடியா டாட்காம்’கிற வலைதளத்துல, ‘தமிழகத்தில் இப்போது எழுத்து வியாபாரத்தி்ன் முதலீட்டுச் சொற்கள் ஈழமும், பிரபாகரனும். ஈழச் சகோதரர்களின் மீது தமிழக மக்கள் வைத்திருக்கக் கூடிய பரிவையும், பாசத்தையும் காசாக்கி இலாபம் பார்க்கிறார்கள் இந்த எழுத்து வியாபாரிகள். இவர்களோடு வெட்கம் விட்டுக் கைகோர்த்து நிற்பவர்கள், தமிழக அரசியல்வாதிகள். இவர்களது புனைவுகள் குறித்துக் கொதித்துப் போகும் ஒரு தமிழக வாசகனின் பதிவினை , எழுதியவருக்கே உரித்தான நன்றிகளுடன் இங்கே பதிவு செய்கின்றோம்’கிற முன்னுரையோடு ஜூனியர் விகடனை ஒரு காய்ச்சு காய்ச்சியிருக்காங்க. அதுல ஈழத்து மக்களின் பிரச்னைகளைப் பத்தி தொல்.திருமாவளவன் ‘முள்வலி’ங்கிற தலைப்புல (‘முள்வேலி’ங்கிற வார்த்தையிலிருந்துதான் முள்வலிங்கிற தலைப்பைப் பிடிச்சாரோ!) எழுதி வந்தார். அதைப் புஸ்தகமாக்கி புத்தகக் காட்சியில வெச்சிருப்பாங்கபோல! அதுக்குத்தான் தன்னோட கண்டனத்தைத் தெரிவிச்சிருக்காங்க யாரோ, ‘டமில்மீடியா டாட்காம்’ல!

ஜூனியர் விகடன் பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதுக்காக, ஈழத்தைப் பத்தி அது புஸ்தகம் போடுறதை எழுத்து வியாபாரம்னு சொல்றதை எப்படிங்க ஏத்துக்கறது?

போட்டாலும் இப்படி, எழுத்து வியாபாரம், கயமைத்தனம்னு பேசுறது; போடலேன்னாலும், ஈழத்து மக்களின் கண்ணீர் இந்தத் தமிழகப் பத்திரிகைகள் இதயத்தைக் கரைக்கலையான்னு கேட்க வேண்டியது!

என்னமோ போங்க, எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிட்டேன்!

ந்தக் கட்டுரைக்குத் ‘தமிழ்நதி’யின் படத்தைப் போடலாமேன்னு இணையத்தில் தேடினப்போ, எழுத்தாளர் ஷோபாசக்தியின் இணையப் பக்கத்தில் இந்தக் கட்டுரை கிடைச்சுதுங்க. அதிலிருந்து சில வரிகளை இங்கே கொடுத்திருக்கேன். அதுக்கு மேல நீங்களாச்சு, ஷோபாசக்தியாச்சு! நான் ஒதுங்கிக்கிறேன். ஆள விடுங்க!

தமிழ்நதிக்கு மறுப்பு

நிரம்பவும் கபடமாகத்தான் பேசுகிறார் தமிழ்நதி.

அமரந்தாவின் கடிதம் என்ற கட்டுரையில் “எழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா? பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா?” என்று கேட்டிருந்தேன். உடனே ‘அய்யோ நான் நொந்து கிடக்கிறேன், வெந்து கிடக்கிறேன்’ எனத் தன் கழிவிரக்க அரசியலைத் தொடங்கிவிட்டார் தமிழ்நதி.

அவர் அவ்வாறு பொய்யுரைத்ததைக் குறித்தும் மக்களிற்குப் புலிகள் செய்த துரோகத்தை நியாயப்படுத்தியதைக் குறித்தும் அவரிடம் சுயவிமர்சனமோ குற்றவுணர்வோ கிடையாது. அதுகுறித்து அவர் கள்ள மவுனம் சாதித்துக்கொண்டு குடித்துவிட்டு நான் கற்பனை செய்கிறேனென்றும் எனக்கு மனநிலை சரியில்லையா என்ற தொனியிலும் விவாதத்தை திசை திருப்பப் பார்க்கிறார்.

வால்பாறை, வட்டப்பாறையின் அழகையெல்லாம் வழித்தெடுத்து ஒயிலான அருவி, மயிலான மழை என்றெல்லாம் தமிழ்நதி ஒரு கட்டுரையில் அனுபவித்துப் பின்னியிருந்தார். நான் அதைக் கிண்டல்செய்து எழுதியிருந்தேன். “அழுதால் எப்போதும் அழுதுகொண்டிருக்க வேண்டுமா வால்பாறைக்கெல்லாம் போய் அழகை இரசிக்கக் கூடாதா” என்பது தமிழ்நதியின் கேள்வி. நிதானமாய் படித்துப் பாருங்கள் தமிழ்நதி. நான் நீங்கள் அழுவதாகச் சொல்லவில்லை. நீங்கள் அழுவதாக நடிக்கிறீர்கள் என்றுதான் சொலிலியிருந்தேன். உங்களுடைய கண்ணீர் போலிக்கண்ணீர். மாமிசம் விறைத்துப் போய்விடுமே என்றழுத ஓநாயின் கண்ணீர். ஒருவேளை உங்களின் பதிவொன்றில் எழுதியிருந்தது போல நீங்கள் பிரபாகரனிற்காக வேண்டுமானால் அழுதிருக்கலாம். நீங்கள் மக்களை நினைத்து அழுவதாகச் சொல்வது உள்நோக்கமுடையது. புலிகள் இஸ்லாமிய மக்களை கொன்றபோதும் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றபோதும் மாற்றுக் கருத்துள்ள அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கம்யூனிஸ்டுகளையும் கொன்றபோதும் நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) மீது புலிகள் தாக்குதலைத் தொடங்கிய நாளில் வெருகல் ஆற்றுப் படுகையில் நூற்றுக்கணக்கான கிழக்கு மண்ணின் மைந்தர்கள் ஆண்களும் பெண்களுமாகப் பாஸிசப் புலிகளால் வதைத்துக் கொல்லப்பட்டபோது நீங்கள் அழுதீர்களா? நீங்கள் அப்போது இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்களை கண்டித்தீர்களா? மாறாக நீங்கள் கொலைகாரர்களை விடுதலை வீரர்களாகக் கொண்டாடினீர்கள். கொலைகாரர்களைக் கண்டித்தவர்களை புலிக் காய்ச்சல் என்று நக்கலடித்தீர்கள். அந்தக் கொலைகளின் சூத்திரதாரி பிரபாகரனை நீங்கள் கடவுள் என்றீர்கள். இப்போது மக்கள் செத்த துயரத்தில் மாசக்கணக்காய் அழுகிறேன் என்கிறீர்கள். உங்கள் அழுகை உண்மையானதென்று எங்களை நம்பச் சொல்கிறீர்களா தமிழ்நதி? புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளிற்காக அழமாட்டீர்களாம். கொன்றவர்களையே குலதெய்வம் என்பீர்களாம். ஆனால் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட மக்களுக்காக அழுதுகொண்டேயிருப்பீர்களாம். ஒரு கண்ணில் மட்டும் நீர் வரவழைக்க எங்கு கற்றீர்கள் தமிழ்நதி?

முழுக் கட்டுரையும் நீங்க படிக்க விரும்பினா, இதோ லிங்க்:

http://www.shobasakthi.com/shobasakthi/?p=443

.
|
This entry was posted on Thursday, January 21, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

47 comments:

On Jan 21, 2010, 11:39:00 PM , Dr.Rudhran said...

interesting...keep writing

 
On Jan 22, 2010, 12:02:00 AM , பிரியமுடன்...வசந்த் said...

நீங்க பத்திரிக்கையாளரா மேடம்? எழுத்து பேசுது இங்க....

 
On Jan 22, 2010, 12:09:00 AM , PADMANABAN said...

