Author: கிருபாநந்தினி
•Friday, January 01, 2010
நான் ரொம்ப நாளா படிச்சிட்டு வர்ற ரெண்டு முன்னணித் தமிழ்ப் பத்திரிகைகள் குமுதமும் ஆனந்தவிகடனும்..! இரண்டின் நிறை குறைகளையும் இப்ப வாஷிங் பவுடர் நிர்மாவுல போட்டு அலசப் போறேன்.

குமுதம்:

ஆசிரியர் எஸ்.ஏ.பி. காலத்துல இந்தப் பத்திரிகை ரொம்ப நல்லாயிருந்ததா என் அப்பா சொல்வாரு. இப்ப அந்த அளவுக்கு இல்லியாம். ஆனா, எஸ்.ஏ.பி.-தான் இதன் வேர்ல வெந்நீரை ஊத்தினார்னும் சொன்னார் என் அப்பா. புதுமை பண்றதா நினைச்சு, ‘இந்த வார இதழை இன்னார் தயாரிக்கிறாங்க’ன்னு ‘இதுதாண்டா ராஜசேகர்’ல ஆரம்பிச்சு வாரம் ஒருத்தரை விட்டுக் குமுதம் தயாரிக்க ஆரம்பிச்சப்போ புடிச்ச ஏழரை நாட்டுச் சனி, படிப்படியா அதன் சர்க்குலேஷனைக் குறைச்சிட்டதா சொல்வார். குமுதம் தயாரிக்கிற வி.ஐ.பி. பாவம் என்ன பண்ணுவாரு... தன் பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பருங்க போட்டோவையெல்லாம் போட்டு, அவங்களைப் பத்தி எழுதுவாரு. இல்லேன்னா தான் போய் வந்த வெளிநாட்டைப் பத்தி எழுதுவாரு. தான் பண்ணிக்கிட்டிருக்கிற படத்தைப் பத்தி எழுதுவாரு. பெரிய பெரிய ஆளுங்கன்னா பரவாயில்ல, அவங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க வாசகர்களுக்கும் ஒரு இண்ட்ரஸ்ட் இருக்கும். பெரிய ஆளுங்க லிஸ்ட்டெல்லாம் முடிஞ்சு போய், கடைசியில குமுதம் தயாரிக்கிறதுக்கு ஆளே கிடைக்காம, முத்துக்காளை, போண்டா மணியையெல்லாம் (ஒரு உதாரணத்துக்குச் சொல்றேன்) விட்டுத் தயாரிக்கச் சொன்னா எப்படியிருக்கும்? காஞ்சு கருவாடாகிக் கந்தல் கந்தலா நாறிப்போச்சு குமுதம்!

‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’னு ஒரு பழமொழி இருக்கு. குமுதத்துக்குக் கண் கெட்ட பிறகும் புத்தி வரலே. சுஜாதாவை எடிட்டரா போட்டாங்க. தவுலு நல்லா அடிக்கிறாருன்னு தவுல்காரரை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னா எப்படியிருக்கும்? நாராசமால்ல இருக்கும்! சுஜாதா பாவம் நல்லா எழுதுவாரு. அவரென்ன பத்திரிகையாளரா? அவரை விட்டுப் பத்திரிகை தயாரிக்கச் சொன்னா, என்னென்னவோ ஹைடெக்கால்லாம் பண்ணி, சர்க்குலேஷனை அவரால முடிஞ்ச வரைக்கும் இன்னும் குறைச்சுட்டாரு.

சரி, புத்தியுள்ள பிள்ளையாயிருந்தா இந்தக் கட்டத்துலயாச்சும் பொழைச்சுக்கணுமா வேணாமா? அடுத்ததா மாலனைக் கொண்டு வந்து ஆசிரியரா உட்கார்த்தி வெச்சாங்க. கிழிஞ்சுது லம்பாடி லுங்கி. மாலன்னா யாரு? நாராயணன். மகாபலி தலையில கால் வெச்சுப் பாதாளத்துல தள்ளின மாதிரி, குமுதத்தை ஒரே அழுத்தா அழுத்தி சர்க்குலேஷனை அடி மட்டத்துக்குக் கொண்டு போயிட்டாரு. (அவருதான் இப்ப ‘புதிய தலைமுறை’க்கு ஆசிரியர். இதுக்கு அப்புறம் வரேன்!)

இந்தக் கட்டத்துல ஆனந்தவிகடன் சுதாரிச்சுக்கிட்டு, மளமளன்னு தன் சர்க்குலேஷனை உயர்த்தி, குமுதத்தைத் தாண்டி எங்கேயோ போயிருச்சு. இன்னிய வரைக்கும் ‘ஏபிசி’ கணக்கெடுப்புப்படி (அதென்ன ‘ஏபிசி’யோ, எனக்குத் தெரியாது!) ஆதார பூர்வமா ஆனந்தவிகடன்தான் நம்பர் ஒன்னுனு எங்க வீட்டுக்காரர் சொன்னாரு. ஆனா, குமுதம் வெக்கமில்லாம அட்டையில தன்னையும் நம்பர் ஒன்னுனு போட்டுக்குது!

