Author: கிருபாநந்தினி
•Monday, January 25, 2010
போலிகள் எல்லாத் துறைகளிலும் நீக்கமற நெறைஞ்சிருக்குற மாதிரி, மோசமான பேர்வழிங்க எல்லாச் சாதிகளிலும்தான் நெறைஞ்சிருக்காங்க. ஆனா, ஒரு சில பேர் மட்டும் பார்ப்பான் எப்படா தப்பு பண்ணுவான், ஏறி மிதிக்கலாம்னு காத்துக்கிட்டுச் சமயம் கிடைக்கிறப்போ போட்டுத் தாளிக்குறாங்க. அதென்னவோ, அவங்களுக்கு அதுல அப்படி ஒரு சந்தோஷம்!

‘சாதிகளின் விகிதாசாரப்படி இட ஒதுக்கீடு தரலாமே?’ன்னு ஒருமுறை கேட்டப்போ, பெரியார் அபத்தமா ஒண்ணு சொன்னாரு... “சாதி விகிதாசாரம் என்ன வெங்காயம்? ஜெயில்ல போய்ப் பாரு. வெளியே 3 சதவிகித பார்ப்பான் இருந்தான்னா, ஜெயில்லேயும் நூத்துக்கு மூணு பேர் பார்ப்பான் இருக்கணுமில்லே? இருக்கானா? இல்லியே! அப்புறம் இட ஒதுக்கீட்டுல மட்டும் சாதி விகிதாசாரம் எப்படிச் சரியா வரும், வெங்காயம்!”

பெரியாரின் அபத்தமான அந்த வாக்கை அர்த்தமுள்ளதா மாத்தணும்னுதானோ என்னவோ, ஆசார்ய பீடத்துலேர்ந்து அர்ச்சகர் வரைக்கும் இப்ப பார்ப்பனர்கள் கச்சை கட்டிக்கிட்டு வேலை பார்க்குறாங்க போலத் தெரியுது.

தண்டத்தை எப்போ தண்டம்னு தூக்கிப் போட்டுட்டுப் போனாரோ, அப்பவே அந்த மனுஷர் மேல எனக்கு மரியாதை போயிடுச்சு. அப்புறம் கொலைவழக்கு, அது இதுன்னு வேண்டிய அளவுக்கு சந்தி சிரிச்சாச்சு. இப்ப சாட்சிகள் பல்டி, அப்படி இப்படின்னு ஒரு வழியா நிரபராதின்னு நிரூபணம் ஆனாக்கூட, போன மானம் போனதுதான்; போன மரியாதை போனதுதான்! நல்லவேளை, மகா பெரியவர் இந்தக் கண்றாவியை எல்லாம் பார்க்காம எப்பவோ போய்ச் சேர்ந்துட்டார்.

தேவநாதன்... அந்த மனுஷன் அர்ச்சகரா இருக்க மட்டுமில்லே, மனுஷனா இருக்கக்கூட லாயக்கற்றவன்.

இதுல என்ன வேடிக்கைன்னா, இவங்க பார்ப்பனர்களா இருக்கிறதொட்டு சில பேருக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைச்சாப்ல கொண்டாட்டமாயிடுது. இதே மாதிரி குற்றங்கள் எல்லாச் சாதியிலும்தான் நடக்குது; பேப்பர்லல்லாம் வந்து நாறுது. ஆனா, நான் சொல்ற அந்தச் சில பேருக்கு மட்டும் பார்ப்பனர்கள் இப்படிச் சாக்கடைல விழுந்தா, அப்படி ஒரு புளகாங்கிதம்! போட்டுத் தாக்கலாமே, டவுசர் கிழிக்கலாமே!