அழுத்தமான கருத்தை , திருத்தமாக வெளியிட்டு முறம் கொண்டு சிறுத்தையை துரத்திய தமிழ் பாவை வழிவந்தவர்கள் என்று நிருபித்துவிட்டிர்கள்... பாதித்தவர்களை பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் வெறும் உணர்ச்சி வசப்படும் கூட்டத்திலிருந்து முதலில் நம் தமிழினம் விடுபடவேண்டும்....உண்மையான அறிவு கொண்டு நோக்கி , பாதிக்கப்பட்டவர்களின் கவலையை , பசியை முதலில் தீர்க்கவேண்டும் என்பதை உங்கள் இருவரின் கட்டுரையும் தைரியமாக எடுத்து வழங்கியது .......
என்ன ???? நாலு வரி கூட தமிழில் எழுதமுடியதவர்கள் ஆங்தமிழில் மீண்டும் சற்று உணர்ச்சி படுவார்கள்...அவ்வளவு தான்
( தங்ஸ், முன்னொரு பதிவில் நான் கொடுத்த இங்க்ளிபீஸ் அட்வைஸ் தேவையற்றது என தோன்ற வைத்துவிட்டது --உங்கள் கருத்து சுதந்திர வேகம் )

 
On Jan 22, 2010, 12:15:00 AM , அண்ணாமலையான் said...

உங்க ஒர்க்கு பிரமாதம்.. வாழ்த்துக்கள்... (ரொம்ப நாளா கானோம்?)

 
On Jan 22, 2010, 2:53:00 AM , ||| Romeo ||| said...

செம காட்டமா இருக்கு பதிவு ..

 
On Jan 22, 2010, 3:37:00 AM , Sangkavi said...

மனசுல பட்டத பட்டு பட்டுன்னு வெடிச்சிறுக்கறீங்க...

//உதவி பண்ணலேமேனு போனப்போ, “லீவ் மி அலோன்! ஐ வில் மேனேஜ். உங்க பரிதாபமோ, பச்சாத்தாபமோ எனக்குத் தேவையில்லை. ஹெல்ப் பண்ணுங்க. பட், உச்சுக் கொட்டாதீங்க”ன்னு என்னென்னமோ கடுமையா சொல்லிடுச்சு அந்தப் பொம்பளை.//

உங்க உதவி இல்லை என்றாலும் என்னால் போகமுடியும் என்ற தன்னம்பிக்கை...

 
On Jan 22, 2010, 7:35:00 AM , பலா பட்டறை said...

முதல் சங்கதி எழுத்துக்கள் நிறம் படிக்க மிகவும் சிரமம். :(

 
On Jan 22, 2010, 10:57:00 AM , ஆதி மனிதன் said...

நான் என்னமோ நினைத்தேன் உங்களைப்பற்றி முதலில் (அப்பாவி நந்தினியாக). ஆனா கலக்குறிங்க போங்க. மு. க. வில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை பிச்சு எடுக்கிறீங்க. தொடர்ந்து எழுதுங்கள் நல்லாருக்கு.

//ஈழத்துப் பிரச்னைகளைப் பத்திப் பேச, அவங்க துக்கங்களை தமிழ் மக்கள் கிட்டே கொண்டு சேர்க்க எனக்குத் தெரிஞ்சு குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், நக்கீரன்னு எல்லாப் பத்திரிகைகளுமே வரிஞ்சு கட்டிக்கிட்டு உழைச்சிருக்கு.//

இது என்னமோ உண்மைதான். அதுவும் ஈழப் போர் நான்கில் நம் தமிழக பத்திரிக்கைகள் தமிழீழ பத்திரிக்கைகளாகவே மாறிவிட்டன. பத்திரிகை தொழில் ஒன்றும் non-profit organisation அல்லவே!

ஆமா அப்படி என்ன உங்களுக்கு கலைஞரின் பகுத்தறிவு மேல் அப்படி ஒரு காண்டு?

 
On Jan 22, 2010, 11:49:00 AM , குப்பன்.யாஹூ said...

என் பார்வையில் நான் பழகிய பல ஈழத் தமிழர்களிடம் , சிங்களர்களிடம் உணர்ந்த ஒன்று, ஈழ தமிழர்களுக்கு மற்றும் சிங்களர்களுக்கும் பரந்த மனப்பான்மை, எண்ணம் இல்லை என்பதே.

சிறிய நாடு என்பதால் மனமும் சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

அதற்க்கு காரணம் அங்கு இருந்த போர் சூழல், உணவு பழக்கம், குடிநீர் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அனைவரும் எழுதுவது தமிழ் பத்திரிக்கைகளை புறக்கணிப்போம், சன் தொலைக்காட்சியை புறக்கணிப்போம் என்பது, ஆனால் இவர்கள் தான் முதலில் அதை பார்ப்பது, அது குறித்து எழுதுவது.
இவர்கள் பற்றி பேசி எழுதி நம் நேரத்தை வீண் அடிக்க விரும்ப விலை.

 
On Jan 23, 2010, 12:54:00 AM , Rathi said...

// ‘காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத் தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன’ன்னு.// நான் குமுதம் கட்டுரையை படிக்கவில்லை. தமிழ்நதி கயமைத்தனங்களை மட்டும் தானே சொல்கிறார். அது அவருடைய உணர்வு. அதை இங்கே பொதுமைப்படுத்துவது போலுள்ளது. அந்த பிழைப்புவாத அரசியல் நயவஞ்சகம், கயமைத்தனங்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இல்லவே இல்லையா? முள்ளி வாய்க்காலில் எங்களின் அவலத்தை தடுத்து நிறுத்த முடியாத தமிழ்நாட்டு தமிழர்கள் பார்வையற்றோர் கதையெல்லாம் உதாரணம் காட்டும் போது சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை. காலத்தே செய்யும் உதவி ஞாலத்தில் பெரிது என்பார்களே. இனிமேல் நீங்கள் புத்தகம் விற்றாலும், உங்கள் தளங்களில் எங்களுக்காய் பதிவு தான் போட்டாலும் எங்கள் ஐம்பதாயிரம் அப்பாவி உயிர்கள் மீண்டு வரப்போவதில்லை. எப்படியோ போங்கள்.


குப்பன், எந்த விடயத்தில் ஈழத்தமிழர்களுக்கு பரந்த மனப்பான்மை இல்லை? நாட்டின் அளவையும், மக்களின் மனங்களையும் ஒப்பிட்டு விமர்சிக்கும் உங்கள் கருத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக, குறிப்பாக சொன்னால் விவாதிக்கலாம். //அங்கு இருந்த போர் சூழல், உணவு பழக்கம், குடிநீர் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.// அடடே, இது உம்முடைய புதிய கண்டுபிடிப்பா? நீரெல்லாம் எங்களுக்காக நேரத்தை வீணடிக்கவில்லை என்று எந்த அப்பாவி ஈழத்தமிழன் உம்மிடம் அழுதான்? தமிழனையும், தமிழ்நாட்டையும் புறக்கணிக்கும் இந்தியதேசியத்திற்காய் உங்கள் நேரத்தை வீணடிக்க என் வாழ்த்துக்கள்.

 
On Jan 23, 2010, 7:30:00 PM , புளியங்குடி said...

கனமான விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறீர்கள். பிரபாகரனும், ஈழமும் தமிழ் எழுத்துலகின் தற்கால முதலீட்டுச் சொற்கள் என்பதற்கு உங்களது பதிவுக்கு கிடைக்கும் வாக்குக்களும், பின்னூட்டுகளுமே சான்று.

 
On Jan 24, 2010, 10:03:00 PM , கிருபாநந்தினி said...

ஐயா! மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரனுங்களா! ஐயோ! என்னால நம்பவே முடியலீங்களே! நீங்க எவ்ளோ பெரியா மனுஷன்.. இந்தச் சாதாரண மனுஷியின் வலைப்பூவுக்கு வந்து படிச்சுப் பார்த்ததோடல்லாம பாராட்டிப் பின்னூட்டமும் போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றிங்கய்யா! (என் கண்கள்ல துளிர்க்கிற நீரை இங்கே பதிவு பண்ண முடியலை!)

 
On Jan 24, 2010, 10:06:00 PM , கிருபாநந்தினி said...

பிரியமுடன் வசந்த், பத்திரிகையாளரான்னா கேட்டிங்க? அடடா! உங்களோட இந்தக் கேள்வியே தேன் வந்து பாயுற மாதிரி இருக்கே காதுலே? உண்மையைச் சொல்லணும்னா, நான் டிகிரி படிச்சிட்டிருக்கும்போது விகடன் மாணவர் திட்டத்துக்கு விண்ணப்பிச்சேன். முதல் ரவுண்டுலேயே அவுட்! எழுத்துத் தேர்வுக்கே கூப்புடலை. சரி விடுங்க, எனக்கு அதிர்ஷ்டம் அவ்ளோதான்!

 
On Jan 24, 2010, 10:08:00 PM , கிருபாநந்தினி said...

பத்மநாபன், என்னென்னவோ சொல்லிப் பாராட்டறீங்க. எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னுதான் புரியலே! நன்றி!