ஆனாலும், எனக்குப் பிடிச்ச பத்திரிகை குமுதம்தான்! எத்தயாச்சும் ஹெவியா போட்டு மண்டை காய வெக்கிறதில்லே. பாடப் புஸ்தகம் மாதிரி பண்ணாம, ஜாலியா, பொழுதுபோக்கா சில விஷயங்களைக் கொடுக்குறாங்க. ஒரு பக்கக் கதைகள் நிறைய போடுறாங்க. நித்யானந்த பரமஹம்சர் எல்லாம் குமுதத்துக்குத் தேவையில்லாத விஷயம்! புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா, விகடனைப் பார்த்துப் போட்டுக்கிட்ட சூடு இது! (சத்குரு இன்னொரு சூடு!)

எங்க வீட்டுல (எங்க வீட்டுலன்னா என் பொறந்த வீட்டுல) பழைய குமுதங்களைச் சேர்த்துத் தைச்ச பைண்டு புத்தகங்கள் நிறைய இருக்குது. சாண்டில்யன் தொடர்கதைகள், எஸ்.ஏ.பி. எழுதின தொடர்கதைகள்னு இருக்குது. அதைப் புரட்டிப் பார்க்குறப்போ குமுதம் எத்தனை ஜாலியா, படிக்கப் படிக்க சந்தோஷமா இருந்த பத்திரிகைன்னு தெரியுது.

இப்ப அத்தனை ஜாலி இல்லேன்னாலும், சர்க்குலேஷன் குறைஞ்சிருந்தாலும், என்னைப் பொறுத்தவரைக்கும் குமுதம்தான் நம்பர் ஒன்!

ஆனந்த விகடன்:

குமுதம், ஆனந்த விகடன்னு நினைச்சாலே ஒரு அழகான மாடர்ன் பொண்ணும், புத்தி சொல்ற பெரியவரும்தான் ஐகான்களா என் மனசுல வரும். பெரியவரைத் தப்பு சொல்ல முடியாது. ஆனா, அவர் படுத்துற பாடு... அப்பப்பா! தேசியம், கடமை, பொறுப்பு உணர்வு, சமூக பிரக்ஞை, தன்னம்பிக்கை, உழைப்புன்னு பேசிப் பேசி போரடிப்பாரு. மனுஷனைக் கொஞ்சம்கூட ஜாலியாவே இருக்க விடமாட்டாரு!

மதன் காலத்துலதான் விகடன் கொஞ்சம் கலகலப்பா ஆச்சுன்னு சொல்வாரு எங்க வீட்டுக்காரரு. அதுவரைக்கும் பழம்பஞ்சாங்கமாதான் இருந்துச்சாம். பெரியவரு பாலசுப்பிரமணியம் ஐயா விலகினதுக்கப்புறம் புத்தி சொல்றதுக்கு அங்கே யாரும் ஆள் இல்லையாங்காட்டியும், தறிகெட்டுப் போக ஆரம்பிச்சுது விகடன். சர்க்குலேஷனைப் புடிக்கிறேன், சர்க்குலேஷனைப் புடிக்கிறேன்னு குமுதத்துக்கே சவால் விடுற அளவுக்கு நடிகைகளோட கவர்ச்சிப் படங்களைப் போட ஆரம்பிச்சுது. தன்னை யூத்தா காமிச்சுக்குதாம்! ஆனா, எனக்கென்னவோ அது இப்படிப் பண்ணினது என்.டி.திவாரியோட யூத்துக் கூத்து மாதிரிதான் இருந்துச்சு.

பலான பலான படங்களோட கொஞ்ச நாள் அசைவமா வந்துட்டிருக்கும்; திடீர்னு இழுத்துப் போர்த்திக்கிட்டு ரொம்ப நல்ல புள்ளை மாதிரி சுத்த பத்தமா வரும். திருந்திடுச்சுன்னு நம்ம்ம்ம்ம்பி அதை சின்ன புள்ளைங்க கண்ல படற மாதிரி மேஜை மேல போட முடியாது. திடீர்னு ஒரு நாள் அதுல கண்றாவிப் படங்கள் வரும்.

வாசகர்கள் கருத்துக் கேட்டு விகடன்லேர்ந்து சில வருஷத்துக்கு முன்னே ஒரு குரூப் வந்துது. கடையில வாங்கிட்டிருக்கும்போதே மடக்கி, ‘இதுல என்ன புடிக்கும்? என்ன புடிக்கலை?’ன்னெல்லாம் கேள்விகள் கேட்டாங்க. “எஸ்.ராமகிருஷ்ணன், தமிழருவி மணியன்னு நல்ல நல்ல கட்டுரைகள்லாம் வருது. அது புடிக்கும். ஆனா, திடீர் திடீர்னு ஆபாச படங்களெல்லாம் போடறீங்க. அது புடிக்கலை”ன்னேன். “குமுதம் படிப்பீங்களா?”ன்னாங்க. “நான் குமுதம் வாசகிதான். ஆனா, விகடனும் படிப்பேன்”ன்னேன். “குமுதத்துல இப்படியான படங்கள் வருதே..?”ன்னாங்க. “அது அவங்க கேட்க வேண்டிய கேள்வி”ன்னேன்.