ஆனா பாருங்க, பார்ப்பன சாதியிலதான் சொந்தச் சாதியில் இருக்கிற தப்புகளைப் புட்டுப் புட்டு வெச்சு, சவுக்கடி கொடுக்குறவங்களும் இருக்குறாங்க. ‘பேராசைக்காரனடா பார்ப்பான், அவன் ஏதும் செய்து காசு பெறப் பார்ப்பான்’னு பார்ப்பன பாரதியார்தான் ஓங்கிக் குரல் கொடுத்தார். செக்ஸ் அர்ச்சகர் லீலைகளை பார்ப்பனப் பத்திரிகையான ஜூனியர் விகடன்தான் முதல்ல வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

தள்ளாத வயதிலும் உ.வே.சாமிநாதய்யர்ங்கிற பார்ப்பான் தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடி ஊர் ஊரா அலைஞ்சு சேகரிச்சுக் கொடுத்ததனாலதான், இன்னிக்குப் பெருமையோடு சொல்லிக்கிறாப்ல பல முக்கியமான தமிழ் இலக்கியங்கள் நம்ம கைவசம் இருக்கு.

ஆனா, இது எதுவுமே அந்தச் சில பேர்வழிகளுக்குத் தெரியாது. தெரிஞ்சாலும் தேவையில்லே! அவங்களுக்குத் தேவை, ஏறி மிதிக்கிறதுக்குத் தோதா தப்பு பண்ற பார்ப்பான் மட்டுமே! மத்தபடி தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் நல்லது பண்ணின, பண்ணிட்டிருக்குற பார்ப்பான்கள் பத்தின செய்திகள் அடிபட்டுச்சுன்னா அவங்க கண்கள் இருட்டிக்கும்; காதுகள் அடைச்சுக்கும்; கம்போஸ் பண்ண முடியாம விரல்கள் விடைச்சுக்கும்!

மத்தபடி, அமைச்சரான மூணே வருஷத்துல நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மேல சுருட்டின மதுகோடாக்களைப் பத்தியோ, எழுந்து நிக்கவே முடியாத வயசுலயும் ஏகத்துக்கும் விளையாடின திவாரிக்களைப் பத்தியோ இவங்க எழுத மாட்டாங்க.

இவங்க, இவங்கன்றனே... யாரு இவங்க? தமிழைத் தன் பேர்ல ஒட்ட வெச்சிருக்கிற சில வலைப்பூக்காரிங்கதான்!

விடுங்க, பார்ப்பானுக்கு நேரம் சரியில்லே!

சில சமயம் கலைஞர் பேசுறதைக் கேட்டா, அவர் மு.கருணாநிதியா, ஏ.கருணாநிதியான்னு டவுட் வருது. ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ன்னு எம்.ஜி.ஆர். பாடினது தன்னை மனசுல வெச்சுத்தான்; ஜெயலலிதாவை இல்லைன்னு பேசியிருக்கார்.

போன வருஷமே அவர் பிறந்த நாளுக்கு ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ன்னு போஸ்டர் ஒட்டி அவரைக் குஷிப்படுத்தியிருந்தாங்க அவரோட தொண்டருங்க. ‘இதயக்கனி’ படத்துல எம்.ஜி.ஆரைப் பார்த்து மத்தவங்க பாடுற மாதிரி அமைஞ்ச பாட்டு அது.

தொண்டருங்கதான் அப்போ ஒரு ஆர்வக் கோளாறுல அப்படிச் செய்துட்டாங்கன்னு நெனைச்சேன். ஆனா, தலைவரே எம்.ஜி.ஆர். பாடின ஒரு பாட்டைத் தன்னை மனசுல வெச்சுத்தான்னு ஒரு டுமீல் உடுவாருன்னு நான் நினைக்கவே இல்லை.

‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’

‘பணத்தோட்டம்’ படத்துல வர்ற பாட்டு இது. கண்ணதாசன் எழுதினது. பாடுறவர் எம்.ஜி.ஆர்ங்கிறதால அறிஞர் அண்ணாவை மனசுல வெச்சு எழுதியிருக்கார்ங்கிறது எல்லாருக்கும் நல்லாவே தெரியும். 1963-ல் வந்த படம் பணத்தோட்டம். அப்போ அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உருவாகி, தலையெடுத்துக்கிட்டு வந்த நேரம். எங்கு பார்த்தாலும் அண்ணா, அண்ணானு அறிஞர் அண்ணாவின் புகழ் வளர்ந்துக்கிட்டிருந்த நேரம். தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வரலை (1967-ல்தான் ஆட்சியமைச்சுது தி.மு.க.). அம்மாதிரி ஒரு நேரத்துல எம்.ஜி.ஆர். அண்ணாவை மனசுல வெச்சுப் பாடுவாரா, கருணாநிதியை மனசுல வெச்சுப் பாடுவாரா?