 
On Jan 24, 2010, 10:12:00 PM , கிருபாநந்தினி said...

@ அண்ணாமலையான்! என்னது... காணமா? தோடா! :)

@ ரோமியோ! செம ஊட்டமா இருக்கு உங்க பின்னூட்டம் பிரதர்!

@ சங்கவி! பின்னூட்டத்துக்கு தேங்க்ஸ்! அந்தப் பெண்மணிக்கு தன்னம்பிக்கை இருக்கலாம்; இருக்கணும். ஆனா, உதவி செய்ய வர்றவங்களை இப்படி எடுத்தெறிஞ்சாப்புல பேசினா, உதவுற மனப்பான்மையே போயிடுதே! அதுக்காகத்தான் குறிப்பிட்டேன்!

@ பலாபட்டறை! அடடா! அப்படியா? இனிமே கலர்ல கவனம் வெச்சுக்கிறேன்.

 
On Jan 24, 2010, 10:17:00 PM , கிருபாநந்தினி said...

ஆதிமனிதன்! பின்னூட்டத்தில் நீங்க தந்திருக்கிற பாராட்டுக்கு நான் தகுதியானவளான்னு தெரியலை. ஆனாலும், சந்தோஷமா இருக்கு. ஆதிமனிதன் முதற்றே உலகுன்னு குறள் எழுதணும்னு வேகம் வருது!

 
On Jan 24, 2010, 10:22:00 PM , கிருபாநந்தினி said...

குப்பன் யாஹூ! பின்னூட்டத்துக்கு நன்றி! மத்தபடி உங்களுடைய நீண்ட பின்னூட்டத்துக்கு ரதி கோபப்பட்டுத் தன்னோட கருத்தைத் தெரிவிச்சிருக்காங்க.

ரதி! ஈழத் தமிழர்கள் மேல் அக்கறைகொண்டு தமிழ்ப் பத்திரிகைகள் கட்டுரைகள் பல எழுதியதால்தான், ராஜீவ் கொலைங்கிற கொடுமையைத் தாண்டியும் இங்கே தமிழர்கள் மனசில் ஈழ மக்களுடைய சோகம் ரணமா, வடுவா பதிஞ்சிருக்கு. அப்படியிருக்கிறப்போ தமிழ்ப் பத்திரிகைகளை நீங்க இவ்ளோ அலட்சியப்படுத்திப் பேசுறது சரியாப் படலீங்க அம்மணி!

 
On Jan 24, 2010, 10:25:00 PM , கிருபாநந்தினி said...

புளியங்குடி! பின்னூட்டம் இட்டதற்கு நன்றிங்ணா! புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கணும்னு ஒரு சொலவடை இருக்கு. எனக்குப் புளியங்குடி பின்னூட்டம் கிடைச்சது அப்படித்தான் இருக்கு. :)

 
On Jan 25, 2010, 10:55:00 PM , Rathi said...

கிருபாநந்தினி,

//ராஜீவ் கொலைங்கிற கொடுமையைத் தாண்டியும்...// அதெப்படிங்க உங்களைப்போன்ற சில இந்தியர்களால் கொஞ்சம் கூட கூசாமல் இப்படி பேசமுடிகிறது? அமைதிப்படை என்ற பெயரில் வந்து எங்களை கொடுமைப்படுத்தினீர்கள், கற்பழித்தீர்கள், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தீர்கள். வன்னிப்போரில் இந்தியாவின் போரை இலங்கை நடத்திக்கொடுத்ததாமே? அப்போதெல்லாம் எங்களை துடிக்கத்துடிக்க இந்தியா கொன்றதே. இதெல்லாம் கொடுமையே இல்லையா? அதையெல்லாம் வசதியாய் மறந்துவிட்டு உங்கள் வாதத்திற்கு ராஜீவ் விடயத்தை மட்டும் பேசினால் எப்படி அம்மிணி? எங்கள் கண்ணீரில், எங்கள் வலியில் நீங்கள் பங்கெடுக்க வேண்டாம். குறைந்த பட்சம் மனட்சாட்சியோடு தன்னும் பேசலாமே நீங்கள். முள்ளி வாய்க்காலில் தண்ணீர் கேட்டு செத்த குழந்தைகள் எத்தனை? பதுங்குகுழியில் புல்டோசரால் நெரித்து சாகடிக்காபட்ட குழந்தைகள் எத்தனை? இதையெல்லாம் "சந்தோசமாக" உங்கள் இந்திய மேலாதிக்க கற்பனையில் ஒட்டிப்பாருங்கள். புளகாங்கிதம் அடையுங்கள். உண்மையில் ஈழத்தமிழர்களுக்காய் துடிக்கிற எத்தனயோ நல்ல இதயம் படைத்த தமிழ்நாட்டு தமிழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களைப்போன்ற சிலர் தான் எங்கள் பிரச்சனையின் அடிப்படையும் புரியாமல், இந்தியாவின் சதியும் தெரியாமல் பதிவெழுதி எங்களின் வலிகளை மேலும் மேலும் கூட்டுகிறீர்கள்.


யாரும் தமிழ்நாட்டு பத்திரிகைகளை (தினசரி, வாராந்தப் பத்திரிகைகள்) அலட்சியப்படுத்திப் பேசவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இன்று ஈழம் பற்றி புத்தகம் எழுதி காசு பார்க்க நினைக்கவில்லையா? நீங்கள் மறுபடியும், ஆம், தமிழ்நாட்டு பத்திரிகைகள் ஈழத்தமிழர்களின் அவலத்தை சொன்னார்கள் என்று சொல்லாம். வன்னிப்பேரவலத்தை உலகம் பூராவுமுள்ள செய்தி ஊடகங்கள் கூட வெளியே கொண்டுவரத்தான் செய்தார்கள். அதில், தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு தம் இனம் என்ற ரீதியில் ஓர் கடப்பாடும் உண்டு. அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால் தான் அவமானம். அது தவிர இந்தியாவிற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் இதில் பங்கு உண்டு என்கிற கவலையில் அதை சுட்டிக்காட்டும் தார்மீக கடமை தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு உண்டு என்பதால் எழுதினார்கள். ஈழத்தமிழர்கள் கொல்லப்படும் போது தமிழர்கள் அதிகம் வாழும் தமிழ்நாட்டில் அதிகம் அது குறித்த அதிர்ச்சி அலைகள் அதிகம் எழும்பவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் சொன்னபோது எங்களுக்கு கூட சங்கடமாகத்தான் இருந்தது.

 
On Jan 26, 2010, 2:18:00 PM , செல்வேந்திரன் said...

தமிழ்நதி குறித்த எழுத்துக்களிலும், ஷோபாசக்தியையெல்லாம் தேடி எடுத்து இணைத்த விதத்திலும் ஒரு வன்மம் இருக்கிறது சகோதரி! தங்களது கதறல்கள் அலட்சியப்படுத்தப்பட்ட துரோகமுற்ற மனம் கூண்டுச்சிங்கம் போல பொருமிக்கொண்டே இருக்கும். நீங்கள் ஷோபாசக்தியோடு சேர்த்து இன்னபிற ஈழ எழுத்தாளர்களையும் படிக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்!

 
On Feb 1, 2010, 6:45:00 PM , UshaMathan said...

very nice. Keep it up. I am a fan of your blogs.

 
On Feb 1, 2010, 6:48:00 PM , UshaMathan said...

Hi kirubanandhini,

I dont know whether u approve my comments or not. But I like all your posts.I am also very much interested to write like this. But I don't know the steps to start a blog like this. And I am also don't know how to write in Tamil. If possible kindly tell me the procedure to write in Tamil. my email id is ushakarthikas@gmail.com

 
On Feb 2, 2010, 5:51:00 PM , தமிழ்நதி said...

"ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு."

Is it? I think i don't have to respond you only because of this stupid statement. Next time i will give a nice pose with tears. recomend me a nice photographer.

//ராஜீவ் கொலைங்கிற கொடுமையைத் தாண்டியும்...//

Aha...! Now i know you!!! this is the real 'kodumai'

Sorry i could not type in tamil.
I am not in chennai.

thanks rathi.

Thamizhnathy

 
On Feb 3, 2010, 8:16:00 PM , கிருபாநந்தினி said...

வாங்க உஷாமதன், ரொம்ப சந்தோஷமாயிருக்கு உங்க வருகை! :)
அடுத்து நீங்க கேட்ட கேள்விக்கு எனக்குத் தெரிஞ்ச வரையில விளக்கமா உங்க இ-மெயிலுக்கு பதில் அனுப்பியிருக்கேன்.