பாலசுப்பிரமணியன் ஐயா ஆசிரியரா இருந்தப்போ, விகடன் பத்திரிகை மேல ஒரு மதிப்பு இருந்தது; கண்ணியம் இருந்தது. அது சொன்னா சரியாத்தான் இருக்கும்கிற நம்பிக்கை இருந்தது. சமீபகாலமா அதெல்லாம் போச்சு! ஒவ்வொரு பெரிய மனுஷனுக்கும் 25 குறிப்புகள்னு போட்டுக்கிட்டு வராங்க. சிவாஜி பத்தின 25 குறிப்புகள் வருமான்னு நானும் பார்க்கிறேன், வரலை! ‘பிரபாகரன்-25’ போடுறாங்க. விட்டா சந்தன வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், அயோத்திகுப்பம் வீரமணிக்கெல்லாம் 25 குறிப்புகள் போடுவாங்க போல!

திடீர்னு இந்த வாரம் பார்த்தீங்களா, ‘எனர்ஜி பக்கங்கள்’னு சில பக்கங்கள் தனியா போட்டிருக்காங்க. அப்படியே ‘புதிய தலைமுறை’ புத்தகம் பார்க்கிற மாதிரியே இருக்குன்னு எங்க வீட்டுக்காரர் கிட்ட காட்டினேன். அவர் ஒரு விஷயம் சொன்னாரு. ‘புதிய தலைமுறை’ எடுத்த எடுப்புலயே லட்சம் பிரதிகளைத் தாண்டி சர்க்குலேஷன் எகிறிடுச்சாம் (!). அதைப் பார்த்து ஆனந்த விகடன்காரங்களுக்குப் பேதி கண்டுடுச்சாம். (இந்த வார்த்தைத் தொடுப்பு எல்லாம் என்னுது. எங்க வீட்டுக்காரரு விகடனை விட்டுக் கொடுக்காமதான் பேசுவாரு.) ‘ஆ... ஊ...ன்னா மாநாடுன்னு கெளம்பிர்றாய்ங்க’ன்னு என்னத்தே கன்னையா சொன்னாப்ல, ஆ... ஊ...ன்னா வாசகர் கருத்துக் கணிப்புன்னு கெளம்பிடுவாங்க விகடன்காரங்க. வாசகர்களுக்கு அம்புட்டு மதிப்புக் கொடுக்குறாங்களாமா! அப்படிக் கொஞ்ச நாள் முன்னாடி விகடன்லேர்ந்து ஒரு குரூப் கெளம்பி வந்து, ‘புதிய தலைமுறை படிக்கிறீங்களா? அதுல உங்களுக்குப் புடிச்சது என்ன?’ன்னெல்லாம் கேட்டுக்கிட்டுப் போனாங்களாம். அதன் விளைவுதான் ‘எனர்ஜி பக்க’மாம்! கிருபா சொன்னப்ப ‘குபுக்’னு சிரிப்பு வந்துடுச்சு எனக்கு!

அடங் கொங்காங்கோ! 80 வயசுக்கு மேல அனுபவம் உள்ள ஒரு பத்திரிகை 20 வாரம்கூட வராத ஒரு பத்திரிகையைப் பார்த்து நடுங்குதுன்னா சிரிக்காம என்ன செய்யுறது!

மத்தபடி, சமீப காலமா விகடன்ல வர்ற கவிதைகள், கதைகள் (எங்கே... ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு!), சத்குரு ஜக்கி, எஸ்.ராமகிருஷ்ணன், ராஜேஷ்குமார், பொக்கிஷம்னு எல்லாமே நல்லா இருக்கு (நானே கேள்வி, நானே பதில் பகுதி சூப்பர்!). நான் இல்லேன்னு சொல்லலை! அடுத்தவனைப் பார்த்துக் காப்பியடிப்பானேன்னுதான் கேக்கறேன். (புதிய தலைமுறை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல விக்கிறது உண்மையா இருந்தா, கண்டிப்பா அதுக்குக் காரணம் அதன் விலை வெறும் 5 ரூபாங்கிறதுதான்! முன்னொரு காலத்துல இங்கிலீஷ் பேப்பர் ஒண்ணு எக்கச்சக்கமான சேல்ஸ்ல ஓடிக்கிட்டிருந்துதாம்! ‘அப்படி என்ன தரமா நாம கொடுத்துட்டோம்’னு அவங்களுக்கே புரியலையாம். விகடன் மாதிரி வாசகர் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்காங்க. அப்பத்தான் ஒரு விஷயம் வெளங்கிச்சாம். அதை வாங்கிப் பழைய பேப்பர் கடையில எடைக்குப் போட்டா, ரெண்டு மடங்கு காசு கெடைச்சுதாம்! ‘புதிய தலைமுறை’யும் அப்படித்தான்னு இந்த எடுபட்டச் சிறுக்கிக்குத் தெரிஞ்சிருக்குற சின்ன விஷயம்கூட விகடன் மேதைங்களுக்குத் தெரியாம போயிருச்சேய்யா!
.
|
This entry was posted on Friday, January 01, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

44 comments:

On Jan 1, 2010, 9:13:00 PM , பின்னோக்கி said...