அதே 1963-ம் ஆண்டு கடைசியில், மு.கருணாநிதி ‘மேகலா பிக்சர்ஸ்’ங்கிற பேனர்ல ‘காஞ்சித் தலைவன்’னு ஒரு படம் தயாரிச்சார். “காஞ்சித் தலைவன்னு நான் அண்ணாவை மனசுல வெச்சுத் தலைப்பு வைக்கலை. என்னைத்தான் அப்படிக் குறிப்பிட்டு வெச்சேன்”னுகூடக் கலைஞர் சொன்னாலும் சொல்வார். யார் கண்டது!
.
|
This entry was posted on Monday, January 25, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On Jan 25, 2010, 10:11:00 PM , பலா பட்டறை said...

இப்பதான் படம் ரொம்ப தெளிவா தெரியுது..:)) இந்த மாதிரி நிறத்துலயே பதிவு பண்ணுங்க சகோதரி..:)

 
On Jan 25, 2010, 10:28:00 PM , Sangkavi said...

//மத்தபடி, அமைச்சரான மூணே வருஷத்துல நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மேல சுருட்டின மதுகோடாக்களைப் பத்தியோ, எழுந்து நிக்கவே முடியாத வயசுலயும் ஏகத்துக்கும் விளையாடின திவாரிக்களைப் பத்தியோ இவங்க எழுத மாட்டாங்க.//

சரியாச் சொன்னீங்க கிருபா...

மாமியார் உடைத்தால் மண்குடம் மறுமகள் உடைத்தால் பொண்குடமா?

//‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’//

//தலைவரே எம்.ஜி.ஆர். பாடின ஒரு பாட்டைத் தன்னை மனசுல வெச்சுத்தான்னு ஒரு டுமீல் உடுவாருன்னு நான் நினைக்கவே இல்லை.//


நான் படித்து தெரிந்த வரை எம்.ஜி.ஆர் அவர்களை அரசியல் களத்திற்கு அறிமுகப்படுத்தியது கருணாநிதி... அப்ப எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தலைவர் கருணாநிதியா? அண்ணாவா?...

இன்னொரு தகவல் எம்.ஜி.ஆர் எப்போதும் கருணாநிதியை கலைஞர் என்று தான் அழைப்பாராம்...

 
On Jan 25, 2010, 11:03:00 PM , PADMANABAN said...

எல்லோரு மொன்றேன்னுங் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றுந் தொலைகின்ற காலம் வந்ததே -- இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக காரருக்கு நாசம் வந்ததே.........
பாரதியார்..
என்று நம்பிக்கையோடு இருக்கவும் ...
அந்த ஜாதிச்சொல் என்றோ வழக்கொழிந்து போயிற்று ..
பொழப்பத்தவர்கள் திட்டுவதற்கென்றே பிடித்து தொங்கிகொண்டிருக்கின்றன .
அதே தொனியில் வரும் வேறு வகுப்பு / மத சொல்களை பயன் படுத்த திராணி யற்றவை.
(இன்னமும்
கேடு கேட்டு அதையும் பயன் படுத்த சொல்லவில்லை, திராணிஇன்மையை சுட்டி காட்டுகிறேன் )
அடுத்து ஈழம் , தமிழர்கள் மீது உண்மை அக்கறை இல்லாமல் , பொழுது போக்கும் வெற்று உணர்ச்சி பிரியர்கள்.
உண்மையான
அக்கறை உள்ளவர்கள் ஒழுங்காக தமிழ் எழுதி படிக்கவேண்டும்.. அல்லல் படும் அவர்களுக்கு எதாவது சிறு உதவியாவது
செய்ய வேண்டும். அவர்களுடைய அமைதிக்கு குந்தகம் வராமல் நிம்மதியை விட்டால் போதும் என்று ஈழ பதிவர்களிடம்
செய்திகள் வந்த வண்ணம் உள்ளது ..
எனவே வளரும் பதிவர் / எழுத்தாளர் ஆகிய நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்படவேண்டிய அவசியம் இல்லை..
ல.ஆ அண்ணன் சொன்னமாதிரி நேர மேலாண்மை செய்தால் மீடியா உலகில் கொடி கட்டி பறக்கலாம்
இந்த ஜோக்காளிகளுக்கு நேரம் வீண் செய்யவேண்டிய அவசியம் இல்லை.....