 
On Feb 3, 2010, 8:21:00 PM , Anonymous said...

ஆமா,

தமிழ்நதி தன்னுடைய புத்தகத்திற்கு அட்டைப்படமாகக் போட்டது யாரையாம்?

கண்கள் கட்டப்பட்டு, நிர்வாண நிலையில், தலையின் பின்புறத்தில் சிங்களவன் சுட்டு இறந்த வீரத் தமிழன் படத்தைத்தானே?

அம்மணி நீங்கள் மட்டும் உங்கள் புத்தகத்தின் வியாபாரத்திற்கு உங்கள் ஈழத் தமிழ்ச் சகோதரனின் அவலநிலையை அட்டபைபடமாகப் போடலாமா?

 
On Feb 3, 2010, 8:22:00 PM , கிருபாநந்தினி said...

ஹை! வாங்க தமிழ்நதி! ரொம்பக் கடுப்பாயிட்டீங்க போல! நீங்க பெரிய எழுத்தாளர். கவிதாயினி! உங்களுக்கு உங்க கருத்துக்களைச் சொல்ல குமுதம், விகடன் மாதிரியான பெரிய களம் இருக்கு. என் எழுத்துக்களையெல்லாம் எங்கே சீந்துறாங்க? அதான், நான் என் மனசுக்குச் சரின்னு பட்டதை என் பிளாகுல எழுதுறேன். ஒண்ணும் தப்பில்லீங்களே?
அப்புறம்... தமிழ்நதிக்கே தமிழ்ல டைப் பண்ண முடியலைங்கிறதுதாங்க பெரிய கொடுமை! :(
தமிழ்ல தட்டச்சு செய்ய சென்னைல இருக்கணும்னு ஒண்ணும் அவசியமில்லீங்களே? :)

 
On Feb 3, 2010, 8:28:00 PM , கிருபாநந்தினி said...

அனானிமஸ் அண்ணாச்சி/அக்கா!
அதென்ன... இப்பத்தான் தமிழ்நதி அக்காவோட ‘கடி’தத்தை பிளாகில் போஸ்ட் பண்ணினேன். அதுக்குள்ள அதுக்கு ஒரு பின்னூட்டம் இட்டுட்டீங்க. நானேதான் அனானிமஸ் போர்வைல எழுதிட்டேன்னு அக்கா என்னைத் தப்பா நெனைச்சுக்கப் போறாங்க! அப்படி அட்டைப்படம் போட்டு அக்கா ஒரு புஸ்தகம் போட்ட விஷயம் எனக்குத் தெரியாது! பட்... உங்க கேள்வி எனக்குப் புடிச்சிருக்கு. ஐ லைக் இட்!

 
On Feb 6, 2010, 12:02:00 AM , தமிழ்நதி said...

"தமிழ்ல தட்டச்சு செய்ய சென்னைல இருக்கணும்னு ஒண்ணும் அவசியமில்லீங்களே? :) "

நக்கல் என்ற பெயரில் மறுபடியும் உங்கள் அதிமேதாவித்தனத்தைக் காட்டியிருக்கிறீர்கள். எனக்கு பாமினி எழுத்துருவில்தான் தட்டச்ச முடியும். அது நான் இருக்கும் இடத்தில் கிடைக்கவில்லை. மினக்கெட்டு தரவிறக்கக்கூடிய இடமும் அல்ல அது என்ற நடைமுறைப் பிரச்சனைகள் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

அப்புறம், என் படத்தைத் தேடினீங்களாம். தேடுறப்போ உங்களுக்கு ஷோபாசக்தி கட்டுரை கிடைச்சுதாம். ஏங்க இணையம் பற்றி ஒன்றும் தெரியாதவர்களிடம் போய்க் கதை அளவுங்கள். படத்தைத் தேடியவர் அதை எடுத்துப் போடுவதுதானே? எனது பெயரை அடித்தால் எத்தனையோ பக்கங்கள் வருகின்றன. அதில் ஷோபா சக்தி கட்டுரைதான் உங்களுக்கு உவப்பாக இருந்ததா? ஒருவரைத் தூற்றவேண்டுமென்றால், உங்கள் சுயபலத்தில் நின்று தூற்றுங்கள். பக்கபலம், பின்பலம் தேடாதீர்கள். செல்வேந்திரன் சொன்னதுபோல, உங்கள் வன்மத்திற்குக் காரணம் சொல்ல முனையாதீர்கள்.

நான் குமுதம் கட்டுரையில் குறைசொல்லியிருப்பது அதை வியாபாரமாக்குபவர்களைப் பற்றி. அந்தத் தனிப்பட்ட எழுத்தாளர்களைப் பற்றி. நீங்கள் அதைச் சரியாகப் படிக்காமல் எனக்கும் ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றுக்கும் சிண்டுமுடிந்துவிடப் பார்க்கிறீர்கள். உங்களால் படைக்க முடிந்தவற்றைப் படையுங்கள். முடியவில்லையென்றால் படியுங்கள். அதைவிடுத்து அக்கப்போர் வளர்ப்பதன் வழியாக வளர நினைக்காதீர்கள்.

"அந்தச் செய்திகளையெல்லாம் புத்தகமா போட்டு விக்கிறதுகூட, தமிழ் மக்கள் மனசுல ஈழத்து மக்களின் வேதனைகளை அழுத்தமா பதிய வைக்கிற ஒரு முயற்சிதான்."

அப்பூடியா? பதியவைச்சு அப்புறம் என்ன நடக்கும்? ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் பண்ணின மத்திய, மாநில அரசாங்கங்களைப் போட்டுக் காச்சு காச்சுன்னு காய்ச்சி ஆட்சில இருந்து தூக்கிடுவீங்களா? சும்மா போங்க கிருபாநந்தினி. யதார்த்தம், வரலாறுன்னு ஒண்ணு இருக்கு. இரத்தக்கறை படிந்த கைகள் யாருடைவை என்று உலகத்துக்கே தெரியும்.

எனது நண்பர்களில் ஒருவர் எழுதிய கடிதத்தை எனது வலைப்பூவில் பிரசுரித்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது போய் வாசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தனியாக ஒரு பதிவின் வழி பதில் எழுத நினைத்திருந்தேன். 'ராஜீவ் காந்தி கொலைங்கிற கொடுமைக்கு அப்புறமும்'என்று எழுதியிருக்கிறவரிடம் போய் என்னத்தைச் சொல்லப் போறீங்க... போய் வேலையைப் பாருங்க'என்று எனது நண்பர்கள் சொன்னதன் பிரகாரம் பேசாமல் இருந்தேன்.

நக்கல், நையாண்டி எனக்கும் தெரியும். தவிர, எங்கள் வலி, எங்கள் இழப்பு உங்களைவிட எங்களுக்குத்தான் தெரியும். அதன் வெளிப்பாடுதான் அந்தக் கட்டுரை. கேலி செய்யக்கூடாத விடயங்களும் உலகத்தில் இருக்கின்றன என்பதை உங்கள் நாட்டில் பேரழிவு வருங்காலம் நீங்களாகவே தெரிந்துகொள்வீர்கள்.

 
On Feb 6, 2010, 12:17:00 AM , தமிழ்நதி said...

கிருபாநந்தினி,

நக்கல், நையாண்டி என்ற பெயரில் மற்றவர்களின் உணர்வுகளைக் கேவலப்படுத்துகிறீர்கள். அந்தக் கேடயத்தின் பின்னால் நின்றுகொண்டு எங்கள் உணர்வுகளோடு கத்திச்சண்டை போடுகிறீர்கள்.

ஆளுயர டம்ளரில் நான் காபி குடித்துக்கொண்டே பேசுவதில் உங்களுக்கென்ன பிரச்சனை இருக்கிறது? அந்தப் புகைப்படம் OXFORD book store பற்றி குமுதம் எழுதியபோது அதற்காக எடுக்கப்பட்டது. இந்தக் கட்டுரைக்கும் அதையே உபயோகப்படுத்தியிருந்தார்கள். அதைக் காரணம் சொல்லி நான் தப்பித்துக்கொள்ளவில்லை. ஈழப்பிரச்சனை பற்றிப் பேசும்போதும் நான் 'சிற்றுவேசன் போஸ்'கொடுத்திருக்க மாட்டேன். தலைவிரிகோலமாக கண்ணீருங் கம்பலையுமாக புகைப்படக்கருவி முன் நின்றிருக்கமாட்டேன். அந்த நடிப்பெல்லாம் நான் செய்வதில்லை. அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்.