நல்ல அலசல்.

எனக்கு தெரிஞ்சு முதல் முறையா விக்ஸ் டப்பா குமுதத்தோட குடுத்தாங்க. குமுதத்தோட விலைய விட, விக்ஸ் டப்பா விலை அதிகம். அதுக்காகவே ஆளாளுக்கு 2 வாங்குனோம்.

ம்ம்ம்..அருமையான விகடன் போயே போச்சு. குமுதம் மாதிரி ஆனந்தவிகடன் ஆகிடுச்சுன்னு தான் சொல்லனும். ஏன்னா, குமுதம் எப்பவுமே இப்படித்தான் இருந்தது.

விகடன் 25 சரியான கடி. ஸ்டாலினுக்கு பேரன்னா உயிர்ன்னு ஸ்டாலின் - 25 ல வந்துச்சு. அருமையான விஷயமில்லை ?.

விஜய் அட்டை படம் ஒரு வாரம்னா, அடுத்த வாரம் அஜித்னு விகடன் சினிமா பத்திரிக்கையா மாறிடுச்சு. கேட்டா கால மாற்றம்னு சொல்றாங்க.

ஆனா ஒண்ணு, கொஞ்ச நாள் வாங்காம நிறுத்தினாலும், திருப்பி 2 பத்திரிக்கையும் வாங்க ஆரம்பிச்சுட்டேன்.

 
On Jan 1, 2010, 9:14:00 PM , பின்னோக்கி said...

உங்க ப்ளாக் பேர் பேப்பர்ல வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

 
On Jan 1, 2010, 10:06:00 PM , தமிழ் உதயம் said...

நல்ல ஒப்பிடல் தான். எஸ்.ஏ.பி காலத்துல இருந்தும் குமுதம் வக்ரம் பிடிச்ச பத்திரிகை தான். ஒரு முறை குமுதத்துல் ஐந்து நடிகைகளோட பின் பக்கத்தை (பெடக்ஸ்) போட்டு , எது யாருதுன்னு கேட்ட பத்திரிகை. புத்தாண்டு வாழ்த்துகள்.

 
On Jan 1, 2010, 10:58:00 PM , ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா சொன்னீங்க அதுவும் எழுத்துநடை சூப்பர்ப் முதல் வரியில இருந்து கடைசி வரி வரைக்கும் படிச்சேன்...!

 
On Jan 1, 2010, 11:30:00 PM , Senthil said...

Dear கிருபாநந்தினி,

Happy New Year 2010.

Today i got a chance to read your blog. Really nice. The way of writing is like a matured writer.

Keep blogging!!!

 
On Jan 2, 2010, 10:34:00 PM , madhu said...

romba nalla oppidal....rendu pathirikaium adichi pinni pedal yeduthitinga kiruba

 
On Jan 3, 2010, 6:14:00 AM , கிரி said...

ஹா ஹா ஹா நந்தினி செம காமெடி..

உங்களோட ஒரு சில வரிகளை எடுத்து கமெண்ட் பண்ணனும் என்று இருந்தேன்.. அப்படி எழுதினால் பெரும்பாலான வரிகள் வந்துடும் போல அவ்வளவு சுவாராசியமா எழுதி இருக்கீங்க! (ஒரே ஒரு விவகாரமான ஒப்பீடத்தவிர, அது உங்க கருத்து ஓகே)

ஆனா சந்தடி சாக்குல எல்லோரையும் வாரிட்டீங்க..அதுலயும் புதிய தலைமுறைய பரவாயில்லையே! நல்லா புகழுறீர்களே என்று பார்த்தால் கடைசியில் டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்களே! :-)))

 
On Jan 3, 2010, 12:41:00 PM , creativemani said...

வாஷிங் பவுடர் போட்டு அலசப் போறேன்னு தானே சொன்னீங்க.. ஆனா.. இப்படி, அடிச்சு துவைச்சு கிழிச்சிக் காயப் போட்டுட்டீங்களே??
என்னவோங்க.. எனக்கு வாசிக்கக் கிடைத்ததெல்லாம் குமுதமும், ஆனந்தவிகடனும் தான்.. அப்போதிலிருந்தே பலதரப்பட்ட செய்திகள் வந்துகிட்டு தான் இருக்கு.. நமக்கு சுவாரஸ்யமான விஷயங்களை படிச்சிட்டு மத்தத விட்டொழிக்க வேண்டியதுதான்.. என்ன பண்றது? காசு கொடுத்து வாங்கற எல்லாரையும் திருப்தி படுத்தனுமில்லையா?