 
On Jan 26, 2010, 1:26:00 AM , - இரவீ - said...

விடுங்க, நேரம் சரியில்லே :)

 
On Jan 26, 2010, 8:52:00 AM , அன்புடன்-மணிகண்டன் said...

வாவ்.. கொஞ்சநாளா படித்துறையில் வெள்ளம் சுழற்றியடித்தபடி போகுதுங்க.. Very Well Written!!!

 
On Jan 26, 2010, 8:57:00 AM , ||| Romeo ||| said...

என்னடா ஆளை காணோமேன்னு ஒரு பிட் போட்டேன். அதுக்கு அப்பறம் வந்த பதிவு எல்லாம் செம காட்டா இருக்கு. பதிவு அருமை கலக்குங்க.

உங்க நையாண்டி நடையை அடுத்த பதிவுல எடுத்து விடுங்க.

 
On Jan 26, 2010, 1:19:00 PM , KALYANARAMAN RAGHAVAN said...

இரண்டுமே சவுக்கடி.

ரேகா ராகவன்.

 
On Feb 4, 2010, 6:39:00 PM , கிருபாநந்தினி said...

நன்றிங்க பலா பட்டறை!

நீண்ட பாராட்டுக்கு நன்றிங்க சங்கவி!

பத்மநாபன்! \\வளரும் பதிவர் / எழுத்தாளர் ஆகிய நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்படவேண்டிய அவசியம் இல்லை.// சரியாதான் சொல்லியிருக்கீங்க. ஆனா, உணர்ச்சிவசப்பட்டுப் பதிவு எழுதி போஸ்ட்டும் பண்ணின பிறகுதானே உணர்ச்சி ஒரு கட்டுக்குள்ள வருது! சரி, அது கிடக்கட்டும்... வளரும் பதிவர் சரி; அதென்ன எழுத்தாளர்..? குசும்பு?

 
On Feb 4, 2010, 6:45:00 PM , கிருபாநந்தினி said...

சரி, விட்டுட்டேங்க இரவீ!

அன்புடன் மணிகண்டனுக்கு நன்றியுடன் கிருபா!

ரோமியோ! பாராட்டினதுக்கு தேங்க்ஸ்!

ரேகா ராகவன், நானும் இரண்டு முறை நன்றி சொல்லிக்கிறேன்!

 
On Feb 5, 2010, 8:22:00 PM , பத்மநாபன் said...

கோயம்புத்தூர் காரங்களுக்கு அது ஒன்னு தானே எங்க போனாலும் கூடவே வர்றது .... அடிச்சு போடதிங்க சும்மா :):)
நகைச்சுவை தாண்டி சொல்லப்போனால் , பதிவு எனும் வட்டத்தை தாண்டி எழுத்தாளுமை வந்து கொண்டு இருக்கிறது
தொடருங்கள் வாழ்த்துக்கள் ..... நான் பின்னூட்டம் மட்டுமே போட்டு வருகிறேன் அதுவுங்கூடி உங்க பதிவு வேகத்திற்கு
வர முடியவில்லை ... மீண்டும் வாழ்த்துக்கள். ( நம்ம நடைவண்டி நடைபழக்கத்தையும் எட்டி பார்க்கலாம்... தப்பில்லை )