'ராஜீவ் காந்தி கொலை என்ற கொடுமையின் பின்னாலும்'என்ற வாசகத்தைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டேன். அது கொடுமை என்றா சொல்கிறீர்கள்? விடுதலைப் புலிகள் இழைத்த மாபெரிய தவறு அது. அவர்களையே பின்னடைவுக்குத் தள்ளிய தவறென்றும் சொல்லலாம்.

உங்களை நான் அறிந்ததில்லை. உங்கள் எழுத்தை நான் முன்பின் படித்ததுமில்லை. எதற்காக என்னை நீங்கள் வந்து தாக்குகிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு பின்னூடத்திற்கும் தனித் தனியான பின்னூட்டங்களின் வழி பதில் சொல்வதன் வழியாக உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன். மேலும் டாக்டர் ருத்ரன் போன்றவர்கள் வந்து பின்னூட்டும்போது 'ஐயகோ நீங்களா...?'என்று ஓவராகக் குதிப்பதைப் பார்த்ததும் மேலும் விளங்கியது. உங்களைப் பற்றி நீங்கள் அதீதமான கற்பனையை வளர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மீனாவுக்கு மட்டுமில்லை; எல்லோருக்கும் வயதாகும்.

கவிதைப் புத்தகத்தில் அந்தப் படத்தைப் போட்டிருப்பது உண்மைதான். அதற்கான தகுதி எனக்கிருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். எனது வலைப்பூ, ஏனைய படைப்புகளைப் படித்துப் பார்த்துவிட்டு அனானியும் நீங்களும் பேசலாம்.

நான் சொல்லவேண்டிய பலவற்றை ரதி பேசியிருப்பது ஆசுவாசம் அளிக்கிறது.

ஒரே பின்னூட்டத்தில் இவ்வளவையும் வலைப்பூ ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இரண்டாகப் பிரித்துப் போடுகிறேன். மீண்டும் சொல்கிறேன்..... வரலாறு சம்பந்தப்பட்டவர்களை மன்னிக்காது. பூமராங் போல ஒருநாள் திருப்பியடிக்கும். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். அப்போது இந்த நக்கல், குத்தல், நையாண்டி, ஏளனம் எல்லாம் எங்கு போகுமென்று பொறுத்திருந்து பார்க்கத்தான் போகிறோம்.

 
On Feb 6, 2010, 12:23:00 AM , தமிழ்நதி said...

"என் பார்வையில் நான் பழகிய பல ஈழத் தமிழர்களிடம் , சிங்களர்களிடம் உணர்ந்த ஒன்று, ஈழ தமிழர்களுக்கு மற்றும் சிங்களர்களுக்கும் பரந்த மனப்பான்மை, எண்ணம் இல்லை என்பதே.

சிறிய நாடு என்பதால் மனமும் சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்."

குப்பன் யாஹ எதை அடிப்படையாக வைத்து இப்படியொரு அபத்தமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்தியா பெரியநாடு... அப்படியானால் இந்தியாவில் வாழ்கிற எல்லோரும் பரந்த மனப்பான்மை படைத்தவர்களா? இப்படியான பொதுப்புத்தியை வளர்த்துக்கொள்ளாதீர்கள். அமெரிக்கா பெரிய நாடு. அமெரிக்காவில் வன்முறை, குறுகிய மனப்பாங்கு கிடையாதா? சிங்கப்பூர் சிறிய நாடு. ஆகவே அங்குள்ள யாவரும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள். அப்படித்தானே? ஐயா, நீங்கள் என் வலைப்பூவில் வந்து ஒரு கட்டுரையில் ஈழத்தமிழருக்கெதிராக வன்மம் வடித்ததும் பிறகு மனம் வருந்திப் பேசியதும் எனக்கு நினைவிலிருக்கிறது. எழுந்தமானத்திற்குக் கருத்துச் சொல்லாதீர்கள். உலகம் முழுமையாலும் வஞ்சிக்கப்பட்டாலும் இன்னமும் தார்மீக அறம் எஞ்சியிருக்கிற மக்களாக நாங்கள் இருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன்.

 
On Feb 17, 2010, 4:26:00 PM , கண்ணாமூச்சி said...

இது என்னமோ தமிழ்நதி மேல வைக்கிற விமர்சனமா இல்லை தண்ணிப்பிடிக்கிற இடத்தில சண்டைப்போடற பொம்பளைங்க ஞாவவம் வருதுங்கோ :)

உம்மட கருத்துகள்ள சிலது சரி பலது வன்மமாயிருக்கு அம்மணியோ,

ஷோபாசக்தி பதிவு இணைச்சது ரொம்ப நெக்கலாயிருக்குங்க
நெல்ல்லா பாலக்கொடுங்கம்மணியோ

 
On Feb 18, 2010, 2:13:00 AM , செந்தழல் ரவி said...

ஒருவர் தமிழில் தட்டச்ச முடியவில்லை என்று சொல்வதைக்கூட உள்வாங்கிக்கொள்ளமுடியாத முட்டாளான உங்களுக்கு போய் தன் நேரத்தை செலவழித்து பதில் சொல்லும் தமிழ்நதி தான் மிகப்பெரிய முட்டாள்.

http://tamilnathy.blogspot.com/2009/05/blog-post_27.html

 
On Feb 18, 2010, 1:08:00 PM , அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க.

 
On Feb 18, 2010, 1:18:00 PM , உயிரோடை said...

கிருபா ந‌ந்தினி,

நீங்க‌ள் சொன்னாலும் சொல்ல‌விட்டாலும் ஈழ‌தேச‌த்தில் பிற‌ந்த‌ ந‌ம் ச‌கோத‌ர‌ர் ச‌கோத‌ரிக‌ள் எல்லாம் பாதிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து உண்மையே. ஒரு சில‌ர் அங்கிருந்து வ‌ந்து வாழ்ந்தாலும் அவ‌ர்க‌ளுக்கு த‌ம் தாய்நாடு விட்டு வ‌ர‌ வேண்டிய‌ துர் அதிஷ்ட்ட‌ம் நினைத்தும் த‌ன் சொர்ந்த‌ங்க‌ளுக்கு நேரும் கொடுமைக‌ளை கொலை நினைத்தும் வ‌ருந்துவ‌து நியாய‌மே.

மேலும் அவ‌ர்க‌ளை அர‌சிய‌ல் ம‌ற்றும் வியாப‌ர‌ லாப‌ நோக்க‌த்தோடு அணுகி இருப்ப‌வ‌ர்க‌ளே அதிக‌ம். பிர‌ச்ச‌னை எவ்வாறு தீர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்று க‌ருத்து சொல்லும் அள‌வு அறிவில் முதிர்த‌வ‌ளோ, அனுப‌வ‌ம் வாய்ந்த‌வ‌ளோ அல்ல‌ல் நான். ஆயினும் த‌மிழ்ந‌தியின் ஆத‌ங்க‌ம் கேலி செய்ய‌ப‌ட‌ வேண்டுய‌ விச‌ய‌மில்லை. உங்க‌ள் க‌ருத்தை சொல்ல‌ நீங்க‌ள் ஷோபாச‌க்தியின் க‌ட்டுரையை எடுத்து போட்டது இன்னும் நெருப்பில் எண்ணை வார்ப்ப‌து போல‌ இருக்கின்ற‌து.

//லீவ் மி அலோன்! ஐ வில் மேனேஜ். உங்க பரிதாபமோ, பச்சாத்தாபமோ எனக்குத் தேவையில்லை. ஹெல்ப் பண்ணுங்க. பட், உச்சுக் கொட்டாதீங்க”ன்னு என்னென்னமோ கடுமையா சொல்லிடுச்சு அந்தப் பொம்பளை. //

உதவி செய்ய‌ போன‌ போது க‌ண் தெரியாத‌வ‌ர் எரிந்து விழுந்தார் என்று சொல்லி அவ‌ர்க‌ளுக்கு தாழ்வு ம‌ன‌ப்பான்மை என்று சொல்லி இருக்கின்றீர்க‌ள். ஆனால் உங்க‌க‌ளுக்கு ஆம் அது அவ‌ர்க‌ளில் தாழ்வு ம‌ன‌ப்பான்மையே என்ற‌ ச‌மாதான‌ம் ம‌ட்டும் போதுமான‌தாக‌ இல்லை, எழுதுவ‌த‌ன் மூல‌ம் ஏதோ தீராத‌ ஒரு உண‌ர்வை தீர்த்துக் கொண்டிருக்கின்றீர்க‌ள்.