 
On Jan 3, 2010, 1:32:00 PM , satheshpandian said...

அதென்ன உங்களுக்கு பிரபாகரன் அப்படினாலே பிடிக்க மாட்டேங்குது. இந்த ஒரு விஷயம் தான் எனக்கு புரியல

 
On Jan 3, 2010, 1:38:00 PM , வெற்றி said...

நல்லா சுவாரசியமா இருந்துச்சுங்க.. :)

 
On Jan 3, 2010, 1:55:00 PM , ramalingam said...

ஆமாம். இருவருமே உன்னைப் பார்த்து நான் கெட்டேன், என்னைப் பார்த்து நீ கெட்டேதான்.

 
On Jan 3, 2010, 3:16:00 PM , மைதீன் said...

very good keep it up

 
On Jan 3, 2010, 3:58:00 PM , dev said...

Very good, keep it up

 
On Jan 3, 2010, 4:13:00 PM , பொன்.பாரதிராஜா said...

எல்லாம் ஓகேதான்...ஆனா பிரபாகரனையும் வீரமணியும் compare பண்றது என்ன நியாயம்?

 
On Jan 3, 2010, 5:24:00 PM , பொன் மாலை பொழுது said...

பொதுவாக பெண்மணிகள் satire பக்கம் வருவதே பாவம் என்று நினைப்பார்கள். அம்மணி தாங்கள் வெளுத்துகட்டியுள்ளீர்கள், வாழ்த்துக்கள். 1964 முதல் குமுதமும் விகடனும் மற்றும் அணைத்து இதழ்களும் எனக்கு பழக்கம். ஆனால் இந்த கண்டராவிகளை நிறுத்தியது 1990 களில். சும்மா கிடைகிறது என்றால் கூட கையால் தொடவே மனம் வராத வெறுப்பு இவைகளின் மீது. அரசியல் கட்சிகளைப் போல கொடியும் கொள்கைகளும் வெவ்வேறு ஆனால் எல்லாம் ஒரே குட்டை மட்டைகளாக இருப்பதே உண்மை.
ஏதோ புதிய தலை முறை சற்று பரவாஇல்லை என்ற நிலையில் இருந்ததை கண்டு சடெக்கென்று அதனையும் " டமால் " என்று போட்டு உடைக்கும் உங்களின் "திறனாய்வுக்கு " நன்றி.

 
On Jan 3, 2010, 5:27:00 PM , வெளியூர்காரன் said...

நந்தினி நீங்க விகடன ரொம்ப வாருறீங்க....குமுதம் எப்போவுமே குடும்ப பத்திரிகையா காமிக்க முயற்சி பண்ற மஞ்சள் பத்திரிக்கை..நடிகைகளோட அந்தரங்கத்த நடு வீதிக்கு கொண்டு வந்து காசு பார்த்த பத்திரிக்கை....ஆனா விகடன் அப்படி இல்ல...உங்கள் கணவர்கிட்ட போய் கேளுங்க விகடனோட பெருமைகள சொல்லுவாரு...நீங்க சொல்ற எல்லா குறைகளும் காலத்துக்கேற்ப கண்டிப்பா நாங்க எதிர்பார்க்கற மாற்றம்...ஜாலிவாலிலேர்ந்து சத்குரு வரைக்கும் விகடன் தன்ன தனித்துவமா காமிச்சுகிடேதான் இருக்கு...அதனால தயவு செஞ்சு விகடன ஒன்னும் சொல்லாதீங்க..ப்ளீஸ்...

 
On Jan 3, 2010, 5:44:00 PM , பொன் மாலை பொழுது said...

பொதுவாக பெண்மணிகள் satire பக்கம் வருவதே பாவம் என்று நினைப்பார்கள். அம்மணி தாங்கள் வெளுத்துகட்டியுள்ளீர்கள், வாழ்த்துக்கள். 1964 முதல் குமுதமும் விகடனும் மற்றும் அணைத்து இதழ்களும் எனக்கு பழக்கம். ஆனால் இந்த கண்டராவிகளை நிறுத்தியது 1990 களில். சும்மா கிடைகிறது என்றால் கூட கையால் தொடவே மனம் வராத வெறுப்பு இவைகளின் மீது. அரசியல் கட்சிகளைப் போல கொடியும் கொள்கைகளும் வெவ்வேறு ஆனால் எல்லாம் ஒரே குட்டை மட்டைகளாக இருப்பதே உண்மை.
ஏதோ புதிய தலை முறை சற்று பரவாஇல்லை என்ற நிலையில் இருந்ததை கண்டு சடெக்கென்று அதனையும் " டமால் " என்று போட்டு உடைக்கும் உங்களின் "திறனாய்வுக்கு " நன்றி.

 
On Jan 3, 2010, 5:52:00 PM , Ilan said...