அதை போல‌வே த‌மிழ்ந‌தி போன்ற‌வ‌ர்க்கும் என்ன‌ தான் தான் இங்கு ந‌ன்றாக‌ இருந்தாலும், த‌ம் ம‌க்க‌ளுக்கு ஒன்றும் செய்ய‌ இய‌ல‌வில்லையே என்ற‌ க‌ழிவிர‌க்க‌மிருக்கும‌ல்ல‌வா நாம் அதை ப‌ரிகாச‌ம் செய்ய‌மால் இருந்தாலே ந‌ன்றாக‌ இருக்கும்.

//ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு.//

பிச்சை எடுப்ப‌வ‌ர்க‌ளை ப‌ற்றி க‌ருத்து‌ பிச்சைகார‌ர்க‌ள் போல‌வே உடைய‌ணிந்து தான் பேச‌ வேண்டுமென்ப‌தில்லை. அது போல‌ த‌ன் வ‌ருத்த‌தை தெரிவிக்கும் ச‌ம‌ய‌ம் புகைப்ப‌ட‌த்துக்கும் வ‌ருத்தத்துட‌ன் தான் க‌ருத்து தெரிவிக்க‌ வேண்டுமென்ப‌தில்லை.

என்னுடைய‌ க‌ருத்து எல்லாமே த‌மிழ்ந‌தி ந‌ம்மை நாடி வ‌ந்த‌ ந‌ம்மில் ஒருவ‌ர். அவ‌ர் அதை உண‌ராம‌ல் இருக்கின்றார். அத‌னால் அவ‌ர் ஆத‌ங்க‌த்தில் பேசும் வார்த்தைக‌ளை எளிதாக‌ எடுத்துக் கொண்டு சென்று விட‌லாம்.

இவை அனைத்தும் என்னுடைய‌ சொந்த‌ க‌ருத்துக‌ளே. த‌வ‌றிருந்தால் உன் க‌ருத்து வ‌ரை இக்க‌ருத்துக்க‌ளை கொண்டு செல்ல‌ வேண்டாம் ப்ளீஸ்.

 
On Feb 18, 2010, 5:35:00 PM , SanjaiGandhi™ said...

//தமிழனையும், தமிழ்நாட்டையும் புறக்கணிக்கும் இந்தியதேசியத்திற்காய் உங்கள் நேரத்தை வீணடிக்க என் வாழ்த்துக்கள்.//

ரதி, நல்ல கண்டுபிடிப்பு. நாங்கள்( இந்தியாவில் வாழும் அடிமைத் தமிழர்கள் ) தனித் தமிழ்நாடு கேட்கும் போது மறக்காமல் உங்கள் ஆதரவையும் தாருங்கள்.. விசுவாசமாய் இருப்போம்..

 
On Feb 18, 2010, 6:58:00 PM , முகிலன் said...

குறுகிய காலத்தில் புகழடைவது எப்படி... அப்பிடின்னு நீங்க ஒரு புக் எழுதலாம்..

 
On Feb 18, 2010, 11:14:00 PM , Prabhu Rajadurai said...

தற்செயலாக உங்களது பதிவுகளை பார்த்தேன்...அனைத்தையும் உடனடியாக படிக்க வைக்கும் “உற்சாகமான எழுத்து நடை” உங்களுடையது. வாழ்த்துகள்!

 
On Feb 19, 2010, 10:03:00 AM , Anonymous said...

நந்தினி,

வருத்தமாக இருக்கிறது.

ஈழம், ஈழப் பிரச்சினை குறித்த சரியான தெளிவான பார்வைகள் நமக்கு இன்னும் இல்லை என்பது என் கருத்து. ஏனெனில் ஊடகங்கள் தங்கள் வசதிக்காகத் திரித்து என்ன எழுதினவோ அதுதான் நம் பார்வை.

உ-ம், தினமலர் சொல்வதும் தினமணி சொல்வதும் முரணாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதிலும் வாரப்பத்திரிக்கைகள் செய்தியை முந்தித்தரும் அவசரத்திலும், வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் நிர்பந்தத்திலும் காதுக்கு வந்ததை கைக்கு வந்தமாதிரி எழுதுகிறார்கள்.

யானைகள் சண்டையிடும்போது புல்தான் நசுங்கிறது என்ற பழமொழிக்கேற்ப அரசியல்வாதிகளிடமும் பத்திரிக்கைக்காரர்களிடமும் இந்தப் பிரச்சினை உருமாற்றம் நடந்துகொண்டிருக்க, ஈழத்தில் செத்து மடிந்த நமது சகோதரர்களின் வலியும் வேதனையும் அறியப்படாமலே போய் விட்டது.

சகோதரன் முத்துக்குமாரன் அரசின் கவனத்தை ஈர்க்கத் தன்னையே பலியாகத் தந்தும் அசையாத அரசை நான் பெற்றிருக்கிறோம். அந்த அரசு குறித்து ஒரு சிறு பெரு மூச்சைக் கூட வெளிப்படுத்தாத நாம், தமிழ்நதி போன்றவர்களை நக்கலடிக்க என்ன தார்மீகக் காரணம் இருக்கிறது.

அவரவர் குடும்பம், குழந்தை என குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு புலம் பெயர்ந்தவர்களின் அவலம் ஏதுமறியாது இவ்வாறான எதிர்வினைகளில் ஈடுபடுவது நல்ல நகை முரண்.

தமிழ்நதியின் கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில் எதிர்கருத்தை நாகரீகமாக வைக்கலாம். அதற்கேன் அவரது படம் தேவைப்படுகிறது? அவர் அண்டாவில் குடித்தால் என்ன குண்டாவில் குடித்தால் என்ன? ருத்ரன் பின்னூட்டமிட்டதால் நீங்கள் எழுதியது சரியாகிவிடுமா?

உங்கள் பதிவைவிட அருவெறுப்பை வரவைத்தது குப்பன் யாஹீ என்ற ராம்ஜியின் பின்னூட்டம்தான்.

 
On Feb 19, 2010, 1:29:00 PM , Anonymous said...

தமிழ்நதி,
இந்தியர்களின்,தமிழர்களின் வன்மம் பற்றிப் பேசும் உங்கள் எழுத்திலும் வன்மம் தொனிக்கிறது..

அமைதிப்படை வந்து அட்டூழியம் செய்தது என்ற ஒரு கருத்தை பெரும்பாலான ஈழத் தமிழர்கள் முன்வைப்பது ராசீவைக் கொன்றதற்கான காரணமாக.ஆனால் அதே அமைதிப்படையின் தளகரத்தர்கள் புலிகளையும் பிரபாகரனையும் வியந்து போற்றி எழுதி இருக்கிறார்கள் !

இந்த சூழலில் அமைதிப்படையில் எவராவது குற்றமிழைத்திருந்தால் அது அமைப்பு ரீதியான செயலாக இருப்பதை விட தனி மனித ரீதியான செயலாக இருப்பதாற்கான சாத்தியங்கள்தான் அதிகம்;அப்படி இருக்கும் போது ராசீவை குற்றவாளியாக்கி தீர்ப்பு வழங்கினார் பிரபா.

இப்போது சோனியாவின் முறை;அவர் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.இடையில் அழிந்த்தென்னவோ அப்பாவித் தமிழர்கள்தான்.

அப்பாவித் தமிழர்களைக் அழிவிலிருந்து காக்க வேண்டும் என்றால் பிரபா ஏன் மே 17 வரை காத்திருக்க வேண்டும்.போர் துவங்கிய உடனேயே மே 17 ம் தேதி தொடர்பு கொள்ள முடிந்த அமெரிக்க தூதரையோ அல்லது ஐநா தூதரையோ தொடர்பு கொண்டு ஐயா,நான் எங்கள் மக்களை அழிவிலிருந்து காக்க விரும்புகிறேன்;நாங்கள் துப்பாக்கிகளை மௌனிக்கிறோம் என்று அன்றே சொல்லியிருக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை?

பிரபா,ராசீவ்,சோனியா அனைவரும் தனிமனித மண்டைக்கனம் மிக்கவர்கள்;ஒவ்வொருவரும் ஆதிக்கம் செலுத்த முயன்ற போது மரணம்,ஒப்பந்தம்,மரணம் என்று நடந்தேறியது.இதில் பொதுமக்கள் அனைவரும் பார்வையாளர்கள்தான்!

இலங்கையில் இருந்தவர்கள் செத்து மடிந்தார்கள்,தமிழகத்தில் இருந்தவர்கள் பதறிப் போய் கண்ணீர் சிந்தினார்கள்.

இதன் மத்தியில் எல்லாப் பத்திரிக்கையாளர்களும் தொழில்ரீதியாக எழுத முடிந்ததை எழுதி காசு பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்,நீங்கள் உட்பட!

இந்த லட்சணத்தில் கண்ணகி ரேஞசில் தமிழக,இந்தியர்களை சாபமிடும் வேலையெல்லாம் வேண்டாம்,இருக்கும் பிழைப்பும் போய்விட வாய்ப்பிருக்கிறது !

பிரபா இறப்புக்கு அழுதழுது 5 பத்திகள் எழுத முடிகிறதுதானே..முடிந்தால் ஷோபா சக்தி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்..

 
On Feb 20, 2010, 6:42:00 AM , Anonymous said...

ராஜீவ் கொலை என்ற ஒரு காரணத்துக்காக ஈழத்தவர்கள் வாய் திறக்கக்கூடாதா என்ன?
அரசாங்கமே ஹெலிகாப்டரில் வந்து தமிழர் குடியிருக்கும் இடங்களில் மலம் வீசும் இடத்தில் அவர் குடியிருந்திருந்தால் ஈழத்தவர் படும் பாடு என்ன என்பது விளங்கியிருக்கும்.
இந்தக்குப்பன் யாஹூ தன்னை அறிவு ஜீவியா நினைச்சுக்கிட்டு பின்னூட்டம் போடறது பயங்கர காமெடி. எனக்கு ஒருதரம் சங்கொலி படிங்க, தாயகம் சிடி கிடைக்கு பாருங்கன்னு பின்னூட்டம் போட்டாரு. அவர் பின்னூட்டத்துக்கு எல்லாம் சந்தோஷப்படாதீங்க.
மற்றபடி வடகரை வேலன் அண்ணாச்சியின் பின்னூட்டத்தை மறுமொழிகிறேன்.

 
On Feb 20, 2010, 9:26:00 AM , Anonymous said...

>>ஈழம், ஈழப் பிரச்சினை குறித்த சரியான தெளிவான பார்வைகள் நமக்கு இன்னும் இல்லை என்பது என் கருத்து. ஏனெனில் ஊடகங்கள் தங்கள் வசதிக்காகத் திரித்து என்ன எழுதினவோ அதுதான் நம் பார்வை.>>

வேலன் அண்ணாச்சி,இந்த மாபெரும் கருத்தை பல அறிவுசீவிகள் சீவாமல் சொல்லி விட்டார்கள்..சரியான தெளிவான பார்வையை யாராவது புலம் பெயர் தமிழர்கள்தான் முன்வைக்கலாமே..தமிழகத் தமிழர்களாகிய நாம் அறிந்து தெளிய ஏதுவாக இருக்கும்!

இலங்கையில் பிரச்னையைத் தீர்த்திருக்கு முடிந்த தருணங்களில் அதைப் புலிகள் வலிந்து நிராகரித்தார்கள் என்ற பார்வை பாலசிங்கத்திற்கே இருந்திருக்கிறதாகச் சொல்கிறார்கள்.(சந்திரிகாவின் காலம்).இடைக்கால மாநில ஆட்சி முறை போன்ற பல வாய்ப்புகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை;இடையில் களத்தில் நிற்கும் எவரையும் அரவணைத்து சேர்த்துக்கொண்டு ஒரே பிரதிநிதியாவதை விட அவர்களை அழித்து விட்டு தனிப் பிரதிநிதியாக இருப்பதையே எப்போதும் புலிகள் விரும்பினர்.இடையில் ராஜீவ் கொலை வேறு...

சற்று யோசித்துப் பாருங்கள்,அமெரிக்காவில் இரட்டை கோபுர வெடிப்புக்கே அமெரிக்கர்கள் அல்காய்தா குழுவை தேடித் தேடி உலகமெங்கும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்;எந்த விமர்சனத்தையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

அமெரிக்க பிரசிடெண்ட் ஒருவரை அல்காய்தா சாய்க்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்..அமெரிக்க நடவடிக்கை எந்த அளவுக்கு இருக்கும்?

எவரின் விமர்சனத்தையும் அவர்கள் புறம் தள்ளுவார்கள்..இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.சோனியாவைப் பொறுத்த வரை புலிகள் தலைவர் அழிக்கப்படவேண்டும் என்பது ஒன் லைன் அஜெண்டா..அதற்காக எந்த நிலைக்குப் போவதற்கும் அவர் தயாராக இருந்தார்.

மக்கள் அழிந்தார்கள்,யாரும் பொருட்படுத்தவில்லை என்று எல்லோரும் கூவுகிறோம்..அதை யார் பொருட்படுத்தி இருக்க வேண்டும்?

களத்தில் தாக்குதலை எதிர்கொள்ளும் போதிலேயே சிங்களப் படைகளில் அல்லது இந்தியத் தரப்பின் நோக்கம் என்ன என்பது பற்றிய தெளிவு புலிகளிடம் வந்திருக்கும்;அல்லது கிளிநொச்சியைக் காப்பாற்ற முடியாத நிலையிலாவது போர் தொடர்ந்தால் தம் தோல்வியோடு மக்கள் பெருமளவு அழியக் காரணம் இருக்கிறது என்பதை உணரமுடியா அளவுக்கா களநிலை தெரியாது இருந்தார் புலிகள் தலைவர்?

விட்டால் தம்மைக் கொன்று விடுவார்கள் என்ற நிலையில்தான் அவருக்கு போரை நிறுத்தும் எண்ணம் வந்தது;அது வரை இறந்த எண்ணற்ற மக்களைப் பற்றிய கவலை எவருக்கு இருந்தது?

பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்பித்து வந்த ஒரு இலங்கைத் தமிழரின் கடிதம் காலச்சுவடில் வந்தது.அதைப் படித்தீர்களா?

அதைப் பற்றிக் குறிப்பிட்டால் பிராமணீயம்,பித்தளை என்று ப்ளேட்டைத் திருப்புவார்கள்..சிறிது எண்ணிப்பாருங்கள் அந்தக் குற்றச் சாட்டில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடிய சாத்தியங்கள் இருந்தால் யார் குற்றவாளி?


எல்லாவற்றையும் மறுத்து விட்டு உங்களைப் போன்றவர்களும் புலிகள் அல்லது அவர்களை ஆதரிப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்;கடவுள் நிலை எய்தி விட்டவர்கள்;அவர்களை விமர்சிக்கவே கூடாது என்பது போன்ற பார்வை கொண்டிருப்பது சரியல்ல.

 
On Feb 20, 2010, 3:40:00 PM , Dr.Rudhran said...

dont stop writing

 
On Feb 20, 2010, 6:26:00 PM , குப்பன்.யாஹூ said...

எனது எதிர்ப்பு தமிழ்நதி என்ற தனிப் பட்ட நபர் மீதோ, அல்லது கிருபா நந்தினி என்ற தனி நபர் மீதோ அல்ல.

எனது கருத்து தமிழகமு, இந்தியாவும் மனிதாபின அடிப்படையில் தேவையான உதவிகள் செய்தது என்பதே.

 
On Feb 20, 2010, 9:47:00 PM , குட்டிபிசாசு said...

// ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு//

//ஹை! வாங்க தமிழ்நதி! ரொம்பக் கடுப்பாயிட்டீங்க போல!//

மிக எரிச்சலான வரிகள். தனிமனித தாக்குதலுக்கு சிறந்த உதாரணம் உங்கள் கட்டுரை.

 
On Feb 23, 2010, 7:25:00 AM , மதி.இண்டியா said...

//இந்த சூழலில் அமைதிப்படையில் எவராவது குற்றமிழைத்திருந்தால் அது அமைப்பு ரீதியான செயலாக இருப்பதை விட தனி மனித ரீதியான செயலாக இருப்பதாற்கான சாத்தியங்கள்தான் அதிகம்;அப்படி இருக்கும் போது ராசீவை குற்றவாளியாக்கி தீர்ப்பு வழங்கினார் பிரபா.//

இந்த பின்னுட்டம் பிரமாதம் , பதிவும் கூட

 
On Mar 8, 2010, 1:35:00 PM , Anonymous said...

குறிப்பு:இங்கு நான் எழுப்பிய ஒரு கருத்துக்கு தமிழ்நதி அவரது பதிவில் பதில் அளித்துள்ளார்;அவருக்கு என்னுடைய பதிலை அளித்திருக்கிறேன்,அவர் பிரசுரிப்பார் என்று தோன்றவில்லை.எனவே இங்கு..உங்களுக்கு விருப்பமில்லையெனில் நீங்கள் இந்தப் பதிலை பிரசுரிக்க மறுக்கலாம்.ஆனால் பொது நன்மை கருதி இந்த என் பதில் பதிவர்களுக்குத் தெரிய வேண்டியது.
நன்றி.