" ‘பிரபாகரன்-25’ போடுறாங்க. விட்டா சந்தன வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், அயோத்திகுப்பம் வீரமணிக்கெல்லாம் 25 குறிப்புகள் போடுவாங்க போல!"

--வலைப்பூ என்பது உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடும் இடம்தான் என்றாலும் , போகிற போக்கில் முட்டாள்தனமாக , முதிர்ச்சியற்ற
கருத்துக்கள் வேண்டாமே !

பிரபாகரனும் , தாதா வீரமணியும் ஒன்றா? கொடுமையாட சாமி ...

 
On Jan 3, 2010, 9:35:00 PM , கிருபாநந்தினி said...

பின்னோக்கியண்ணே! உங்க முதல் பின்னூட்டமே ஊக்க மருந்தா இருக்கு எனக்கு. ரொம்ப தேங்க்ஸ்!

 
On Jan 3, 2010, 9:37:00 PM , கிருபாநந்தினி said...

ஹா... பின்னோக்கி பிரதர்! என் பிளாக் பேரு பேப்பர்ல வந்திருக்கா? எங்கே, எங்கே, எப்போ, எப்போ? அடங்கொங்காங்கோ! இப்படி மொட்டைதாதன் குட்டைல விழுந்தாப்ல சொன்னா எப்படியண்ணாச்சி? :(

 
On Jan 3, 2010, 9:41:00 PM , கிருபாநந்தினி said...

தமிழ் உதயம்! ரொம்ப நல்ல பேரு. ஐ லைக் இட்! \\ஐந்து நடிகைகளோட பின் பக்கத்தை (பெடக்ஸ்) போட்டு, எது யாருதுன்னு கேட்ட பத்திரிகை.// பார்த்தீங்களா, குமுதத்துல எவ்ளோ நல்ல விஷயங்கள் வந்திருந்தாலும் கவனமா இதை மட்டும் ஞாபகம் வெச்சிருக்கீங்க! ஐ டோண்ட் லைக் இட்! புத்தாண்டு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்கோ!

 
On Jan 3, 2010, 9:43:00 PM , கிருபாநந்தினி said...

அன்புடன் மணிகண்டன் மாதிரி நீங்க பிரியமுடன் வசந்தா! \\எழுத்துநடை சூப்பர்ப்// மெய்யாலுமாவா? என்னை வெச்சு காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலையே? :(

 
On Jan 3, 2010, 9:44:00 PM , கிருபாநந்தினி said...

செந்தில்! இங்கிலீஷ்ல வாழ்த்தியிருக்கீங்க. Many many thanks!

 
On Jan 3, 2010, 9:45:00 PM , கிருபாநந்தினி said...

பாப்பு! பாராட்டுறேன் பேர்வழின்னு எனக்கு வெச்சிடாதீங்க ஆப்பு! :)

 
On Jan 3, 2010, 9:46:00 PM , Ananth said...

Hi,

Your comparison is excellent.

One thing really hurts me ( and i think will hurt many). Thats nothing but your comparison on Prabhakaran and veeramani.

Can you tell me any of your politician in india who has lost his son in the battlefiled? Who has sacrificed his entire life for others?

No doubt Prabhakaran is a real hero for many. If you dont like thats your personal view. I do respect your view but dont write those things publically which will hurt many.

 
On Jan 3, 2010, 9:48:00 PM , கிருபாநந்தினி said...

கிரி! பாராட்டுனதுக்கு தேங்க்ஸ்! \\(ஒரே ஒரு விவகாரமான ஒப்பீடத்தவிர, அது உங்க கருத்து ஓகே)// உடைச்சு சொல்லிடுங்க அண்ணாச்சி! பிரபாகரனையும் சந்தன வீரப்பனையும் ஒப்பிட்டதைத்தானே சொல்ல வரீங்க?

 
On Jan 3, 2010, 9:49:00 PM , கிருபாநந்தினி said...

அன்புடன் மணிகண்டன்னு பேர் வெச்சாலும் வெச்சீங்க, எல்லார் மேலயும் (பத்திரிகைகள்மேல கூட) அநியாயத்துக்கு அன்பா இருக்கீங்க. வாழ்க, வளர்க!

 
On Jan 3, 2010, 9:55:00 PM , கிருபாநந்தினி said...

சத்தேஷ் பாண்டியன்! இலங்கைக்காரன் நம்ம தமிழ் ஆளுங்களைக் கொன்னா அப்படித் திட்டறோம். சாபம் விடறோம். ஆனா அதுவே, நம்ம ஆளே நம்ம தமிழ் ஆளுங்களைப் பணயக் கைதியா புடிச்சு வெச்சுக்கிறதும், கேடயமா பயன்படுத்தறதும், நம்ம தமிழ்த் தலைவர்களைக் கொல்றதும் நல்லாவா இருக்கு? தனி ஈழம் கிடைக்கப் பிரபாகரன் உயிரைக் கொடுத்துப் போராடினதெல்லாம் சரிதான். ஆனா, அதை நம்ம தமிழ் மக்களுக்குப் பாதகமில்லாம செய்திருக்கணும். நம்ம காந்தி இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தப்பக்கூட இத்தனைக் கொலைகள் நடந்ததா எனக்குத் தெரியலீங்க. (அப்புறம் இந்து-முஸ்லிம் அடிச்சுக்கிட்டாங்க; அது வேற கதை!) பிரபாகரன் நோக்கம் சரியா இருக்கலாம்; அதுக்காகக் கையாண்ட வழிமுறை தப்புன்னுதான் எனக்குத் தோணுது. மேற்கொண்டு படிச்சவங்ககிட்டதான் கருத்து கேக்கணும்!