தமிழ்நதி,
உங்களது பதிவையும் பதிலையும் சமீபத்தில்தான் பார்த்தேன்;நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனானி நான்தான்.

குறிப்பிட்ட சில விதயங்களில் அனானியாக மட்டுமே பதில் சொல்வது அல்லது கருத்து சொல்வது என்பது தமிழ்ப்பதிவுலக சூழலில் ஒரு தற்காப்பு முயற்சி.அதுவும் இலங்கைப் பிரச்னை அல்லது பெரியாரை விமர்சிப்பது போன்ற சில விதயங்களில் கருத்தளிக்கும் போது-கவனிக்கவும் கருத்தளிக்கும் போது கூட,நிந்திக்கவோ அல்லது வசை பாடவோ கூடத் தேவை இல்லை-பெயருடன் கருத்தளித்தால் என்ன நடக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த ஒரு சிலரில் நானும் ஒரு நபர்;இப்போதும் கிருபாநந்தினி என்ற அந்தப் பெண்ணின் வலைப்பதிவுக்கு,உங்களை விமர்சித்த பதிவில் என்ன விதமான பின்னூட்டங்கள் வந்திருக்கும் என்று எனக்குத் தெரியும்;எனவே அநாமதேயமாக கருத்துக்களைப் பதிவு செய்தல் என்பது இன்றைய பதிவுலக தாதாத் தனமான வசைச் சூழலில் அவசியமானதாக இருக்கிறது.

ஒரு விதயம் என்னை வியப்புற வைக்கிறது;உங்களது வாலாசகம்!

உங்களால் பதிலளிக்க இயலா வண்ணமான கேள்விகளுக்கு,'ஐயோ,எனக்கு அயர்ச்சியாக இருக்கிறது.பதில் சொல்ல இயலவில்லை என்று பாடுகிறீர்கள்.இன்னொரு குரலில் நான் எல்லாத் தமிழரையும் ஒன்றாகவே யோசிக்கிறேன்;எனது கோபம் ஆற்றாமையில்தான் என்றெல்லாம் வெகுவான கதை படிக்கிறீர்கள்.

நீங்கள் ஏதோ ஒரு தமிழ் எழுத்தாளர் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அங்கு நீங்கள் தமிழக எழுத்தாளர்களிடம் 'ஏன் ஒருவரும் இலங்கைப் பிரச்னை பற்றி கேள்வி எழுப்பவில்லை என்று கேட்டதாகவும்,அதற்கு சில தமிழக எழுத்தாளர்கள் 'ஏன் நாங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கேட்டதாகவும் குறிப்பீட்டீர்கள்;உங்கள் வாதங்களைக் கேட்க கேட்க எனக்கும் அவர்களது கேள்வி சரி என்றே தோன்றுகிறது.

தமிழகத் தமிழர்கள் வீதிக்கு வரவேண்டும்;அரசை நிர்பந்திக்க வேண்டும்;போரை நிறுத்த வைக்க நிர்ப்பந்திக்க வைக்க வேண்டும் என்று மணமணியான யோசனைகளைச் சொல்கிறீர்களே? என்னுடைய கேள்வி எல்லாம் இது போன்ற நல்ல யோசனைகளை எல்லாம் நீங்கள் ஏன் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கும் அத்தகைய போராட்ட முறைகளை முன்னின்று ஊக்குவிக்கும் படி புலிகளுக்கும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் புலிகளின் பின்னால் இருப்பதற்குப் பதிலாக(ஆனால் உண்மையில் அவர்கள் புலிகளுக்கு முன்னாலும் முதுகுக்குப் பின்னால் துப்பாக்கி இருந்தாலும் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!)கொழும்பு நகர வீதிகளில் 2 லட்சம் பேர் சேர்ந்து நாடாளு மன்றத்தற்கு முன்னால் காலவரையற்ற போராட்டம் நடத்தினால் உலகத்தின் கவன ஈர்ப்பு இலங்கையின் அரசின் மீது விழும் தானே..ஏன் அவ்வாறான யோசனைகள் உங்கள் சிந்தையிலும் பதிவிலும் எக்காலத்திலும் எழுவதில்லை?ஏன் தமிழகத்தின் மக்கள் வீதிகளில் வந்து அவர்களின் அரசை எதிர்த்துப் போராட வேண்டும்??

--தொடர்கிறது

 
On Mar 8, 2010, 1:37:00 PM , Anonymous said...

-தொடர்ச்சி

சரி,என்னுடைய பின்னூட்டத்திற்கு வருவோம்.நான் குறிப்பிட்ட அனைத்தையும் புறங்கையால் தள்ளிவிட்டு,வியாபாரத்திற்கு மட்டும் பதில் அளித்திருக்கிறீர்கள்;அதுவும் எனக்கு அறிவிலி என்ற பட்டத்தையும் அளித்து..இதைப்பற்றிய பழமை பேசியின் குறிப்புக்கும் நீங்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

என்னுடைய அனுபவத்தில் இதுபோன்ற கவனமாகத் தவிர்த்தல்' விதயங்களில் இலங்கைப் பெண் எழுத்தாளர்கள்,வலைப்பதிவர்கள் தெளிவாக இருக்கிறீர்கள்.உங்களைச் சரியாக விமர்சிக்கும் எதற்கும் பதில் அளிப்பதில்லை;அல்லது அந்தக் கருத்தையே வெளியிடுவதில்லை;அல்லது அனானிகளின் கருத்துக்கெல்லாம் அவ்வளவுதான் மரியாதை என்று புறங்கையால் ஒதுக்கி விடுவது;எல்லாம் மீறினால் எனக்கு அயர்ச்சியாக இருக்கிறது,மனம் வலிக்கிறது என்ற கதையைக் கையில் எடுக்க வேண்டியது.

உங்களுக்குப் புத்தக எழுத்தில் ஒன்றும் வருவாய் வருவதில்லை;மற்றுமுள்ள இலக்கியக் கூட்டங்கள் பங்கேற்பு போன்ற இன்னோரன்ன விதயங்களுக்காகவெல்லாம் நீங்கள் ஊதாரித் தனமாக செய்யும் செலவுகளுக்கும்,ஊருலாத்தவும் ஆகும் கணக்கெல்லாம் புத்தக எழுத்தின் வருமானத்திற்கு உரைபோடக் காணாது என்பதெல்லாம்(உங்கள் வாக்குப் படியே) உண்மையென்று கொண்டால் எனக்கு ஒன்றுதான் நினைக்கத் தோன்றுகிறது;மொத்த இலங்கைப் பிரச்னையிலும் உங்கள் நிலைப்பாடு,புலிகளின் செயல்களை எக்காலத்திலும் விமர்சிக்காத தன்மை,புலித்தலைவரின் மீதான போற்றுதல் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் நீங்களும் புலிகளின் பண முகவர்களில் ஒருவரோ என்ற சந்தேகம் எழாமலில்லை.

நான் தவறாகவும் இருக்கலாம்;ஆனால் உங்களை வதைக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன் என்று திரிக்க முற்பட வேண்டாம்.கவனமான அவதானிப்பில் எனது கருத்து இது.

அது உண்மையெனில் உங்களது நிலைப்பாடு சரியானதே;உங்களோடு வாதம் புரிதல் தேவையற்றது.ஆனால் அந்த நிலைப்பாட்டில் நீங்கள நடுநிலைமை வேஷம் போடக் கூடாது.

ஏற்கனவே நான் கிருபாநந்தினியின் பதிவில் அளித்த பின்னூட்டத்திற்கு,உங்களுக்கு வேண்டிய ஒரு வரிக்க மட்டும் ஒரு பதிலை உங்கள் பத்தியில் வழங்கி இருக்கிறீர்கள்:இப்போது இதை வெளியிட மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.இருந்தாலும் என் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் பதில். நன்றி.

ஒரு வேளை நீங்கள் இதைப் பிரசுரித்தால்,ஒரு வேளை நீங்கள் பதிலளிக்கவும் வேண்டும் என்றும் தீர்மானித்தால் வேண்டிய வசைகளோடு,பின்வரும் இணைப்பில் உள்ள சங்கரியின் கடிதத்திற்கும் நீங்கள் நினைக்கும் பதிலை அளித்துவிட்டுப் போங்கள்.

http://kiruththiyam.blogspot.com/2010/03/blog-post_3056.html