 
On Jan 3, 2010, 9:57:00 PM , கிருபாநந்தினி said...

வெற்றி! உங்க ஒத்தை வரி விமர்சனம் எனக்கு சுவாரசியமா இல்லீங்க! :) சும்மாச் சொன்னேன். நீங்க என் பிளாகுக்கு வந்து போனதே எனக்கு மகிழ்ச்சிதான்!

 
On Jan 3, 2010, 10:00:00 PM , கிருபாநந்தினி said...

@ ராமலிங்கம்: அதேதானுங்க! யார் அதிகம் கெட்டதுன்னு பட்டிமன்றமே நடத்தலாம்!

@ மைதீன்: யெஸ்ஸுங்கோ!

@ தேவ்: யெஸ்ஸுங்கோ! (நீங்க மட்டும் மைதீன் வரியை அப்படியே ரிப்பீட் பண்ணலையா?!)

@ பொன்.பாரதிராஜா! கம்பேரிசனெல்லாம் இல்லீங்கண்ணாச்சி! சும்மா ஒரு லிஸ்ட்ல வந்து விழுந்துடுச்சு! ஸாரி! :(

 
On Jan 3, 2010, 10:03:00 PM , கிருபாநந்தினி said...

கக்கு-மாணிக்கம், (இன்னாப் பேருங்க!) பாராட்டுக்கு நன்றிங்ணா! காய்ச்ச மரம்தானே கல்லடி படும்! இந்த ரெண்டு மரங்கள்தான் காய்ச்சிருக்கு. அதான், கல்ல விட்டு எறிஞ்சு பார்த்தேன்! :)

 
On Jan 3, 2010, 10:05:00 PM , கிருபாநந்தினி said...

வெளியூர்க்கார அண்ணாச்சி! எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்! அதென்ன, விகடனுக்காக இம்புட்டு வரிஞ்சு கட்டிக்கிட்டு வரீங்க? அங்கே யாரையாச்சும் தெரியுமா உங்களுக்கு? இல்லே, நீங்களே அங்க வொர்க் பண்ணிக்கிட்டு, வேற பேர்ல ‘வலை’ வீசிக்கிட்டு இருக்கீங்களா?

 
On Jan 3, 2010, 10:08:00 PM , கிருபாநந்தினி said...

இலன்! \\போகிற போக்கில் முட்டாள்தனமாக , முதிர்ச்சியற்ற கருத்துக்கள் வேண்டாமே! பிரபாகரனும் , தாதா வீரமணியும் ஒன்றா? கொடுமையாட சாமி// அப்படிக் கேளுங்க நாக்கைப் பிடுங்கிக்கிறாப்ல! பிளாக் எழுதுறாளாம் பிளாகு! தூ!

 
On Jan 3, 2010, 10:37:00 PM , கிருபாநந்தினி said...

ஆனந்த் அண்ணே! உங்க கருத்துக்கு நான் ரொம்ப மதிப்பளிக்கிறேன்.
முதல் வரி பாராட்டுக்கு நன்றி!
அடுத்த வரியில, பிரபாகரனையும் வீரமணியையும் ஒப்பிட்டது உங்க மனசைப் புண்படுத்திட்டதா எழுதியிருக்கீங்க. ரொம்ப ஸாரி! :(
மூணாவது வரியில, இந்தியாவுல யாராச்சும் அரசியல்வாதிங்க போர்க்களத்துல தங்கள் மகனை இழந்ததா சொல்லமுடியுமான்னு கேட்டிருக்கீங்க. போர்ல இழந்தா அது வீர மரணம். தானே தைரியமா எதிர்கொள்றது. ஆனா, கொலைச் சதியால உயிரை இழந்தா அந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்றது? ராஜீவைக் கொன்னதை மறக்கச் சொல்றீங்களா?
நாலாவது வரியில, பலரைப் புண்படுத்துற விதமா என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை எழுதாதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. ரைட்டு! ஆனா, அது எப்படிச் சாத்தியம்னு எனக்கு மெய்யாலுமே புரியலை. நான் என் மனசுக்குத் தோணுறதைத்தானே எழுத முடியும்? யாரையும் தனிப்பட்ட முறையில பர்சனலா தாக்கி நான் எழுதலையே? இருந்தாலும் உங்க கருத்துக்கு மதிப்பளிச்சு முயற்சி பண்றேன்.

 
On Jan 3, 2010, 11:16:00 PM , வெற்றி said...

//நீங்க என் பிளாகுக்கு வந்து போனதே எனக்கு மகிழ்ச்சிதான்!//

இப்படி எஸ்சானா எப்படி? நீங்களும் வந்து ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்க :))

 
On Jan 3, 2010, 11:21:00 PM , துருவன் said...

பிரபாகரனுக்கும், வீரமணிக்கும் வித்தியாசம் தெரியாத உமக்கு ...அம்புலிமாமா பற்றி கூட விமர்சனம் எழுத லாயக்கு இல்லை -- துருவன்

 
On Jan 4, 2010, 12:40:00 AM , பத்மநாபன் said...
This comment has been removed by the author.
 
On Jan 4, 2010, 7:28:00 AM , priyamudanprabu said...

நல்ல அலசல்

 
On Jan 4, 2010, 4:40:00 PM , Raja said...

Again a nice one other than that awkward comparison...You have full rights to express your thoughts but it should not hurt others...

 
On Jan 4, 2010, 6:52:00 PM , shanthan said...

சிவாஜி பத்தின 25 குறிப்புகள் வருமான்னு நானும் பார்க்கிறேன், வரலை! ‘பிரபாகரன்-25’ போடுறாங்க. விட்டா சந்தன வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், அயோத்திகுப்பம் வீரமணிக்கெல்லாம் 25 குறிப்புகள் போடுவாங்க போல!--------------
enna ithu ennakku puriyala... neegka tamil thaane... evvalavu kevalama.. eela poraddaththa.. ninachchiddigka.. neenga srilankala irunthaal thaan theritum en thalaivanappaththi...

 
On Jan 5, 2010, 12:27:00 AM , thuruvan said...

((ஆனா, கொலைச் சதியால உயிரை இழந்தா அந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்றது? ராஜீவைக் கொன்னதை மறக்கச் சொல்றீங்களா?-கிருபாநந்தினி -))

இலங்கைக்கு சென்ற ராஜீவின் படைகள் கொன்றது எத்தனை தமிழர்களை தெரியுமா ?சுமார் 10000 க்கு மேட்பட்ட அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது .பல்லாயிரம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளகியது. இலங்கை படைகளே செய்யாத எத்தனை அக்கிருமன்களை செய்தது....எங்கள கண் முன்னாலேயே பாடசாலைகளின் ஆசிரியர்களை சுட்டு கொன்றது. வைத்தியசாலையில் புகுந்து நடத்திய வெறி ஆட்டத்தில் கொல்லபட்டவர்கள் நோயாளிகள் மட்டுமல்ல வைத்தியர்களும் தான்

இப்படிஎல்லாம் செய்த ராஜிவை கடவுள் தண்டித்து விட்டார்....இது தான் கர்மா------thuruvan

 
On Jan 5, 2010, 12:54:00 AM , Unknown said...

Sister , we must be very careful in certain sensitive issues. here it is beyond certain things... In Net, what is easy to communicate is easy to reflect also... my personal advice is take that few lines.. you need not publish this feedback but discuss with Giruba and do the need ful.. they start .. that is the problem which should spoil your line of positive thinking...
with brotherly
Padmanaban

 
On Feb 14, 2010, 11:33:00 AM , Dr.Rudhran said...

just read all your blogs. keep writing. you have a nice flair.

 
On Feb 19, 2010, 5:48:00 PM , ✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{அவரென்ன பத்திரிகையாளரா? அவரை விட்டுப் பத்திரிகை தயாரிக்கச் சொன்னா, என்னென்னவோ ஹைடெக்கால்லாம் பண்ணி, சர்க்குலேஷனை அவரால முடிஞ்ச வரைக்கும் இன்னும் குறைச்சுட்டாரு.}

தவறான தகவல் மற்றும் கருத்து.

சுஜாதாவின் தலைமையில் தான் குமுதம் 9 லட்சம் பிரதிகளைத் தொட்டது.அவர் 10 லட்சம் இலக்கு வைத்து முயற்சித்தார்.

இடையில் பார்த்தசாரதிக்கும் அவருக்கும் உரசல் வந்தது;ஜவஹர் பா.சா.பக்கம் சாய சுஜாதா வெளியேற வந்தது.

அந்த வலி இருந்ததால்தான் சில வருடங்களுக்கு குமுதத்துடன் தொடர்பு இல்லாமல் இருந்தார் சுஜாதா..பின்னர் பா.சா.(வின் மறைவுக்குப்) பின் (என நினைக்கிறேன்) தான் குமுதத்தில் சுஜாதாவின் எழுத்து வந்தது..

இன்றளவும் இன்றைய தலைமுறை குமுதத்தைப் பொறுத்தவரை,அதாவது சுமார் 30 ஆண்டுகால் குமுத வரலாற்றில் சுஜாதாவின் காலமே பெஸ்ட் என்பேன் !